முக முத்து தன் மூன்றாவது மனைவி பானுவுடன்(இரண்டாவது மனைவி அனுசூயாஎன்ன ஆனார்? அவரும் வேலைக்காரி ஆக முக முத்துவிடம் வந்தவர் தான்.அந்த குழந்தைஷீபாராணி? ) திருவாரூரில் புதிதாய் வாங்கப்பட்ட வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறாராம்.குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் படித்தேன்.
ஆனால் முத்துவின் புலம்பல் நிற்கவில்லை . உதாசீனப்படுத்தப்படுவதாக ஒரு வேதனை !தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை .Spoiled Child ! அதனால் தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர் . நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது .தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட அதிருப்தி காரணமாக மு க முத்து போகவிரும்பவில்லை . குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை பிடித்து கீழே தள்ளி விட்டார் மு க தமிழ் என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது .
உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள் ! குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும் . இவருக்கு அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம் .
தயாநிதி மாறன் -கருணாநிதி இணைப்பு விஷயத்தில் தன் மகன் அறிவுமதியை கலந்து கொள்ளவில்லை .தன் குடும்பத்தை க்ரூப் போட்டோ எடுத்த போது ஒதுக்கி விட்டார்கள் என முக முத்து வுக்கு வருத்தம். தயாளு அம்மையார் , ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு , அவர்கள் கண்ணில் வெண்ணை , தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம் . முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை ! அழகிரி நல்ல தம்பி !
ஸ்டாலின் மாறவேண்டும் ! "
இப்படி பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுத்தால் குடும்பமும் கட்சியும் வருத்தப்படாமல் இருக்க முடியுமா .மேலும் மேலும் தந்தையுடனான உறவை சிக்கலாக்கி கொள்கிறார் . முத்துவின் எஞ்சிய காலம் அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கு புலம்பி ,புலம்பி ஆதங்க பேட்டி கொடுத்தே கழிந்து விட நேரும் என்பது அவரது மிஞ்சிய துரதிர்ஷ்டம் தான் .
முத்து உடல்நிலை காரணமாக , மன நிலை காரணமாக திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு போக முடியாவிட்டாலும் , அவர் இரண்டாவது மனைவி பானு தான் கட்டாயம் அழகிரியின் நல்ல குணத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய ப்போக போவதாக சொல்லியிருக்கிறார் !
ராசாத்தி அம்மாள் ஒரு போதும் தேர்தல் பிரசாரங்களில் நேரடியாக ஈடு பட்டதே இல்லை .
அப்பாவுக்கு பிறகு கட்சி பல பல வகையில் பிளவு பட்டு போகும் .
'நிதி' குடும்பமும் தான் .
இசைச்சித்தர் மகள் திருமதி சிவகாமசுந்தரி எப்படி உள்ளார்?
ReplyDeleteமு.க.முத்துவின் வாழ்வு ஒரு புகைந்த ஓவியம், முரண், சோகம், கலைஞ்ர் முன் கடவுள் தோன்றி ஒரு வரம் தருவதாக சொன்னால் மு.க.முத்துவுக்காகத்தான் அவர் அவ்வரத்தைப்பயன் படுத்துவார்.முத்து கலைஞருக்கு பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்.
ReplyDelete