Share

Aug 1, 2008

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான் . குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன் . 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன் .

ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான் . Baby of the poets !26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .

இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும் "கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்

ரைம்போ , கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான் ?

"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனதில வச்சுகிட்டு

தவிக்கிறேன் யா . அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம் ."

என்று

அல்லாடுறான்களே . சான்சே இல்லை .

2 comments:

  1. இவங்கள மனசுல வச்சுத்தான் புதுமைப்பித்தன் சொல்லியிருப்பாருன்னு நினைக்கறேன் ‘பாட்டுக் களஞ்சியமே பல சரக்குக் கடை வையேன்!'

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.