உண்மையில் நரகலை விட அருவருப்பான விஷயம் என்ன ? மலத்தை விட மோசமானது - "குடிகாரனின் வாந்தி "
ஒருபெண் . அப்பா கிடையாது . அம்மாவையும் இவளையும் சுமக்க முடியாத அண்ணன் திருமணம் செய்து கொண்டு ஒதுங்கி விட்டான் .( நான் சம்பாரிப்பது என் குடும்பத்துக்கே போதாது..ன்னு அர்த்தம் ) வேறு வழி இல்லை . ரெடிமேட் கடையில் வேலைக்கு சேர்ந்தவள் . தினமும் வீட்டிலிருந்துஒரு கிலோமீட்டர் நடந்து பிச்சை பிள்ளை சாவடியிலிருந்து மதுரை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் மேல சித்திரை வீதிக்கு நடந்து காலை எட்டரை மணியிலிருந்து இரவு எட்டரை மணி வரை வேலை .
ஒரு நாள் இரவு வேலை முடிந்து ஒன்பது மணி போல பஸ்ஸில் ஏறிவிட்டாள்.சரியான கூட்டம் . டவுன் பஸ் சாதாரணமாகவே பெண்களுக்கு துன்பக்கேணி தானே ? எவ்வளவு அரவங்களுக்கு இடையே எவ்வளவு நேரம் ஒரு பெண் நின்று கொண்டே ...திடீரென்று ஒரு குடிகாரன் எடுத்தான் வாந்தி . இவள் பின்னால் நின்று கொண்டிருந்தவன் .ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் இவள் தலை , சேலை , ஜாக்கெட்டில் மொத்த வாந்தியும் அபிஷேகம் .
இறங்கிவிடலாம் என்றால் எங்கே போய் கழுவுவது . நேரம் வேறு இரவு .விதி ! எல்லோரும் பரிதாபபட்டார்கள் .குடிகாரனை திட்டினார்கள் . அவனுக்கு அடி கூட விழுந்தது . அவன் மயங்கியது போல் நடித்து இறங்க மறுத்து அப்படியே உட்கார்ந்தான் . இவள் விதியற்று ,நிர்கதியாக ....நின்று கொண்டே ஒரு மணி நேரம் , பல ஸ்டாப்.. கடைசியில் பிச்சை பிள்ளை சாவடி . அம்மா எப்போதும் பஸ் ஸ்டாப் வந்து விடுவாள் . இறங்கியவள் அம்மாவிடம் சொல்லிகொண்டே நடக்கிறாள் . வீடு வந்து குளித்து முழுகி விட்டு சாப்பிட பிடிக்காமல் படுக்கிறாள் .
ஒமட்டிக்கொண்டு வருகிறது . அம்மா வும் சாப்பிடவில்லை .நள்ளிரவில் ஒரு மணிக்கு மேல் அம்மாவை திரும்பி பார்க்கிறாள் .குமுறி அழும் அம்மா . இவள் உடல் குலுங்கி சத்தமின்றி ....விம்மி விம்மி ...
மலத்தை விட மோசமானது குடிகாரனின் வாந்தி .
எவன் கேட்கப் போகிறான் என்று நினைக்கிறீர்கள்.
ReplyDeleteகுடும்பமாவது, குட்டியாவது. ஒழுக்கமாவது புண்ணாக்காவது.. மண்ணாங்கட்டி.
மேனாடுகளின் பிச்சைக் காசில் கந்தல் உடை உடுத்திய மானிடங்கள் மலத்தில் உழலும் பன்றிகளை விடக் கேவலமாக உலா வருகிறார்கள்.
obviously, life has no meaning everywhere around the world.
ReplyDeleteThe whole world dies over and over again;but the skeletons always gets up and walks
Henry Miller