Share

Mar 31, 2009

இப்பவும் நான் வீட்டுக்கு போனா ......




பிராந்தி கடை சாதாரண மனிதர்கள் விசித்திர கோலம் கொண்டு வெளியேறும் மாயா ஜால உலகம் . நிஜமாகவே தினம் ஒரு ஆளாவது அடி வாங்காமல் வெளியேற மாட்டான் . ஒரு தடவை பொங்கல் போதைக்காக மேலே பார் வசதி உண்டு என்பதால் மாடி ஏறியவன் இறங்கியவுடன் கரும்பை கடையின் கண்ணாடி அலமாரி மீது வீசி விட்டான் . கடையிலிருந்த ஆட்கள் அவனை ரணகளமாக்கி விட்டார்கள் . இது மாதிரி அடித்தால் மட்டுமே அடங்குவார்கள் என்பதால் நிறைய சம்பவங்கள் .

ஒருவன் குடித்து விட்டு இறங்கி வந்து என்னை பார்த்து ' உங்களை மாதிரி டிரஸ் பண்ண ஸ்ரீவில்லி புத்தூரிலேயே ஆள் கிடையாது . உங்க டிரஸ் சை பாக்கனும்னே நான் தினமும் தேவகி ஓட்டல் கிட்ட காலையில் நிற்பேன் சார் . நான் குடிச்சிட்டு பேசறேன்னு தயவு செய்து நினைக்காதிங்க சார் . போதையில் பேசறேன்னு தயவுசெய்து நினைக்காதீங்க ..இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோறு தான் திம்பேன் சார் . பீய திங்க மாட்டேன் . நம்புங்க ' என்று ஆரம்பித்தவன் நம்புனா நம்புங்க . ' இப்பவும் நான் வீட்டுக்கு போனா சோத்தை தான் திம்பேன் . பீய திங்கவே மாட்டேன் ' என்ற வாக்கியத்தை நிஜமாக உத்தேசமா நூறு தடவை சொல்லிகொண்டே கடை முன்னே நிற்க ஆரம்பித்தான் . எவ்வளவு சொல்லியும் நகர மறுத்து உரக்க அந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்து விட்டான் . வேறு வழியே இல்லாமல் நானே அவன் கன்னத்தில் பொறி கலங்க அடித்து காலால் ஓங்கி இடுப்பில் ஒரு எத்து எத்திய அடுத்த நொடி கீழே விழுந்து எழுந்து அதற்கடுத்த நொடியில் சிட்டாக பறந்து விட்டான் . ஓடியே போனான் .
முதல் தடவை பிராந்தி குடிக்க வருபவன் கிட்டத்தட்ட சாந்தி முகூர்த்தத்துக்கு வருகிற பெண் போலவே வருவான் . இறங்கி போகும்போது தோரணையே வேறு .
பக்கத்து கிராமங்களிலிருந்து திருவண்ணாமலை திருவிழாவுக்கு வருகிறவர்களில் ஒரு குழு பிராந்தி கடைக்குள் வரும் .
' ஏலே ஒன்கிட்ட காசு இல்லன்னா கீழே இரு . நாங்க சாப்பிட்டு வாரோம் . ' ஒருத்தனை கீழே விட்டுவிட்டு மூணு பேரு மேலே போன பின் கீழ உள்ளவன் ' ஏலே எப்படிலே இருக்கு .' சும்மா கிடயம்லே . இப்ப தான ஆரம்பிச்சிருக்கோம் .'ஏலே நல்லாருக்காலே 'படியிலிருந்து ஜன்க்னு குதிச்சி ஒருவன் ' ஏலே ஒன்னும் இல்லேலே . சாராயம் மாதிரி தாம்லே இருக்கு .சாராயம் எரிக்கும் . பிராந்தி எரிக்கல . நெஞ்ச இது எரிக்கல .அவ்வளவு தாம்லே .'
ஒரு ரௌண்டு இறங்கினவுடனே கர்ணன் ஆகிடுவான் .' மாபிள்ளே உனக்கு என்னலே வேணும் . ஏங்கிட்ட கேளு ' என்று பணத்தை எடுத்து வீச ஆரம்பித்து விடுவான் .
ஒருத்தன் ' தம்பி , ஒழுக்கம் தாண்டா முக்கியம் . வார்த்தை சுத்தம் வேணும்டா டே ' -- இவன் தான் தர்மர்.
இன்னொருத்தன் குடிச்ச போதையில் பார்த்தவன் காலிலெல்லாம் விழுந்து ' தெய்வமே ' என சரண்டர் ஆவான் .விபீசணன் !
இப்படி தொன்ம பிம்பங்கள் நிறைய ...
...
என்னுடைய சொந்த ஊர் செய்துங்கநல்லூர் . தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நான் என் மாமனாருடன் பிராந்திகடையில் பங்குதாரராக இருந்தேன் .
அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் இவை .
சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் இந்த "இப்பவும் நான் வீட்டுக்கு போனா ......'' பதிவை படித்து விட்டு தினமலர் திரு ரமேஷ் ( அந்துமணி ) என்னிடம் சாரு நிவேதிதா போன் மூலம் தொலை பேசினார் . அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை . மிகவும் ரசித்து சிலாகித்து பேசினார் .
..


லோகல் பாலிடிக்ஸ் ....அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்


லோகல் பாலிடிக்ஸ் ....அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்

மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர் திமுக வின் கம்மாக்கரை அவைத்தலைவர் . மேடையில் கண்ணுசாமி தேவர் பேசுகிற அழகு பிரத்யேகமானது . நல்ல போதையில் தான் மீட்டிங் மேடையில் ஏறுவார் . பொன்னாடையை ஒச்சு தான் வந்து போர்த்துவான் . ஒச்சு, பொன்னாடை இரண்டுமே இவர் ஏற்பாடு தான் .

எடுத்த எடுப்பிலே எம்ஜியாரை வம்புக்கிழுப்பார் ." நீ என்ன சண்டை போடுறே . நீ ஆம்பிளையின்னா ஒண்டிக்கு ஒண்டி இந்த கண்ணுசாமி கூட வா . ஒங்காத்தா கிட்ட குடிச்ச சினைப்பால கக்க வைக்கலே நான் ஒன் கெண்ட காலு மசுரு ன்னு வச்சிக்க .எங்க முக முத்து நடிக்க வரவும் மார்கெட் போயிடுமேன்னு பயந்துபோய் புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க வெண்ணை ..நீயெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்னா நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா டே .. கலைஞர் கிட்ட மோதினா காணாம போயிருவ .

டே நிக்சன் !நீ அமெரிக்காவுக்கு ஜனாதிபதி . ஆனா கண்ணுசாமி கம்மாக்கரை ஜனாதிபதி .நிக்சன் ! ஒன்னை நான் பாராட்டுறேன் . நீ வாட்டர் கேட் பண்ணே . ஆனா உடனே பீல் பண்ணி ராஜினாமா பண்ணே . ஒன்னை நான் பாராட்டுரண்டா .

ஆனா ..... ( இந்த இடத்தில் நாக்கை கடிக்கிறார் ) இந்திரா காந்தி .. நீ மொத்தம் ஒவ்வலே .... மரியாதியா திருந்திடு ... நடக்கிறது எங்க ஆட்சி ..எமர்ஜென்சிகேல்லாம் கண்ணுசாமி பயப்பட மாட்டான் .மரியாதையா திருந்து ..இல்லன்னா மதுரை பக்கம் வந்துகிடாதே ..வீணா அழிஞ்சுபோவே . கலைஞரை பகைச்சேன்னு வச்சுக்க உனக்கு கண்ணுசாமி தான் எமன் .

டே எதிர்க்கட்சி காவாளிகளா ( கண்ணுசாமி தேவர் தம்பி சின்ன சாமி தேவர், தங்கச்சி மாப்பிள்ளை கருத்தகன்னு இருவரும் அண்ணா திமுக ) நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு முழச்ச காளான் எல்லாம் நெஞ்ச நிமித்துராங்கடா !அழிஞ்சே போவீங்கடா ..மரியாதையா கலைஞர் கால்லே வந்து விளுந்துடுங்கடா ... அது தான் பொழைக்கிற வழி .

டே தங்கபல்லு தங்காத்த்து உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு.. (இது தனிப்பட்ட பகை -கொடுக்கல் வாங்கல் விவகாரம் .கண்ணுசாமி கடன் வாங்கியிருக்கிறார் .தங்காத்த்து திருப்பி கேட்கிறார் . அதற்காக மேடையில் சவால் ) சும்மா நடக்கும் போதே எனக்கு வேட்டிக்கு வெளியே நீட்டிகிட்டுதாண்டா இருக்கும் . டே... எனக்கல்லாம் ஏந்திரிச்சிடுசின்னு வச்சிக்க அப்புறம் மடக்கரதுக்கு இந்தியாவிலேயே ஆளு இல்லடா டே .. .....

யாருடா அவன் ...நான் பேசும்போது அடிச்சி பார்க்கிறவன் .. அவனை தூக்குங்கடா ..... அந்த மண்டை மூக்கனை தாண்டா .. டே ஒத்த காதா ( இவனுக்கு ஒரு காது கிடையாது ) அவனை தூக்குடாங்கரேன் ...காதோட சேர்த்து அப்பி தூக்குடாங்கரேன் என்னடா.... அவன் முழியே அப்படி தானா ..அந்த முழியை தாண்டா நோண்டணும் பேசும்போது அடிச்சி பார்க்கிராண்டாங்கிரேன் ...."

அடுத்த வாரம் சின்னசாமி தலைமையில் அண்ணா திமுக கூட்டம் ....................................................................................................சின்ன சாமி தேவரின் வீர வசனங்கள் ......................

..

( சென்ற 2008வருடம் செப்டெம்பர் மாதம் பதினொன்றாம் தேதி பதிவு (11.09.2008))

.....

மேற்கண்ட கண்ணுசாமி மேடை பேச்சு

வருடம் 1975 ஆகஸ்ட் மாதம் .
34வருடங்களுக்கு முன்

தமிழக முதல்வர் அப்போதும் இப்போதைய முதல்வர் தான் . திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில்(1973) எம்ஜியார் கட்சி மகத்தான வெற்றி பெற்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகி விட்ட பின்னால்!

Mar 30, 2009

There is no salvation

“I am humbled by events today.” Obama said immediately after sworning in as the president of America.

ஒரு மிக பெரிய விழாவா விளாவி ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது . செலவுக்கணக்கு ஏதோ ரொம்ப ரொம்ப பெரிதாய் டாலரில் சொன்னார்கள் . அப்போது அடக்கமாக ஒபாமா சொன்னார் .“I am humbled by events today.”

..

குஜராத் கலவரம் பார்த்தோம் . மும்பை கலவரம் பார்த்தோம் . ஒரு மாதம் முன் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் கண்டோம் .

“Had it not been for the bus driver, We would not be alive.” என்று முத்தையா முரளிதரன் நடுக்கத்துடன் சொன்னதை கேட்டோம் . அந்த பஸ் டிரைவர் தன் சாதுர்யத்தால் , குண்டு சத்தங்களுக்கு மிரளாமல் வேகமாக பஸ் ஓட்டி இந்த சாதனையை செய்தார் . அவர் ஒரு பாகிஸ்தானி .

இன்று லாகூர் கலவரம். பல இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது . போலிஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் . பிணைக்கைதிகளாய் போலீஸ்காரர்கள் . நானூறு ஐந்நூறு பேர் என்று Time Now TV சொல்கிறது . எண்ணூறு பேர் பிணைகைதிகள் என CNN சொல்கிறது.

" மூச் " என்று தீவிரவாதிகள் சொன்னதும் அவ்வளவு போலீஸ்காரர்கள் வாய்பொத்தி உட்கார்ந்திருக்கிறார்களா ?

தீவிரவாதிகள் போலீஸ் யுனிபார்ம் உடை அணிந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அடையாளம் காண்பதில் இப்போது சிக்கல் .

காலை ஏழரை மணிக்கு இந்த ஏழரை ஆரம்பித்திருக்கிறது .

இருபது பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .நூற்றி ஐம்பது பேர் காயம் . இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் .

பாகிஸ்தான் இராணுவம் லாகூர் வந்து விட்டது .

பாகிஸ்தான் அரசாங்கம் இதற்கு குற்றம் சொல்வது JuD, LeT அமைப்புகள் மீது .

இந்திய எல்லை லாகூரில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்.

வார்த்தைகள் எதற்கு இனி .

Saying nothing…. Sometimes says the most
- Emily Dickenson

..

எட்டு தீவிரவாதிகள் உள்பட முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்திருக்கிறது . ஆறு தீவிரவாதிகள் பிடிபட்டிருக்கிறார்கள் .

Mar 28, 2009

கூறாமல் சந்நியாசம் கொள்

'சித்தி ' என்று ஒரு கதை . சின்னம்மா என நினைத்து விடக்கூடாது . ஆத்மசித்தி ! புதுமைப்பித்தன் எழுதியது . சந்நியாசம் பற்றிய கதை தான் . சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிப்பது பற்றி .இந்த கதையில் செண்பகராமன் என்பவர் அரைகுறை சந்நியாசி !
...
எனக்கு தெரிந்த  பெரியவர் ஒருவர் தீப்பெட்டி ஆபிஸ் அதிபர் .ரொம்ப கீழே ஏழையாய் இருந்து பின் பெரிய பணக்காரர் ஆனவர் . வயது அப்போது பதினைந்து வருடம் முன் எண்பத்திஒன்று . ரொம்ப ஆன்மீக தேடல் . நிறைய சுவாமியார்களை தேடியவர் . ஒரு சாமியாரிடம் கடைசியில் ஐக்கியமாகி அவரே தெய்வம் என பூஜித்துக்கொண்டிருந்தார் .
சம்சார,வியாபார வாழ்வு வாழ்ந்தார் . எப்போதும் என்னிடம் ' விரைவில் நான் சந்நியாசம் வாங்க வேண்டும் . இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி .முடித்தவுடன் கிளம்பி விடுவேன் . நீங்க சொல்லுங்க . .. நான் எப்ப சந்நியாசி ஆவேன் ' என பார்க்கும் போது எல்லாம் ' நான் சந்நியாசி ஆகணும் ' என்ற திரும்ப திரும்ப சொல்வார் .
அப்போது அவர் மனைவி இறந்து விட்டார் ! இவர் வடநாடு போயிருந்தார் . அவசரமாக திரும்பினார் . அவர் வந்தவுடன் காட்டுக்கு பிணம் கிளம்பியது . அறுபது வருடம் அந்த அம்மாவோடு வாழ்ந்தவர் . சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் . அந்த நேரத்தில் இவர் காட்டில் தன் தீப்பெட்டி ஆபிஸ் கணக்குபிள்ளையை கூப்பிட்டு " சேட்டு சரக்குக்கு பணம் எவ்வளவு அனுப்பினான் " என்றார் . ' ஏப்பா மெழுகு வந்திடிச்சா " என்றார் .பேரனை கூப்பிட்டார் " சேட்டு லேபிளை மாத்த சொன்னான் . நான் முடியாதுன்னுட்டேன் . " " தீப்பட்டி ஆபிஸ் வேன் நான்கும் ஆர் டி ஒ ஆப்பிஸ் எப்ப ரெனியூவல் " மெக்கானிக் ரிப்பேர் வேலை பார்த்தாச்சா .'" ஏப்பா !கொத்தனார் காசி என்ன ரொம்ப காசு கேட்கிறான்" "ஆமா காட்டிலே மிளகா போட்டிருந்ததே . என்னாச்சி ?"
மனைவி பிணம் எரியூட்டப்படும் போது கூட பல வியாபார, வீட்டு விஷயங்களை அலசி கொண்டிருந்தார் .
.....
சில நாள் கழித்து பஜாரில் ஒரு கடையில் என்னை பார்த்தார் ." சொல்லுங்க ! நான் எப்ப சந்நியாசம் வாங்கணும் . இன்னும் தொழில் ,வீட்டு விஷயம் சில முடித்துவிட்டால் நான் கிளம்பிடுவேன் ." என்றார் .
இவருக்கு நான் ஒரு கதை சொன்னேன்.
" சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன் . அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள் . புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள் .
இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ் ! உம்மகிட்ட சந்நியாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன் . என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும் .இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான் . என் பாவம் உம்மை சும்மா விடாது "
பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான் . அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லு .இந்த மூதேவி கிட்ட இருந்து தப்பிக்கணும் ." என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான் .
ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் ' யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
பக்கத்து வீட்டுக்காரன் சட்டென்று எழுந்தான் . தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியைவிருட்டென்று கிழித்து கோமணமாக தனக்கே கோமணமாக கட்டிக்கொண்டான் . " இப்படி தாண்டா ! " என சொல்லி விட்டு திரும்பியே பார்க்காமல் அவன் விறு விறு என நடந்து விட்டான் . பக்கத்து வீட்டுக்காரன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான் !
இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி கிட்ட அடி வாங்கியவுடன் வெளியே தெருவுக்கு ஓடி வந்து எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சந்நியாசம் போறது எப்படி சொல்லுயா "
எப்படி கதை....
இந்த கதையை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் எல்லாம் தீப்பெட்டி தொழில் அதிபரை பார்த்து சிரித்து விட்டார்கள் ! அவரும் சிரித்து விட்டார் .
நான் சொன்னேன் " நீங்க சந்நியாசி ஆகவே மாட்டிங்க ! நிறைய பேரை இன்னும் நீங்கள் சாமியாரா ஆக்க வேண்டியிருக்கு !"
சம்சாரியாகவே,வியாபாரியாகவே தான் சில வருடங்களுக்கு பின் அவர் இறந்தார் !

Mar 27, 2009

படாத பாடு பட்ட பட்டோடி


பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே . மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே .
கீழே உள்ள கதை தான் தெரியாததே.
அப்போது பட்டோடி நவாப் இந்திய அணிக்கு கிரிக்கெட் கேப்டன் ஆக இருந்தார்.இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட இந்திய அணி போயிருந்தது . பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண் ! இரவு கலட்டி வைத்து விட்டு தான் தூங்குவார் .டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு செயற்கை கண்ணை எடுத்து விழுங்கி விட்டார் !
காலையில் கண்ணை தேடினால் காணவில்லை. ஸ்பேர் செயற்கை கண் எப்போதும் கைவசம் இருக்கும் . அதை எடுத்து பொருத்திகொண்டார் .மேட்ச் விளையாட வேண்டிய டென்சன் . டாய்லட் போனால் பேல முடியவில்லை . வெளிக்கி வெளிய வரவே இல்லை . அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார் . அன்று ஓபனிங் பேட்ஸ்மன் .காலையில் ஷிட் அடிக்காததால் ஒரே இர்ரிடேசன் .டக் . முதல் பாலில் க்ளீன் போல்ட் !கோல்டன் டக் ! வெள்ளைக்காரன் எல்லாம் ' ஷேம் ஷேம் ' நு கத்துரானுங்க .
சோகமாக பவிலியன் வந்து உடனே டாய்லட் போய் முக்கினால்.. ம்ஹூம் .. புழு பூச்சி கூட ஆசனவாயிலிருந்து வெளிவரவே இல்லை ! பட்டோடிக்கு புரிந்து விட்டது . சம்திங்க் ராங் ! உடனே டாக்டரை பார்க்க வேண்டும் .
ஒரு டாக்டரை பார்த்தார்.Buttocks specialist! ' என்ன பட்டோடி !வெக்கமாய் இல்ல . முதல் பால் . அவுட் ஆகிறீங்க ' இங்க்லீஷிலே கேட்டார் .பிரிட்டிஷ் இங்கலிஷ் !
பட்டோடி ' டாக்டர் .. வெளிக்கி போகலீங்க . வரவே மாட்டேங்குது . முக்கி முக்கி பார்த்தும் வரலே . அதனால் தான் டக் அடிச்சிட்டேன் . என்னன்னு செக் பண்ணுங்க டாக்டர் .' இந்தியன் இங்க்ளிஷில் சொன்னார் .
டாக்டர் உடனே பட்டோடியின் ஆடைகளை கலட்டி நிர்வாணமாக்கி கட்டிலில் படுக்க சொல்லி இரண்டு கால்களையும் அகட்டி இரண்டு கொக்கியில் மாட்டி விட்டார் . நல்ல பவர்புல் டார்ச்சை எடுத்து லைட் அன் பண்ணி பட்டோடி ஆசனவாயில் வெளிச்சத்தை செலுத்தினார் . ஆசன வாய் உள்ளே பார்த்த டாக்டர் அதிர்ச்சியில் ஏதோ பேய் அறைந்து விட்டாற்போல் முகம் வெளிரிபோய் உடனே பதறி டார்ச் லைட்டை கீழே போட்டு விட்டார் . டாக்டர் வியர்க்க விருவிருக்க ஈசி சேரில் உட்கார்ந்தார் . மூச்சு இறைத்தது .மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார் .
கட்டிலில் அகட்டி கால்கள் கொக்கியில் மாட்டப்பட்டு வெவ்வா போல படுத்திருந்த பட்டோடிக்கு அழுகையே வந்து விட்டது ' டாக்டர் சொல்லுங்க டாக்டர் . ஏன் டாக்டர் பயந்து போயிட்டீங்க. நீங்களே பயந்துட்டீங்களே . அப்படின்னா நான் பொழைக்க மாட்டேனா டாக்டர் . சொல்லுங்க டாக்டர் ' இந்தியன் இங்க்ளிஷில் கெஞ்சி கெஞ்சி கேட்டார் .விம்மி அழ ஆரம்பித்து விட்டார் .
வியர்க்க விருவிருக்க ,மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க மிரண்டு போய் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார டாக்டர் பிரிட்டிஷ் இங்க்ளிஷில் சொன்னார் : "ஒத்தால ஒக்க ! நானும் என் ஆயுசுலே எத்தனையோ ' சூத் ' பார்த்துருக்கேன்!! ஒரு "சூத் " கூட என்னைய இது நாள் வரை பார்த்ததே இல்லை !!! இது தான்யா முதல் தடவை!!!!"

Mar 26, 2009

குழந்தை ஒன்று , நிலா ஒன்று


யாராவது உங்களிடம் 'குழந்தை' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் . 'நிலா ' பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

'அட போய்யா ? ஏதாவது புதுமையா சொல்லுயா ..' என்று கொட்டாவி விடுவீர்கள் .
ஆனால்
கீழே இரண்டு கவிதைகள் . குழந்தை பற்றி , நிலா பற்றி ஜோரா அசத்தலா எழுதப்பட்டுள்ளவை .

..

புத்தம் புதிய
என் பேனாவை
ஒரு குழந்தையிடம் கொடுத்தேன் .
ஒரு கோட்டோவியம்
ஒரு கவிதை
ஒரு காவியம் எழுதி
என்னைப்பார்த்து சிரித்தது .
அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்பு
என்னை அழைத்தது

- ஆத்மாநாம்


..

அபூர்வ கனி
நீர்க்கரை மரக்கிளையில் முழு நிலா
அபூர்வமான கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன் .
உனக்கென நான் அதை
அள்ளி வரத்தான் முடியவில்லை .

-தேவதேவன்


Spoiled Child !


முக முத்து தன் மூன்றாவது மனைவி பானுவுடன்(இரண்டாவது மனைவி அனுசூயாஎன்ன ஆனார்? அவரும் வேலைக்காரி ஆக முக முத்துவிடம் வந்தவர் தான்.அந்த குழந்தைஷீபாராணி? ) திருவாரூரில் புதிதாய் வாங்கப்பட்ட வீட்டில் செட்டில் ஆகி இருக்கிறாராம்.குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் படித்தேன்.
ஆனால் முத்துவின் புலம்பல் நிற்கவில்லை . உதாசீனப்படுத்தப்படுவதாக ஒரு வேதனை !தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை .Spoiled Child ! அதனால் தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர் . நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது .தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட அதிருப்தி காரணமாக மு க முத்து போகவிரும்பவில்லை . குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை பிடித்து கீழே தள்ளி விட்டார் மு க தமிழ் என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது .
உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள் ! குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும் . இவருக்கு அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம் .
தயாநிதி மாறன் -கருணாநிதி இணைப்பு விஷயத்தில் தன் மகன் அறிவுமதியை கலந்து கொள்ளவில்லை .தன் குடும்பத்தை க்ரூப் போட்டோ எடுத்த போது ஒதுக்கி விட்டார்கள் என முக முத்து வுக்கு வருத்தம். தயாளு அம்மையார் , ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு , அவர்கள் கண்ணில் வெண்ணை , தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம் . முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை ! அழகிரி நல்ல தம்பி !
ஸ்டாலின் மாறவேண்டும் ! "
இப்படி பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பேட்டி கொடுத்தால் குடும்பமும் கட்சியும் வருத்தப்படாமல் இருக்க முடியுமா .மேலும் மேலும் தந்தையுடனான உறவை சிக்கலாக்கி கொள்கிறார் . முத்துவின் எஞ்சிய காலம் அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கு புலம்பி ,புலம்பி ஆதங்க பேட்டி கொடுத்தே கழிந்து விட நேரும் என்பது அவரது மிஞ்சிய துரதிர்ஷ்டம் தான் .

முத்து உடல்நிலை காரணமாக , மன நிலை காரணமாக திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு போக முடியாவிட்டாலும் , அவர் இரண்டாவது மனைவி பானு தான் கட்டாயம் அழகிரியின் நல்ல குணத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய ப்போக போவதாக சொல்லியிருக்கிறார் !
ராசாத்தி அம்மாள் ஒரு போதும் தேர்தல் பிரசாரங்களில் நேரடியாக ஈடு பட்டதே இல்லை .
அப்பாவுக்கு பிறகு கட்சி பல பல வகையில் பிளவு பட்டு போகும் .
'நிதி' குடும்பமும் தான் .

Mar 25, 2009

Carnal Thoughts-18

பெரிதினும் பெரிது கேள்.

"யானை பிழைத்த வேல் அரிது "



பெண் யானை ஒன்று எப்போதும் ஆற்றில் நீர் அருந்திய பின் ஒரு தென்னை மரத்தின் அடியில் இளைப்பாறும்.

ஒரு எலி .நல்ல நினைப்புக்கார எலி. தன் குறுகிய எலி பிரதேசம் தாண்டி பல பரந்த அனுபவம் வேண்டி அலையும் எலி. தேடல்.தவிப்பு .
இந்த எலி திருமணம் ஆனது தான். என்றாலும் இந்த பெண் யானை மீது மையல். கண்ணால் காம வலை வீசியது. கை வசம் இருந்த தேவதேவனின் கவிதையை எடுத்து வீசியது.


"விடைத்து நிற்கும் என் குறி.
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி .
அடியே ! பீறிடும் எனது இந்திரியமடி இந்த கவிதை !"


தென்னை மரத்தின் அடியில் படுத்த யானைக்கு ஆச்சரியம். ஏன் இந்த எலி இப்படி தன்னை பார்த்து கண்ணடித்துக்கொண்டு இருக்கிறது. கவிதை சொல்கிறது.
'வாப்பா, எலி. ஒரு பொம்பளை தனியா இருக்கிற இடத்தில் வந்து கண் அடித்துக்கொண்டே இருக்கிறாயே. தேவதேவன் எழுதிய கவிதை சொல்கிறாய். என்ன வேண்டும் சொல்"
எலி " உன்னை ஒரே ஒரு தடவை ஜோலி பார்க்க வேண்டும் என்று என் நெடு நாள் தவம். ப்ளீஸ் ..ப்ளீஸ் .."

யானைக்கு ஒரு Curiosity. என்ன தான், எப்படி தான் தன்னோடு இந்த சின்ன எலி உடல் உறவு கொள்ள முடியும் பார்த்து விடுவோமே. " சரி,என் புருஷன் கஜக்கோல் பாண்டியன் (யானை தான்) வர்ற நேரம். அதுக்குள்ளே முடித்து விட்டு ஓடு " பெர்மிசன் கொடுத்து விட்டது.

எலி யானை மேல் ஏறி அதன் முதுகு, வால் அதன் அடிப்பகுதி குண்டி எங்கும் சுற்ற ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தென்னை மரத்தில் இருந்து ஒரு இளனி யானையின் தலை மீது விழுந்து விட்டது . யானை உடனே பிளிறியது.


அதன் வால் பகுதியில், குண்டி பக்கம் இருந்த எலி கேட்டது ." என்ன நான் செய்யிறது வலிக்குதா ? சாரி நான் கொஞ்சம் முரட்டு தனமா செஞ்சிட்டேன் .மன்னிச்சிக்க .I apologize" என பவ்யமாக சொல்லி விட்டு கீழே இறங்கி
" நான் புதுமையானவன்.உலகை புரிந்துகொண்டவன்..என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?" என உற்சாகமாக பாடிக்கொண்டே தன் எலி வலை நோக்கி ஆடிக்கொண்டே ஓடியது.

எலி வலையில் அதன் 'மனைவி எலி' கண்ணீர் விட்டபடி சரோஜா தேவி போல சோகமாக போஸ் கொடுத்து " என்னை மறந்ததேன் ? தென்றலே சென்று நீ என்னிலை சொல்லுவாய் " என பஞ்சு அருணாசலம் எழுதிய பாடலை பி.சுசிலா குரலில் ரொம்ப உருக்கமாக பாடிக்கொண்டு இருந்தது . Infidelity யை எந்த பெண்ணால் தான் தாங்கிக்கொள்ளமுடியும் சொல்லுங்கள்.

யானையுடன் சல்லாபித்து விட்டு வந்த எலிக்கு புரிந்து விட்டது.
எந்த கேனை எலியோ பார்த்து விட்டு வந்து, அதற்குள் தன் மனைவியிடம் பற்ற வைத்து விட்டது.
தன் மனைவியிடம் அந்த எலி கொஞ்சம் தோரணையுடன் சொன்னது .
" இங்கே பார். என் ரேஞ்சே வேற. யானையே இன்னைக்கு கதறி கூப்பாடு போட்டுருச்சி. கிழிஞ்சிடும். ஜாக்கிரதை "

Mar 24, 2009

காந்தாராவ்


தெலுங்கு நடிகர் காந்தா ராவ் இறந்துவிட்டாராம் .தமிழக மக்களுக்கு டப்பிங் படம் மூலம் அறிமுகமானவர் .
இவருடைய படங்களின் ட்ரைலர் சுவாரசியமாயிருக்கும் .
இவருக்கு வில்லன் ராஜநளா என்ற தெலுங்கு நடிகருக்கு தமிழ் டப்பிங் கே ஆர் ராம்சிங் தான் குரல் கொடுப்பார் .கே ஆர் ராம்சிங் நாடோடி மன்னன் , ஆசைமுகம்,துணிவே துணை படங்களில் நடித்திருக்கிறார் .
இப்போது மாய மோதிரம் ட்ரைலர் !
கே ஆர் ராம்சிங் குரலில் ராஜ நளா " வெண்ணிலா காற்று வீசும் இந்த நேரத்திலே .. ஆ ..( ஏப்பம் விடுவது போல இந்த ஆ ..) விவேகம் இல்லாமல் பேசி விட்டீர்கள் மன்னா !.. ஆ .. "
அரசர் : மந்திரியாரே ! நாம் இப்போது என்ன செய்யவேண்டும் ?
ராஜ நளா :" ஆ ..(தாடியை நீவி விட்டு ) நாம் உடனே வானவீதியிலே பறந்து , மாயாஜால வித்தைகளை கற்று வந்த மாமுனியை அழைத்து வரவேண்டும் ."
டிங் ..டிங் ..டிங்
மாயாஜாலங்கள் காண வாருங்கள் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "
..
காந்தாராவ் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அரச அவையில் கண்ணை உருட்டி ,புருவத்தை தூக்கி ஒரு பார்வை அரசரை பார்த்து " மன்னா ! நீ இந்நாட்டின் அரசன் ! நான் இந்நாட்டின் குடிமகன் !"
டிங் ..டிங் ..டிங்
கனல் தெறிக்கும் வீர வசனங்கள் !
..
காந்தாராவ் அழுதுகொண்டே தன் தாயை பார்த்து " அம்மா ! நீங்கள் என் தாய் ! நான் உங்கள் மகன் !"
டிங் ..டிங் ..டிங்
நெஞ்சை உருக்கும் பாச வசனங்கள் ! பார்க்க தவறாதீர்கள் விட்டலாச்சாரியாவின் 'மாய மோதிரம் '
..
ஜோதிலக்ஷ்மி தொடையை காட்டிகாட்டி ஆட்டி ஆட்டி ஆடும் பாட்டு " இத்தனை நாளாச்சா ? பக்கத்தில் வந்தாச்சா ?" எல் ஆர் ஈஸ்வரி குரலில்.
டிங் ..டிங் ..டிங்
கண்ணை கவரும் நடனங்கள் !
...
காந்தாராவ் நடிகை பாரதியை பார்த்து பாடும் பாடல் ( ஜாப்பான் !லவ் இன் டோக்கியோ! மெட்டு )
' பெண்ணே ! பருவ வயது பெண்ணே !
கண்மலர் தோட்டம் !கண்ணுக்குள் ஆட்டம் !'
டிங் ..டிங் ..டிங்
குதூகலம் ஊட்டும் காதல் காட்சிகள் நிறைந்த படம் 'மாய மோதிரம் '
..
சிரிப்பு நடிகர் ரேலங்கி கிணற்றுக்குள் . மேலே துணை சிரிப்பு நடிகர் .
' ஐயய்யோ நான் கிணத்துக்குள்ள விழுந்துட்டேன் . காப்பாத்துங்க .."
மேலே உள்ள சிரிப்பு நடிகர் " நீ பேயி ! பயமா இருக்கு "
" இல்ல நான் மனுஷன் !"
" இல்லே நீ பேயி !"
ரேலங்கி அழுதுகொண்டே " நான் மனுஷன் .. பயமா இருக்கு ..காப்பாத்துங்க "
" இல்லே நீ பிசாசு ..எனக்கு பயமா இருக்கு "
" ஐயய்யோ நான் மனுஷன்"
"ஐயய்யோ நீ பிசாசு "
டிங் ..டிங் ..டிங்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் !
விரைவில் இந்த திரையரங்கில் விட்டலாச்சாரியாவின் " மாய மோதிரம் "!
..
காந்தாராவ் கத்தியுடன் ரொம்ப கோபமாக வில்லனிடம் இன்னொரு கத்தியை தூக்கி போட்டு
" இன்று நீயா ? நானா ? பார்த்து விடலாம் . சதிகாரா ! வா என் வாளுக்கு பதில் சொல்.தேச துரோகி !நாட்டை கொள்ளையடித்த சண்டாளா ! வா "
டிங் ..டிங் ..டிங்
பயங்கர கத்தி சண்டைகள் நிறைந்த படம் விட்டலாச்சாரியாவின் ' மாய மோதிரம் '
ட்ரைலர் முடிகிறது
..................................................
என் டி ராமாராவ் ஜனவசியம் ,ராஜ வசியம் மிக்க நடிகர்.தேவுடுகாரு !
நம்ம அமலாவோட மாப்பிள்ளை நாகர்ஜுன் அப்பா நாகேஷ்வர் ராவ் பெரிய ஜனவசியம் இல்லாவிட்டாலும் நல்ல சொத்து ,மக்களிடம் நல்ல நடிகர் என்ற அந்தஸ்து பெற்றவர் .
ஆனால்
பாவம் காந்தாராவ் .
சொந்தபடங்கள் எடுத்து இருப்பதை தொலைத்த துரதிர்ஷ்டசாலி .
இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த கவலையில் வாழ்ந்தவர் .
சினிமாவில் இருந்த என் நண்பன் ஒருவன்(எப்படியாவது கவிஞர் , இயக்குனர் ,நடிகர் ஆகிவிட மிகவும் முயன்று தோற்று விட்டவன் ) சினிமாவில் கைரேகை பார்ப்பதாக பாவலா செய்து கையை நீட்டுபவர் வாயிலிருந்து வருவதையே ஜோசியமாக சொல்லி விடுவான் . சினிமாக்காரர்களின் ஜோதிட மோகம் இவனுக்கு ஒரு விளையாட்டு . பல பேரை நிஜமாக அசத்தியிருக்கிறான் . இவனிடம் இருபது ஆண்டுகளுக்கு முன் காந்தாராவ் சிக்கிய போது அவர் இவனிடம் தன் கதையைதெலுங்கு கலந்த தமிழில் சொல்லி ,இழந்த சொத்துகளை சொல்லி அழுது புலம்பினாராம் .இவர் துணைவியாரும் அழுது ' இழந்ததை மீண்டும் பெற வழியேதும் உண்டா ? கை ரேகை என்ன சொல்லுது ' என ஏக்கத்துடன் கேட்டாராம் .

Mar 23, 2009

பாராளுமன்ற தேர்தல் முஸ்தீபு

கேள்வி : பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் உங்களால் திருப்திப்படுத்த முடியவில்லை?

கருணாநிதி பதில் : நான் 'சாதாரணமானவன்'. ரொம்ப கேட்கிறார்கள் .அவர்கள் கேட்பதை என்னால் தரமுடியவில்லை . அதனால் திருப்திப்படுத்த முடியவில்லை .

பணமுதலை கருணாநிதி தன்னை சாமானியன் , சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வதை கடைசி வரை (!) நிறுத்தமாட்டார் என தெரிந்து விட்டது . இந்த 'சாதாரணமானவன் கருணாநிதி ' என்ற வார்த்தை எவ்வளவு செயற்கையானது . இன்னும் இப்படி சொல்வதை நிறுத்தாமல் பிடிவாதம் செய்கிறார் .

இன்னொன்று !

பாட்டாளி மக்கள் கட்சி பேரம் படியவில்லை என்று இவ்வளவு கொச்சையாக சொல்லவேண்டுமா ?

..

ஒ பண முதலையே !

உன்னைக் குற்றம் சாட்ட

நான் யார் ?

எனக்கு கசப்பது என் வறுமை .

உனக்கு கசப்பது

உபயோகமற்ற உன் செல்வம் .

- பிரமிள்

..

விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் மக்களை பார்த்து " நீங்கள் என்னை ஆதரிக்கா விட்டால் நான் கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் " என மிரட்டி விட்டார்.

அடி மடையன் ! மக்கள் ஆதரவு இல்லாமல் தானேடா திமுக ,அதிமுக ஏன் தேசியக்கட்சிகள் காங்கிரஸ் , பி ஜே பி ,கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட கூட்டணி போட தவித்து தக்காளி விற்கின்றன !

"நாற்பது சீட்டிலும் நான் அடையாளம் காட்டும் ஆட்களை ஜெயிக்க வையுங்கள் . மக்களுக்காக நான் நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறேன் ."

'வாயிலேயே லட்டு சுடுற அரசியல் வாக்குறுதிகள் ' மக்களுக்கு சலித்துப்போன விஷயம் !

.........

ஒரு விஷயம் . பி ஜே பி யும் ,சரத் குமார் கட்சியும் கூட்டணி என்கிறார்கள் . உண்மையா ? அப்பாடா ! இரண்டு கட்சிக்கும் ஒரு ஆறுதல் ! தேறுதல் !

இல .கணேசன் கவனத்திற்கு:

இந்திய நாட்டின் பிரதமர் ஆவது தான் தன் லக்ஷியம் என சரத்குமார் சொல்வாராம் ! அவரது பிரதமர் லக்ஷியம் ஈடேற பி ஜே பி உதவினால் தமிழக நாடார் சமூகம் மிகவும் மகிழும் !ஏதோ எங்க காமராஜருக்கு பின் அகில இந்திய அரசியலில் மிக உச்ச நிலைக்கு வர மிக ,மிக ,மிக விரும்பும் நாடாரை கௌரவித்தால் பி ஜே பி க்கும் பெருமை தானே !

..

கருணாநிதிக்கு சொந்த குடும்பம் !இன்னொரு பணமுதலை ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி குடும்பம் !

ஜெயலலிதா கூட்டணி தலைவர்களிடமும் ஜாதகம் வாங்கி அனலைஸ் செய்து கொள்கிறாரா ? கம்யூனிஸ்ட் தா . பாண்டியன் ஜாதகம் என்ன சொல்கிறது ?

...

உஷார் ! உஷார் !!

நடிகர் கார்த்திக் !!!

இவருடைய அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மூன்று தொகுதியில் தனித்து போட்டி .

விருதுநகரில் கார்த்திக் பாராளுமன்ற வேட்பாளர் .

"நீங்க நிற்கிறீங்க ! நின்னு ஜெயிக்கிறீங்க !!"

"நீங்க நிற்கிறீங்க ! நின்னு ஜெயிக்கிறீங்க !!" இந்த வசனம் 'சவாலே சமாளி ' படத்தில் தோற்கபோகிற வேட்பாளரை( டி கே பகவதி ) பார்த்து அழுத்தமாக நாகேஷ் சொல்கிற வசனம் !

Mar 22, 2009

Listen what I am telling you!




ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமைனி " நீ முதலில் மாறவேண்டும் . நாங்கள் உற்று கவனிக்கிறோம் . நாங்கள் தீர்மானிப்போம் . உன்னிடம் எந்த மாற்றத்தையும் நாங்கள் இன்னமும் பார்க்கவில்லை . உன்னிடம் எந்த மாற்றத்தையும் எங்களால் காணவே முடியவில்லையே .மாற்றம் , மாற்றம் என்று வார்த்தைகள் மட்டும் எந்த மாற்றத்தையும் நம் இரு நாடுகளின் உறவிலும் ஏற்படுத்தபோவதில்லை ."

ஒபாமாவுக்கு எதிர்வினையாற்றியுள்ள கொமேனியின் மேற்கண்ட சலிப்பான வார்த்தைகள் ' பழைய கருப்பன் கருப்பனே ' என சொல்கின்றன . அமெரிக்காவின் வெளியுறவு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் வந்து விடவில்லை என்ற உண்மை கொமேனியின் வார்த்ததைகளில் தெரிய வருகின்றது . ஒபாமாவும் முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளை போல ஒருவர் தான் என கொமேனி சொல்கிறார் என பொருள் கொள்ள வேண்டும் .

அமெரிக்கா ! பழைய கருப்பன் கருப்பனே !!



நான் ஒபாமா தேர்தலில் ஜெயித்த பின் எழுதிய 'ஒபாமா !ஓசான்னா ! ஓசான்னா !'என்ற பதிவை மீண்டும் நினைவுகூருங்கள் .

"Change! Change!"- Obama
மாற்றம் ! மாற்றம் ! என்று ஒபாமா அந்த வார்த்தையை Cliché ஆக்கிக்கொண்டே
இருக்கிறார்.

Obama!
What are your charms for? What are your arms for?

....

யுத்தம் காஷ்மீரை சுற்றி வியாபகம் கொண்டுள்ள நிலை தொடர்கதை .நேற்று ஜம்மு பகுதியில் ஒரு மேஜர் , மூன்று சிப்பாய்கள் இந்திய தரப்பில் பலியாகியுள்ளார்கள் .' சின்ன மோதல் தானே , இதெல்லாம் அந்த ஏரியாவில் எப்போதும் உள்ளது தானே ' என தாடையை சொரிபவர்கள் சொரிந்து கொள்ளலாம் .

ஸ்பீல்பர்க் எடுத்த Saving private Ryan படம் யுத்தத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் பார்க்க வேண்டும் . Saving private Ryanபடத்தின் முதல் காட்சி மனத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு சொல்லும் தரமன்று .

Saving private Ryan ல் முதல் காட்சியாக வருகின்ற Battle scene, The longest dayபடத்தின் இரண்டாவது மணி நேரத்தில் வருகிறது !

Saving Private Ryan (1998 )
The longest day(1962)

போர் என்பதை எப்படி அர்த்தம் கொள்வது .
சீன இந்திய யுத்தத்தின் போது
கண்ணதாசன் எழுதிய வார்த்தைகள் " புத்தன் வந்த திசையிலே போர் . புனித காந்தி மண்ணிலே போர் !" இந்த மண்ணில் இப்படி நடக்கிறதே என்ற இறுக்கம் , யுத்தத்தின் அபத்தம் . எங்கே தான் நிம்மதி . ஏசு கிறிஸ்து பிறந்த இடம் இன்று ரணகளமாய் இருக்கிறது . குஜராத் கலவரம் காந்தி பிறந்த மண்ணில் தானே .

...
இந்த படம் ஐந்து அகாடெமி விருது வாங்கியிருக்கிறது , இந்த படத்திற்கு ஆறு அகாடமி விருது கிடைத்திருக்கிறது ,எட்டு அகாடமி அவார்ட் வாங்கி இருக்கிறது . ஏழு அக்காடமி அவார்ட் வாங்கிய படம் என்று ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் பற்றி கண்ணை அகல விரிப்பவர்கள் கவனத்துக்கு :

Citizen Kane (1941 movie)
I can remember everything. That's my curse, young man. It's the greatest curse that's ever been inflicted on the human race: memory

இந்த படத்தின் கதாநாயகன் ஆகவும் நடித்து இயக்கிய ஆர்சன் வெல்ஸ்! ( Orson Welles ).அப்போது இருபத்தாறு வயது இளைஞன் . இந்த படத்திற்கு ஒரே ஒரு விருது 'திரைக்கதை'க்கு மட்டும் தான் கிடைத்தது . ஒன்பது பிரிவுக்கான அகாடெமி விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்ட போதும் அன்று ஒரே ஒரேஒரு ஆஸ்கார் விருது மட்டுமே அன்று இந்த படத்திற்கு கிடைத்தது .


Kane’s confession: "If I hadn't been very rich, I might have been a really great man.."


Mr. Kane was a man who lost almost everything he had.


American film institute தன் 100 greatest movies பட்டியலை சென்ற ஆண்டு மீண்டும் ஆய்ந்து புதுப்பித்தபோது மீண்டும் முதல் இடத்தில் வந்த படம் Citizen Kane!

காலத்தின் தீர்ப்பு ! ஒரே ஒரு அகாடமி அவார்ட் வாங்கிய படம் 68 வருடங்களுக்கு பின் இன்றும் முதல் இடத்தில் இருக்கிறது .






Citizen Kane!

The greatest movie ever made!











Mar 20, 2009

புல்லாங்குழல் ,யாழ் , மிருதங்கம்

சுகுமாரன் கவிதை

"புல்லாங்குழல்

சகல மனிதர்களின் சோகங்களையும்

துளைகளில் மோதிற்று "

எல்லா மனித சோகங்களையும் விரித்து பாடிற்று என்றும் கொள்ளலாம் . துளைகளால்இசையாக வெளியேறி சோகமான மனிதர்களின் இதய ரணங்களை வருடி மருந்திட்டது என்றும் கொள்ளலாம் .

பாரதிதாசனின் பாடல் தேஷ் ராகத்தில்

" துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ?" என புலம்பும் .

“I will play the Swan and die in Music”

- Shakespeare in ‘Othello’

தியாக பிரும்மம் கீர்த்தனைகளில்

மிருதங்க தாளம் இதயத்தில் நிகழ்த்தும் மாயம்

ஸ்ரீ ரஞ்சனி ராகத்தில்

"சொக சுகா மிருதங்க தாளமு "

....

என்னுடைய சமீப அனுபவம் . இக்கட்டு , மன உளைச்சல் , பிரச்னைகள் அதிகம் இருக்கின்ற சூழல், கச்சேரி போன்ற விழா அனுபவமாக உள்ள இசை நிகழ்வுகளை ஏற்க மறுக்கிறது . இந்த வருடம் ஜனவரி மாதம் நான் இவை போன்ற சிக்கல்கள் காரணமாக திருப்பூர் வேலாயுத சுவாமி திருமண மண்டபத்தில் நடந்த பாலமுரளி கிருஷ்ணா கச்சேரியை ரசிக்க முடியாது என தோன்றியதால் அங்கு செல்ல விரும்பவில்லை . செல்லவில்லை .

ஏகாந்தமாக ,தனிமையில் இசையை அனுபவிப்பது இது போன்ற தருணங்களில் சாத்தியம் என தோன்றுகிறது .

“I am never merry when I hear sweet music”
-Shakespeare in ‘The Merchant of Venice’

Mar 19, 2009

சுகந்தி சுப்பிரமணியன்

சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கு ஒரு முறை ஈரோடு நாங்கள் இருவரும் சென்று விட்டு திருப்பூர் திரும்பிய போது அவர் அழைத்து சென்றிருந்தார் .

அங்கே அவர் துணைவி சுகந்தி என்னிடம் " அய்யா ! என் கணவர் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் . எனக்கு தமிழ் கற்று கொடுங்கள் அய்யா " என்று கேட்டார் . ஐந்து வயது குழந்தையாக தோன்றிய சுகந்தி யை மன பாரத்துடன் நான் பார்த்த போது இருபது வருடங்களுக்கு முன் அவருடைய " புதையுண்ட வாழ்க்கை ' கவிதை நூலை பற்றி புதுவையில் நடத்திய கருத்தரங்கம் என் நினைவில் நிழலாடியது .

சுப்ரபாரதி மணியன் உள்ளே சமையல் அறைக்கு சென்ற போது சுகந்தி " அய்யா ! உங்கள் பேனாவை எனக்கு தாருங்கள் அய்யா " என குழந்தை கேட்பது போல கேட்டார் . நான் உடனே அவரிடம் கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார் . அதன் பின் சுப்ரபாரதி மணியனும் நானும் பேசுவதை ஆர்வத்துடன் ஜன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார் .

ஒரு ஐந்து வயது கூட நிறைவேறாத சிறுமியை த்தான் சுகந்தியிடம் காண முடிந்தது . அன்று சுப்ரபாரதி மணியன் , சுகந்தி , இரு மகள்கள் இவர்களை எண்ணி மிகுந்த வியாகுலம் அனுபவித்தேன் .

சென்ற மாதம் மறைந்த சுகந்தி சுப்பிரமணியன் அவர்களுக்கு மார்ச் 15 தேதியன்று திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தில் அஞ்சலியுரை நிகழ்த்தினேன். இந்த மரணம் சுகந்திக்கு பரிபூரண விடுதலை தான் . அவர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு நீரில் இருந்து வெளிவந்த மீன் போல சொல்லணா துயரத்தை அனுபவித்த பெண்மணி . கணவருக்கு , மகள்களுக்கு பாரமாக வாழ நேர்ந்த துர்பாக்கியசாலி .இவர் கணவர் சுப்ரபாரதி மணியன் சிலுவை சுமந்திருக்கிறார் என நான் சொல்வேன் . தன் மனைவியின் மனநோய் அவருக்கு ஏற்படுத்திய உளைச்சல் ,அவமானம் , வேதனை குறித்து ஒரு போதும் ஒரு முணுமுணுப்போ , பல்கடிப்போ எப்போதும் அவரிடம் இருந்து கேட்க நேர்ந்ததில்லை . இரண்டு பெண் பிள்ளைகள் . அவர்களுக்கு தாய் சிலையாகி போன நிலையில் மணியனே பிள்ளைகளுக்கு தாயுமானவர் . சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கையை மீட்டு விடதளரா நம்பிக்கையோடு மீண்டு எழுதலின் ரகசியம் என்று தன்னால் செப்பனிடப்பட்ட சுகந்தியின் கவிதைகளுக்கு பெயர் வைத்தார் .

காலச்சுவடு பத்திரிகையில் அம்பையும் , உயிர்மையில் கவிஞர் சுகுமாரனும் அஞ்சலி கட்டுரை எழுதியுள்ளனர் . சுகுமாரனின் அஞ்சலி சிறப்பாக வந்திருந்தது .

காலச்சுவடு அம்பை அஞ்சலி ...

'நாச்சார் மட விவகாரம்' சிறுகதை சுந்தர ராமசாமிக்கு ,கண்ணனுக்கு எப்படிப்பட்ட அவமானத்தை தந்தது என்பதை நான் நன்கறிவேன் . சு. ரா இது பற்றி என்னிடம் போனில் மிகுந்த துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. கண்ணனும் தன் மன உளைச்சலை என்னிடம் சொல்லியிருக்கிறார் .

சு ரா இறந்த பின் ஜெகம் பிராடு தூங்காம , பேலாம , சாப்பிடாம எழுதுன இருநூறு பக்க புத்தகத்தில் சு ரா வின் ஆளுமை எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது என்று கண்ணன் என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் . சொல்லப்போனால் அந்த புத்தகம் பற்றி கண்ணனும் நானும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டோம் . ஏனென்றால் என்னைப்பற்றியும் ரொம்ப அவதூறாக , சுந்தர ராமசாமியோடு ஜெகம் பிராடுக்கு மனஸ்தாபமே ஏதோ என்னால் தான் என அதில் அந்த ஆசாமியால் எழுதப்பட்டிருக்கிறது .

அந்த ஜெகம் பிராடு இணைய தளத்தில்கூட சுகந்தி பற்றி சில தேவையில்லாத விஷயங்கள் இப்போது எழுதப்பட்டுள்ளது.

..

சரி . இப்போது அம்பை அஞ்சலி என்ற பெயரில் சுப்ரபாரதி மணியனுக்கும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானத்தையும் , மன உளைச்சலையும் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தால் காலச்சுவடில் இதை பிரசுரித்திருப்பாரா ?

தனக்கு வந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரலாகாது என்பது கண்ணனுக்கு பொருட்டில்லையா? அம்பையின் அஞ்சலியில் நாச்சார் மட கூறுகள் இல்லையா ? அடுத்தவங்க குடும்பத்தில் தலையிட அவசியமில்லை என்று எழுதிக்கொண்டே அம்பை என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார்.இது போன்ற விஷயங்களை காலச்சுவடு ஆசிரியர் எடிட் செய்ய வேண்டாமா ?

......

அருண் குமார் பின்னூட்டத்திற்கு என் பதில்
நாச்சார் மட விவகாரம் மற்றும் தூங்காம பேலாம சாப்பிடாம எழுதுன மாதிரி நாலாந்தரமாக Character assasinationசெய்து எழுதி விடவில்லை என்பதற்காக நன்றி தெரிவிக்கலாம் .
நல்லவேளை அம்பை போல சுகந்தி, மணியன் இருவர் பற்றி வன்மமாக பெரிதாக எழுதவில்லை தான் . ஆனால் ஜீப்பை எடுத்துக்கொண்டு சுகந்தி போலிஸ் ஸ்டேசன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக எழுதியுள்ளது அநாகரீகம் இல்லையா ? மணியனின் சுற்று சூழல் அக்கறையையும் அவரது எழுத்து பற்றியும் இணைத்து ஒரு நுண் அரசியல் வார்த்தையை மணியன் இந்த துயர சூழலில் எங்ஙனம் எதிர்கொள்வது ?சுகந்தி பற்றிய அஞ்சலியில் மணியன் இன்றைய எழுத்து பற்றி ஏன்தீர்ப்பு ? விமர்சனம் ?
..

Mar 18, 2009

Do not shit where you eat!

அடிப்படையான விஷயங்களுக்கு எதிரான கருத்துகள் கேட்க நேரலாம் . உதாரணமாக குந்தர் கிராஸ் " கண்களை புத்தகம் படிக்க பயன்படுத்துவது தவறு ." என்று சொன்னார் .

எவ்வளவு காலம் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் கம்யுனிச முதல்வர் ஆக இருந்தார் ஜோதி பாசு . கடைசியில் அவரே சலித்து ஓத்த ஓலு போதும் போதும் என்று புடுக்கை சொறிஞ்சு விட்டு எந்திரிச்சு புத்த தேவ் பட்டாசார்ஜியை முதல்வராக உட்கார வைத்து ,அதன் பின் புத்த தேவ் முதலாளித்துவ பாதையை ஆதரிக்கஆரம்பித்த போது , சென்ற வருடம் ஜனவரியில் ஜோதிபாசு " யோவ் இதுலே என்னய்யா தப்பு சோசியலிசம் நடைமுறைக்கு ஒத்து வராது " என அதற்கு சப்பை கட்டி சொன்ன Declaration வார்த்தைகள் இவை “We want capital, both foreign and domestic. After all we are working in a capitalist system. Socialism is not possible now”

என்னங்க ஜோதி பாசு !

சாப்பிட்ட இடத்திலேயே பேலக்கூடாது .

..

அப்பா சஞ்சய் காந்தியை மாதிரி தான் வருண் காந்தியும் தன்னை தீவிர இயல்புடையவராக வெளிக்காட்டிக்கொண்டுள்ளார் . குடும்ப எதிர்ப்பு அரசியல் அவருடைய பெரியம்மா மேல் அம்மா மேனகாவுக்கு உள்ள கோபதாபம் வருணை பி ஜே பி யில் கொண்டு சேர்த்திருக்கிறது . முஸ்லிம்களுக்கு எதிராக வாய்க்கு வந்த படி பேசி ,இன்று கைது செய்யப்பட வேண்டிய சூழலில் இருக்கும் வருண் காந்திக்கு சில வார்த்தை .'You just fart.Do not shit where you eat!Some modesty might suit you better. உங்கப்பா காலம் வேற . உங்கப்பா மேல கூட முஸ்லீம் இனத்திற்கு நிறைய கோபம் உண்டு . உங்க கட்சிக்காரங்களை எமெர்ஜென்சி நேரத்திலே உங்கப்பா என்னல்லாம் அட்டகாசம் பண்ணாருன்னு கேட்டுப்பாரு .விரிவாகசொல்வாங்க . அப்பா பேர்வாங்கிடணும்னு துடிக்காதே.'

...

சர்தாரி யை சுத்தி , பிரதமர் கிலானி , ராணுவத்தளபதி கியானி , நவாஸ் ஷெரிப் ,அமெரிக்கா இன்னும் பாகிஸ்தான் என்று எக்கச்சக்க சத்ருக்கள் .சர்தாரி கூட சாப்பிட்ட இடத்திலேயே வெளிக்கி போனாரு . இப்ப என்னாச்சி .Do not shit where you eat!

நடந்ததை மறந்துட்டு பாகிஸ்தான் ஜனாதிபதி துள்ளலாமா ?

எச்சரிக்கை சர்தாரி !

Stay awake. Stay awake.
Don’t close your eyes.
Don’t nod and dream .

It’s going to get worse and you don’t know who to trust anymore !They( Kiyani, Kilani , Nawas sheriff , Americans and Pakistanis) don’t know how to trust you anymore!!

Mar 17, 2009

On the Waterfront (1954movie)

"I could have had class. I could have been a contender. I could have been somebody, instead of a bum, which is what I am......"

வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் எள்ளி நகையாடப்படும் சூழல் . காலம் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள் . கானல் நீராகிவிடும் Aim! Ambition!! யாரை குற்றம் சொல்வது .வாழ்வின் திசை மாற்றிய காரணங்கள் ."நீ தானே என் இன்றைய நிலைக்கு காரணம் ?" என்ற வினா ஒருவரை நோக்கி கேட்கின்ற தருணம்.
தன்னிரக்கம் .. சுய பச்சாத்தாபம் ..

வாழ்க்கையை தொலைக்க நேரும் ஒவ்வொருவரும் வேதனையுடன் இந்த வார்த்தைகளை சொல்ல நேர்கிறது.Lamentation!மார்லன் பிராண்டோ சொல்லும் இந்த வார்த்தைகள் On the Waterfront படத்தின் பிரபலமான வசனம் .எலியா கசன் இயக்கிய படம் .இதே மார்லன் பிராண்டோ வோடு நடிகை விவியன் லீ யை வைத்து எலியா கசன் இயக்கிய இன்னொருபிரபலமான படம் A streetcar named desire (1951 movie).

On the Waterfrontல் ராட் ஸ்டீஜர், பிராண்டோவின் சகோதரன் சார்லியாக விஷேசமான பாத்திரத்தில் நடித்திருப்பார்.சகோதரர்கள் இருவரும் டாக்சியில் விவாதிக்கும் காட்சி ஹாலிவுட் படங்களில் வந்துள்ள உணர்வுப்பூர்வமான ஒரு திரைக்காட்சி ! ரிவால்வரை மூத்த சகோதரன் தன் நெஞ்சில் திடீரென்று வைத்து மிரட்டும் போது டெர்ரி யாக நடிக்கும் மார்லன் பிராண்டோ முகத்தில் வெளிப்படும் வியாகுலம். அப்போது தான் அந்த வார்த்தைகளை பிராண்டோ சொல்கிறார் ."You don't understand. I coulda had class. I coulda been a contender. I coulda been somebody, instead of a bum, which is what I am, let's face it. It was you, Charley. "


வில்லன் ரோல் செய்வது லீ ஜே .காப் . படத்தில் வில்லன் பெயர் Friendly!
பாதிரியார் பேரி யாக கார்ல் மால்டன் .Some people think the Crucifixion only took place on Calvary. Well, they better wise up! இவர் பற்றி ஒரு செய்தி . ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன் வந்த இந்த படத்தில் நடித்துள்ள கார்ல் மால்டன் இப்போது97 வயதில் இன்னும் உயிரோடு இருக்கிறாராம் .
கொலம்பியா பிக்சர்ஸ் எடுத்த படங்களில் மிக சிறந்தது என்றும் ஹாலிவுட் கண்ட மகத்தான படம் என்றும் கருதப்படும் On the Waterfront இத்தனை வருடங்களிலும் புகழ் வளர்ந்து கொண்டே தான் போகிறது. அருமையை அரைநூற்றாண்டு காலம் கடந்தும் இன்று கூட உணர முடிகிறது .

Mar 16, 2009

தலாக் தலாக் தலாக்

ஹரியானாவிலே முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் சந்தர் மோகன் . இவரு ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர். காங்கிரஸ் எம் எல் ஏ .

இந்தாளு முகம் பார்த்தீங்கன்னா 'இப்ப தான் விளக்கெண்ணை குடிச்சவன்மூஞ்சி ' மாதிரியே இருக்கும் ! போன தீபாவளியன்னைக்கு மனைவி சீமா , இரண்டு குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு காணாமல் போயிட்டாரு .அப்ப இவரு ஹரியானாவின் துணை முதல்வர் .நாற்பது நாட்கள் சென்ற பின் டிசெம்பெர் மாதம் புது மாப்பிள்ளையா திரும்பி வந்தார் . கூட அந்த மாநில உதவி அட்வகேட் ஜெனரல் அனுராதா பாலி. இதான் புதுப்பொண்ணு . இப்ப இரண்டு பேரும் முசல்மான்களாக. அனுராதா பேரு FIZA! இந்த மந்திரி பேரு சந்த் முஹம்மத் . உடனே பஜன்லால் குடும்பம் இந்த ஆளை கைகழுவிடுச்சி. துணை முதல்வர் பதவியும் சந்த் முகமதுவிடமிருந்து பிடுங்கப்பட்டது .அனுராதா வகித்த கோர்ட் பதவியும் காலி .


மீண்டும் ஜனவரி இருபத்தெட்டாம் தேதி (அதாவது கொஞ்ச நாளிலேயே )பிசா என்ற அனுராதாவையும் அம்போ என்று விட்டு விட்டு காணாமல் போய்விட்டார் .

போன வெள்ளிக்கிழமை (march13தேதி) இரவு இங்கிலாந்துலே இருந்து அனுராதா பாலிக்கு ஒரு போன் . சந்த் முகமது தான் ."தலாக் . தலாக் . தலாக் " தொலைபேசியிலேயே விவாகரத்து . மனுஷன் ரொம்ப பொறுப்பானவர் ! கவனமும் உஷாரும் நிறைந்தவர் ! உடனே ,உடனே அனுராதா மொபைலுக்கு ஒரு எஸ் எம் எஸ் " தலாக் . தலாக் . தலாக் " .எஸ் எம் எஸ் மூலமும் விவாகரத்தை உறுதி செய்து பெருமிதமடைந்து விட்டார் .

இந்த போன் ,எஸ் எம் எஸ் தலாக் குறித்து இப்ப அனுராதா என்ற பிசா சட்டவல்லுனர்களையும் ,மௌலவி ,அஜரத்களையும் கலந்து ஆலோசித்துக்கொண்டு இருக்கிறார் . யா அல்லா !

Mar 14, 2009

சரணாகதி

எழுத்தாளர்எம் ஜி சுரேஷ் நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன சம்பவம் இது .

எம் ஜி சுரேஷ் தன் அலுவலக பணியில் ஒரு ஊருக்கு இன்ஸ்பெக்சன் போயிருந்த போது நடந்தது .

அந்த ஊரில் ஒரு விஷேசமான சாமியார் என நம்பப்பட்ட ஒருவர் இருந்திருக்கிறார் . அவரை போய் பார்த்தால் என்ன என சுரேஷ் எண்ணியிருக்கிறார். எழுத்தாளருக்கு உள்ள ஆவல் தான் .அலுவலக ஊழியர்கள் சிலருடன் அந்த சாமியாரை பார்க்க கிளம்பியிருக்கிறார் .அப்போது கூடவே வந்த உள்ளூர் அலுவலக பியூன், வழியெல்லாம் அந்த சாமியாரை மிக கடுமையாக விமர்சித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

" தேவிடியா பய சார் இந்த சாமியார் . ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் . இவனை போய் நீங்க பார்க்கனுமா ?"

'சரியான பொம்பளை பொருக்கி . எத்தனை பொம்பளையை அசிங்கம் பண்ணியிருக்கான் தெரியுமா ? தேவிடியா பய இந்த சாமியார் "

" பிராடு பய சார் . ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கான் . இவனையும் சாமின்னு இந்த ஜனங்க நம்பிகிட்டு இருக்கு . தூ .சாக்கடை பன்னி.ஏன் சார் இந்த பன்னியை போய் நீங்க பார்க்க வர்றீங்களே "

''பணக்காரங்களை தான் இந்த சாமியார் மதிப்பான் .காசுலே தான் குறி . என்னைக்குனாலும் இவன் போலிஸ் கிட்ட கட்டாயம் ஒரு நாள் மாட்டுவான் . எவ்வளவு நாள் தான் இவன் மோசடி நடக்கும் . பேமானி சிக்குவான் பாருங்க ஒரு நாள் .ரொம்ப நாள் எல்லாரையும் ஏமாத்த முடியாது சார்.''

ஆசிரமம் வந்தவுடன் இந்த பியூன் 'குடு ,குடு ' என்று வேகமாக ,அவசரமாக ஓடி,பய பக்தியோடு நடுங்கி தோப்பு காரணம் போட்டு ''சாமி ! ஒங்க ஆசீர்வாதம் வேணும் சாமி '' என்று கூப்பாடு போட்டுசாஸ்டாங்கமாக சாமியார் காலில் விழுந்து விட்டாராம் !

Mar 13, 2009

ஆருயிர் நண்பன் - பிரதம விரோதி



"தமிழ்ச்சூழலில் 'விரோதி ' என்றும் 'விரோதியல்லாதவர் 'என்றும் 'நண்பர் ' என்றும் எப்படி வெங்கட் சாமிநாதனால் எளிமையாக ப்பாகுபடுத்த முடிகிறது ? ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே நேற்றைய அவனது ஆருயிர் நண்பன் தானே இன்று அவனுடைய பிரதம விரோதி ? இந்த உண்மை வெ.சா அறியாத ஒன்றாக இருக்க முடியுமா ?"


சுந்தர ராமசாமி அவருக்கும் வெசாவுக்கும் இடையே யான மோதல் ஒன்றின் போது 2004ல் வெசா வை நோக்கி இந்த கேள்விகளை முன்வைத்தபோது அவருக்கு நான் ஒரு போன் போட்டேன் . மேற்கண்ட வரிகள் பற்றி அவரிடம் கேட்டேன் . அவர் அதற்கு ஒரு சத்தமான சிரிப்பு சிரித்தார் . அந்த சுராசிரிப்பு நிஜமாகவே இன்றும் என் காதில் ஒலிக்கிறது . இதை எழுதும் இந்த வினாடியில் கூட .

அந்த அவரது சிரிப்பு பற்றி விவரிக்க சுராவின் வார்த்தைகளையே கடன் வாங்க வேண்டியிருக்கிறது .
அந்த சிரிப்பு அழுகைக்கு பதிலாக வருமே அந்த சிரிப்பு !

இன்னொரு சிக்கலான இலக்கிய சூழலில்
காலச்சுவடு கண்ணன் சொன்ன Sensible,Matter-of-factவார்த்தைகள் கீழே :
"எந்த மானுட உறவும் நிரந்தரமானதல்ல . எல்லா உறவுகளுக்கும் அடிப்படை பொருண்மை ரீதியாகவோ , உணர்வு ரீதியாகவோ 'பயன்படுவதும் ' 'பயன்படுத்திக்கொள்வதும்' தான் . இதை தாண்டிய புனிதம் எந்த மானுட உறவிலும் இல்லை ."


ஒரு பொதுவான வார்த்தையாக மனிதன் பற்றி Every human being is left alone in this world என சொல்வதுண்டு . இந்த வார்த்தை இலக்கியவாதிகளை பொறுத்தவரை இன்னும் கூர்மையாகி, ஆழமாகி , அழுத்தமான உண்மையாக இருக்கிறது .புத்தகத்தை ,எழுத்தை தொட்டவனின் வாழ்க்கை பரிதாபமானது .
காம்யு தன் 'வீழ்ச்சி' நாவலில் 'யாருமே தன் பொய்களை ஒப்புக்கொள்ளாது இறக்கக்கூடாது ' என்பது மற்றவர்களுக்கு என்பதை விட எழுத்தாளர்களுக்கானது என நான் எப்போதுமே உணர்கிறேன் . இங்கே பொய் தான் எழுத்தாக இருக்கிறது . நிஜம் பற்றி பேசும்போதும் பொய் தான் நிஜமாக வேடமிட்டு வந்து ஊளை அழுகை யாக கதறுகிறது .மிக மோசமான வேஷங்கள் விளம்பரம் தேடி அலைகின்றன .

' கோவிலுக்கு' போவது , பூஜை புனஸ்காரங்கள் ,சடங்குகள் , விசுவாச நம்பிக்கைகள் , கோட்பாடுகள் , புனித நூல்களை வாசிப்பது போன்ற விஷயங்கள் எல்லாமே Entertainment வகையை சேர்ந்தவை தான் . இவை எல்லாம் ஏதோ Enlightenment என்ற பரவச மூட நம்பிக்கை மிகவும் அபத்தமானது 'என ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வார் .
ஜேகே யின் இந்த வார்த்தைகள் இன்றைய தமிழ் இலக்கிய கூட்டங்கள் , புத்தகங்கள் பற்றிய நம்பிக்கைகளுக்கும் மிகவும் பொருந்தும் .எழுத்தாளர்கள் ,வாசகர்கள் இரு சாராரிடமுமே ஒரு 'அதீத பரவசம் ' தென்படுகிறது .அல்லேலூயா பரவசம் தான் இதுவும்.

'இலக்கியம் வாழ்க்கைக்கு விரோதமானது ' என்று 

கிராமியன் என்னிடம் சொன்னார்.
 
கிரா சொன்னது மீண்டும் நினைவுக்கு வருகிறது .
கல்கியின் மகள் ஆனந்தி டிகேசி யோடு ரயிலில் குற்றாலம் போகும்போது 'தாத்தா ! ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தவுடனே ஏன் குலைக்குது ?" என்று ஆர்வமாக கேட்டாளாம் .டிகேசி உடனே சொன்னாராம் ." எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

Mar 12, 2009

The Apartment(1960movie)

Laugh out loud comedyயாக இல்லாமல் சில படங்கள் கொஞ்சம் நெகிழ்த்தி ரசிக்க செய்யும் .அப்படி ஒரு நகைச்சுவை படம் The Apartment.ஜாக் லெமன் , ஷர்லி மக்ளின் நடித்த படம் . Some like it hotஇயக்கிய பில்லி வைல்டர் தான் இதையும் இயக்கினார் .


தன்னுடைய அபார்ட்மென்ட்ஐ தன் உயர் அதிகாரிகளின் Love-nest ஆகஉபயோகிக்க அனுமதி தரும் பாக்ஸ்டர் . வாழ்க்கையில் Promotion மூலம் முன்னேற வேண்டுமே !

ஷெல்ட்ராக் எனும் மேனேஜர்,கதாநாயகன் பாக்ஸ்டரின் தேவதையை ,உள்ளம் கவர்ந்த பெண்ணை Extra –marital உறவுக்கு இவனுடைய Apartment ல் பயன்படுத்துகிறார் . அதனை அறிய நேரும் துரதிர்ஷ்ட சூழலில் பாக்ஸ்டர் .
ஷெல்ட்ராக் செய்யும் துரோகத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் கதைநாயகி உடைந்து போய் பாக்ஸ்டர் இடம் சொல்கிறாள் :“Why can’t I ever fall in love with someone nice like you?”
இவள் முதல் முதலாக தன் இளமை யவ்வனத்தில் நிர்பந்தமாக முத்தமிடப்பட்டது எந்த இடத்தில் தெரியுமா ? கல்லறைகளுக்கு இடையில் ! Romance இவள் வாழ்வில் ஆரம்பித்தது இப்படி தான்!

ஷெல்ட்ராக்கிடம் அவர் நடவடிக்கைகள் வெறுத்துபோய் பாக்ஸ்டர் சொல்லும் வார்த்தைகள் ..மெல்லிய புன்னகையை நம்மில் ஏற்படுத்தும் "I've Decided to Take My Doctor's Advice, I'm going to become a mensch." என்ற கதாநாயகனின் வார்த்தைகள் !Just following doctor's orders. I've decided to become a "mensch". You know what that means? A human being.
இந்த படத்திலும் கடைசியில் ஒரு பிரபல வசனவரி உண்டு. இருவருமே வேலையிழந்த நிலையில் ஜின் ரம்மி சீட்டு விளையாடும்போது காதலை வெளிப்படுத்தி
ஜாக் லெமன்:You hear what I said, Miss Kubelik? I absolutely adore you.
இதற்கு உடனே
ஷர்லி மகளின் :Shut up and deal.


Jin rummy சீட்டு விளையாட்டில் dealing உண்டு . எப்போதும் ஆண் பெண் உறவிலும் தான் .

Mar 11, 2009

காவல் கோட்டம் நாவலும் எஸ் ரா தீர்ப்பும்

நிறைய பக்கங்கள் நாவல் , நிறைய எழுதுவது சாதனையாக கருதுவதா ? இல்லை வாசகனின் வேதனை என்று எடுத்துகொள்வதா?கண்ட கண்ட புத்தகத்திற்கும் நேரத்தை விரயம் செய்ய முடியுமா ? வாசித்தல் ஒரு தவம் அல்லவா ?
ஒரு முறை கோவி மணிசேகரன் தான் சில ஆயிரம் பக்கங்களுக்கு நாவல் எழுதியதாய் குறிப்பிட்டு " எவன் தமிழிலே இத்தனை பக்கங்களுக்கு நாவல் எழுதியிருக்கான் சொல்லு . " என்று சத்தமாக கேட்டதற்கு எழுத்தாளர்பெங்களுர் ரவிச்சந்திரன்(கவிஞர் புவியரசின் இந்த மாணவர் என்ன ஆனார் ?இறந்து விட்டார் என்பதற்கு ஆதாரம் ஏதும் யாருக்கேனும் கிடைத்து விட்டதா ? இன்னும் இல்லையா ?) உடனே ,உடனே " நல்ல ஹார்ட் லேபர் .கடுமையான உழைப்பு ." என்று பதில் சொன்னாராம் .
அசோகமித்திரனுக்கு சென்னையில் விழா ஒன்று எடுத்தபோது அவரை கௌரவித்து பேசிய சுந்தர ராமசாமி மேற்படி கோவி பாணி நிறைய எழுதும் எழுத்தாளர்களை பற்றி 'அவர்களை நாம் மே தினம் அன்று கௌரவித்துக்கொள்ளலாம் ' என்று குறிப்பிட்டார் .சபையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது .
காவல் கோட்டம் என்று ஒரு ஆயிரம் பக்க நாவல் . சு .வெங்கடேசன் எழுதியது . தமிழ் இனி வெளியீடு . நாயக்கர்கள் கலந்து கொண்டு வெளியிட்டுள்ளார்கள். ஐ ஏ எஸ் அதிகாரி கலந்து கொள்கிறார் .தமிழ் செல்வன் மேடையில் அழுகிறார் . கோவை ஞானி ' தமிழில் இது வரை இப்படி ஒரு நாவல் வரவில்லை . நான் அறுபது பக்க மலர் வெளியிடபோகின்றேன் " என்கிர்ரார் ..! ' இதுவரை எழுதப்பட்ட நாவல்களை இந்த நாவல் விஞ்சி விட்டது ' என்று 'கோவையின் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் (ராஜேஷ் குமார் அல்ல )குறிப்பிடுகிறார் . 'காவல் கோட்டம் ' புத்தக வெளியீட்டு விழாவில் ' இருபது வருடமாக கோணங்கி எழுதியதை எல்லாம் இந்த நாவல் மிஞ்சி விட்டது .' என்று பேசினாராம் ஒருவர் .இந்த புத்தக வெளியீட்டு விழா அடிக்கடி நடக்கிறதாம் .இனி டால்ஸ்டாய் , தாஸ் தாவ்ஸ்கி என்று சொல்லக்கூடாதாம் .வெங்கடேசன் டால்ஸ்டாய் , வெங்கடேசன் தாஸ் தவ்ஸ்கி என்று தான் சொல்லவேண்டும் என்று பலரும் மேடையிலும் குறிப்பிடுகிறார்களாம் .காம்ரேடு எழுதிய நாவல் என்பதால் அந்த பின்புலமும் துதி பாடுகிறது .

என்னவெல்லாமோ நடக்கிறது இங்கே . எஸ் ராமகிருஷ்ணனின் அனுபவம் வேறு விதமாக இருக்கிறது . இந்த நாவலை படிக்க பல நாட்களை விரையம் செய்ததாக எஸ் ராமகிருஷ்ணன் உணர்கிறார் . தமிழ் செல்வன் கடுமையான மிலிடரி அனுபவம் உள்ளவர் என்பதால் இந்த நாவலை படிப்பதில் அவருக்கு அவ்வளவு கடின அனுபவம் இருக்காது தான் . ஆனால் என்னால் முடியவில்லை என்கிறார் . படு அபத்தமான நாவல் பற்றி விமர்சனம் செய்ய அவருக்கு ஏன் தோன்றியிருக்கும் என நான் ஊகிக்க முயன்றேன் . தன்னுடைய விமர்சனம் இனி வாசகர்களுக்கு இந்த அதீத மதிப்பீடுகள் , பயங்கர பாராட்டு புகழுரைகள் குறித்த அபாய எச்சரிக்கையை ,விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு படுமோசமான நாவல் என தான் உணர்ந்த பின்னும் சகித்துக்கொண்டு அதற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என தோன்றுகிறது .
'தமிழ் இனி' வெளியீடு எனும்போது அதற்கென்று ஒரு Coterie அதன் நூல்களை Promote செய்வதற்கு இருக்கிறது .செக்கு மாட்டு விமர்சகர்கள் நிறைய பேர் காத்துக்கொண்டு இருப்பார்கள் என்பதால் தான் எஸ் ராமகிருஷ்ணன் இந்த எதிர்மறை விமர்சனத்தை சிரமம் பார்க்காமல் ,இதனால் இந்த நாவலுக்கு மேலும் விளம்பரம் கிடைக்குமே என்று கவலை படாமல் முன் வைத்திருக்கிறார் என்பது தெளிவு .
நாயக்கர்கள் பற்றிய இந்த நாவலில் திருமலை நாயக்கர் பற்றி எழுதும்போது அவரது 'பிரபலமான தொந்தி ' பற்றி கூட எந்த குறிப்பும் இல்லை !திரட்டிய தரவுகளுக்கு நாவலில் யாருக்கும் நன்றி கூட தெரிவிக்கப்படவில்லை !நாவலில் வரும் நாயக்கர்கள் தமிழ் நாவல் என்பதால்கவனமாக தெலுங்கை தவிர்த்து தமிழ் பேசுகிறார்கள் என்பது எனக்கு செவி வழி செய்தி .
தமிழில் இது வரை இந்த மாதிரி நாவல் வந்ததில்லை என்று எப்படி இவர்களால்Declare பண்ண முடிகிறது .கோணங்கி இருபதுவருடம் எழுதியதை இந்த நாவல் காலி செய்து விட்டது என்று அற்பத்தனமாக சொல்லமுடிகிறது . தமிழில்இன்று வரை வந்துள்ள நாவல் சாதனைகளை எப்படி துச்சமாக தூக்கி வீசி விட முடிகிறது . SNOBBERY!இந்த மேட்டிமை பூர்ஷ்வாத்தனம் இலக்கிய உலகில் பலகாலமாக இயங்கி வருவது தான் .
இந்த மேட்டிமை பூர்ஷ்வாத்தனம் என்பதற்கு நான்எப்போதுமே எதிரானவன் .
எஸ் ராமகிருஷ்ணன் இந்த நாவலுக்கு கொடுத்துள்ள பத்வா தண்டனை சரியானது தான் என அங்கீகரிக்கின்றேன்.

Mar 10, 2009

Well ..Nobody is Perfect.

பில்லி வைல்டர் இயக்கிய படம் Some like it Hot (1959 movie)
டோனி கர்டிஸ் , மரிலின் மன்றோ , ஜேக் லெமன் ஆகியோர் நடித்தார்கள்.

சிரிப்பு படம்.

இந்த படத்தில் ஜோ பிரவுன் என்ற நகைச்சுவை நடிகர் பேசிய வசனம்
Well ..Nobody is Perfect. படத்தின் கடைசி வசனம்.
டோனி கர்ட்டிஸ் (சாக்சபோன் வாசிப்பவர் ), ஜேக் லெமன்( பாஸ் ரிதம் வாசிப்பவர் ) இருவரும் ஒரு கொள்ளை கூட்டத்திடம் இருந்து தப்புவதற்காக இளம் பெண்களாக வேடமிட்டு ஒரு பெண்கள் இசைக்குழுவில் இணைந்து விடுவார்கள் .
டோனி கர்ட்டிஸ் பெண் வேடமிட்டாலும் காதல் மன்னன் ஆயிற்றே!

மரிலின் மன்றோவிடம் கவனமாக செட்டில் ஆகி விடுவார்.

ஜேக் லெமன் தான் பாவம்!

ஆஸ்குட் ஒரு கோடீஸ்வரர்.

அவர் ஜேக் லெமன் ஒரு பெண் தான் என மிகவும் மயங்கி விடுவார். அவ்வை சண்முகி உங்களுக்கு நினைவுக்கு வரும்.

ஆஸ்குட் Optimistic person! எந்த பிரச்சினையிலும் Postitive approach தான். Negative answer சொல்லவே மாட்டார் .
தன்னை கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமே இல்லாத விஷயம் என்பதை எப்படி எல்லாமோ சிரமப்பட்டு ஜேக் லெமன் விளக்குவார்.
ஆஸ்குட் "எங்கம்மா உடைய கவுன் தான் உன் மணப்பெண் உடை '"
ஜேக் லெமன் " என் சைஸ் வேற .உங்கம்மா சைஸ் வேற "
ஆஸ்குட் ' ஆடையை ஆல்டர் செய்துகொள்ளமுடியும் '
லெமன் " நான் மூணு வருஷம் ஒரு சாக்சபோன் வாசிப்பவனிடம் வாழ்ந்தேன்"
ஆஸ்குட் " கவலை படாதே .உன்னை நான் மன்னிச்சிட்டேன் "
லெமன் " என்னாலே குழந்தை பெத்துக்க முடியாது "
ஆஸ்குட் " தத்து எடுத்து வளர்ப்போம் "
தன் விக் கை தலையிலிருந்து எடுத்து விட்டு
எரிச்சலுடன் ஜேக் லெமன் இந்த ஆஸ்குட் வேடத்தில் நடிக்கும் ஜோ பிரவுனிடம் "தயவு செஞ்சு புரிஞ்சிக்க .. யோவ் நான் ஆம்பளையா .." என்று வெடிக்கும்போதும் தன் காதலை இழக்க மனமின்றி ’அதனாலே என்ன இப்ப’ என்று ஜோ பிரவுன் பிடிவாதமாக மந்தஹாசபுன்னகையுடன் சற்றும் அசராமல் சொல்லும் வார்த்தைகள்.. "Well ..Nobody is Perfect. "

படம் அதோடு முடியும் .

இந்த சினிமா வசன வரிகளின் சாசுவத மதிப்பு மிக அசாதாரணமானது.

Some like it Hot இயக்குனர் பில்லி வைல்டர் இறந்த போது ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தி :
Billy Wilder is dead. Nobody is perfect!

அவரது கல்லறை Gravestoneமீது எப்போதும் எல்லோரும் பார்க்க என்றென்றைக்குமாக எழுதப்பட்டுள்ள வரிகள் :
I ‘m a Writer. But then nobody is perfect.


யார் வாழ்வு தான் சதம்?!

................................

Mar 9, 2009

கண்ணில் தெரியும் கதைகள்

1 .முசாரப் டெல்லி வந்து இந்தியா டுடே கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்து விட்டார் . இவர் கார்கில் யுத்தத்திற்கு பின் அதிபராக முன்னர் டெல்லி வந்த போது இவர் வரும் பாதையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்போது ஒரு வீட்டையே இடித்தார்கள் . இப்போதும் அவர் தன்னை அதிபராகவே நினைத்து கொண்டு தான் ' இந்தியா விட்டு கொடுத்து அனுசரிக்காவிட்டால் இன்னும் நிறைய கார்கில்களை சரித்திரம் பார்க்க வேண்டியிருக்கும்' என பேசியிருக்கிறார் . பங்களா தேஷ் போர் , பாகிஸ்தான் பிரிவினைக்கும் இந்தியா தான் காரணம் என முசரப் சொல்லும்போது ' எங்கள் எதிர்ப்பு, ராணுவ அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்க உங்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . எங்கள் நாட்டையே சிதைத்து பிளவுபடுத்தியவர்கள் தானே நீங்கள்' என்ற தொனி தெரிகிறது .

முஸ்லீம் நாடு என தன்னை நினைக்கும் பாகிஸ்தான் தன் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களை விட இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுவது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் .

பாகிஸ்தானில் மற்றொரு திருப்பம் எந்த நேரமும் தயாராய் இருக்கும் போல .ராணுவ புரட்சி பற்றிய ஹேஷ்யங்கள் உலா வரும் வேளையில் ஜெனரல் கியானி(கயானி ?) விரலை உயர்த்தி அதிபர் சர்தாரியை 'ஒழுங்கா வேலைய பார்க்கலேன்னா பார்த்துக்க . நான் பிஸியாக வேண்டி வந்துரும் ' என்று கடுமையாக எச்சரித்துள்ளார் . அமெரிக்கா சொல்லி தான் கியானி இப்படி சர்தாரியை கண்டித்துள்ளாராம் .

2 .ஒரிஸ்ஸாவில் பதினோரு வருட பிஜேபி கூட்டணியை ஆளுங்கட்சி பிஜு ஜனதா தளம் இழந்தவுடன் உடனே உடனே ஓடிபோய் நவீன் பட்நாயக்குக்கு இடதுசாரிகள் நேசக்கரம் நீட்டுகிறார்கள் .

பேஷ் பேஷ் ..

3 .ஜெயலலிதாவின் இன்றைய 'பகல் லஞ்ச் தவிர்க்கும்' சின்ன உண்ணாவிரதம் வைகோவின் பொருந்தா கூட்டணி குற்றவுணர்வை நீக்கி விடுமோ ?

கொஞ்ச நேரம் மதியம் உண்ணாவிரத மகிமையை ஜெயா டிவி யில் பார்த்தேன் . அவனவன் சூடத்தை கொளுத்துரான் , துண்டை போட்டு தாண்டுறான் .தோப்புக்கரணம் போடுறான் . தெய்வத்திற்கு இடைவிடாத பூஜை .அம்மன்நடுவில் தேஜசுடன் ஜெகஜோதியாய் அமர்ந்து பூரிப்புடன் அத்தனை தீபாராதனையையும் அம்மா திருப்புகழ் மந்திரத்தையும் ஏற்று புன்னகைக்கிறார் .

இலங்கை மக்கள் துயரம் இவர்களுக்கு பொருட்டே இல்லை . அம்மா ஆராதனைக்கு ஒரு மேடை.

பலே பலே ..

"நீதி ,குற்றமற்ற தன்மை இரண்டுமே ஒன்று சேரமுடியாதபடி பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன . 'குற்றமில்லா தன்மை' சிலுவையிலும் 'நீதி ' அலமாரியிலும் காணப்படுகின்றன ."

இது ஆல்பர் காம்யு தன் " வீழ்ச்சி " நாவலில் சொல்வது.

Mar 8, 2009

அறியப்படாத சினிமா பிரபல ஜோடி

சினிமாவில் பல பிரபல ஜோடிகள் பற்றி மக்கள் அறிவார்கள் .
ஜெமினி -சாவித்திரி
எஸ் எஸ் ஆர் - விஜயகுமாரி
ரவிச்சந்திரன் -ஷீலா
பிரபலமான இந்த ஜோடிகள் இணைந்ததும் பிரிந்ததும் தெரியும் . ஆனால் அதற்கும் பல ஆண்டுகள் முன் இவர்களுக்கு முன் இதே போல இணைந்து பிரிந்த ஜோடி ஒன்று பற்றி பலருக்கு தெரியாது .
டி.ஆர் . மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி !
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா ,இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவை கட்டிலில் கட்டிவைத்தேன் போன்ற பாடல்களை பாடிய எஸ் வரலக்ஷ்மி தான் மகாலிங்கத்துடன் பல காலம் முன் வாழ்ந்தார் . இருவரும் அப்போது திரையுலக பிரபல ஜோடி என அறியப்பட்டிருந்தார்கள் . பாடல்சத்தமாக ஒலிக்கும் நடிகர் மகாலிங்கம் காரில் வரலக்ஷ்மி யும் சேர்ந்து ஸ்டூடியோவுக்கு போவதை ரசிகபெருமக்கள் சாலையோரங்களில் நின்றபடி பார்த்து கையசைத்து வாழ்த்துவது தினம் பார்க்க கிடைக்கும் காட்சியாம்.
அப்போது மகாலிங்கத்திடம் 'பிலிம்ரெப்ரசெண்டேடிவ்' வேலை பார்த்தவர் ஏ எல் சீனிவாசன் . கண்ணதாசனின் அண்ணன் . பின்னாளில் சாரதா ஸ்டூடியோ , ஏ எல் எஸ் புரடக்சன் என முதலாளியானவர் .
வாழ்க்கை விந்தையானது . பல வினோத திருப்பங்கள் நிறைந்தது .
1 .டி ஆர் மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி நட்சத்திர ஜோடி பிரிந்தது .மகாலிங்கம் தயாரித்த இருவரும் இணைந்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மன வேறுபாடுக்கு காரணமாக இருந்திருக்கும் .
2 . சில காலத்திற்கு பின் எஸ் வரலக்ஷ்மி நடிகர் மகாலிங்கத்திடம்முன்பு பிலிம் ரெப் வேலைபார்த்த ஏ எல் சீனிவாசனின் மனைவியானார் . அவருடனேயே வாழ்ந்தார் .
கண்ணதாசன்  " மாலையிட்ட மங்கை "(1958)படத்தை டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கி தயாரித்தார் .
வரலக்ஷ்மி சிவாஜியின் ஜோடியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்தார் .
கே எஸ் ஜி யின் பணமா பாசமா (1968)படம் எஸ் வரலக்ஷ்மியை மீண்டும் 'அம்மா' நடிகையாக பிரபலமாக்கிவிட்டது .
நட்சத்திர ஜோடி டி ஆர் மகாலிங்கம் -எஸ் வரலக்ஷ்மி பிரிந்து
தலைமுறை காலங்களுக்கு பின்
ஏ பி நாகராஜன் இயக்கத்தில்
ராஜ ராஜ சோழன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும் எஸ் வரலக்ஷ்மியும் ஒன்றாக பாடி நடித்தார்கள் .
" நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க " சீர்காழி பாடுவது
" நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க " டி ஆர் மகாலிங்கம்
" தஞ்சமென வந்தோர்க்கு தஞ்சம் வழங்கும் தஞ்சை பெருவுடைய சோழனே நீ வாழ்க " எஸ் வரலக்ஷ்மி தொடர்ந்து பாடுவது
பின் சீர்காழி ,மகாலிங்கம் ,எஸ் வரலக்ஷ்மி மூவரும் சேர்ந்து " வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கு விண்ணுயர் பெரிய கோவில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க !"
"தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !"
ஆனால் இந்த படம் வந்த காலங்களில் ஏ எல் எஸ் மனைவியாகவே எஸ் வரலக்ஷ்மி அறியப்பட்டிருந்தார் .

Mar 7, 2009

கமல் பற்றி R P ராஜநாயஹம்



ஹிந்துத்வாவாதிகள் , விடுதலை புலி ஆதரவாளர்கள் ,தமிழ் மொழி வெறியர்கள் ,பிராமண எதிர்ப்பாளர்கள் , இன்னும் இன்னும் சில பல கொள்கைசிங்கங்கள் அவ்வப்போது என் பதிவுகளை படித்து விட்டு எனக்கு மோசமான அநாகரீக மிரட்டல் பின்னூட்டங்களை அனுப்பியிருக்கிறார்கள் . அது போல கமல் ரசிகர்களும்“My concern is always with the not so successful people”பதிவு பற்றி ,'கமல் காதில் புகை 'பற்றி எனக்கு கடுமையான அநாகரீகமான பல பின்னூட்டங்களை அனுப்பி கௌரவித்தார்கள் .
இங்கே கீழே நாராயணன் ஒரு விவாதத்தில் 'கமல் காதில் புகை ' பதிவு பற்றிகூறுவது அதனால் கவனப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் .

"What RP Rajanayahem said about Kamal is absolutely true. Agreeing every inch of it, inspite of being a Kamal Fan - "
http://tinyurl.com/d29ek2 from TwitterFox

narain

Vertigo ( 1958 movie )

ஹிட்ச்காக் படங்களில் மிகச்சிறந்தது எது என்பதில் எல்லோருக்குமே கருத்து வேறுபாடு உண்டு. எனக்கு அவருடைய 'வெர்டிகோ 'படம் தான் ஆகச்சிறந்த படமாக தெரிகிறது.

இந்த படத்தில் நடித்த ஜேம்ஸ் ஸ்டீவார்ட் (James Stewart) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றவர்.எம்பையர் பத்திரிகை இன்று வரை வந்துள்ள நூறு திரை நாயகர்களில் இவரை பத்தாவது ரேங்கில் வைத்து கௌரவித்தது . இசை ஞானம் உள்ளவர் . அக்கார்டியன் வாசிப்பார் . ஜேம்ஸ் ஸ்டீவார்ட் ஹாலிவுட் நடிகர்களில் மிக வித்தியாசமானவர். முதல் காரணம் அவர் மிகவும் எளிமையானவர் . இரண்டாவது காரணம் தான் அவரை மற்ற ஹாலிவுட் நடிகர்களிடம் இருந்து மிகவும் வேறுபடுத்தி தனிமைப்படுத்தி காட்டுவது . இவருக்கு ஒரே மனைவி . இவர் விவாகரத்து செய்ததே கிடையாது .இவர் மனைவி க்ளோரியா தான் இறக்கும்வரை நாற்பத்தைந்து வருடங்கள் ஸ்டீவார்ட் உடன் குடும்பம் நடத்தியவர் . மனைவி இறந்து மூன்றே வருடங்களில் 1997ல் இறந்து விட்டார் . ஜேம்ஸ் ஸ்டீவார்ட் நடித்த மற்றொரு முக்கியமான படம் It’s a wonderful life (1947 film)

வெர்டிகோ படத்தில் ஸ்டீவார்ட் க்கு Acrophobia – fear of heights!


 உயரமான இடங்களில் இருந்து கீழே பார்க்க பயம் .

High Anxiety என்ற பெயரில் பின்னால்1977 ல் Melbrooks இந்த Acrophobiaகதாநாயகனாக நடித்த படம் சிரித்து வயிறு புண்ணாகி விடும்.

வெர்டிகோ படு சீரியஸ் படம்.கிம் நோவாக் கதாநாயகி.பார்க்க லேசா நம்ம நமீதா சாயல் தெரியும் . படத்தின் முதல் காட்சி யாரும் மிஸ் செய்து விடக்கூடாது . ஹிட்ச்காக்கின் மர்ம திகில் படங்களில் ரசிகர்களுக்கு ஒரு த்ரில் உண்டு . தன் படத்தில் தலை காட்டும் ஹிட்ச்காக்கை கண்டுபிடிக்கிற த்ரில் . அவருடைய சஸ்பன்ஸ் விஷயங்களில் தலையாயது இது .இந்த படத்தில் கதாநாயகியின் கணவர் கவின் எல்ஸ்டார் அலுவலகத்திற்கு கதாநாயகன்போகும்போது தெருவில் விறுவிறுவென்று ஹிட்ச்காக் நடந்து போவார் .
திகில் பட ரசிகர்கள் என்று இல்லை பொதுவாக நல்ல சினிமா தவறாமல் பார்த்து விடுபவர்கள் இந்த வெர்ட்டிகோ படத்தை மிஸ் பண்ணக்கூடாது .


Vertigo is a must- see classic by standard ! An amazing screenplay and arguably Hitchcock’s greatest directing venture.

....


டோண்டுவின் பின்னூட்டத்திற்கு என் பதில்

படத்தில் வரும் இரு கிம் நோவாக்குகளும் இறப்பார்கள் என டோண்டு இந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறார் . அது விஷயமாக ஒரு விளக்கம் . கிம் நோவாக் படத்தில் ஜூடி என்ற பாத்திரமாக வருகிறார் . ஆனால் அவர் மேடலின் என்ற பெண் ஆக ஸ்காட்டி முன் நடிக்கிறார் . மேடலின் என்ற கவின் மனைவி தான் இறப்பதாக காட்சி. கவின் அவரை சர்ச் கோபுரத்திலிருந்து ஜூடி பார்க்கும்போதே தள்ளி விடுவார் . பின்னால் ஜூடி யும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு கன்னிகா ஸ்திரியை திடீரென்று பார்த்து அதிர்ந்து போய் தானே தவறி விழுந்து இறக்கிறார். கிம் நோவாக் அப்படி பார்த்தால் ஒரு முறை தான் இறப்பார்.
' இந்த இரு பெண் ஒரு சாயலில் தோன்றுகிற திகில் குழப்பம் ,இறந்து போன காதலி ,மனைவி மீண்டும் உயிரோடு வரும் த்ரில் ' என்கிற ஹிட்ச்காக் தீம் தமிழில் நகல்களாக பின்னாளில் அப்போது கலங்கரை விளக்கம் தவிர ஜெய் சங்கர்,ஜெயலலிதா நடித்த "நீ", இந்த இருவருமே நடித்த "யார் நீ " ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா நடித்த "இதயகமலம் " ஆகிய படங்களிலும் வந்துள்ளது . 'இதயகமலம் ' படம் மிகவும் தரமாக எல் வி பிரசாத் இயக்கத்தில் வந்தது .கே ஆர் விஜயா அந்த காலங்களில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது என்று இதயகமலத்தை தான் குறிப்பிடுவார் .

Mar 6, 2009

சென்னை ஹைகோர்ட் கலவரம் பற்றி சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட் சென்னை ஹைகோர்ட் வக்கீல்கள் பற்றி மிக கடுமையான கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. வக்கீல்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது . ரவுடிகள் , காலிகள்என்ற வார்த்தை பதங்களால் வக்கீல்களை சாடியிருக்கிறது ( Hooligans,Miscreants) இவை ஒன்றும் மிகையான வார்த்தைகள் அல்ல . போலீஸ் எந்த அளவுக்கு கொடூரமான அமைப்போ அதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல வக்கீல்கள் . இவர்கள் செய்ய முயன்ற அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல . காலித்தனத்தை யாரும் தட்டிகேட்க கூடாது என்பது தானே இவர்களின் வாதம் .

இந்த சென்னை ஹைகோர்ட் கலவரம் பற்றி சாரு நிவேதிதா " வக்கீல்கள் -போலீஸ் மோதல் இரண்டு ரவுடிகளின் மோதல் " என்று எழுதியிருந்தது நூற்றுக்கு நூறு சரியானது .

இப்போது வக்கீல் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட் சொல்வதை ஏற்கமுடியாது என்று எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார்கள் . இவர்கள் கூட்டமாக தாங்கள் செய்வதை யாருமே தட்டி கேட்கவே கூடாது என்று பிடிவாதம் , அழிச்சாட்டியம் செய்கிறார்கள் . இவர்கள் மேலும் பிரச்னையை சிக்கலாக்க அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவார்கள் .

உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் மெத்தனம் கலவரத்திற்கான காரணங்களில் ஒன்று என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் . உயர் நீதிமன்ற நீதிபதிகள் வக்கீல்களிடம் தேவையில்லாத கரிசனத்தை காட்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் .அதாவது வக்கீல்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கிறார்கள் !

உச்சநீதிமன்றத்தின் இந்த விமர்சனம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.

Vittorio De Sica ‘s Bicycle thief(1949)

There is a cure for everything except death.
இவ்வளவு நம்பிக்கையுடன் தன் மகனிடம் சொல்லும் ரிக்சி எப்படி பிறழ்வை தழுவ நேர்கிறது.Ricci is not morally superior to the thief.
வாழ்வின் ஜீவாதாரமான தன் சைக்கிள் திருட்டு போகும்போது I have been cursed my whole lifeஎன தன்னிரக்கத்தால் பீடிக்கப்படும் ரிக்சி யாக லாம்பெர்டோ மாகியோரணி யும் மகன் ப்ருனோ வாக அற்புதமான நடித்துள்ள ஏழு வயது என்சோ ஸ்டயோலா . எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை எத்தனையோ படங்களில் பார்க்கிறோம் . ஆனால் இந்த "பைசைக்கிள் தீப் " படத்தில் வரும் இந்த சிறுவனை படம் பார்த்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது . இந்த பையன் ஸ்டயோலா பின்னால் நிஜ வாழ்வில் ஒரு சாதாரண பள்ளிக்கூட கணக்கு வாத்தியார் ஆகிவிட்டதை சோகம் என்பதா இல்லை தத்துவார்த்தமாக அது தானே வாழ்க்கை என்பதா ?
கதாநாயகன் ரிக்சியாக நடித்த லாம்பெர்டோ கூட இந்தNeo –realistic movie யில் நடிக்கும்போது தொழில் முறை நடிகர் கிடையாது . அமெச்சூர் ! இவரையும் ஒரு சிறுவனையும் வைத்து விட்டோர்யோ டெசிக்கா இயக்கி ஒரு சிறப்பான திரைக்காவியமாக்கியிருக்கிறார் .'வேலையில்லா திண்டாட்டம்' என்ற வார்த்தை ஒரு Cliché . அதன் சோகத்தை என்ன ஒரு பிரமாண்டமாக இந்த படம் காட்டியிருக்கிறது .
சும்மா வார்த்தைக்காக "உருக்கம் " என்பதை எத்தனை முறை உபயோகிக்க வேண்டியிருக்கிறது.

அந்த சிறுவன் ப்ருனோ பாத்திரம் தான் எத்தகைய உருக்கமானது. நெஞ்சை பிழியும் பாத்திரம்.

 தன் தந்தை சைக்கிள் திருடி சிக்கிக்கொண்டு அடி வாங்குவதை பார்த்து விம்மி அழும் ப்ருனோ.You live and you suffer.
சத்யஜித் ரே இந்த படத்தை பார்த்து விட்டு இதனால் மிகவும் பாதிக்கப்பட்டதனால் தான் இந்த படம் வெளிவந்த சில ஆண்டுகளில்இதன் inspirationகாரணமாக பதேர் பாஞ்சாலி படம் எடுத்தார் .

Mar 5, 2009

Fellini and his movie 8 ½

பெல்லினியின் படம்8 ½ .படத்தின் பெயர் eight and half ! 1963 movie. ஒரு இயக்குனராக தன் வாழ்வை முழுமையாக பதிவு செய்ய எவ்வளவு பேரால் இயலும் ? ஒரு 2 ¼ மணி நேரத்தில் பெல்லினி சாதித்திருக்கிறார் !
Why piece together the tatters of your life - the vague memories, the faces... the people you never knew how to love? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான் .
இந்த கேள்வி படத்தின் நாயகன் கிடோ விடம் கேட்கப்படுகிறது . அதற்கான பதில் என்ற அற்புதமான திரைப்படமாக விரிந்திருக்கிறது . பெல்லினி தன்னை கிடோ என்ற பாத்திரமாக வெளிப்படுத்துகிறார் . நடிகர் மார்செல்லோ( Marcello Mastroianni ) திரைப்பட இயக்குனர் கிடோவாக நடித்துள்ளார் .
இப்படி கூட திரைக்கதை அமைக்க முடியும் என்று இவ்வளவு காலம் கழித்து நாற்பத்தாறு வருடங்கள் ஆன பின் கூட யாருக்கும் தைரியம் வருமா ? ஒரு இத்தாலிய படம் பெல்லினி யால் தர முடிந்திருக்கிறது .
Dreams,memories and fantasies!

முதல் காட்சியே ஒரு கனவு தான். கிடோ ஒரு டிராபிக் ஜாமில் சிக்கி தன் கனவில் காரில் இருந்து வெளியேறி வானில் ஏறி மேகங்களை தாண்டி தப்பிக்க முயற்சிக்கையில் கிடோ காலில் கயிறு போட்டு ஒரு ஆள் கடற்கரையிலிருந்து கீழ் நோக்கி இழுக்க கடலில் விழுகிறான் கிடோ . அதன் பின் ஒவ்வொரு காட்சியும் கடைசி காட்சி வரை -கடைசி காட்சி கிடோ வின் வாழ்வின் அத்தனை முக்கிய மனிதர்களும்Parade செய்வது போல நீண்டு முடியும் காட்சி வரை ஒரு அசாதாரண படம் என பார்ப்பவர்கள் அசந்து போகும்படி அமைகிறது . கத்தோலிக்க மதம் ,பெற்றோர் , சிறு வயதில் ரசித்த சரகினா என்ற ராட்சசி( பாதிரி இவளை ஷைத்தான் என்கிறார் ) ,மனைவி , அபிமான தாரம் , திரை நாயகிகள் , மதகுரு என்று எத்தனை Obsessions! முதல் காட்சி இந்த சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கிடோ வின் கனவு என்பது ஒவ்வொரு காட்சியிலும் விரிக்கப்படுகிறது . எழுத்தாளனுக்கு ஏற்படும்Writer’s block போல திரைப்பட இயக்குனருக்கு Director’s block! கலைஞனின் மோசமான நரகம் இது . இந்த பிரச்சினை யை பெல்லினி கையாண்டு , அதாவது தன் சொந்த பிரச்சினையை படமாக்கி திரைப்பட வரலாற்றில் (இன்று அவர் இறந்தே பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன ) நிலை பெற முடிந்திருக்கிறது .
“8 ½ “-An influential Classic!
2002ல் திரைப்பட இயக்குனர்கள் அனைத்து உலக மொழிகளிலும் மிகச்சிறந்த பத்து படங்களை வோட்டு போட்டு British Film Instituteக்காக தேர்ந்தெடுத்த போது பெல்லினி யின் 8 ½ அன்று வரை வந்திருந்த எல்லாப்படங்களிலும் மூன்றாவது மிக சிறந்த படமாக வோட்டு பெற்றிருந்தது . முதல் இரண்டு இடத்தில் வந்த படங்கள் பற்றி ஆர்வம் வருகிறதல்லவா ?
1.Citizen Kane directed by Orsen Welles
2. God father movies( part one and part two) directed by Francis Coppola

Mar 4, 2009

மந்திரி குமாரி எல்லிஸ் ஆர் டங்கன் .

மந்திரி குமாரி படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கன் அமெரிக்க வெள்ளைக்காரர் . இந்த படத்தில் கே சோமு (டவுன் பஸ் ,சம்பூர்ணராமாயணம் ,பட்டினத்தார் ஆகிய படங்களின் இயக்குனர் ), முக்தா வி சீனிவாசன் ஆகியோர் உதவி இயக்குனர்கள் .எல்லிஸ் ஆர் டங்கன் கிட்டத்தட்ட ஐம்பதுவருடங்களுக்கு மேல்தன் தொண்ணூறு வயதில் இந்தியா வந்திருந்தார் . தன் படத்தில் நடித்த கதாநாயகன் மக்கள் நாயகனாக தமிழக முதல்வர் ஆகி கொடிகட்டி வாழ்ந்து மறைந்த செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டார் . மந்திரி குமாரி யில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் , டெக்னிஷியன்ஸ் இவர்களில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இவரை சந்தித்தார்கள் . (அப்போது மாதுரி தேவி , வில்லன் எஸ் ஏ நடராஜன் (சிரித்தவாறு வசனம் பேசுவார் !கடைசி காலத்தில் நடராஜன் கஷ்டப்பட்டார் .)ஆகியோர் மறைந்து விட்டார்கள் )அப்போது இவருக்கு பெரிய அதிர்ச்சி . இந்த மந்திரி குமாரி பட சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பலரும் செட்டில் ஆகாமலே இருந்தார்கள் . சொந்த வீடு மந்திரி குமாரி படத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ஜி சகுந்தலாவுக்கு கூட இல்லை .வறுமையில் வாடும் தன் படத்தில் நடித்த கலைஞர்களை பார்த்து இடிந்து போய் விட்டார்.
ஜி சகுந்தலா சிவாஜி கணேசனின் ஜோடியாக வியட்நாம் வீடு நாடகத்தில் நடித்தவர் . நடிகை பத்மினியின் உறவினர் . உருக்கமாக உடைந்த குரலில் சோகமாக பல படங்களில் நடித்த இவர் 'உயர்ந்த மனிதன் 'படத்தில் அருமையாக காமெடி செய்திருக்கிறார் .
எஸ் எஸ் சிவசூரியன் பற்றி நினைக்கும்போது என் நினைவிற்கு வருகிற விஷயம் ஒன்று அவர் தன் முதிய வயதில் தன் மகனை விபத்தில் பறிகொடுத்தவர் . புத்திர சோகம் இவரை முதுமையில் பீடித்தது வேதனையான விஷயம் . சிவசூரியன் நாடகங்களில் நடித்துகொண்டே இருந்தார் . எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுக வில் உடனே சேர்ந்தவர் . நான்கு வருடங்களில் ஆட்சியை அதிமுக பிடித்தது .அப்படியும் அதன் பின்னும் கூட இவர் வாழ்வு செழிக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும் . ஒரு கூடுதல் தகவல் இந்த சிவசூரியன் என் மாமனாரின் நண்பர் .
மாதுரி தேவி கிறித்துவ பெண் . க்ளாரா என்று பெயர் . இவர் அண்ணன் ஒரு ரவுடி . தியாகராஜபாகவதர் , என் எஸ் கிருஷ்ணன் தண்டனை அனுபவித்த 'இந்து நேசன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' க்ளாராவின் அண்ணன் சம்பந்தப்பட்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன் .பின்னால் க்ளாரா 'மாதுரி தேவியாக' பிரபலமானார் .

மந்திரி குமாரி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஏ.நடராஜன். கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் .இந்த எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த எஸ் ஏ நடராஜன் .

கள்ளபார்ட் நடராஜன் ' சித்தாடை கட்டிக்கிட்டு' பாட்டிற்கு நடனம் ஆடியவர் . டப்பாங்குத்து டான்ஸ் அருமையாக ஆடுவார் . சிவாஜியின் பராசக்தியிலே கூட ஒரு காட்சியில் நடித்தவர் ."தெய்வப்பிறவி " படத்தில் சிவாஜிக்கு தம்பியாக கள்ளபார்ட் நடராஜன் நடித்திருக்கிறார் .மதராஸ் டு பாண்டிச்சேரி ,கண்காட்சி ஆகிய படங்களின் வில்லன் . இவர் " 'ஊதாப்பு கண் சிமிட்டுகிறது 'படத்தில் படகு ஒன்றில் " ஆண்டவன் இல்லா உலகமிது, ஆசைகள் இல்லா உலகமிது " பாட்டிற்கு நடித்த பின் அதன் பிறகு சினிமா வாய்ப்பே சுத்தமாக இல்லாமல் இருந்து நீண்ட காலத்திற்கு பின் " தேவர் மகன் " படம் தான் அடுத்து வாய்ப்பு கிடைத்து இவர் நடித்த படம் !

டைப்பிஸ்ட் கோபு

'நெஞ்சே நீ வாழ்க'
ஒரு நாடகம்.
பிலஹரி எழுதியது.
டி.எஸ்.சேஷாத்ரி நாடகமாக நடித்தார்.
அதில் ஒரு டைபிஸ்ட் பாத்திரம் கோபுவிற்கு.
நாடகம் முழுதும் ஒரு வசனமும் கிடையாது.
முகபாவத்தில் பாராட்டை பெற்றார்.
அதனால் டைபிஸ்ட் என்பது அவர் பெயருடன் இணைத்து சொல்லப்பட்டது.
பின் இக்கதையே 'ஆலயம்' என்ற பெயரில் திரைப்படம் ஆனது.கோபுவும் அதே பாத்திரத்தில் நடித்தார்.

இவருடைய நகைச்சுவை நாடகங்கள் அந்த காலத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் பாப்புலர் . சினிமாவில்சாது மிரண்டால் , அதே கண்கள் , எங்க மாமா போன்ற பல படங்களில் அந்த காலத்தில் வருவார் . இவருடைய கண்கள் , அகன்ற முகம் சிரிப்பு நடிகருக்கேற்ற அமைப்பு கொண்டது . சோ வின் நண்பர் நடிகர் நீலுவும் டைப்பிஸ்ட் கோபுவும் ஒரே சாயல் என்பதால் ரசிகர்கள் படத்தில் நீலு வை பார்த்தால் டைப்பிஸ்ட் கோபு என்று நினைப்பார்கள் . டைப்பிஸ்ட் கோபுவை திரைப்படங்களில் பார்க்கும்போது நீலு என நினைத்து குழம்புவார்கள் .

'ராசுக்குட்டி ' பட டிஸ்கசன் போது இவருடைய பெயரை ஒரு ரோல் செய்ய கதை இலாக்காவில் இருந்த ஒருவர் சிபாரிசு செய்த போது பாக்யராஜ் " டைப்பிஸ்ட் கோபு வேண்டாம் . மறு நாளே கஷ்டத்தை சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று ஆபிஸ் வந்து நிற்பார் .தொந்தரவு " என சலித்துஉடனே நிராகரித்து விட்டார் .ருத்ரா படத்தில் டைபிஸ்ட் கோபு BANK MANAGERரோல் செய்யும் போது என்ன கஷ்டமோ பாவம் இப்படி பணம் கேட்டு பாக்யராஜை தொந்தரவு செய்திருக்கிறார். இந்த மாதிரி நடிகர்கள் தொந்தரவானவர்கள் என கெட்ட பேராகி எல்லா பட கம்பனிகளும் ஒதுக்கி விடுவார்கள் .

டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா , இருநூறு பவுன் தங்க நகை , நிறைய வெள்ளி பாத்திரங்கள்,வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தவர் . இதை விகடனில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தார் . என்ன நடந்தது என்று குறிப்பிட்டு அவரால் சொல்ல தெரியவில்லை . இத்தனைக்கும் அவருக்கு கெட்ட பழக்கங்கள் ஏதுமே கிடையாதாம் . 1975ல் அவ்வளவு வசதி , வீடு ,நகைகள் எல்லாம் போய் விட்டதாம். அனைத்தையும் இழந்து ஒரு சின்ன வாடகை வீட்டில் குடியேறி நடிக்க கிடைத்த சின்ன ,சின்ன வாய்ப்புகள் கூட இல்லாமல் ஆகி வீட்டின் முன்னே விளையாடிகொண்டிருக்கும் குழந்தைகளுக்கு காகிதகப்பல் செய்து கொடுத்துக்கொண்டு சின்ன வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து இருந்திருக்கிறார்.

The ups and downs of life have made it so difficult to understand.


Mar 3, 2009

Carnal Thoughts -17


ஒரு இளம் வாலிப காக்கை !
இலட்சியவெறிகொண்டது.

ஸ்வதேசாபிமானம் ,ஸ்வபாஷாபிமானம் மிக்க காக்கை . தமிழ் பாஷை யில் இருப்பது போல நமது காக பாஷையிலும் கவிதை அமைவதற்குரிய விதிகள் ஏற்படுத்தி , நமது காக பாஷையை காவியங்களும் ,பாட்டுக்களுமுடைய பாஷை யாக்குவது தான் என் முழு நோக்கமும் என ஒரு பெட்டை காகத்திடம் சொல்லிக்கொண்டு இருந்தது ."நான் இருக்கனே ! பலவிதமான கற்பனைகளை அப்படியே மனசிலே அமுக்கி வச்சிட்டு தவிக்கிறேன் . அதையெல்லாம் எடுத்து வெளிய விடவேணாம் ?"

ஆணும் பெண்ணும் கூடி இருக்க விரும்புமாறு வற்புறுத்த விரும்பும் இயற்கையின் சாட்டையடி போல மேற்கு மலை சாரலில் மழை தூறிகொண்டிருந்ததாம் .

மன்மத தேவனுக்கு இப்படிப்பட்ட பருவங்களில் ,இப்படிப்பட்ட பிரதேசங்களில் ,வேலை மூச்சு முட்டும் .பயங்கர பிசி .ஆதலின் அன்று மாலை அவன் தன் தூணி யிலிருந்த அம்புகளில் ( ஆமாம் ! மன்மத பாணம்!) பெரும்பகுதியை ச்செலவிட்டு , தன் காதலியாகிய ரதி தேவியின் சல்லாபம் வேண்டி அவசர அவசரமாக தன் உலகத்துக்கு சென்று கொண்டிருந்தான் .இரண்டே இரண்டு கணைகள் மாத்திரமே எஞ்சியிருந்தன . அவற்றை 'லீலார்த்தமாக ' , மேலே சொல்லப்பட்ட ஆண் (இலட்சிய வேட்கை கொண்ட ) காகம் , அதன் கூட இருந்து அதன் இலட்சிய வேட்கை வெக்கையில் புழுங்கி கொண்டிருந்த பெண் காகம் இரண்டின் தலைக்கு ஒன்றாக அழுத்தி விட்டு ப்போய் விட்டான் . அவன் போய் விட்டான்.யாரு ? மன்மதன் !
இலட்சிய காகம் கவிதை தொழில் படிக்கவே இல்லை . மதன சாஸ்திரம் படிக்க தொடங்கி விட்டது .
..
இது பாரதி எழுதிய சிறுகதை ' காக்கை இலக்கணம் கற்ற கதை '

இன்றைக்கு

இலைகளில் தொங்கியபடி

யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே !

யோசனைகளால் பயன் என்ன ?

கனம்கொண்டீரேல்

மண்ணின் தாகம் தீர்க்கிறீர்

இல்லையெனில்

கதிரவன் கொய்து உண்ணும்

கனிகள் ஆகிறீர் .

- தேவதேவன்

..

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் சுடப்பட்டிருக்கிறார்கள் . ஐந்து போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு இறந்து போய் விட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வருகிறது .

பாகிஸ்தான் ,இலங்கை இரண்டு நாடுமே இந்தியாவின் நிம்மதியை கெடுத்து கொண்டிருக்கும் தேசங்கள் . இரண்டு நாடுமே DETERIORATION என்பதன் உருவகங்கள் .இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஒருவேளை பாகிஸ்தான் போயிருந்தால் ..? போவதாக தானே திட்டம் . ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .லாகூரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கம் போல் டிவி மீடியாக்களுக்கு தீனி . செய்தி பற்றி விரிவை இன்னும் பாகிஸ்தான் அரசு வெளியிட விரும்பவில்லை . எந்த அளவுக்கு தாக்குதல் . படு காயமா ?..மரணக்காயமா ?...'தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்' என்ற மொட்டையான செய்தி பல பாதை யூகங்களுக்கு இந்தகாலைநிமிடத்தில் வழி வகுத்து உள்ளது .

மதியம் ஒரு மணிக்கு மேல் "Injured players discharged from hospital."என்ற என் டி டி வி செய்தி சற்றே ஆசுவாசத்தை தருகிறது .

Hot discussion!
Will Cricket in Pakistan ever be the same again?

யோசனைகளால் பயன் என்ன ?

பயங்கரவாதம் பற்றி பல அறிக்கைகள் பல நாடுகள் மீண்டும் கொடுக்க மீண்டும் ஒரு வாய்ப்பு .

பயங்கரவாதத்திற்கு பல முகமூடிகள் .

False face must hide what false heart does know

-Shakespeare in “Macbeth”

இந்த தாக்குதலை இருபத்தைந்து நிமிடம் நடத்திய பன்னிரண்டு தீவிரவாதிகளும்உயிருடன் தப்பி விட்டார்களாம்!

Mar 2, 2009

காணாமல் போன 228 உயிர்களும் இறப்பு சான்றிதழ்களும்

வேறு என்ன தான் செய்யமுடியும் ? எவ்வளவோ தேடியும் குஜராத் கலவரத்தில் அந்த 228 பேர் காணாமல் போனவர்கள் பற்றி ஒரு துப்பும் கடந்த ஏழு வருடங்களாக கிடைக்கவே இல்லை . சரி அந்த 228பேருக்கும்

இறப்பு சான்றிதழ்

கொடுத்து விடவேண்டியது தான் என குஜராத் அரசு முடிவு செய்து விட்டது . என்ன குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள் 952 பேர் என்று அரசு சொல்லி வந்த கணக்கு இனி 1180 என கொஞ்சம் கூடிபோய் விடுகிறது . இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டிய காணாமல் போனவர்கள் 228 பேரில் 24 குழந்தைகள்,27 பெண்கள் என்ற உள்விபரம் பெரிய விஷயமே இல்லை . அது தான் ஏழு வருடம் கழித்து இறப்பு சான்றிதழ் கொடுத்து பைலை மூடிவிடுகிறோமே . எவ்வளவு காலம் தான் காணாமல் போனவர்களை தேடிகொண்டிருப்பது சொல்லுங்கள் .

You seem disturbed!

Tell yourself to think of something else.

It does’nt even hurt anymore.