Share

Aug 25, 2008

பிரபலமான இரு வீடுகள் !

இல்லாதவனுக்கு பல வீடு .
நான் திருச்சியில் குடியிருந்த இரு வீடுகள் சற்றே விஷேசமானவை .

1986 ல் பீமநகர் ராஜா காலனியில் நான் குடியிருந்த வீடு பின்னால் ஒரு பதினான்கு வருடத்தில் சரித்திர புகழ் பெற போவது எனக்கு அப்போது தெரியாது . அந்த வீடு தான் பின்னால் கார்கில் யுத்த தியாகி மேஜர் சரவணனின் வீடு . பத்து வருடங்களுக்கு முன் பல பெரிய அரசியல்வாதிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்து சரவணனின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன போது மிகவும் popular!ஒரு ஜெருசலேம் , ஒரு மெக்கா போலாகியிருந்தது . அந்த வீடு பிரபலமான கால கட்டத்தில் நான் ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்தேன்..
புதுவையிலிருந்து கிளம்பி 1990 டிசெம்பெர் ல் திருச்சியில் எடமலைபட்டி புதூர் ஸ்டேட் பேங்க் காலனி யில் நான் குடியேறிய வீடு அதற்கு ஏழு வருடங்களுக்கு முன் குடி இருந்த ஒருவரால் ஏற்கனவே பிரபலமாயிருந்தது . 1990 ல் அதற்கு சிலவருடம் முன்னரே அவர் பெரிய பணக்கார சாமியாராகி பாத்திமா நகரில் பெரிய ஆசிரமம் அமைத்து கோலோய்ச்சிகொண்டிருந்தார் . அப்புறம் நான் ஸ்ரீவில்லி புத்தூர் போன பின் தான் 1994ல் அவர் அரசாங்க விருந்தாளியானார் . 1983 ல் அவர் அகதியாக வந்த போது குடியேறிய வீடு பின் எனக்கு 1990 ல் வீடாகி இருந்தது .அக்கம் பக்கம் இருந்த அவருடைய பக்தர்கள் என் வீட்டை பற்றி அப்போது "சுவாமி குடியிருந்த வீடு எங்களுக்கு ஜெருசலேம் " என என்னிடம் சொல்வார்கள் .
ஒரு நாள் நான்காவது வீட்டில் குடியிருந்தஅவருடைய உப சாமியார் கமலானந்தா வின் தகப்பனார் இறந்த போது ,இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அந்த சாமியார் நடந்து வந்த போது என் வீட்டையும்(Nostalgia ! அவர் குடியிருந்த வீடல்லவா ) அங்கே வாசலில் நின்று கொண்டிருந்த என்னையும் உற்று பார்த்தார் .
நான் உடனேயே " பன்றி போல இருக்கிறான் . இவனை சாமியார் ன்னுறாங்களே " என்று வாய் விட்டே சொன்னேன் . அது உண்மையென்றே ஆகிபோனது !
அந்த சாமியார் பிரபலமான பிரேமானந்தா .

9 comments:

  1. I 'm sorry . I apologize and I don't generalize and over simbolify that way.please don't read between the lines.

    Anyhow I found his hypocrisy when I first saw him...may be a premonition or an instinct.

    You are absolutely correct. All that glitters are not GOLD

    ReplyDelete
  2. அந்தப் புண்ணாக்கு என் தலைமீது விபூதி போட்டுச்சு. திவ்யாவைப் பார்த்து கிறுகிறுத்த எனக்கு இன்னும் அந்தப் போதை கலையவில்லை.

    சும்மா பார்த்த எனக்கே அப்படின்னா, பக்கத்துல வச்சுக்கிட்டு உத்து உத்தா பார்த்திருப்பார் பிரேமானந்தா...

    ReplyDelete
  3. Premananda was caught but there are many more still being idolized. To me both Premananda and Puttaparthi Saibaba don't make any difference.

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................உங்க வீட்டு ராசி என்னை பயமுறுத்துது.

    ReplyDelete
  5. //கோலோய்ச்சிகொண்டிருந்தார்
    LOL :)

    ReplyDelete
  6. அப்போ பன்றி சாமியாராகக் கூடாதா...

    (அத ஏன் இன்ஸல்ட் பண்றீங்க..)

    ReplyDelete
  7. ||அப்ப வெள்ளையா தேஜஸ்சுடன் இருப்பவர்கள்தான் சாமியாராகவேண்டுமா?||

    அனானி... அப்போ வெள்ளையா இருக்கறவங்கதான் தேஜஸோட இருக்காங்களா..

    (கேப்பாங்கல்ல..)

    ReplyDelete
  8. It seems you are always at the right place and at the right time....விஐபிகளெல்லாம் நிசமாகவே உங்கள் வாழ்க்கையில் வந்து போகிறார்களே...நீங்கள் வேலை பார்த்த ஹோட்டலுக்கு சிவாஜி வந்தது உட்பட!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.