Share

Mar 26, 2009

குழந்தை ஒன்று , நிலா ஒன்று


யாராவது உங்களிடம் 'குழந்தை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் . 'நிலா ' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

'அட போய்யா ? ஏதாவது புதுமையா சொல்லுயா ..' என்று கொட்டாவி விடுவீர்கள் .
ஆனால்
கீழே இரண்டு கவிதைகள் . குழந்தை பற்றி , நிலா பற்றி ஜோரா அசத்தலா எழுதப்பட்டுள்ளவை .

..

புத்தம் புதிய
என் பேனாவை
ஒரு குழந்தையிடம் கொடுத்தேன் .
ஒரு கோட்டோவியம்
ஒரு கவிதை
ஒரு காவியம் எழுதி
என்னைப்பார்த்து சிரித்தது .
அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்பு
என்னை அழைத்தது

- ஆத்மாநாம்


..

அபூர்வ கனி
நீர்க்கரை மரக்கிளையில் முழு நிலா
அபூர்வமான கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன் .
உனக்கென நான் அதை
அள்ளி வரத்தான் முடியவில்லை .

-தேவதேவன்


2 comments:

  1. அந்த ஆத்மாநாமின் கவிதை அற்புதத்திற்கும் அப்பாற்பட்டது.

    ReplyDelete
  2. அசத்தல் கவிதைகள்....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.