Fellini and his movie 8 ½

பெல்லினியின் படம்8 ½ .படத்தின் பெயர் eight and half ! 1963 movie. ஒரு இயக்குனராக தன் வாழ்வை முழுமையாக பதிவு செய்ய எவ்வளவு பேரால் இயலும் ? ஒரு 2 ¼ மணி நேரத்தில் பெல்லினி சாதித்திருக்கிறார் !
Why piece together the tatters of your life - the vague memories, the faces... the people you never knew how to love? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான் .
இந்த கேள்வி படத்தின் நாயகன் கிடோ விடம் கேட்கப்படுகிறது . அதற்கான பதில் என்ற அற்புதமான திரைப்படமாக விரிந்திருக்கிறது . பெல்லினி தன்னை கிடோ என்ற பாத்திரமாக வெளிப்படுத்துகிறார் . நடிகர் மார்செல்லோ( Marcello Mastroianni ) திரைப்பட இயக்குனர் கிடோவாக நடித்துள்ளார் .
இப்படி கூட திரைக்கதை அமைக்க முடியும் என்று இவ்வளவு காலம் கழித்து நாற்பத்தாறு வருடங்கள் ஆன பின் கூட யாருக்கும் தைரியம் வருமா ? ஒரு இத்தாலிய படம் பெல்லினி யால் தர முடிந்திருக்கிறது .
Dreams,memories and fantasies!
முதல் காட்சியே ஒரு கனவு தான் . கிடோ ஒரு டிராபிக் ஜாமில் சிக்கி தன் கனவில் காரில் இருந்து வெளியேறி வானில் ஏறி மேகங்களை தாண்டி தப்பிக்க முயற்சிக்கையில் கிடோ காலில் கயிறு போட்டு ஒரு ஆள் கடற்கரையிலிருந்து கீழ் நோக்கி இழுக்க கடலில் விழுகிறான் கிடோ . அதன் பின் ஒவ்வொரு காட்சியும் கடைசி காட்சி வரை -கடைசி காட்சி கிடோ வின் வாழ்வின் அத்தனை முக்கிய மனிதர்களும்Parade செய்வது போல நீண்டு முடியும் காட்சி வரை ஒரு அசாதாரண படம் என பார்ப்பவர்கள் அசந்து போகும்படி அமைகிறது . கத்தோலிக்க மதம் ,பெற்றோர் , சிறு வயதில் ரசித்த சரகினா என்ற ராட்சசி( பாதிரி இவளை ஷைத்தான் என்கிறார் ) ,மனைவி , அபிமான தாரம் , திரை நாயகிகள் , மதகுரு என்று எத்தனை Obsessions! முதல் காட்சி இந்த சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கிடோ வின் கனவு என்பது ஒவ்வொரு காட்சியிலும் விரிக்கப்படுகிறது . எழுத்தாளனுக்கு ஏற்படும்Writer’s block போல திரைப்பட இயக்குனருக்கு Director’s block! கலைஞனின் மோசமான நரகம் இது . இந்த பிரச்சினை யை பெல்லினி கையாண்டு , அதாவது தன் சொந்த பிரச்சினையை படமாக்கி திரைப்பட வரலாற்றில் (இன்று அவர் இறந்தே பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன ) நிலை பெற முடிந்திருக்கிறது .
“8 ½ “-An influential Classic!
2002ல் திரைப்பட இயக்குனர்கள் அனைத்து உலக மொழிகளிலும் மிகச்சிறந்த பத்து படங்களை வோட்டு போட்டு British Film Instituteக்காக தேர்ந்தெடுத்த போது பெல்லினி யின் 8 ½ அன்று வரை வந்திருந்த எல்லாப்படங்களிலும் மூன்றாவது மிக சிறந்த படமாக வோட்டு பெற்றிருந்தது . முதல் இரண்டு இடத்தில் வந்த படங்கள் பற்றி ஆர்வம் வருகிறதல்லவா ?
1.Citizen Kane directed by Orsen Welles
2. God father movies( part one and part two) directed by Francis Coppola

2 comments:

  1. பெல்லினியின் ரோமா படத்தைப் பார்த்திருக்கிறேன்.

  1. RP RAJANAYAHEM said...:

    Roma is a wonderful movie of Fellini , a series of loosely connected episodes.City Rome is the protagonist!

Post a Comment

Followers