Share

Mar 13, 2009

ஆருயிர் நண்பன் - பிரதம விரோதி"தமிழ்ச்சூழலில் 'விரோதி ' என்றும் 'விரோதியல்லாதவர் 'என்றும் 'நண்பர் ' என்றும் எப்படி வெங்கட் சாமிநாதனால் எளிமையாக ப்பாகுபடுத்த முடிகிறது ? ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே நேற்றைய அவனது ஆருயிர் நண்பன் தானே இன்று அவனுடைய பிரதம விரோதி ? இந்த உண்மை வெ.சா அறியாத ஒன்றாக இருக்க முடியுமா ?"


சுந்தர ராமசாமி அவருக்கும் வெசாவுக்கும் இடையே யான மோதல் ஒன்றின் போது 2004ல் வெசா வை நோக்கி இந்த கேள்விகளை முன்வைத்தபோது அவருக்கு நான் ஒரு போன் போட்டேன் . மேற்கண்ட வரிகள் பற்றி அவரிடம் கேட்டேன் . அவர் அதற்கு ஒரு சத்தமான சிரிப்பு சிரித்தார் . அந்த சுராசிரிப்பு நிஜமாகவே இன்றும் என் காதில் ஒலிக்கிறது . இதை எழுதும் இந்த வினாடியில் கூட .

அந்த அவரது சிரிப்பு பற்றி விவரிக்க சுராவின் வார்த்தைகளையே கடன் வாங்க வேண்டியிருக்கிறது .
அந்த சிரிப்பு அழுகைக்கு பதிலாக வருமே அந்த சிரிப்பு !

இன்னொரு சிக்கலான இலக்கிய சூழலில்
காலச்சுவடு கண்ணன் சொன்ன Sensible,Matter-of-factவார்த்தைகள் கீழே :
"எந்த மானுட உறவும் நிரந்தரமானதல்ல . எல்லா உறவுகளுக்கும் அடிப்படை பொருண்மை ரீதியாகவோ , உணர்வு ரீதியாகவோ 'பயன்படுவதும் ' 'பயன்படுத்திக்கொள்வதும்' தான் . இதை தாண்டிய புனிதம் எந்த மானுட உறவிலும் இல்லை ."


ஒரு பொதுவான வார்த்தையாக மனிதன் பற்றி Every human being is left alone in this world என சொல்வதுண்டு . இந்த வார்த்தை இலக்கியவாதிகளை பொறுத்தவரை இன்னும் கூர்மையாகி, ஆழமாகி , அழுத்தமான உண்மையாக இருக்கிறது .புத்தகத்தை ,எழுத்தை தொட்டவனின் வாழ்க்கை பரிதாபமானது .
காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் 'யாருமே தன் பொய்களை ஒப்புக்கொள்ளாது இறக்கக்கூடாது ' என்பது மற்றவர்களுக்கு என்பதை விட எழுத்தாளர்களுக்கானது என நான் எப்போதுமே உணர்கிறேன் . இங்கே பொய் தான் எழுத்தாக இருக்கிறது . நிஜம் பற்றி பேசும்போதும் பொய் தான் நிஜமாக வேடமிட்டு வந்து ஊளை அழுகை யாக கதறுகிறது .மிக மோசமான வேஷங்கள் விளம்பரம் தேடி அலைகின்றன .

' கோவிலுக்கு' போவது , பூஜை புனஸ்காரங்கள் ,சடங்குகள் , விசுவாச நம்பிக்கைகள் , கோட்பாடுகள் , புனித நூல்களை வாசிப்பது போன்ற விஷயங்கள் எல்லாமே Entertainment வகையை சேர்ந்தவை தான் . இவை எல்லாம் ஏதோ Enlightenment என்ற பரவச மூட நம்பிக்கை மிகவும் அபத்தமானது 'என ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வார் .
ஜேகே யின் இந்த வார்த்தைகள் இன்றைய தமிழ் இலக்கிய கூட்டங்கள் , புத்தகங்கள் பற்றிய நம்பிக்கைகளுக்கும் மிகவும் பொருந்தும் .எழுத்தாளர்கள் ,வாசகர்கள் இரு சாராரிடமுமே ஒரு 'அதீத பரவசம் ' தென்படுகிறது .அல்லேலூயா பரவசம் தான் இதுவும்.

'இலக்கியம் வாழ்க்கைக்கு விரோதமானது ' என்று 

கிராமியன் என்னிடம் சொன்னார்.
 
கிரா சொன்னது மீண்டும் நினைவுக்கு வருகிறது .
கல்கியின் மகள் ஆனந்தி டிகேசி யோடு ரயிலில் குற்றாலம் போகும்போது 'தாத்தா ! ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தவுடனே ஏன் குலைக்குது ?" என்று ஆர்வமாக கேட்டாளாம் .டிகேசி உடனே சொன்னாராம் ." எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

4 comments:

 1. jk வை வாசிப்பது கூட entertainment ஆ enlightnment இல்லையா

  ReplyDelete
 2. //.அந்த சிரிப்பு அழுகைக்கு பதிலாக வருமே அந்த சிரிப்பு //,,,,,,,,,,,,

  ReplyDelete
 3. Laughter and Crying, reminds me of Charlie Chaplin.

  ReplyDelete
 4. //புத்தகத்தை ,எழுத்தை தொட்டவனின் வாழ்க்கை பரிதாபமானது//
  ம்ம்ம்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.