பழனியில் என் பெயரே "தவிட்டு எண்ணெய்க்காரர்" ! அதோடு நான் இருந்த தெருவில் என் வீடு தான் பெரிய வீடு என்பதால் தெருவிலுல்லோர் " பெரிய வீட்டுக்காரர்" என்பார்கள் . அந்த தெருவில் என் வீடு போல் சிலவீடுகள் தவிர்த்து மற்ற வீடுகள் அனைத்திலும் எடுப்பு கக்கூசு தான் . சக்கம்மா - அப்போது 80 வயதிருக்கும் . இந்த கிழவி தான் வந்து அந்த வீடுகளில் பின்புறமாக வந்து மலம் அள்ளிக்கொண்டு போவாள் . என் வீட்டின் இடது பக்கம் ஒரு காம்பௌண்டில் சந்தில் மலம் அள்ளிக்கொண்டிருந்த சக்கம்மா பயங்கர கூப்பாடு போட ஆரம்பித்தாள். தெரு கூடிவிட்டது . ஒரு வீட்டில் கக்கூசில் எதோ பிரச்சினை . என்னவிஷயம் ?
"தூமை த்துனி பீயோட கிடக்கு . எனக்கு இப்படி இந்த கன்றாவியெல்லாம் பாக்கனும்னு தலையில் எழுதியிருக்கே . தூ தூ கருமம் தூ இன்னைக்கு சோறு எனக்கு எப்படி இறங்கும் . நான் என்ன பாவம் செஞ்சேன் . ஐயோ நான் இப்படியெல்லாமா சீரளியனும் . தூமை துணியை பீயோடு போட்டு கேவலபடுத்திட்டாளே. ஒமட்டிக்கிட்டு வருதே.தூ உவ்வே. " சக்கம்மா தலையில் தலையில் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் . பார்க்க சகிக்கவில்லை .
எனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமல் அந்த நேரம் பார்த்து பாரதி தான் ஏனோ ஞாபகத்தில் வந்து தொலைந்தான் .
"விம்மிவிம்மி,விம்மிவிம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே !
எங்கள் பெண்கள் அழுத குரல் மீட்டும் உரையாயோ ?
அவர் விம்மி அழவும் .........."
அப்போது அங்கே அந்த தெருவில் எல்லோர் முன்னும் அந்த மாதவிடாய் துணிக்கு சொந்தக்காரி , சிறுமைப்பட்ட சிறு பெண் அவள் குமுறி சேலையால் முகம் மறைத்து அவமானம் தாங்காமல் விம்மிவிம்மி அழுவதை காண நேர்ந்தது .
சார், இப்படியெல்லாம் வேலைக்காரர்கள் இருந்தார்கள் என்று சாரு எழுதி இருந்தார். இப்போது நீங்களும். மகா கொடுமை.
ReplyDeleteஇந்தச் சம்பவத்தில் யாரைக் குற்றம் சொல்வது என்றே தெரியவில்லை. சில நிகழ்ச்சிகள் மனதை சுட்டு விடும். பாவம் சக்கம்மா அத்துடன் சிறுமைப்பட்ட அந்தச் சிறு பெண்ணும்.
Hmm...It reminds me of one novel which I happened to read in my College (Mysore University). Novel "Untouchable" written by MulkRaj Anand.
ReplyDeleteThanks thangavel, Thanks cogito
ReplyDeletecogito ! I see