Share

Dec 30, 2008

குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு

குழந்தைகள் பார்க்கும்படியாக சாப்பிடுவது ஒரு வகையான அநீதி .பஸ்ஸில் ,ரயிலில் குழந்தைகள் பார்க்கும்போது சில பெரியவர்கள் விவஸ்தையில்லாமல் ருசியான பலகாரங்கள் சாப்பிடுவார்கள் .

ஆனால் ஒன்று.இந்த காலத்தில் ரயிலில் இப்படி பிஸ்கட் , பழங்கள் , சாக்லெட் மற்றவர்களுக்கு நாம் கொடுத்தால் கூட நம்மை சந்தேக கண் கொண்டு பார்த்துவிடுவார்கள் . மயக்க மருந்து தடவி கொடுக்கும் கொள்ளைக்காரனோ என பயப்படுவார்கள். காலம் கெட்டுப்போச்சி !

வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு சாப்பிடகொடுப்பதை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று குழந்தைகளை பெற்றவர்கள் மிரட்டி வைப்பார்கள் .

முத்துலிங்கத்தின் சிறுகதை

" முதல் விருந்து , முதல் பூகம்பம் , முதல் மனைவி "

அதில் அவர் இந்த நிகழ்வை விவரிக்கிற அழகு .

" பெரியய்யா கோழியையும் , அது இட உத்தேசித்திருந்த முட்டைகளையும் ருசித்து சாப்பிட்டார் . நாங்கள் ஏழு பேர் அவரைச்சுற்றி வர நின்றோம் . அவருடைய உணவில் யாரும் பங்கு கேட்க கூடாது என்று நாங்கள் அறிவுருத்தப்பட்டிருந்ததால் மறுப்பதற்கு தயாராகவே இருந்தோம். அது அவருக்கு எப்படியோ தெரிந்து விட்டது . அவர் ஒரு வாய் கூட கொடுக்கவில்லை "

யூமா வாசுகியின் 'ரத்த உறவு ' நாவலிலும் இது போல குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு, அவர்கள் முன் சாப்பிடும் பெரியவர்கள் உண்டு.

இந்த வருடம் மார்ச் மாத ஆனந்த விகடன் இதழ் ஒன்றில்

" கழுதைவண்டிசிறுவன் " என்று ஒரு சிறுகதை அமுத்துலிங்கம் எழுதியிருந்தார் . அதை படித்த போது நெஞ்சே உறைந்து விட்டது .

" கழுதைவண்டியை ஒட்டியபடி ஆப்பிரிக்கசிறுவன்.சின்னபையன்.

அவன் கேட்ட பணத்தைக்கொடுத்துப்பாலை வாங்கினேன் .

அடுத்த நாளும் அங்கே தங்குவேணா என்று விசாரித்தான் .

'அப்போ இரண்டு லிட்டர் பால் வாங்கிகொள்ளுங்கள்'

'ஏன் ? '

'நாளைக்கு நான் வர முடியாது .'

'ஏன் ?'

'நாளைக்கு என் அம்மா செத்து விடுவார் .'

'யார் சொன்னது '

'டாக்டர் சொன்னார் '

' அம்மாவை யார் பார்த்துக்கிறது '

' என்னுடைய தங்கச்சி '

அது புத்தாண்டு கொண்டாட்ட நேரம் . அன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டம் !

Happy new year!

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

..

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

புத்தாயிரம் கொண்டாட்டம் . 20நூற்றாண்டிலிருந்து 21நூற்றாண்டு . ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது .

.....

என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்ற வாகன ஒட்டி , கடந்த இரவு கடந்த இரவு கழுதை வண்டி சிறுவனின் தாயார் இறந்து போனதைச்சொன்னார் . இப்போது நினைத்து ப்பார்க்கும்போது அந்தத்தாயார் எந்த நூற்றாண்டில் இறந்து போனார் என்பதை நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பது ஞாபகத்திற்கு வருகிறது "

இப்படி முடித்திருக்கிறார் அமுத்துலிங்கம் .

........ ....... ......

New year!

....

Another year ! Another deadly blow!

-Wordsworth

Month follows month with woe,
And year wakes year to sorrow

-Shelley



Considering the legacy the 2008 has left, there is no great reason to feel any cheer
At the beginning of this new year .

New year!

Dec 29, 2008

Carnal Thoughts -15

அந்த தெருவில் அந்த பெண்கள் இருவர் மட்டும் ஒரு வீட்டில் .
ஒருத்தி கணவனால் கை விடப்பட்டவள் . இன்னொருத்தி விதவை . இருவரின் மேலும் கண் வைத்த ஒச்சு ஒரு நாள் அந்த வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்த நேரம் இரண்டு பெண்களுமே நிர்வாணமாய் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து முத்தம் கொடுத்துக்கொண்டு கட்டிலில் .


ஒச்சு ஜன்னல் வழியாய் பார்த்தவுடனே ,தான் பார்த்து விட்டதை உடனே ரிஜிஸ்டர் செய்து கத்தி "கதவை திறங்கடி " என மிரட்டி , உள்ளே நுழைந்து , அவர்களில் ஒருத்தியை , இன்னொருத்தி பார்த்துகொண்டிருக்கும்போதே,
( Voyeurism) கப்பையை பொளந்து, தன் கோலை உள்ளே சொருகி விட்டான் .
வேண்டாம் , வேண்டாம் என்று இரண்டு பெண்களுமே கெஞ்ச கெஞ்ச கதற கதற சோலியை முடித்து விட்டான் .
 


இப்படி அடிக்கடி போய்இரண்டு பெண்களையுமே மாற்றி மாற்றி பலவந்தம் செய்ய ஆரம்பித்து .. இதை ஒச்சு மேலும் சல்லிகள் பலரிடமும் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான் .

சல்லிகளின் தொடர் முயற்சி, கூட்டு முயற்சி அந்த இரு பெண்களின் இணக்கத்தை கலவி வேண்டி தினமும் தொடர ...

இரண்டு பெண்களும் கொஞ்சநாளில் வீட்டை காலி செய்து விட்டு எங்கோ போய் விட்டார்கள்.



Raping a lesbian worse than raping a virgin

- J.M.Coetzee

in “ Disgrace”
....




.................................

Dec 27, 2008

சந்திராஷ்டமம்

இன்னைக்கு தினமலர்லே கருணாநிதி மீண்டும் தி மு க தலைவர் ஆகிற செய்தி பற்றி குறிப்பிடும் போது இன்றைய இருபத்தேழாம் தேதி காலை 9மணி முதல் 9.45மணி வரை மகர லக்னம் . அதனால் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து தலைவர் ஆகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

இன்று முதல்வரின் ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதை அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டார்களா ? அல்லது சந்திராஷ்டமத்திற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா ?

முதல்வரின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் நிலையில் திமுக தலைவர் பதவி ஏற்பதால் அவருக்கும் கட்சிக்கும் ஏதேனும் ஊறு விளைந்திடகூடாதே என பதைபதைப்பு ஏற்பட்டு தவித்து ,தத்தளித்து , தக்காளி வித்து விட்டேன் !

.....

தலைவர் பதவி ஏற்கும்போது வேதனையுடன் ' திராவிட இயக்கம் துவங்கிய காலத்தில் அழுத்தமாக ,பிடிவாதமாக பகுத்தறிவை பின்பற்றினோம் . இப்போது தினமலர்காரர்கள் 'நாள் பார்த்து காரியம் பார்க்கிறோம்' என்று கிண்டல் செய்யும்படி ஆகிவிட்டதே ' என்று தன்னிரக்கத்தால் வருத்தப்பட்டிருக்கிறார்.

மஞ்சள் துண்டு , புட்டபர்த்தி காலில் தயாளு அம்மாள் விழுந்தது , குடும்பமே குலதெய்வம் துவங்கி பல தெய்வங்களை வணங்குவது எல்லாம் அவரை ரொம்ப உறுத்தி சங்கடப்படுத்துகிறது .

சரி எல்லோருக்கும் கஷ்டம் .கருணாநிதி கஷ்டம் வெளியே தெரிகிறது ....

Dec 26, 2008

பல்லிளிக்கும் பகுத்தறிவு

எனக்கு இன்று தான் விஷயம் தெரிய வந்தது . வீரமணிக்கு இந்த வயதில் என்ன கஷ்டமோ ? திராவிட கட்சி தலைவர் தன் பெயரை மீ கி வீரமணி என்று மாற்றிகொண்டிருக்கிறார் . இது தெரியாத கிணற்று தவளை நான் அவரை 'கி வீரமணி' என்றே அறிவில்லாமல் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் . தப்பு தப்பு தப்பு .

சரி ..எல்லோருக்கும் கஷ்டம் இல்லாமலா இருக்கு ? ஆனா மீ.கி. வீரமணி கஷ்டம் வெளிய தெரியுது ..ஜெயலலிதாவிடம் கேட்டால் சில யாக பரிகாரங்கள் கூட சொல்லித்தருவார் .ஆனால் மீ .கி .வீரமணி அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும்போது தான் ஜெயலலிதாவை சட்டை பண்ணுவார் .

ஜ்யோவ்ராம் சுந்தர் !

கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு ! வீரமணிக்கு ....நியூ மராலாஜி ன்னு சொல்றாங்களே..

“The Devil can cite Scripture for his purpose!”
-Shakespeare in ‘The Merchant of Venice’

Dec 25, 2008

இலங்கை பிரச்னை நாகார்ஜுனன் ப்ளாகில்

இலங்கை போரும் தமிழ் மக்களும் - மேலும் அறிக்கைகள்

நாகார்ஜுனன் ப்ளாகில் பின்னூட்டங்கள் :



Perundevi said...
பதிவில் இணைப்பு தந்திருக்கும் அறிக்கைகளைப் படித்துவிட்டு மிக்க வருத்தம் அடைந்தேன். தகவல்களுக்கு நன்றி. இப்போது இந்தியாவிலிருந்து ஏதும் நிவாரணங்கள் அனுப்பப்படுகின்றனவா? இவற்றை அங்கே யார் பகிர்ந்து அளிக்கிறார்கள்?
23/12/08 18:01
நாகார்ஜுனன் said...
இந்தியாவிலிருந்து சென்ற நிவாரணப்பொருட்களின் எடை 1,700 டன். இவை 80,000 பேரின் பயன்பாட்டுக்கு மாத்திரமே வரும். தவிர, எவ்வளவு நாள் வரும் என்று தெரியவில்லை. இவற்றை விநியோகிக்கும் பொறுப்பு பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினுடையது. இவற்றை நவம்பர் 21 அன்று இந்தச் சங்க அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் போரால் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஏழாயிரம் என இலங்கை அரசின் நிவாரணத்துறை கூறினாலும் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் இது மிகையான மதிப்பீடு, இந்த எண்ணிக்கை ஒருலட்சம் இருக்கலாம் என்று அதே நிகழ்ச்சியில் கூறுகிறார்.. இதெல்லாம் இந்த அறிக்கையில் உண்டு. பத்திரிகைகளிலும் வாசித்தேன். எது எப்படியிருந்தாலும், இலங்கை அரசாங்கத்தை நம்ப முடியாது. அதனிடம் அரசியல் தீர்வு என ஒன்றுமில்லை.. அங்குள்ள தமிழ்மக்களுக்குப் போதுமான நிவாரணம் கிட்டவில்லை என்பதை இந்த அறிக்கை கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில், இந்தியாவில் இருப்போர் ஒருமுறை நிவாரணம் அனுப்பிவிட்டுத் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதாமல், போர்நிறுத்தம் நோக்கி இலங்கை அரசைக் கட்டாயப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் தயாராக இருப்பார்களா என்பதையும் பார்க்க வேண்டும்.. இந்திய, பன்னாட்டு அரசுகளிடமிருந்து கோரிக்கை வந்தால் இப்போதைக்கு ஏற்பார்கள் என்று ந்ம்பலாம்...
23/12/08 18:41
பாஸ்கர் said...
நாகர்ஜுனன் அவர்களே,அக்டோபர் 28௨௮ம் தேதி யாழ்ப்பாண ஆசிரியர்களின் மனித உரிமைகள் (UTHR-J)சமர்ப்பித்த கட்டுரையையும் நீங்கள் படித்திருக்கலாம். உங்கள் வலை தளத்திற்கு வருகை அதிகம் உள்ளதால் இந்த இணைப்பு பலரும் படிக்க உதவலாம்.http://www.uthr.org/SpecialReports/spreport31.htmஇந்த இருபக்க தாக்குதலில் இருந்து இந்த அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது உலகத்தின் கடமை. ருவண்டா போல் ஒன்று நடந்து விட அனுமதிக்கக் கூடாது.
23/12/08 19:35
sugan said...
அவர்கள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி மீண்டும் யாழ்ப்பாணம் போய்த் தாக்குவார்கள்.மேலும் நிலைமையைச் சிக்கலாக்குவார்கள்.இராணுவத்திற்கு மேலும் கொடும் வறுமையிலுள்ள இளைஞர்கள் 50,000 சேர்வார்கள்.தமிழ்மக்களை அழித்தொழிப்பதில் ஐந்தாம் படையாக எப்போதுமே செயற்படுகிறார்கள்.கடைசித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்று எப்போதே சொல்லிவிட்டார்கள்.
24/12/08 10:22


RP RAJANAYAHEM said...


"இலங்கை அரசிடம் அரசியல்தீர்வு இல்லை..."

"புலிகள் கடைசித்தமிழன் உள்ளவரை போராடப்போகும் ஐந்தாம் படை..."

You cannot switch on Peace like a light.


24/12/08 12:30


நாகார்ஜுனன் said...
நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இலங்கைத்தீவு அழிவின் அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டது. பிரதானமாக இது அரசியல்-பிரச்னை என்பதால் இலங்கை அரசாங்கத்துக்குத்தான் அதிகப்பொறுப்பு. ஆனால், அதனிடம் நீதி, நியாயம் என ஏதுமில்லை... புலிகள் அமைப்பு எவ்வளவு மோசமான அமைப்பாக இருந்தபோதும் சரி, அது தோன்றுவதற்கு முன் இருந்ததும் அது அழியும் பட்சத்தில் அதற்குப்பின் இருக்கப்போவதும் அதே இலங்கை அரசமைப்பு என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது...
24/12/08 12:42





Dec 24, 2008

Carnal thoughts-14

ஏழு வயது பையன் .அவன் வயதே ஆன சிறுமி .இவன் அந்த சிறுமியின் மேல் இயங்கிகொண்டிருந்தான் . சிறுவனுடைய அம்மா தான் பார்க்க நேர்ந்தது .
"அவ தாம்மா மேலே படுக்க சொன்னாள்." சிறுவன் பதறிபோய் ஜட்டியை அவசரமாக போட்டுக்கொண்டிருந்த சிறுமியை காட்டினான் .
"என்னடி இது "
"எங்க அம்மா மேலே எங்க அப்பா படுப்பாங்க , ஆண்ட்டி " களையிழந்த முகத்துடன் சிறுமி .



................
.......
Shuffle Along Orchestra மூலம் பெரும்புகழ் பெற்ற இசைஞானி யூபி பிளேக் (Eubie Blake) தன் 97 வயதில் ஒரு கேள்வியை எதிர்கொண்டார் .
"காம இச்சை,காம உந்துதல் ஒரு மனிதனுக்கு எந்த வயது வரை இருக்கும் ?" என்ற இந்த கேள்வி அவர் முன் வைக்கப்பட்ட போது அவர் எரிச்சலுடன் பதில் சொன்னார் :
" நீங்கள் இந்த கேள்வியை என்னை விடஅதிகமாய் வயதானவரிடம் அல்லவா கேட்கவேண்டும் . "




.........

Dec 23, 2008

விசித்திர ஜோடிகள்

“Odd couples” “Strange pairings”
The Week பத்திரிகையில் விசித்திர ஜோடிகள் என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி. ரேகா திக்ஷித் எழுதியது .

சஞ்சய் தத் - மஹாத்மா காந்தி

சஞ்சய் தத் மீதுள்ள இமேஜ் எல்லோருக்கும் தெரிந்தது . போதை பழக்கம் , பல திருமணம் , ஏ கே 47துப்பாக்கி , மும்பை குண்டு வெடிப்பு , சிறை தண்டனை
இவற்றை மீறி முன்னா பாய் படங்கள் மூலம் மஹாத்மா காந்தி இவருடன் இணைந்த விசித்திரம் !



சோனியா காந்தி - அரசியல்

அரசியலை மிகவும் வெறுத்து ,கணவன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தும் இன்று அவரும் ... அரசியலும் !
“If you refuse to accept anything, Often you will get it”


லல்லு பிரசாத் யாதவ் - ஹார்வர்ட் பல்கலைக்கழகம்


லல்லு வின் மாட்டு தீவன ஊழல் , மனைவியை நிழல் முதல்வராக்கிய கயமை இப்படி அவர் மீது இருந்து வந்த இமேஜ் Corruption and Nepotism! அனைவரும் அறிந்தது தான் . ஆனால் இந்திய ரயில்வே 61000 கோடி நஷ்டத்தில் இருந்து , 2015 ல் திவாலாகி சங்கு ஊதிவிடும் என்ற கணிப்பை லல்லு ரயில்வே மத்திய அமைச்சராகி உடைத்து 70000 கோடி லாபம் உண்டாக்கி,சாதனை படைத்து விட்டார் . ஹார்வர்ட் பல்கலை கழகம் அவரிடம் பாடம் கேட்க நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதோடு ,பின் அவரும் ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு அழைக்கப்பட்டு ..

சித்து - நகைச்சுவை

படு சீரியஸ் கிரிக்கெட் விளையாட்டு வீரர் என 'சீரியஸ் சிங்காரமாக' அறியப்பட்ட சித்து (சித்துவின் கோபம் தான் பிரபலம்!)இப்போது கிரிக்கெட் காமண்டரி கொடுக்க ஆரம்பித்தவுடன் படு ஜாலியாக நகைச்சுவை பொழிந்து தள்ளுகிறார் .

“A woman is worse than wine. She intoxicates the holder and the beholder” இது சித்து வின் தத்துவம் தான் .Sidhu and Humour!

வோட்கா - பாணி பூரி
மும்பை துவங்கி
நியூ யார்க் வரை ரெஸ்டாரன்ட்களில் பாப்புலரான காம்பினேசன் !

இப்படி பல சுவாரசியமான ஜோடி சமாச்சாரங்கள் இந்த வார The Week கவர் ஸ்டோரி!





Dec 22, 2008

A joke is a very serious thing!

மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன் . கேட்டிங்களா ?

கணவன் : ஏன் என்ன ஆச்சு ?

மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி !

...

மந்திரி : பயப்படாதீங்க மன்னா ! மனுஷனுக்கு ஆறிலும் சாவு , நூறிலும் சாவு .

மன்னன் : அது பரவாயில்லை .. போரிலும் சாவு வந்திடுமோன்னு தான் பயமாயிருக்கு .

....

"மன்னர் போரில் தோற்ற பிறகும் புலவர் அவரை வாழ்த்தி குறுந்தொகை பாடுகிறாரே ?"

"மன்னரிடம் அவர் ஒரு பெருந்தொகை வாங்கி விட்டாராம் !"

....

"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை ."

" அட ! அப்படியா !!"

" ஆமா , என் கருத்தை ச்சொன்னால் தானே வேறுபாடு வர்றதுக்கு !"

....

" துண்டு சீட்டை படித்தவுடன் பாகவதர் ஏன் டென்சன் ஆயிட்டார் ?"

"கச்சேரி முடிந்தவுடன் தயவுசெய்து எழுப்பி விட்டுட்டு போங்கன்னு எழுதியிருக்காம் !"

...

"ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?"

" ஊறுகாய் சார் !"

..

நோயாளி : ஐஸ் வாட்டர்னா எனக்கு உயிர்.. டாக்டர்!


டாக்டர் : தாராளமா குடிங்க . ஆனா குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுடவச்சு குடிங்க .

...

"ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மிஸ்டர் பாபு சங்கர் !"

"ஐயோ டாக்டர் , நான் கௌரி சங்கர் "

"வெரி குட் ! என்னோட தப்பை சரியா கண்டு புடிச்சிட்டீங்களே !"

.....

காதலி : உங்களுக்கு ராணி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு சொல்லவே இல்லையே ?

காதலன் ; உன்னை ' ராணி ' மாதிரி வச்சுக்கிறேன் ன்னு நிறைய தடவை சொல்லியிருக்கிறேனே !

....

"தலைவர் இன்னும் பழைய ஞாபகத்திலேயே இருக்காரு ."

" என்ன விஷயம் ?"

" அவரோட பாதுகாப்புக்காக பின்னால் ஜீப்புலே வர்ற போலிசை பார்த்துட்டு காரை வேகமா ஓட்ட சொல்லி டிரைவர் கிட்டே சொல்றாரு !"

......

கடைசியா சுஜாதா சொன்ன ஜோக் ஒன்னு !

வசந்தின் எச்சரிக்கை - வயாக்ரா அதிகம் சாப்பிடக்கூடாது . ஒரு ஆசாமி ஏழு மணி நேரத்துக்கு ஒரு வயாக்ரா என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மணிக்கு ஏழு சாப்பிட்டானாம் . இறந்து போய்விட்டான் ! சவப்பெட்டியை மூடவே முடியவில்லை !!

..

திருமங்கலம் வேட்பாளர்கள்

திருமங்கலம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் !கல்வி தகுதி ?ஆளுமை ?

விஜய் காந்த் கட்சி வேட்பாளர் எட்டாம் வகுப்பு முடித்து விட்டார் !
சரத் குமார் கட்சி வேட்பாளர் பத்தாம் வகுப்பு வரை . முடித்திருக்கிறாரா?
திமுக வேட்பாளர் மறைந்த அதியமான் பொஞ்சாதி ?
அண்ணா திமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் கல்வி தகுதி என்ன ? அதிகமிருக்கும்போல தோன்றவில்லை ?

இடைத்தேர்தல் வேட்பாளர்கள் ஏதேனும் வேறு ஆளுமை தகுதி பொருந்தியவர்களா?
ஜாதி தகுதி எல்லோருக்கும் பலமாக பொருந்தியிருக்கிறது !

ஆனந்த விகடன் மதன் பழைய கார்ட்டூன் இன்னும் சாசுவத மதிப்பில் இருக்கிறது என்பது உறுதி .
ஒரு அரசியல்வாதி மேடையில் உருக்கமாக அறிவுரை சொல்வார் :
" மாணவர்களே! தயவு செய்து அரசியலில் ஈடு படாதீர்கள் . நாங்கள் என்றைக்காவது படிப்பில் ஈடுப்பட்டிருக்கிரோமா?"


......

படிக்காதவங்க எவ்வளவோ பேர் பெரியவங்களா ஆகியிருக்காங்க .

படிக்காத மேதை காமராஜ் !

இன்றைய முதல்வர் கூட பள்ளியிறுதி வகுப்பில் தவறியவர் தான் . சொல்லின் செல்வர் சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன் , மேதை மதியழகனை எல்லோரையும் ஓரம் கட்டி ஜெயித்தவர் !!

இன்று அறிஞர் அண்ணாவை தாண்டிவிட்டார் என்று கி வீரமணி புல்லரித்து ,செடியரித்து , மரம் அரித்து கருணாநிதிக்கு புகழ் மொழி புகழ்ந்தார்

கலை ஞானி கமல் ஹாசன் இல்லையா ?

கரிசல் இலக்கிய மன்னர் கி ரா இப்படி அடுக்கிகொண்டே போகலாம் . ஆனால் இவர்கள் எல்லாம் தங்கள் ஆளுமையை வேறு விதங்களில் வெளிப்படுத்தியவர்கள் .

By education most have been misled.
- Dryden.

Dec 20, 2008

நோபல் பரிசு ஊழல்

நோபல் பரிசு கமிட்டி ஜூரி ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டிற்கு உள்ளாகி ஒரு பெரிய சர்ச்சை உருவாகி இருக்கிறது .
இது ஒரு கெட்ட செய்தி தான் . அப்படி தான் .இல்லையா?

அடடா ! நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நோபல் பரிசு வாங்கிவிட வழியேதும் தெரியாமல் பல கழக தலைவர்களும் பல்கலை கழக துணை வேந்தர்களும் தவித்து கொண்டிருந்தார்களே. மருமகன் மாறன் பிள்ளைகள் கூட ரஜினியின் 'எந்திரன்' படத்தை இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்க கூடிய பணபலம் மிக்கவர்கள் . தாத்தா வுடன் இப்போது இணக்கமாகி சுமுகமாக இருக்கிறார்கள் . கருணாநிதியின் செல்வசெழிப்பிற்கு இனி நோபல் பரிசு கூட எட்டா கனி அல்ல போல ஒரு நம்பிக்கைஒளி ஏற்பட்டிருக்கிறதே .

உண்மையான யோக்கியதாம்சம் ,தகுதியுள்ள அசோகமித்திரன் ஏழை ! நோபல் கமிட்டியை 'கவனிக்க ' அருகதை அற்ற துர்பாக்கிய சாலி ..அதிர்ஷ்டகட்டை .

......


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் தேதி பதிவு கீழே :

அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்
ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை .

பழைய பல்லவி தான் .ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். ஒரு தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் 'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியர் யை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason-Immanuel kant.

எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் . அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .

நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும் . லியோ டால்ஸ்டாய் , ஜாய்ஸ் , போர்ஹே , ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள்தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம் .இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் , நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும் , மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம் .

Dec 19, 2008

ஏ ஆர் அந்துலே

இந்த அந்துலே முப்பது வருடங்களுக்கு முன் மகாராஷ்ட்ரா முதல்வர் . ஆள் பார்க்க ஹேர் ஸ்டைல் ஹிந்தி நடிகர் திலிப் குமார் மாதிரி வைத்திருப்பார்.

அந்துலே பிரமாண்டமான சிமென்ட் பேர ஊழல் விவகாரத்தில் தான் ரொம்ப பாபுலர் !

அந்த நேரம் சர்க்காரியா கமிசன் விசாரணையில் கருணாநிதி மேலும் பல ஊழல் புகார்கள் .

துக்ளக் பத்திரிகையில் ஒரு கேள்வி .

"அந்துலே பற்றி கருணாநிதி என்ன நினைப்பார் ?"

அதற்கு ஒரு சின்ன கேலி சித்திரம் -அந்துலே தோளில்துண்டு பறக்க கருணாநிதியை துச்சமாக பார்த்துகொண்டே பெருமையாக நடந்து போவார் ! கருணாநிதி அவரை பார்த்து அசந்து போய் மூக்கில் விரல் வைத்து நிற்பார் .

" ஆ !பெருங்கொண்ட செய்கை! "(இந்த வார்த்தை மதுரை வட்டார வழக்கு )என்று வியந்து நோக்கும் கருணாநிதி.

.....

ஹேமந்த் கர்கரே யை துரோகி என்று மாலேகான் குண்டு வீச்சு விவகாரத்தில் கடுமையாக ஹிந்துத்வா சக்திகள் விமர்சித்து கொண்டிருந்த நிலையில் மும்பை கலவரத்தில் பலியாகி விட்டார் .

சிவசேனா , பி ஜே பி க்கேல்லாம் அதிர்ச்சி .

மராட்டியர் தவிர பிற மாநிலத்தவர் வெளியேற அரசியல் செய்த சிவசேனா வுக்கு மும்பை கலவரத்தை இந்தியாவில் பல மாநிலத்தை சேர்ந்த " தேசிய பாதுகாப்பு படை வீரர்கள்" வேறு வந்து அடக்கி உயிர் தியாகம் செய்து ....

முகத்தில் கரி பூசிக்கொண்ட இந்துத்வா சக்திகளுக்கு நல்ல அவமானம் . ஏனென்றால் தேசாபிமானம் ,தேச பக்தி மூலதனத்தில் மதவாத அரசியல் செய்த பாரதிய ஜனதாவும் . மராட்டி கோஷ சிவசேனாவும் திகைத்து நின்ற நேரத்தில்

ஏ ஆர் அந்துலே வின் பாராளுமன்ற முட்டாள் தனமான பேச்சு மெல்லுவதற்கு உடனே வசதியாக அவல் கிடைத்து விட்டது . இதில் பயனடைவது இந்துத்வா சக்திகள் மட்டும் அல்ல . பாகிஸ்தான் அரசியல் வாதிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அந்துலேயின் பேச்சால் குஷியாகி விட்டார்கள் . அபத்தம் பாருங்கள் ! அந்துலேயின் விதண்டாவாதம் ஒரே நேரத்தில் ஹிந்துத்வா அரசியல் வாதிகளையும் பாகிஸ்தானையும் ,இஸ்லாமிய தீவிரவாதிகளையும் இன்பக்கடலில் ஆழ்த்தி இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது !!

" பயங்கரவாதிகள் கையால் தான் ஹேமந்த் கர்கரே இறந்திருப்பாரா? மாலேகான் பிரச்னையில் அவருக்கு எதிரிகள் ஹிந்துத்த்வாக்கள் என்பதால் ஏன் இது அவர்கள் செய்த கொலைசதியாய் இருக்கலாகாதோ?...காமா ஆஸ்பத்திரி பக்கம் அவரை அனுப்பினது யாரு?"

தத்து பித்து என்று இப்படி உளறி கொட்டி விட்டு " நான் யாருக்கு ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் ?" என்று நேற்று அந்துலே வீராப்பு பேசியிருக்கிறார்.

With his foolish speech , an idiot commits a major blunder!

.......

அந்துலே மத்திய அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்து விட்டார் .நிர்ப்பந்தித்து ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டிருக்கிறது !

பல நேரங்களில் பல மனிதர்கள்- பாரதி மணி

பல நேரங்களில் பல மனிதர்கள்

R.P. ராஜநாயஹம்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம்.

தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.

பாரதி மணி

..................

பாரதி மணி பற்றி

தன் பதிவுகளில் R P ராஜநாயஹம் :

சென்ற ஆகஸ்ட் 21 தேதி எனக்கு பிறந்த நாள்.

பிறந்தது பற்றி பெருமை என்ன இருக்கிறது . ஆனால் இந்த தேதியில் பிறந்ததில் எனக்கு ஒரு பெருமை பிறந்த அன்றே ஏற்பட்டுவிட்டது . "தோழர் ஜீவா "பிறந்த தேதி இது .


இந்த வருடம் க.நா.சு வின் மருமகன் பாரதி மணி க்கு போன் போட்டு என்னை அறிமுகபடுத்திகொண்டு அவருடைய ஆசியை பெற்றேன் . மனிதர்"உயிர்மை"பத்திரிகையில் சும்மா சிக்ஸர் ,பௌண்டரி யாக விளாசு,விளாசு என்று விளாசுகிறார் . என்ன ஒரு அனுபவங்கள் , என்ன ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை .க.நா. சு . உயிரோடிருந்த போது மருமகனுடைய ஆளுமை பற்றிஎதுவும் எழுதவில்லை .சொன்னதாகவும் தெரியவில்லை .
இ.பா வின் "மழை "நாடகத்தில் க.நா.சு. மகளோடு நடிக்கும் போது , மணி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியும் .
இந்த திருமணத்திற்கு தி. ஜானகி ராமன் பண உதவி செய்தார் என்பதை க.நா.சு தன் "பித்தப்பூ " நாவலில் குறிப்பிட்டுள்ளார் .

.....

பாரதி மணி சார் !
உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !
உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !
கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .
உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .
எழுபது தானே இப்போது . மாமியை பற்றி' மழை ' நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !
இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!

Dec 18, 2008

Carnal Thoughts-13

சாத்வீகம்


மனைவி மக்களை பிரிந்து வேலை நிமித்தம் வேறு ஊரில் பல நண்பர்களுடன் ஒரு மாடி வீட்டில் தங்கியிருக்கும் பழனி ஆறுமுகம் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து சுவாமி படங்கள் முன் திருப்புகழ் மந்திர நூலை எடுத்து ஓதி விட்டு தான் மெஸ் க்கு போய் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வார் . அறை நண்பர்கள் அனைவரும் ஊருக்கு போய் விட்ட ஒரு ஞாயிறு . இவர் ஊர் தூத்துக்குடி .ரொம்ப தூரம் .அதனால் இவர் மட்டும் வீட்டில் .

காலையில் எழுந்தார் .குளித்தார் . உடனே ,உடனே திருநீறு பூசி சுவாமி படங்கள் முன் வந்து திருப்புகழ் ஆரம்பித்தார் . அறையை கூட்டுவதற்கு சரசு வந்திருந்தாள். இதற்கு மாத சம்பளம் இவளுக்கு அறையில் உள்ளவர்கள் கொடுக்கிறார்கள் .இவள் கூட்ட , அவர் திருப்புகழ் ஓத , இவள் கூட்டிகொண்டே இவரருகில் வந்தாள். திருப்புகழ் ஓதுவது சட்டென்று நின்று விட்டது .
"வர்றியா " பழனி ஆறுமுகம்
"என்னது ?.." சரசு
"இல்ல .. படுப்போம் வர்றியா ?"

" நான் பிள்ளை பெத்து நாற்பது நாள் தான் ஆகுது. பச்ச உடம்பு. லச்ச ரூபா கொடுத்தாலும் "இப்ப " நான் மாட்டேன் " சரசு வின் பதில் .

திருப்புகழ் தொடர்ந்து பழனி ஆறுமுகம் ஓத , இவள் கூட்டி முடிக்கிற வேலையை தொடர்ந்தாள் .

Dec 17, 2008

ஸ்தான சலனம் கௌரவ பங்கம்


மூன்று வருடங்களுக்கு முன் ஒரு ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளரை ( Supdt of Police)சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது . அவர் தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தார் . பணிஓய்வு அவரை முடக்கியிருந்தது . அவர் ஒரு பிரபலமான வக்கீலிடம் அவருடைய பணியில் உதவியாக இருக்கும்போது நான் அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது .
ஓய்வு பெற்ற நிலையில் ஆள் அம்பு சேனை அதிகாரம் இழந்து, அந்த நிலையில் ஒரு டீகடைக்காரன் தன்னை மிகவும் அவமானப்படுத்தி விட்ட நிகழ்வு ஒன்றை விரிவாக என்னிடம் விவரித்தார்.


எனக்கு அப்போது நினைவுக்கு வந்த விஷயம் இது .


பத்து வருடங்களுக்கு முன் அப்போது D.S.P யாயிருந்த இப்போது D.I.G ஆக இருக்கும் ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் பேசும்போது சொன்னார்:
" மாறுதல் உத்தரவு எனக்கு ( Transfer order)வந்து விட்டாலே இந்த ஊர் கான்ஸ்டேபிள் கூட அலட்சியமாகி விடுவான் . ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரிகளை யார் மதிப்பார் . போலீஸ் துறை துவங்கி பொதுமக்கள் வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள் !"


அதிகாரம் என்பது அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியை குறிக்கும் .அதிகாரம் , மக்கள் செல்வாக்கு , சமூக அந்தஸ்து தருபவள் கஜலக்ஷ்மியாம் !!!
சில பெரும் பணக்காரர்கள்-இவர்களை ஊரில் யாருமே மதிக்கமாட்டார்கள் . அவர்களுக்கு கஜலக்ஷ்மி அருள் இல்லை என்று அர்த்தம்!
அரசியல்வாதிகள் பதவியில் இல்லாத போது கஜலக்ஷ்மி அருள் இல்லாத வர்களாகி விடுகிறார்கள் . பதவிக்கு வரும்போது கஜலக்ஷ்மி இவர்களை பின்னி படர்ந்து விடுகிறாள் ! இடுப்புக்கு கீழே எட்டு சுத்து !!
Politicians out of power are the different species from the politicians in power!


அதிகார பதவியில் உள்ள காவல் துறைக்காரர்களுக்கு பணிஓய்வு பெற்றவுடன் கஜலக்ஷ்மி நிரந்தரமாக விடை பெற்று விடுகிறாள் !
எந்த ஒரு உத்தியோக ஓய்வும் சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாக , ஏன் உடல் ரீதியாக கூட மிகவும் பாதித்து விடுகிறது .
பொருளாதார வீழ்ச்சி யடைந்தவர்கள் பாடு கேட்கவே வேண்டாம் .
"வாழ்ந்தவர் கெட்டால் " என்று ஒரு நல்ல நாவல் க நா சு எழுதியிருக்கிறார் .

இந்த"வாழ்ந்தவர் கெட்டால் நாவல் தான் க நா சு நாவல்களில் அசோகமித்திரனுக்கு மிகவும் பிடித்த நாவல் .
எனக்கு கூட "வாழ்ந்தவர் கெட்டால் " நாவல் மிகவும் பிடிக்கும் . கநா சு வின் நடை அப்படி !
ஆனால் க நா சு வின் "பொய்த்தேவு " நாவலும் "ஒரு நாள் " நாவலும் தான் தமிழின் முதல் சாதனை நாவல்கள் !


நவீன சமூகமும் இரட்டைநிலையும் - தமிழவன்

நாகார்ஜுனன் ப்ளாகில் தமிழவனின் ' சமூகமும் இரட்டை நிலையும் ' என்ற கட்டுரை( 'உயிரோசை 'யில் பிரசுரமானது ) வெளியிடப்பட்டுள்ளது . அதில் இருந்து ஒரு நான்கு பாரா மட்டும் இங்கே தருகிறேன் . முழு கட்டுரையும் படிக்க Nagarjunan.blogspot.com பார்க்கவும்

"மிக மோசமான மன்னராட்சியின் கூறுகள் நமது நாடாளுமன்றத்துக்குள் நுழைகின்றன. இந்திய மக்களாட்சிக்கு முன்னின்று உழைத்த ஜவகர்லால் நேரு இறந்ததும் மன்னராட்சி முறையில் பின்பற்றும் வாரிசு ஆட்சி தொடங்குகிறது. அதாவது நமது தலை (அறிவு) நாடாளுமன்ற அரசியலை அறிந்தாலும் நமது இதயம் (உணர்வு) மன்னராட்சிக்குத்தான் பழக்கப்பட்டிருக்கிறது. ஓர் அடுக்கை இன்னோர் அடுக்கு அமுக்கி வைக்கிறது.

.....

சமீப நாட்களில் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு வீர வணக்கம், பம்பாய் தீவிரவாதத் தாக்குதலில் உயிர்த்தியாகம் புரிந்த கமாண்டோக்களுக்கு வீரவணக்கம் என்று புதியதோர் உணர்வலையில் கம்யூனிஸ்டுகளும்கூட விழுந்ததைப் பார்த்தோம். அரசுகள் உதிரும் (States will wither away) என்பதுதான் கார்ல் மார்க்ஸின் கருத்து. ஒரே அரசாங்கம், ஒரே தேசம், உலகம் முழுவதும் என்பதுதான் மார்க்ஸின் கருத்து. தேசம் பற்றிய விஷயத்தில் மார்க்ஸ் ஒரு அனார்க்கிஸ்ட்; அதாவது அனார்கிஸம் என்பது ஒரு தத்துவம். அவர்களுக்குச் சில சித்தாந்தங்கள் உண்டு. அதிமுக்கியமான சித்தாந்தம், அனார்க்கிஸ்டுகள் அரசுகளை, தேசங்களை ஆதரிப்பதில்லை. எனக்குப் பல வேளைகளில் தோன்றும், நாம் இன்னும் போர்களைக் கைவிடப்பயிலாததால் காட்டுமிராண்டிகள்தாமே என்று. ஃப்ராய்டைப் படித்த பிறகுதான் 'சாவு உணர்வுக்கான' அகில உலக வடிவமே, போர், யுத்தம், என்று பட்டது.

'கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்' என்ற வரியை எழுதிய பாரதிதாசனை நினைத்து நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. வினோபா பாவே, பாகிஸ்தானும் இந்தியாவும் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது "இருபக்கமும் சாகிறவர்களை நினைத்து அவதிப்படுகிறேன்" என்று சொன்னபோது எனக்கு ஒருகணம் உலகம் அமைதியாகி ஸ்தம்பித்தது என்று பட்டது. ஆனால் இன்று இப்படி ஒரு குரலை பாரதத்தில் கேட்க முடியவில்லை. எனது இந்தியா என்ற உளறலைத்தான் கேட்க முடிகிறது. லங்கேஷ் என்ற எழுத்தாளர் கன்னடத்தில் எழுதினார். இப்போது அவர் உயிருடன் இல்லை. அவருடைய ஒரு கவிதையின் தலைப்பு: "தேஷபக்தி சூளேமகனே" என்பது. (சூளே-விபச்சாரி; மகனே-புதல்வனே) இது அனார்க்கிஸத்தின் உள்ளுந்துதலில் இருந்து வரும் வரி. ஆனால் பரிதாபம், நமது மார்க்ஸிஸ்டுகள் தேச பக்தியால் தலையில் கொடி எடுத்து ஆடுகிறார்கள்.ஆனால் சற்று ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது கேரளத்தில் அய்யப்பனுக்கு நேர்ந்து சபரிமலை போகிறவர்கள் கம்யூனிஸ்டாகவும் இருப்பதுதான் நேர்மையான காரியம்; தன் கலாச்சாரத்தை விட்டுவிடாத குணம் இது. தன்னுடைய மன்னர்களை மறக்காமல் நாடாளுமன்ற ஆட்சிமுறையைக் கொண்டு வருவதுதான் ஒரு வகையில் பாரதக் கலாச்சாரத்தின் பண்பு. இதில் காணப்படும் இரட்டை முகம், நமது இயல்பு.

....

தேசம் என்ற எதார்த்தம் பற்றிய கருத்துகளின் தொகுப்பை தேசியம் என்கிறோம். இது ஒரு கற்பனை என்று தொண்ணூறுகளில் சிலர் பரப்பினார்கள். ஆனால் இந்தக் கருத்தைப் பற்றி முதன்முதலாக நூல் எழுதியவரின் பெயர் பெனடிக்ட் ஆண்டர்ஸன். அவர் நூலில் எங்கும் இந்தக்கருத்து இல்லை; ஆங்கிலத்தில் Imagined Communities என்ற பெயரில் பெனடிக்ட் ஆண்டர்சன் எழுதிய நூலில் வரும் கருத்து - தேசியம் என்பது பல நிலைப்பாடுகளால் உருவாகிறது; நமக்குத் தெரியாத மனிதர்களோடு நாம் வைக்கிற உறவு, ஒரு எல்லையால் அல்லது மொழியால், அல்லது ஒரேவகை சீதோஷ்ணநிலையால் தீர்மானிக்கப்படுகிறது; நமக்குத் தெரியாதவர்களோடு உள்ள உறவு பழைய சமூகங்களில் இரத்த உறவு சார்ந்ததாய் இருந்தது; வேறுசில சமூகங்களில் மதம் சார்ந்ததாய் இருந்தது; புதிய தேசியம் இத்தகைய பல்வேறு தன்மைகளால் உருவாகிறது என்பதுதான் இந்த நூலின் கருத்து. நாம், உறவு இருக்கிறது என்று யூகித்துக்கொள்வதன் அடிப்படையில் தேசியம் உருவானதென்று கூறுவது வேறு; கற்பிதம் என்று பொய் போல் அந்தச்சொல்லைப் பயன்படுத்துவது வேறு. தேசியம் எந்த அடிப்படையும் அற்றதல்ல. மூல ஆசிரியன் பயன்படுத்தாத கருத்தை அகில உலகக் கருத்து என்பதுபோல் சிலர் கருதினர்."

பாரதி தாசன் பதிவு பற்றி ஒரு பின்னூட்டம்


Rajanayahem!

I enter here, having been guided here by a member who feedbacked in another blog. Sorry for coming late here.You have a good point; and that is, if Bharatidasan accepted Bharat as an Iyer, he was bound to accept all Brahmins as Iyers. He cannot criticise them; he cannot hate them. Hating them en masse is fascism, according to you.I have heard this argument before. Perhaps for the audience who clapped for you in the meeting, it was fresh.Bharatidasan was attracted to Bharati for qualities, which are not generally found in others. And, more importantly, among his own castemen.According to Bharati himself, his castemen were cowards, never willing to help anyone who tried to point out their errors of social conduct like untouchablity at the time. He found fault with them for failing in their obligations cast upon them by the religion. He was of the view that if the religion is followed in letter and spirit by each brahmanan, it would do good to society; and such a brahmanan can never be a person for hatred. He will be loved and venerated.

முன்னாளில் வேதம் ஓதுவார் பிராமணர்மூன்று முறை பெய்யுமடா வானம்.இன்னாளில் எதுவும் செய்யது காசு பாப்பார்.In another place,பாப்பானுக்கு இதிலேவுண்டு பீசு

Bharati was referring to the brahminical fear of police; and their tendency to work as informers to police during independenc struggle.I write here not to tar all brahmins with the same brush; but to bring home the point that Bharati was deeply dissatisfied with his own castemen.It is exactly for such traits that they came to be severely criticised by others too. Therefore, Bharatidhasan distinguished Bhrathi from the other paarppanars. He found in him qualities which are to be found in any human, and, perhaps, in a typical brahmin as an obligation.A brahmin is one, according to Hindu scriptures, who should possess certain qualities. Such qualities are written in the Hindu scriptures. If those are not found in them, and they claim they are ordinary like you and me, then they should forego the title brahmanan, which they are not willing to do.The brahmins want to enjoy the exalted status given to them in the religion; and at the same time, dont want to follow the religion. This is the hypocricy which was attacked by Bharathi.In my opinion, Bharatidhasan is perfectly correct in singling out Bharathi for praise, and distinguising them from other brahmins; and condemning them.If Brahmins had behaved as expected of them, there would have been no cause, even remotely, for, what is called today, பார்ப்பனத்துவேசம்.

Write more Rajanayahem!

Good luck.

(karikkulam)
12/17/08

Dec 16, 2008

முந்ததர் புஷ் மீது வீசிய காலணிகள்

ஈராக் நிருபர் முந்ததர் எறிந்த காலணிகள் இரண்டுமே அமெரிக்க அதிபர் மீது படவில்லை . அவரை பலரும் சேர்ந்து அமுக்கிய பின் அந்த இடத்தில் ரத்தகறை காணப்பட்டிருக்கிறது .

ஈராக் தேசமக்களின் எதிர்ப்பு , அரபு தேசங்களின் எதிர்ப்பு மட்டுமல்ல .உலகமெங்கும் உள்ள அமெரிக்க எதிர்ப்பு முதந்தர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது .உலகநாயகன் முந்ததர் !

ஈராக் இந்த அளவுக்கு கூட உலகத்தின் பேட்டைரௌடிக்கு எதிர்ப்பு காட்டக்கூடாதா ?

புஷ் இதற்கு எதிர்வினையாக 'முந்ததர் மற்றவர் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி செய்திருக்கிறார் .' என்று சொல்கிறார் . எருமை மாட்டு தோல் !

......

Dec 15, 2008

“Out Look” ல் அருந்ததி ராய் ‘9 is not 11’

நேற்று “Out Look” பத்திரிகையில் அருந்ததி ராய் மும்பை கலவரத்தை முன் வைத்து எழுதியுள்ள 9 is not 11
கவர் ஸ்டோரி படித்தேன். நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது.
“America is the land of the future, where in the ages that lies before us , the burden of the world’s history shall reveal itself” என்று ஹெகல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி சொல்லமுடிந்தது ?
‘People and Governments have never learned anything from history, or acted on Principles deduced from it.’ இதனை சொன்னது கூட ஹெகல் தான் .
‘Out of the crooked timber of humanity , no straight thing was ever made’ -விரக்தியில் கான்ட் சொல்லியிருப்பது
மீள முடியாத சகதியில் நாடுகள் ( நம் நாடு மட்டும் அல்ல) சிக்கிவிட்ட உண்மையை அருந்ததி ராய் அப்பட்டமாக உணர்த்துகிறார் .
ரொம்ப வேதனையில் அபத்தமாக தத்துவங்களை தான் மனம் அசை போடுகிறது .தத்துவம் என்பது கடும் நெருக்கடியில், மனிதன் முன் நிற்கும் கனமான சவால்களுக்கு கவைக்கு உதவாதது.
உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட David Hume சொன்ன தத்துவ வார்த்தைகள் .
‘Generally speaking, the errors in religion are dangerous; those in philosophy only ridiculous’
விடிவு ?
.....................
"கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் அல்ல .நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும் கூட "
- நோம் சோம்ஸ்கி

Dec 13, 2008

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்

பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது . இந்த பழமொழியை பாருங்கள் .
"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
கி ரா என்னிடம் சொன்னார் ! அவரே விளக்கம் சொன்னார் .
ருசி சம்பந்தப்பட்டது . முக்கியத்துவம் குறித்தது .
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள் . நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும் !!
இளைய குடியா - இரண்டாவது மனைவி , அபிமான தாரம் .
மாகை - மாய்கை
அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம் ,சொக்குபொடி - இதன் சக்தி ,சுவை , முக்கியத்துவம் ..
'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு !
...
The other woman is always powerful!
..
ராதாகிருஷ்ணன் ன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன் நு பேர் வச்சிக்கிரானா ?
இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒரு முறை இப்படி கேட்டார் !
...........
ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே .
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க " வள்ளி -தெய்வானை !"

'ஹிந்துத்வா துரோகி ' ஹேமந்த் கர்கரே

ஹேமந்த் கர்கரே ( Maharashtra ATS Chief) பயங்கரவாதிகளுக்கெதிரான நடவடிக்கையில் பலியான நாளுக்கு ஒரு வாரம் முன் தான் அவரை தாக்கரே அசோசியேசன் கடுமையாக தாக்கி ' ஹிந்துத்வா துரோகி ' (இந்த பட்டத்தை பெற எல்லோரும் சந்தோசப்படவேண்டும் )என்று அடையாளமிட்டிருந்தது. மும்பை கலவரத்தை எதிர்கொண்டு முதல் களப்பலி ஆகி சிவசேனை கூட்டத்தின் முகத்தில் கரியை பூசிவிட்டார் .

நரேந்திர மோடி ஹேமந்த் கர்கரே வீட்டில் அவர் மனைவி கவிதா கர்கரே யை துஷ்டி விசாரிக்க சந்திக்க வர விரும்பிய போது அதற்கு கவிதா மறுப்பு தெரிவித்தது சிலாகிக்க வேண்டிய விஷயம் .

கணவன் இறந்த பிறகு கவிதா கர்கரே விதவை அடையாளங்களை புறக்கணித்து நின்ற விஷயம் கூட ஹிந்துத்வா சக்திகளை கோபப்படுத்தும் விஷயம் தான் .

பாபர் மசூதி இடிப்பு , குஜராத் முஸ்லீம் படுகொலை கூட இந்த தேசத்திற்கு எதிராக நடந்த பயங்கர வாதம் தான் என்பதை மும்பை கலவரத்தை எண்ணி வருந்தும் ஒவ்வொருவரும் கண நேரமும் மறந்து விடக்கூடாது .

இந்திய நாட்டை பீடித்த புற்றுநோய் தான் பாரதிய ஜனதா , விஷ்வ ஹிந்து பரிஷத் .ஆர்எஸ்எஸ் ஆகிய Hindutwa Mob என்பதை நான் என் ப்ளாகில் முன்னரே வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளதை , பதிந்துள்ளதை ( நாகார்ஜுனன் இலங்கை இணைய தள பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டிக்கான என் பின்னூட்டம்) படித்தவர்கள் அறிவார்கள்.

நாகார்ஜுனன் 'தேசம் நெற் ' பேட்டியில் என் கருத்து

பிஜேபி, ஆர்எஸ்எஸ், விஹெச்பி இந்த நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய்தானே?

.................................................................................................................................................

ஜாதி,மத,மொழி,இன வெறி அடையாளங்கள் ,இயக்கங்கள்,கொள்கை சிறை இவற்றிற்கெதிரான என் அருவருப்பு என்னை இந்த சிக்கல் மிகுந்த சமூகத்திலிருந்து மிக அந்நியப்படுத்தி விட்டது .என்னை தொடர்ந்து படிப்பவர்கள் இதனை நன்கு உணர முடியும் என்பது தான் உண்மை .

Dec 12, 2008

இரண்டு பெங்களூரு செய்திகள்

பெங்களூர் செய்தி ஒன்று :
பெங்களுர் பெண் பல் டாக்டர் ஒரு மைசூர் ஆண் டாக்டர் தன்னை காதலித்து துரோகம் செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதை அறிந்து பல்லை நறநற என்று கடித்து ,பின் நிதானித்து .. அந்த மைசூர் பல் டாக்டரை நயந்து வரவழைத்து ஜூஸில் மயக்கமருந்து கலந்து அவரை குடிக்க செய்து அந்த மைசூர் பல் டாக்டரின் கல்யாண சாமானை சும்மா 'சுட சுட' மைசூர் பாக்கு கட் பண்ணுற மாதிரி வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார் . இப்போது பதுங்கி திரிந்த பெண் பல் டாக்டர் போலீசிடம் மாட்டி கொண்டார் . டணால் தங்கவேலு "தேன் நிலவு" படத்திலே சொல்றாப்பிலே
' பதுங்குனாருள்ள, அப்புறம் ஏன் திரியிறாரு ? அதான் மாட்டிகிட்டாரு !'


பெங்களுர் செய்தி இரண்டு :
தேவ கௌடாவின் மத சார்பற்ற ஜனதா சென்ற ஆட்சியில் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்த அபத்தத்தை தொடர்ந்து பல கூத்து நடந்து முடிந்து இப்போது பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும்போது நடக்கும் ஒரு இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஜனதா வேட்பாளர் தேட அவகாசம் இல்லாத தர்மசங்கடத்தில் அவசரமாக வேறு வழியில்லாமல் தன் மருமகளையே வேட்பாளராக அறிவிக்க வேண்டி வந்திருப்பதற்காக மிகவும் மனம் வருந்தி வேதனைபட்டிருக்கிறார் என்று தினமலர் ' டவுட் தனபாலு ' பகுதியில் படிக்க கிடைத்தது .


ம்ஹூம் ..உங்களுக்கும் கஷ்டம் வருது , எனக்கும் கஷ்டம் வருது . யாருக்கு தான் கஷ்டம் வரலே சொல்லுங்க ..எல்லோருக்கும் கஷ்டம். ஆனா தேவ கௌடா கஷ்டம் வெளியே தெரியுது .. என்ன செய்ய .. சரி பார்ப்போம் .தெய்வத்துக்கு எல்லாம் கண்ணு தான் இல்லையே !

Dec 11, 2008

இதை கேளுங்க இதை கேளுங்க

1988 ஆண்டில் ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதை தொகுப்பு காவியா வெளியீடு . கோவை வேலாயுதம் என்னிடம் அதன் முதல் பிரதியை ஒரு நல்ல தொகைக்கு நான் வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டார் . கோவை ரெட் கிராஸ் பில்டிங்கில் நடந்த அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்த நூலின் முதல் பிரதியை பத்து மடங்கு தொகை கொடுத்து காவியா சண்முக சுந்தரத்திடம் இருந்து பெற்றுகொண்டேன் அந்த நிகழ்வில் புவியரசு , சிற்பி ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டம் முடிந்ததும் பலரும் என்னை சூழ்ந்து கொண்டனர் . காவியா சண்முக சுந்தரம் அன்று பெங்களுர் பஸ் ஏறும்போது சொன்னார் ." இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் ராஜநாயஹம் என்ற நல்ல மனிதரை சந்தித்தது தான் "

அந்த சிறுகதை எழுத்தாளர் நெகிழ்ந்து போய் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பின் முதல் பிரதியை நான் வாங்கி அந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தியதையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்.

அதன் பிறகு இந்த எழுத்தாளர் தன்னுடைய இரண்டாவது சிறுகதை நூல் கோவை வேலாயுதம் வெளியிட இருப்பதாக சொன்னார் . மணிக்கொடி சிட்டி ( சி என் அண்ணாதுரையின் வகுப்பு தோழர் ) அவர்களிடம் தன் சிறுகதை தொகுப்புக்கு முன்னுரை வாங்கி தர சொன்னார் . நான் அதற்காக பழனியிலிருந்து வந்து கோவையிலிருந்த சிட்டியிடம் அந்த எழுத்தாளரை ஆட்டோவில் அழைத்து போய் அறிமுகப்படுத்தி அவரது இரண்டாவது சிறுகதை தொகுப்புக்கு அவரை முன்னுரை தர சொல்லி வேண்டினேன் . எனக்காக அவருக்கு நான் கேட்டுகொண்டதற்காக முன்னுரை எழுதி தந்தார்.

விஜயா பதிப்பகம் வேலாயுதத்தையும் நான் தான் சிட்டிக்கு அறிமுகப்படுத்தினேன் . ஒரு விஷயம் . சாஷ்டாங்க நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை அன்று தெரிந்து கொண்டேன் . வேலாயுதம் சிட்டியின் காலில் விழுந்த வேகம் .. வேலாயுதம் உடம்பில் பலமாக அடி பட்டிருக்குமோ என நான் ஒரு நிமிடம் கவலைப்படும் படியாக இருந்தது . அந்த அளவிற்கு பெரியவர்களுக்கு மரியாதை எப்படி செய்ய வேண்டும் என ஒரு Demonstration!வலிந்து செய்வதல்ல .வெகு இயல்பாக !

பின்னர் அந்த எழுத்தாளர் எனக்கு மீண்டும் ஒரு கடிதம் நான் சிட்டியிடம் முன்னுரை வாங்கி கொடுத்த சிறுகதை தொகுப்பு பற்றி எழுதினார் . " இந்த தொகுப்பை பதிப்பாளர் வேலாயுதம் ஆறு மாதம் கழித்து தான் தன்னால் வெளியிட முடியும் என்று சொல்கிறார் . என்னுடைய பத்தாண்டு கால தவம் இந்த சிறுகதைகள் . நீங்கள் இதற்கு ஒரு தொகை அவருக்கு அனுப்பி வைத்தால் அவர் உடனடியாக வெளியிடுவார் .இந்த உதவியையும் நீங்கள் செய்தால் என் இலக்கிய வாழ்வு செழிக்க முடியும் " - இப்படி..இப்படி .

நான் அப்போது உடனே ஒரு நல்ல தொகை விஜயா வேலாயுதம் அவர்களுக்கு அனுப்பி அந்த இரண்டாவது சிறுகதை தொகுப்பை உடன் வெளியிட சொன்னேன் .
வேலாயுதம் ' இந்த இலக்கியவாதிகள் உலக நடப்பு தெரியாதவர்கள் . ராஜநாயஹம் ! நீங்கள் இப்படி அந்த எழுத்தாளருக்காக இந்த தொகையை அனுப்பியது உங்கள் தாராள மனசு தான் . எனக்கு வருத்தம் தான் .' என்றார் . நான் ' பாவம் அந்த எழுத்தாளர் . அவர் சிறுகதைகள் உடனே வர உதவுங்கள் என கெஞ்சுகிறார் ' என்று முடித்து கொண்டேன் .
அந்த எழுத்தாளரின் அந்த தொகுப்பு
" நன்றி
திரு சிட்டி
திரு ராஜநாயஹம் "
என்ற குறிப்பு முன்பக்கத்தில் அச்சிட்டு அப்போது எனக்கு பிரதி தரப்பட்டது .

அந்த எழுத்தாளர் நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டவர் .அந்த திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி ஒரு மணி ஆர்டர் அனுப்பி வைத்தேன் .

புதுவை க்கு நான் சென்ற பின் வேலாயுதம் அந்த எழுத்தாளர் புத்தகம் வெளிவர நான் கொடுத்த தொகையை பல மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பி விட்டார் .

நான் பல வருடம் கழித்து 2003 ல் திருப்பூர் வந்த பின் நான் வேலாயுதம் அவர்களிடம் தொலை பேசியில் பேசி திருப்பூரில் செட்டில் ஆகியுள்ள விஷயம் சொல்லி விட்டு அந்த குறிப்பிட்ட எழுத்தாளர் எப்படி இருக்கிறார் என விசாரித்து விட்டு ,எழுத்தாளர் தொலை பேசி என்னையும் வாங்கி அந்த எழுத்தாளருக்கு போன் செய்து " நான்R .P . ராஜநாயஹம் பேசுகிறேன் " என்றேன் .
நல்ல எழுத்தாளர் தான் அவர் . அவர் பதில் என்ன தெரியுமா ?
" ராஜநாயஹம்..... ராஜநாயஹம்..... நீங்க .. நீங்க ... நீங்க .. ..என்னிடம் பழகியிருக்கீங்க இல்ல ...." அவருடைய மூளையை கடுமையாக கசக்க ஆரம்பித்தார் . தவித்தார் ..தத்தளித்தார் ...தக்காளி வித்தார் .. ராஜநாயஹம் யாரு ..தனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டு பிடிக்க ரொம்பவே சிரமப்பட்டு விட்டார் பாவம் !

வேறு யாராய் இருந்தாலும் அவர் இப்படி நடந்து கொண்டவுடன் போனை உடனே கட் செய்திருப்பார் தானே ? நான் அப்படி செய்யவில்லை .அதன் பிறகு கூட ஒரு பதினைந்து நிமிடம் அவரை பேச விட்டு கேட்டு கொண்டிருந்தேன் .( இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் பலர் எப்போதும், போன் நாம் போட்டால் வள வள வள என்று நிறைய பேசுவார்கள் )

..........

இவர் அதன் பின் என்னை நேரில் மூன்று முறை எதேட்சையாக சந்திக்க நேர்ந்த போது கூட நான் அவருக்கு செய்த உதவிகள் பற்றி ஒரு வார்த்தை மூச்சி விட்டதில்லை . வேறு விஷயங்கள் தான் பேசினார் .

இந்த எழுத்தாளர் யார் என கேட்டு பலரும் எழுதியுள்ளனர் . இவர் நல்லவர் தான் . வாழ்க்கையில் பல துயரங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர் .

பாவம் .. விடுங்கள் ..

Dec 10, 2008

டிசெம்பெர் பெங்களுர்

டிசம்பெர் ஏழு ,எட்டு தேதிகளில் பெங்களூரில் இருந்தேன் . எட்டாம் தேதி மதியம் சென்னை கிளம்பி போனேன் . மறு நாள் அதாவது நேற்று மதியம் இரண்டரை மணி கோவை எக்ஸ்பிரஸ் மூலம் திருப்பூர் வந்தேன் .

பெங்களுர் இதுவரை மூன்று முறை டிசெம்பர் மாதத்தில் தான் போக வேண்டியிருந்திருக்கிறது . வாழ்வில் முதல் முறையாக பெங்களுர் போனது கூட ஒரு டிசெம்பர் மாதம் தான் . நீண்ட இடைவெளிக்கு பின் சென்ற வருடம் டிசெம்பர் மாதம் போனேன் . இப்போது சென்ற ஞாயிறன்று சென்றது கூட டிசெம்பெர் மாதம் தான் .God does not play at dice! என்று ஐன்ஸ்டீன் சொன்னது ஏனோ நினைவுக்கு வந்தது . கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கூட .

பெங்களூரில் நுழைந்த பின் போகவேண்டிய இடம் சேர காரில் மூன்று மணி நேரம் ஆகியது . அவ்வளவு நெரிசல் . வழி கண்டுபிடிக்க ஆட்டோகாரர் ஒருவரிடம் சிக்னலில் நிற்கும்போது விசாரித்தபோது அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த இரு இளம் பெண்கள் எனக்கு 'முத்த சமிக்ஞை ' நிறைய்ய ,நிறைய்ய அவசரமாக செய்தார்கள் .

பெங்களூரிலிருந்து எட்டாம் தேதி மதியம் சென்னை செல்லும்போது 'மதுரவாயல்' என்ற இடத்தில் வாகனங்கள் எறும்பாய் கூட ஊரமுடியாமல் படுகிற நரக அவஸ்தை .. நரகம் அந்த இடம் தான் என்று பந்தயம் கட்டலாம் . இவர்கள் ரோடு போடுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு தண்டனை ரொம்ப அதிகம் . சரி .. நேரம் ,காலம் இப்படி சாலையில் அளவில்லாமல் விரயமாகுமானால் அப்புறம் அவர்கள் என்ன வேலை பார்க்க முடியும்?

பைரன் சொல்லும் பிரியாவிடை

பைரன் கவிதைகள் பற்றி சொல்ல இனி என்ன இருக்கிறது .ஆனால் அவன் காதல்கவிதைகள் அனைத்தும் எப்போதும் புதியவை என்ற தகுதி அவனை பற்றி எவ்வளவு எழுதினாலும் , பேசினாலும் மிச்சம் மீதி இருக்கும் , இருந்து கொண்டே தான் இருக்கும் .
Fare thee well என்ற கவிதையில் பிரிவின் துயர் காணும் பின்விழைவு
Fare thee well
Both shall live, But every morrow
Wake us from a widowed bed.
இருவரின் படுக்கையும் இனி விதவைக்கோலம் பூனவேண்டியுள்ளது!
இரக்கமில்லாத கொடூர ஜென்மம் (கல்லு மனசு-“sans merci” ) என்றாலும் கூட அவளுக்கு தான் எந்த காலத்திலும் எதிராக , விரோதியாக மாறவே மாட்டேன் என ஆணையிட்டு சொல்கிறான்
Even though unforgiving,never
Against thee shall my heart rebel

இங்கே பல காதல்கள் மோதலில் பரஸ்பரம் புழுதி வாரி தூற்றுதல்களை காண நேரும்போது இந்த பைரன் கவிதை நினைவுக்கு வருகிறது .

Dec 5, 2008

கல்யாண்குமார் சொந்தகுரல்

ராசுக்குட்டி படத்தில் மறைந்த கல்யாண்குமார் கதாநாயகனின் தந்தை . அவர் கன்னடபடங்கள் நூறுக்கு மேல் நடித்தவர் என்றாலும் தமிழில் அவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் , நெஞ்சம் மறைப்பதில்லை , மணி ஓசை , தாயில்லாபிள்ளை,யாருக்கு சொந்தம் ஆகிய படங்களில் சொந்த குரலில் தான் பேசியிருக்கிறார் .
அவர் ராசுக்குட்டி படத்தில் நடித்தபோது அவருக்கு அந்த காலத்தில் ஏற்படாத சிக்கல் ஒன்று ஏற்பட்டது .
கதாநாயக இயக்குனரின் உதவி இயக்குனர் கூட்டம் ' அவருக்கு டப்பிங் பேச வேறு ஆள் போட வேண்டும் . அவர் பேச்சில் கன்னட வாடை அடிக்கிறது ' என்று பேச ஆரம்பித்தது . அவர்கதாநாயகனாய் தமிழ் பேசி நடித்த போது பிறந்திருக்காத ஜென்மங்கள் . " தாயில்லா பிள்ளை " படத்தில் இன்றைய முதல்வர் வசனத்தை பேசி நடித்தவருக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு . அதோடு கன்னடத்துக்காரர் தான் என்றாலும் நாற்பது வருடங்களாக சென்னையில் வாழ்ந்து வந்தவர்.
நான் இப்படி பேச்சு அடிபடுவதை கல்யாண்குமார் அவர்களிடம் வேதனையுடன் தெரிவித்தேன் . அவருக்கு அதிர்ச்சி ! நான் கேட்டேன் “Who will break the ice?” கல்யாண்குமார் சற்று நம்பிக்கையுடன் சொன்னார் “I will break the ice! டைரக்டர் இடம் நான் பேசி அவரை சம்மதிக்க வைத்து விடுவேன் . நான் கருணாநிதி எழுதிய தமிழ் வசனங்களையே உச்சரிப்பு சுத்தமாக பேசியவன் ." அப்படி அவர் பேசிவிட்டு என்னிடம் சந்தோசமாக " டைரக்டர் என் ரோலுக்கு நானே குரல் கொடுக்க சம்மதித்து விட்டார் "
டப்பிங் தியேட்டரில் கல்யாண்குமார் ரோலுக்கு தீனரட்சகன் என்ற டப்பிங் ஆர்டிஸ்ட் தான் குரல் கொடுத்தார் .
பாவம் கல்யாண்குமார் ! படத்தில் அவருக்கு டப்பிங் குரல் தான் !

Dec 4, 2008

பின் மும்பை நிலவரம்

பொண்டாட்டியை பறிகொடுத்த சோகமும் சர்தாரி முகத்திலே தெரியலே . மும்பையிலே இப்படி நடந்து போச்சேன்னுற துக்கமும் சர்தாரி மூஞ்சிலே காணலயே . நல்லா ஈ ..ஈ ..ஈன்னு இளிச்சிக்கிட்டு !

பாகிஸ்தான் ஜனாதிபதிசர்தாரியோட குதூகலமும் கும்மாளமும் பார்த்தா ஏதோ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்ட புது மாப்பிள்ளை மாதிரி குஷி யா சிரிக்கிறாரு .

"அயோக்கிய பயல்களை நாங்களே உண்டு இல்லைன்னு பண்ணிடறோம்.உங்க சோலிமயித்த பாத்துகிட்டு போங்க " ன்னு இந்தியாவுக்கு அல்வா கொடுக்கிறாரு .

.......

“Politicians , You have divided us
Terrorists have united us now”
இப்படி Banner ஒன்று நேற்று மும்பையில் நடந்த மக்களின் Peace March ல் காண கிடைத்தது . சபாஷ் !

"தாக்கரே" கூட்டத்துக்கிட்ட சிக்காம முதல்ல இவங்க தப்பிச்சிட்டாலே

அதுவே நல்ல ஆரம்பம் தானே !

.......

மஹாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா ! For this relief, Much Thanks என்கிற ஆசுவாசம் அவருக்கு . இனி என்ன ? எவன் கேட்க முடியும் . மகனை வைத்து நிம்மதியாக சினிமா எடுக்கலாம் . படத்தயாரிப்பாளர் வேலை ரெடியா காத்திட்டிருக்கு .

......

இந்த அமெரிக்காக்காரன் (ஈராக்,ஆப்கானிஸ்தான்கட்டபஞ்சாயத்காரன் ) அனுப்பின பொம்பிளை என்னமோ கண்டார ஒலி ரைஸ் , இல்லை ..கண்டோலீசா ரைஸ் ! அந்தம்மா இங்கேயும் தலையாட்டுது . பாகிஸ்தான் காரன் கிட்டேயும் தலைய ஆட்டுது . உருப்படியா என்ன ஏதாவது செஞ்சுச்சா ... செய்யுமா ..

.......

போயும் போயும் வயுத்து உழவுக்காரன் மலத்தையா திம்பான் . சிதம்பரம் தானா உள்துறைக்கு ..

சரி, நிதித்துறை தப்புச்சிடுச்சேன்னு சந்தோசபடுறீங்க .. Optimistic approach! இல்ல..இல்ல இது Healthy Cynicism!!

'துக்கத்தின் மறுபக்கம் சந்தோசம் ' அப்படின்னா என்னன்னு இப்ப புரியுது .

.....

ஒன்னு கவனிச்சிங்களா ! கருணாநிதி , ஜெயலலிதா , எம்ஜியார் பற்றி என்னகடுமையா எழுதுனாலும் யாரும் கேட்க மாட்டாங்க . ஏன்னா அவங்க கட்சி தொண்டர்கள் யாரும் இதை எல்லாம் படிக்க மாட்டாங்க . ஆனா அச்சுதானந்தன் சமாச்சாரம் பார்த்தீங்களா .பல காம்ரேட்கள் வரிந்துகட்டிக்கொண்டு அவர் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு கூட வக்காலத்து வாங்குறாங்க . தோழர்கள் சொல்வதின் சாரம் - 'எடியூரப்பாவை முதல்நாள் எட்டி உதைக்காம ஏன் சந்தீப் அப்பா உள்ள விட்டாரு ? எங்க அச்சு ரொம்ப வயசானவரு . திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு ரொம்ப தூரம் . அதனால தான லேட் ஆ வந்தாரு . அவரை நாய்ன்னா அப்புறம் அவரு சும்மா இருக்க முடியுங்களா அதனால தான் அப்படி பேசுனாரு . ஒரு தடவை அவர் சொன்னதை டி வி லே பலமுறை ஒளிபரபுரானுக காவாலிங்க. ' இது தான் மார்க்சீய உணர்வு .

டி வி காரங்கே பண்ண லொள்ளு ஒன்னும் புதுசு இல்லையே ! மும்பை கலவரம் தான் அவனுங்க கொண்டாடுன தீபாவளி .அவனுங்க அதுக்குன்னே தானே காத்துகிட்டிருக்கானுங்க . மீடியா அலும்பு பத்தி தெரியாததா ?

.....

பாரதிமணி - R P ராஜநாயஹம் பற்றி

பாரதி மணி said...

ராஜநாயஹம்: உங்கள் வாழ்க்கை அனுபவங்களும், ஞாபகசக்தியும் என்னை பிரமிக்கவைக்கின்றன.இன்னொரு முக்கிய குணம் இப்போது பரவலாக நிறைந்திருக்கும் பார்ப்பனத்துவேஷம் உங்களிடம் அறவே இல்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜாதிவெறியை அரசியல் லாபங்களுக்காக கையாண்டு வரும் இக்காலத்தில் உங்கள் பரந்துபட்ட பார்வை மகிழ்ச்சியை அளிக்கிறது.Keep it up. God bless you!

பாரதி மணி
Thursday, 04 December, 2008

பாரதிதாசன்

புதுவை பல்கலை கழகம் சார்பில் பாரதி தாசன் நூற்றாண்டு விழாவில் பார்வையாளனாக கலந்து கொண்டேன் . ஜால்ரா சத்தம் சகிக்க முடியவில்லை . பாரதியை விட பாரதி தாசன் பெரிய கவிஞர் , பாரதியை தாண்டி விட்டார் என்ற ரீதியில் புலவர்கள் ,பேராசிரியர்கள் பேசினார்கள் . 'பாவேந்தர் என்று பாரதி தாசனை சொல்லவேண்டாம் . ஏனென்றால் அவர் ஒருவர் தான் புரட்சிகவிஞர் . புரட்சி கவிஞர் அவர் ஒருவர் தான் என்பதால் அவரை புரட்சிகவிஞர் என்று தான் சொல்லவேண்டும் ' என்று ஒருவர் எல்லோரையும் மிரட்டினார் .
நான் எழுந்து மேடைக்கு சென்று பேசினேன் " இன்று புரட்சி என்ற வார்த்தை மிகவும் கொச்சைபடுத்தபட்டு விட்டது . புரட்சி தலைவர் , புரட்சி தலைவி ..இப்படி .. அந்தகாலத்திலே எம்ஜியார் எக்ஸ்ராவா நடிச்ச காலத்திலே எம்ஜியார் யாருன்னே தெரியாமல் இருந்த காலத்திலேயே புதுமைப்பித்தன் எழுதிய " திருக்குறள் செய்த திருக்கூத்து " என்ற கதையில் ' புரட்சிதலைவர்' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார். கிண்டலாகத்தான் ! இப்ப கூட புரட்சி கலைஞர் நடிக்கும் கரிமேடு கருவாயன் ன்னு போஸ்டர் ஓட்டறான் .யார்ரா புரட்சிகலைஞர் நு கேட்டா அந்த கருவாயன் தான் புரட்சிகலைஞர் நு சொல்றான் . புரட்சி என்ற வார்த்தை இன்று Cliché ஆகிவிட்டது அதனால பாரதி தாசனை பாவேந்தராகவே வைத்துக்கொள்ளுங்கள் .புரட்சிகவிஞர் வேண்டாம் " என்றேன் . சபையில் சிரிப்பு எழுந்தது .
தொடர்ந்து நான் சொன்னேன் " பாரதி தாசன் தன் குருநாதர் பாரதியை பற்றி பேசும்போது அவரை " எங்க ஐயர் " " ஐயர் " என்றே தன் வாழ்நாள் முழுதும் சொல்லி வந்திருக்கிறார் . அவருடைய குருநாதரே " பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே " என்று சொன்ன பிறகு அவர் காலம் முடிந்த பிறகு கூட அவரைப்பற்றி குறிப்பிட்டு பேசுகையில் பாரதி தாசன் 'ஐயர்' என்றே குறிப்பிட்டிருக்கிறார் . யாராவது " என்ன பாரதியை ஐயர் என்று கூறுகிறீர்களே " என்று கேட்டால் பாரதி தாசன் பதில் " அவர் ஒருத்தர் தான் ஐயர் .மத்தவன் எல்லாம் பாப்பான் !" இந்த பதிலில் ஒரு இனத்தை முழுமையாக அருவருப்புடன் வெறுத்து ஒதுக்குகிறார்.பாரதி மீது Obsession ! அவருடைய இனத்தினர் மீது Fascism !!
பிரபஞ்ச கண்ணோட்டத்தோடு இவர் " புதியதோர் உலகம் செய்வோம் " என்று பாடி விட்டு இப்படி தன் குருநாதரை தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிபெயரால் ' ஐயர் ' என்று குறிப்பிட்டது நியாயமா ? " என்று கேட்டேன் . சபையில் சிரிப்பு.

செ.ரவீந்திரன் சொன்னதை மேற்கோள் காட்டி  முடித்தேன் :“Bharathi dhasan - A great man fallen among the Dravidians!”


க. ப .அறவாணன் கூட்டம் முடிந்தவுடன் வந்து "ராஜநாயஹம் குரல் கேட்டவுடன் அடடா ராஜநாயஹம் பேசுறாரே ன்னு பார்த்தேன் " என்று சிரித்தவாறு சொன்னார் !

Dec 3, 2008

கி வேங்கிட சுப்பிரமணியன்


புதுவை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மறைந்த கி வேங்கட சுப்பிரமணியன் அப்போது என் எதிர் வீட்டுக்காரர் .தி ஜானகிராமன் நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டபோது என்னை அழைத்து பல்கலைக்கழகத்தில் எனக்காக ஒரு தி ஜானகிராமன் கருத்தரங்கம் நடத்த செய்தவர் .
பிரமிள் நூல்களை அவரிடம் பரிசாக தந்தேன் . அவருக்கு ஏதேனும் பல்கலைக்கழகம் மூலம் உதவ முடியுமா என்று கேட்டேன் . நடக்கவில்லை .
ஒரு முறை ஹைதராபாத் நகரில் டி கே சி பற்றி அவர் பேசவேண்டியிருப்பதால் அவர் பற்றிய நூல்களை அவசரமாக கேட்டார் . நான் அவர் காரில் கிளம்பும்போது என்னிடம் உள்ள டி கே சி பற்றிய நூல்களை அவருக்கு கொடுத்தேன் .
அடுத்து என்னை ' பாரதி தாசன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு கட்டுரை எழுதி பேச அழைத்தார் . நான்' பாரதியின் சிஷ்யர்களில் வரா மீதுள்ள வாஞ்சை ,அபிமானம் பாரதி தாசன் மீது எனக்கு கிடையாது ' என்று சொல்லி மறுத்தேன் .அதற்கு கூட என் உணர்வுகளை மதித்து பதில் கடிதம் அனுப்பினார் . பாரதி தாசன் விழா வில் என் எதிர்ப்பு குரலை தைரியமாக பேசினேன் .
ஒரு நாள் இந்திரா பார்த்தசாரதியின் வீட்டிற்கு போய் ' க நா சு வோட 'பித்தப்பூ ' நாவல் வேண்டும் .' என்றாராம் . இந்திரா பார்த்தசாரதி ' உங்கள் எதிர் வீட்டில் ராஜநாயஹம் இருக்கிறார் .கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஏன் நெய்க்கு தவிக்க வேண்டும் . அவரிடம் கேட்டு பாருங்கள் ' என்று சொல்லவும் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய உதவியாளரை என் வீட்டுக்கு அனுப்பினார் . நான் உடனே க நா சு வின் பித்தப்பூ நாவலை வேங்கட சுப்பிரமணியன் அவர்களுக்கு கொடுத்து விட்டேன் .அதை பெற்றுகொண்டவுடன் நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் " அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் அவர்களுக்கு " என்று என்னை விளித்து நெகிழ்ந்து எழுதியிருந்தார் .
......
புதுவை இலிருந்து திருச்சி வந்த பின்
கையிலிருந்த பணத்தை அப்போது வட்டிக்கு விட்டு விட்டு சும்மா இருக்கக்கூடாதே என்று திருச்சி பெமினா ஸ்டார் ஓட்டலில் ஒரு ஐந்து மாதம் வேலை பார்த்தேன். அந்த வேலை மிகவும் பிடித்திருந்தது .ரசித்து வேலை செய்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த ஓட்டல் 'மேல் மட்ட நிர்வாக சூழலின் அபத்தங்கள்' சகிக்க முடியவில்லை .
The Job of a Hotel receptionist is a sweet sorrow.திருச்சி பெமினா ஓட்டலில் நான் வரவேற்பாளர். சார்ட்டில் வேங்கட சுப்பிரமணியன் தங்கியிருப்பதை நான் ஒரு நாள் தெரியவந்தேன்.அப்போது அவர் புதுவையிலிருந்துபதவிக்காலம் முடிந்து சென்னை சென்று விட்டார் . " வேங்கட சுப்பிரமணியன் அறையை காலி செய்துகொண்டு வருகிறார் " என்று ஹோடேலில் ஜெனரல் மேனேஜர் பரபரப்பாக வந்து சொன்னார் . லிப்டில் கீழே இறங்கி வந்த வேங்கட சுப்பிரமணியன் என்னை பார்த்தவுடம் பரவசமாகி விட்டார் .“ Mr. Rao! Rajanayahem is a great literarian for whom I have the greatest regards!!” என்று மேனேஜரிடம் சொன்னார் .“ It’s your great privilage to have my friend Rajanayahem as your receptionist”
மேனேஜர் செயற்கையாக சிரித்தார் .
என்னிடம் கேட்டார் .
How are you ?
How is your wife?
How is your child?
இன்னொரு குழந்தை இரண்டாவதாக பிறந்துள்ள செய்தி அறிந்ததும் எனக்கு ஆறுதலாக This second child will bring you Luck! என்றார் . கை கொடுத்து விட்டு செல்லும்போது என்னை திரும்பி திரும்பி பார்த்துகொண்டே சென்றார் . ஹோட்டல் மேனேஜர் அவருடைய கார் கதவை திறந்து விட்டு அவர் ஏறியதும் டாட்டா காட்டி விட்டு வந்து
எரிச்சலுடன் என் மீது எரிந்து விழுந்தார் .
" யோவ் அந்த சார்ட் எடுய்யா "

Dec 2, 2008

திலகர் மருது

திலகர் மருது ,ஓவியர் மருது , போஸ் மருது இருவரின் சகோதரன் . என் பால்ய நண்பன்.

பாக்யராஜிடம் இரண்டு படங்கள் , பாரதி ராஜாவிடம் இரண்டு படங்கள் உதவி இயக்குனராக பனிபுரிந்தவன் .

சிவாஜி கணேசன் நடிக்க , வெளி வரவிருந்து நின்று போன " ஆதி பகவன் " பட இயக்குனர் .

எல் வி பிரசாத் தன் படம் ஒன்றை இயக்கம் பொறுப்பை திலகர் மருதுவிடம் ஒப்படைத்து அதுவும் நின்று போனது .

என்னை என் நெருங்கிய நண்பர்கள் " கேபி "( Gabie ) என்றே இன்றும் அழைப்பார்கள் . உறவினர்கள் " துரை " என்றே அழைப்பார்கள் . அமெரிக்கன் கல்லூரியில் மரத்தடி மகாராஜா வாக இருந்து " மரத்தடி மகாராஜாக்கள் " என்ற புத்தகம் நான் எடிட் செய்து வெளியானது . அதனால் பலருக்கும் மரத்தடி மகாராஜா தான் நான் இன்றும் .What a piece of work is a Man!

கீழே திலகர் மருது வின் பின்னூட்டம் .



Tilakar Marudu.M said...
To, Dear Gabi- "Marththadhi Maharaja""

Most of our obstacles would melt away if, instead of cowering before them, we should make up our minds to walk boldly through them. and A constant struggle, a ceaseless battle to bring success from inhospitable surroundings, is the price of all great achievements." Hope i have the privilege to send this mail to you and have the honour to greet you with my fullest heart for doing things in to the right direction and for all out there. and wishin' you the best."Go confidently in the direction of your dreams! Live the life you've imagined. As you simplify your life, the laws of the universe will be simpler. " With warmest regards,Tilakar Marudu.M.Chennai. Note: I created my blog and wish to write whenever i wanna' to.I am not a writer like you, i like images most, than words. www.tilakarmarudu.blogspot.com

" Kalaintha Oppanai" the whole episode is not accident. It is politics.Heaps and heaps of incidents out there.
Tuesday, 02 December, 2008

அரசியல்வாதிகளின் மும்பை கலவர அரசியல்

1.சந்தீப் உன்னிகிருஷ்ணன் தந்தை செய்த காரியம் மிகுந்த சிறப்புடையது என்றால்

கேரளா முதல்வர் 85வயது அச்சுதானந்தன் தேசத்திற்காக தன் இன்னுயிர் நீத்த புனிதனின் தந்தையை 'மெண்டல் ' என்று அவமானப்படுத்தியிருப்பது மிகவும் கேவலமானது .

அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும் என்று பலரும் வற்புறுத்தியுள்ளனர் .

அச்சுதானந்தன் சம்பவம் நடந்த உடனே சந்தீப் வீட்டிற்கு போய்விடவில்லை .கேரளாவில் பலரும் அவரது மெத்தனத்தை சுட்டிக்காட்டிய பின்னே மெதுவாக பெங்களூர் கிளம்பி போயிருக்கிறார். அரசியல்வாதிகள் துக்க வீட்டிற்கு வருவதே கூட ஒரு பகட்டு அரசியல் நடவடிக்கை . அந்த சம்பவத்தை நான் பலமுறை NDTV, TIMES TODAY அது ஒளிபரப்பப்படும்போது துவங்கி பார்த்தேன்.புத்திர சோகம் என்பது எத்தனை கொடுமையானது . உலகின் அத்தனை சோகங்களிலும் தாங்கவே முடியாதது புத்திர சோகம் . தன் பிள்ளையை தேசத்திற்காக பலிகொடுத்து விட்டு அப்படிப்பட்ட சோகத்தில் உள்ள தந்தை அந்த நேரத்தில் தன்னை வரவேற்று கௌரவிக்கவில்லை என்பதற்காக அவரை பைத்தியக்காரன் என ஏசுவது காட்டுமிராண்டிதனமில்லையா ? பதவி திமிர் இல்லையா . எனக்கு ஒரே வருத்தம் தான் . ஒரு முதிர்ந்த கம்யுனிஷ்ட் தலைவர் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டு வெறுப்புக்கு உள்ளாகி விட்டாரே என்பது மட்டும் தான் .

My empathy goes to Sandeep’s father.

அரசியல்வாதிகள் தேச துக்கத்தை கூட தன்முனைப்புடன் பார்ப்பவர்கள் என்பதைத்தான் அச்சுதானந்தனின் அவதூறு நிரூபித்திருக்கிறது .

2. பாலிவுட் ராம்கோபால்வர்மாவும் , மஹாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் தாஜ் ஹோட்டல் பார்க்க, 'சினிமா வியாபாரரீதி' யாகதேசிய சோகத்தை தன்முனைப்புடன் (எரிகிற வீட்டில் பிடுங்கியவரையில் லாபம் . மும்பை கலவர பின்னணியை வைத்து அழகான ஹிந்திதிரைப் படம் மக்களுக்காக எடுக்க வேண்டாமா . லோகேசன் பார்க்க வேண்டாமா ? )அணுகியது அரசியல் வாதிகள் மீதான சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தையின் அவமரியாதைநடவடிக்கை சரியானது,நியாயமானது என்பதை நிரூபித்து விட்டது .

ச்சீ ச்சீ ....

................................

டிசெம்பெர் மூன்றாம் தேதி

1.கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தரமற்ற தன் பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் .

2.மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி விலகுவது உறுதியாகியிருப்பதாக தெரிகிறது .

கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது .

மாறன் பிள்ளைகள் மீண்டும் இணைந்தது பற்றி.....

அழகிரியும் தயாநிதி மாறனும் பின்னி படர்ந்து விட்டார்கள். இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து.

இனி அழகிரி தும்பிக்கையை தரையில் ஊனி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா,தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் மரத்திலே வாலை தொங்க போட்டு ஊஞ்சல் ஆடுவாங்கய்யா!

ஜெயலலிதா கட்சியில் மன்னார்குடி அட்டகாசம் என்றால் கருணாநிதி கட்சி குடும்ப படம் . குடும்பம் ஒன்னு சேர்ந்தவுடன் சினிமாலே 'சுபம் 'போட்டுடுவான். Blood is thicker than Water! பாவம் கனிமொழி ! ஓஹோ ! செல்வி இருக்கிற இடம் .கனிமொழி அங்க வரக்கூடாது . பெரிசு சும்மா இல்ல . பிள்ளைங்க ஸ்டாலின் , அழகிரி , பேரன் எல்லோரும் போய் ராஜாத்தியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும் நு கறாரா சொல்லிட்டாரு . முக முத்து?...


இந்த உட்குடும்ப சண்டையும் சமாதானமும் சுயநல வெறியின் வெளிப்பாடு !

"கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது "

தமிழக முதல்வரின் புதிய Quotation! பேஷ் ! பேஷ் !!

கடந்த முப்பதுக்கு மேற்பட்ட வருடங்களில் இப்படி பலQuotations அடிக்கடி உதிர்த்திருக்கிறார் .
அண்ணா மறைந்த போது ' கடலில் உள்ள முத்தெல்லாம் முத்தல்ல . நான் தானடா முத்து என்று கடற்கரையில் உறங்குதியோ அண்ணா "



" பாவம் அவன் ஒரு இளம் தளிர் " - முக முத்து பற்றி (எம்ஜியார் காரணமாக திமுக உடைந்த போது )

"பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் " சர்க்காரியா கமிசன் முன் எம்ஜியார் ,கல்யாணசுந்தரம் கொடுத்த புகார் பற்றி

"தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும்
தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை " கண்ணதாசன் மறைந்த போது.

இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கருணாநிதி - " இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல , கண்ணீரில் மிதக்கிறது "

"போய் விட்டாயா மதி ?" தன் உட்கட்சி எதிரி மேதை மதியழகன் மறைந்த போது

எம்ஜியார் இறந்தபோது " செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க முதல் அமைச்சர் . என் நாற்பதாண்டு கால நண்பர்... "

"நெஞ்செல்லாம் தமிழ் மணக்க , நாவெல்லாம் தமிழ் மணக்க ..." நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது

இன்று பேரன்களின் மீது உள்ள பரிவு " கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது "

ஒரு சுவாரசியமான முதல் அமைச்சர் பலமுறை தமிழ்நாடு பெற்றதற்கு நாம் சந்தோசப்படலாம் . இப்படி ஒரு சுவாரசியமான முதல்வர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்குமே கிடைத்ததில்லையே !இந்த முதல் அமைச்சர் இல்லாவிடில் தமிழக வரலாறு வறண்டு உலர்ந்து போயிருக்கும் என்பதில் இரு கருத்து இருக்கவே முடியாது .

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதலில்கொல்லப்பட்டவர்களுக்கும் கூட ஒரு இரங்கல் கவிதை இப்போதாவது எழுதமாட்டாரா என்று அதனால் ஒரு ஏக்கம் உண்டாகிறது.






எம்பார் விஜயராகவாச்சாரியார் ஹரிகதை

சுவாமிநாத ஆத்ரேயன் குபராவின் சிஷ்யர்.' மாணிக்க  வீணை 'என்ற நல்ல கதை எழுதியவர். இவர் இசைகட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார். அவர் எழுதிய விஷயம் ஒன்று ஹரி கதா 'எம்பார்' பற்றியது.

கும்பகோணத்தில் ஒரு பாகவதர். இவர் பெயர் பற்றி சுவாமிநாத ஆத்ரேயன் குறிப்பிடவில்லை.  அரியக்குடி யின் சிஷ்யர். திருவையாறு அண்ணா சாமி பாகவதரிடம் ஹரி கதை பயின்றவர். வித்வத் வேறு பிராபல்யம் வேறு அல்லவா. குடத்திலிட்ட விளக்கு.

கும்பகோணத்தில் ஒரு பெரிய பணக்காரர். அவர் மகளுக்கு கல்யாணம். அந்த பெண் இந்த குடத்திலிட்ட விளக்கிடம் தான் இசை பயின்றவள். கல்யாண பெண் தன் திருமணத்தில் தன் இசை ஆசிரியர் தான் ஹரிகதா செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாள். ஆனால் அவர் தந்தை மறுத்துவிட்டார். அன்று பிரபலமான எம்பார் தான் ஹரிகதை செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். இந்த உள்ளூர் பாகவதரை கூப்பிட்டு " உமக்கு சம்பாவனை உண்டு. பத்துக்கு ஆறு சோமன் உண்டு. ஆனால் எம்பார் ஹரிகதை தான் என் பெண் கல்யாணத்திற்கு. " என்று சொல்லி விட்டார்.


இந்த பாகவதர் புறப்பட்டு எம்பாரை போய் பார்த்தார்.அழாக்குறையாக விம்மினார்.இது தனக்கு அவமானமாயிருக்கிறது என்றார். எம்பார் தீர்க்கமாக சொன்னார் " உம்முடைய ஹரிகதை தான் அந்த கல்யாணத்தில் நடக்கும். நான் பார்த்துகொள்கிறேன். உம்முடைய மகள் பின் பாட்டு தானே. என் தம்பி நரசிம்மன் மிருதங்கம் வாசிப்பான். கவலைப்படாமல் போய் வாரும்." என்றார்.


கல்யாணத்தன்று எம்பார் தன் தம்பிகளுடன் வந்தார் .ஹரிகதை மாலை ஐந்து மணிக்கு. எம்பார் மூன்று மணியிலிருந்து பலமுறை பாத்ரூம் போய் வந்தார்.
ஐந்து மணிக்கு பாயில் கால் நீட்டி மல்லாந்து படுத்துவிட்டார்.
பெண்ணின் தகப்பனார் " என்ன இது ?" என்றார். எம்பார் சொன்னார் " எனக்கு உடம்பு படுத்தறது. என் நண்பர்பாகவதர் உங்கள் குடும்ப வித்வான் தானே. அவர் சொற்பொழிவு செய்யட்டும். அவர் மகள் பின் பாட்டு. என் தம்பி நரசிம்மன் மிருதங்கம் " என்றார்.
கல்யாண பெண் னுடைய தகப்பனார் எரிச்சலுடன் பாகவதரை கூப்பிட்டு சபையில் நிறுத்தினார். குடும்ப வித்வான் உற்சாகமாக பஞ்சபதீ பாடினார். அரைமணி நேரத்தில் எம்பார் வந்து சபையில் அமர்ந்தார்.ஹரிகதா பிரமாதமாய் நடந்தது. பணக்காரர் எம்பாரின் சம்பாவனையை கொண்டுவந்தார். அதை வாங்கி பாகவதரிடம் கொடுத்து பொன்னாடையையும் அவருக்கு போர்த்தி விட்டார் எம்பார் விஜயராகவாச்சாரியார்!

Dec 1, 2008

'தண்ணிலவு தேனிறைக்க' மாயவநாதன்

'காகித ஓடம் கடலலை மேலே ' பாடல் எழுதப்பட்ட சுவாரசியம் பற்றி வைரமுத்து துவங்கி முதல்வர் மு .கருணாநிதி வரை தமிழக மக்களுக்கு சொல்லிவிட்டார்கள் .
அந்த கவிஞர் மாயவநாதன் ........
'காகித ஓடம் ' பாடலை மாயவநாதன் எழுதுவதற்கு பதிலாக 'மறக்க முடியுமா ' தயாரிப்பாளர் மு.கருணாநிதி எழுதினார் . டி கே ராமமூர்த்தி இடம் பாடலுக்கு மெட்டு கேட்டார் மாயவநாதன் . ராம மூர்த்தி " என்னையா மெட்டு .' மாயவநாதன் , மாயவநாதன் , மாயவநாதன்' இது தான் மெட்டு ." என்றவுடன் மாயவநாதன் கோவித்துக்கொண்டு போய்விட்டார் . இந்த கோபம் தான் அவரை வறுமைக்கு விரட்டியது . மான ரோஷம் பார்த்தால் குடும்பம் தெருவுக்கு வந்து விடும் என்று அறியாதவராய் இருந்திருக்கிறார் .( பல வருடங்களுக்கு முன் ,'தேவி 'பத்திரிகையில் மாயவநாதனின் குடும்பம் அவர் மறைவிற்குப்பின் ஒரு ஓலை குடிசையில் வசிப்பதை படம் பிடித்து காட்டியிருந்தார்கள் )
காகித ஓடம் பாடலில் பல்லவி மட்டுமல்ல சரணம் கூட ' மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் ' தானே .!
"தண்ணிலவு தேனிறைக்க , தாழைமரம் நீர் தெளிக்க " என்று குளுகுளு பாட்டு எழதியவர் மாயவநாதன் .பி சுசிலா பாடியது . "படித்தால் மட்டும் போதுமா"? படத்தில் சாவித்திரி நளினமாக நடந்து பாடி நடிப்பதற்காக !
'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ ? நெஞ்சில்
நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ ?
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ ?'
என்ற ,சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'பந்த பாசம் ' படப்பாடலை எழுதியவரும் மாயவநாதன் தான் .
'தண்ணிலவு தேனிறைக்க , தாழை மரம் நீர் தெளிக்க ' பாடலை குளிர்ச்சியாக எழுதிய மாயவநாதன் கடைசியில் நல்ல உச்சிவெயிலில் ,கடும் பசிமயக்கத்தில் ,நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்து போனார் .
'என்றும் மேடு பள்ளம் நிறைந்தது தான் வாழ்க்கையென்பது ' என்று 'நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ ' பாடலில் ஒரு சரணத்தில் எழுதிய மாயவநாதன் அதே பாடலில் இன்னொரு சரணத்தின் கடைசி வரி " விதி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது ?" என கேட்டு எழுதியிருந்தார் .