Share

Dec 31, 2009

எத்திக்கினிலும் ...

"கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் " நோய்க்கூறுள்ள இந்திய பாரம்பரியத்தில் வந்த பெண்கள் . . .!

முன்னாள் ஹரியானா டி.ஜி.பி S.P. S. ரத்தோர் மனைவி அபா தான் கணவனுக்கு வக்கீல். "ருச்சிகாவின் துயரம் முழுவதும் தன் கணவன் சம்பந்தப்படாத விஷயம்.ஜோடிக்கப்பட்ட கதை "என்று அபா சொல்லுகிறார். ஆலிவர் கோல்ட்ஸ்மித் சொன்னான்- “Ask me no questions, and I'll tell you no fibs.”

எந்த வழக்கிலும் குற்றவாளிக்கு வக்கீல் தேவை தான். ஆனால் ரத்தோர் க்காக வாதாட அவர் மனைவியே வந்துள்ள விஷயம்..... It is the height of Irony!

"Fibbing is not acceptable, even if you don't call it lying"

கெட்ட சதிக்குணத்தான் பல மாயம் செய்த வல்லோன் ரத்தோர்

14 வயது ருச்சிகா கற்பழிக்கப்பட்டு 19 வருடங்கள் ... தற்கொலை செய்துகொண்டு 16வருடங்கள் ....

சக்கரத்தைஎடுப்பதொரு கணம்

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் !

பாரதி ஏங்கினான்.

....


Excessive enthusiasm, unreasoning zeal.

விஷ்ணுவர்தன் இறுதி ஊர்வலத்தில் ரசிகர்கள் ரகளை - விஷ்ணுவர்தன் மனைவி நடிகை பாரதிக்கு கல் வீச்சில் காயம். The worst vice of the fanatics is their sincerity. In the history of mankind,Fanaticism has caused more harm than vice. சினிமா நடிகர்களின் ரசிகர்கள் ரொம்ப அபாயகரமானவர்கள்.

அரசியல் தொண்டர்களும் தான்.

Dec 30, 2009

தத்துவம் கேள்விகளாலானது



Deep-rooted gender biasஎன்பதாக விவாதங்கள் நிறைய நடக்கிறது.

பிலாசபி என்பதில் பெண் தத்துவமேதை என பெரும்பாலும் கிடையாது. ஓரிருவர் இருக்கிறார்கள்.
“Second Sex” எழுதிய பெண் தத்துவவாதியும் பெண்ணியவாதியுமான சிமோன் திபுவோ (Simon de Beauvoir) பால் பிரிவினையையே ஒத்துக்கொள்ள மறுத்தார்.
சிமோன் திபுவோ Female nature
என்பதாகவும் Male natureஎன்பதாகவும் கருதப்பட்ட இருமை எதிர்வுகளை நம்பவில்லை. மாறாக ஆண்களும் பெண்களும் இந்த உள்ளார்ந்த மனச்சாய்வுகளில் அல்லது இலட்சியங்களில் இருந்து தங்களைத் தாமே விடுவித்துக்கொள்ளவேண்டும் என நம்பினார்.

மனிதன் யார்? மனித இயல்பு என்ன? இதன் மீதான விசாரணை தத்துவ உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி 'நிரந்தர மனித இயல்பு ' என்று எதையும் தீர்மானிக்கமுடியாது என நம்பினார் சார்த்தர். “We are condemn to improvise!”மனிதர்கள் மேடைக்கு இழுத்து வரப்பட்ட நடிகர்கள். ஸ்க்ரிப்ட் கிடையாது. இயக்குனர் யாருமே கிடையாது. நாமே தான் நம் கதாப் பாத்திரத்தை தீர்மானிக்கவேண்டும். We are condemn to improvise.அர்த்தமே இல்லாத உலகவாழ்வில் முற்றிலும் அந்நியமாகிப் போகும் மனிதன். இதன் காரணமாக ஒரு ennuiவில் சிக்கிவிடுகிறான். Man has no basic nature to fall back on.

ஜோஸ்டீன் கார்டர் எழுதிய நாவல் Sophie's world ஒரு reference bookஎன்று சொல்லவேண்டும். தத்துவத்துறை பற்றிய வரலாறு Sophie's world.

Who we are? Why we are here?Will there still be something that every body needs?


It is easy to ask philosophical questions than to answer them. மாற்றி சொல்வதானால் கேள்விகள் தான் தத்துவம்.

ஆல்பர் காம்யு தன் “The Fall” நாவலில் பல தத்துவக் கேள்விகளை அதனால் தான் வைத்தான்.

Dec 29, 2009

திருமண பந்த சங்கிலி

ஜெமினி கணேசனுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின் ( மூன்றாவது பெண்ணுக்கு ஹிந்தி நடிகை ரேகா வயது தான் . சர்ச் பார்க் கான்வென்டில் இருவரும் ஒன்றாக படித்தார்கள்.நான்காவது பெண் ஜிஜி கூட ரொம்ப பின்னால் தான் பிறந்தவர் ) புஷ்பவல்லியுடன் affair ஏற்பட்டது .புஷ்பவல்லிக்கு முன் மனைவி பாப்ஜி தவிர வேறு பெண்களை தொட்டதே கிடையாது என ஜெமினி சொன்னார்.
1940களின் பின்பகுதியில் புஷ்பவல்லி பெரிய திரை நட்சத்திரமாய் இருந்த காலத்தில் ஜெமினி அவர் பெயருக்கு காரணமான ஜெமினி ஸ்டுடியோவில் உத்தியோகம் பார்த்தவர்.அதோடு சினிமாவில் (புஷ்பவல்லி கதாநாயகியாய் நடித்த படத்தில் கூட)அப்போது ஜெமினி கணேசன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்.
1951ல் செப்டம்பர் 22தேதியில் பீச்சில் ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமுள்ள நடிகை புஷ்பவல்லியை சந்திக்க நேர்ந்தது அவர் வாழ்வையே புரட்டிப்போட்டது. புஷ்பவல்லி ஜெமினியிடம் தன் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினார். (புஷ்பவல்லிக்கு ஏற்கனவே அப்போதே ஒரு மகன் பாபுஜி.இந்த பாபுஜி பின்னால் குட்டி பத்மினியின் அக்காவை மணந்தார் . வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் மகளுக்கு காதலனாக நடித்தார்.)
ஜெமினியின் காரை புஷ்பவல்லி ஓட்டிப் பார்க்க விரும்பினார். காரை ஓட்டிப் பார்த்த புஷ்பவல்லியுடன் அன்றே சரீரத்தொர்பு ஏற்பட்டு விட்டது. இதை ஜெமினியே கூறினார்.
அதிகாலை மனைவி பாப்ஜி வீட்டில் திண்ணையில் குற்ற உணர்வுடன் வந்து படுத்துக்கிடந்தார் . பாப்ஜி வெகுளியாய் ஜெமினியின் தாயாரிடம் " அம்மா! உங்க பிள்ளைய பாருங்க இங்கே!"
தான் மெம்பராய் இருந்த கிளப் ஒன்றிற்குப் போய் மூன்று நாட்கள் அங்கேயே கிடந்தார். புஷ்பவல்லி அவரை தேடி அழுதுகொண்டே வந்தார்."உங்களை எங்கே எல்லாம் தேடுவது?"
அப்படி ஏற்பட்ட உறவில் தன் தாய், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளோடு ஒரு Distance வந்துவிட்டது . புஷ்பவல்லி Very possessive lady! புஷவல்லிக்கு இரண்டு பெண்குழந்தைகள். ரேகா,ராதா. சாவித்திரியை வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி " சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும். சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜயசாமுண்டீச்வரி , சதீஷ். சாவித்திரியுடன் கருத்து வேறுபாடு வந்த பின் வந்த 'பாமா விஜயம் ' ராஜஸ்ரீ கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நிபந்தனை விதித்தார். ' உங்கள் முதல் மனைவி பாப்ஜியை விவாக ரத்து செய்து விடுங்கள்.'ஜெமினி இந்த நிபந்தனை ஏற்படுத்திய கடுப்பில் " என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்கு யோக்கியதை கிடையாது " என கடுமையாக ராஜஸ்ரீயிடம் சொல்லி விட்ட பின் அந்த உறவு அறுந்தது.

1970 களின் மத்தியில் ஜெமினியின் வீட்டிற்கு கமல் ஹாசன் தான் ஹிந்தி நடிகை ரேகாவை விருந்தாளி (!)யாக அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சாவித்திரி இறந்த போது புஷ்பவல்லி அந்த சாவுக்கு வந்திருந்தார்.
பாப்ஜியின் நான்கு மகள்கள், புஷ்பவல்லி யின் இரண்டு மகள்கள் , சாவித்திரியின் மகள் எல்லோரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.சதீஷ் ஜெமினியின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். ஜெமினி கணேசன் 64வயதில் துப்பாக்கியால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சாவித்திரி மகன் சதீஷ் குறித்த சர்ச்சை தான் காரணம் என்று ஹேஸ்யம் உண்டு .
ராஜஸ்ரீ உறவும் கசந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் சாவித்திரியின் மறைவுக்கும் பின் சிலவருடங்கள் கழிந்து, ஜெமினி ஒரு பேட்டியில் சொன்னார்." இவ்வளவு வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மை புரிகிறது. என் முதல் மனைவி பாப்ஜியைத் தான் நான் மிகவும் காதலிக்கிறேன் என்கிற விஷயம் இவ்வளவு ஆண்டு கால வாழ்வுக்குப் பின் தான் தெரிகிறது ."
ஆனால் அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் ஜூலியானா வை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணிடம் அடியும் வாங்கினார்.
திருமண பந்த சங்கிலி கனமானது என்பதால் தான் அதனை இழுக்க ஆணும் பெண்ணுமாக இருவர் தேவைப் படுகிறது. ஆனால் மிகவும் கனமானது என்பதால் சில சமயம் மூன்றாவது பெண்ணும் வந்து விடுகிறாள் போலும்.சில சமயம் பெண்ணுக்கு கூட ஒரு ஆணோடு இன்னொரு ஆண் வர நேரிடுகிறது.

The chain of Matrimony is so heavy, it takes two to carry it.
Sometimes ...three.. four.. five!
ஜெமினியுடன் திருமண பந்த சங்கிலியை இழுத்த ஐந்து பெண்கள்!
ரோஹித் அம்மா விஷயம் உண்மையென்றால் ஆறு பெண்கள்.

தி.ஜானகிராமன் எழுத்து?படைப்புகள்?
தத்துவம், ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
இப்படி திஜாவின் கதைகளுக்கு சுந்தரராமசாமி விளக்கம் தந்திருக்கிறார்.
'திஜா தத்துவம்,ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று நம்பியவர். மனிதனின் பிறழ்வையும் ,தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். இன்று வரை வந்த எழுத்தாளர்களில் வசீகரமானவர் தி ஜானகிராமன் ' என ஜானகிராமனின் எழுத்தைப் பற்றி மதிப்பிட்டார்.

Dec 28, 2009

Illegetimate child

'ரஷிய கம்யூனிசம்' என்பது கார்ல் மார்க்சுக்கு பிறந்த illegetimate child என்று அந்நாளில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் ஆட்லீ தாக்கினார்.

பழைய ஹாலிவுட் படம் “A man for All Seasons.” இதில் ஒரு Witty dialogue.
“Every second bastard born is fathered by a priest.”

தேவ குரு என்ற பிரகஸ்பதி தன் சகோதரன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டதன் மூலம் பிறந்தவர் தான் பரத்வாஜ முனிவர். துரோணரின் மூதாதை பரத்வாஜ முனிவர்.

தாஸ்தயேவ்ஸ்கி யின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இந்த சகோதரர்களின் அப்பா பியோதருக்கு ஒரு illegetimate sonஉண்டு. பியோதரிடம் சமையல் வேலை செய்கிற வேலைக்காரனாக இருப்பான் அந்த முறை தவறிப் பிறந்த மகன் பாவல் ஸ்மார்டியாகோவ் .

சமீபத்தில் ஆந்திர playboy கவர்னர் 'என்.டி. திவாரியின்illegetimate child நான் ' என 29வயது டெல்லி லாயர் ஒருவர் தன்னைப் பற்றி கூறினார். அவர் பெயர் ரோஹித். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். பத்து வருடம் முன் மேஜர் ஆன உடனே வழக்கு தொடராமல் இப்போது தாமதமாக தொடரப்பட்ட வழக்கு என நீதிமன்றத்தில் ரோஹித் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.


இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஒரு இளைஞன் ' ஒரு மாணவி என் காதலி ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தான். அந்த இளைஞனின் பெயர் கூட ரோஹித் தான் ! அந்தப் படம் வெளி வரவே இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு விதமாக பிரபலமானான். " ஜெமினி கணேசன் என் தந்தை. என் தாயார் லண்டனில் ஒரு டாக்டர். அவருடன் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட காதலில் நான் பிறந்தவன்.ஜெமினி கைவிட்டதால் என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளானார் " என வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த
' தாய்' பத்திரிகையில் பேட்டி கொடுத்தான். ஜெமினி இதை"அப்பட்டமான பொய்.நான் அவனில்லை " என வன்மையாக மறுத்தார். உடனே அந்த இளைஞன் " சிங்கப்பூரில் எனக்கு நிறைய சொத்து இருக்கிறது. நான் சொத்துக்காக ஜெமினியின் மகன் என பொய் சொல்லவில்லை.என் நண்பர்களிடம் என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள். Rohit is a gemஎன்று சொல்வார்கள். நான் ஜெமினிக்கு பிறந்தவன் என்பது உண்மை " என்று வலியுறுத்தி மீண்டும் சொன்னான். ஏனோ அதன் பிறகு அந்த விஷயம் பற்றி வேறு எந்த செய்தியும் வெளிவரவே இல்லை.

அன்றைக்கு ஜெமினி வாழ்வில் ஒரு ரோஹித். இன்றைக்கு திவாரி வாழ்வில் வேறொரு ரோஹித்! பெயர் ஒற்றுமை ஒரு coincidence!



நாற்பது வருடங்களுக்கு முன் ' சாவன் பாதன் 'இந்தி படத்தில் நடித்த ரேகா பேட்டி கொடுத்தார். " என் தந்தை பிரபல தமிழ் நடிகர். "
இதில் பெரிய ரகசியம் ஏதும் இல்லை. சினிமாப் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் உடனே ஜெமினி கணேசன் நாற்காலியை திருப்பிப்போட்டு உட்கார்ந்து " ஆமாம் பிரதர்! புஷ்பவல்லி யும் நானும் காதலித்து ஒன்றாக வாழ்ந்த போது பிறந்தவள் தான் ரேகா! நாங்கள் டைவர்ஸ் செய்துகொள்ளத்தேவையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நானும் புஷ்பவல்லியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை." என்று கூலாக சொன்னார்!

“There are illegetimate parents,
but I don't believe there are any illegetimate children.”
-Rick Warren









Carnal Thoughts-27

Erotic urges


Eroticism is assenting to life even in death.
Man goes constantly in fear of himself.
His erotic urges terrifies him.
- George Bataile, Author of “ Story of the Eye”

Current Sex Scandels
இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கோனி - வயது 73.
"I can confirm that the Christian values pronounced by the Pope are
always present in my action.”

Golfவிளையாட்டு வீரன் டைகர் வுட்ஸ் - வயது 34 .
"I have let my family down.I will strive to be a better person and the husband and father that my family deserves. "


ஆந்திர முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி - வயது 84.
“It is nothing but a tissue of lies.” “I apologize but I have done no wrong.”


கர்நாடகாவின் புதிய மந்திரி ரேணுகாச்சார்யா-வயது 55.
Renukacharya was not available for comment.


Global Sustained Physical process!

Dec 26, 2009

A life full of sweet stupidities!


One of the first truly dissent voices to emerge in French poetry.

The poet who stopped writing poetry!

ரைம்போ - A White nigger.

"My life was nothing but sweet stupidities! "


"Ah! To return to life! To stare at our deformities. "

ஆர்தர் ரைம்போ முழங்காலில் புற்று நோயால் 37வயதில் இறந்த பின் தான் அவன் சகோதரி இசபெல் ஒரு உண்மையை அறிய நேர்ந்தது. தன் சகோதரன் ஒரு கவிஞன் என்பதை அவள் ரைம்போவின் மரணத்தில் தான் தெரிந்து கொண்டாள்.

ரைம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊர் சுற்றக்கிளம்பிய Boy genius! An infant Shakespeare! Baby of the French poets!
உடல் இச்சையை மறுத்த கிருஸ்துவத்தை வெறுத்தவன். தன் பெற்றோரை வெறுத்தவன்.
“You,my parents, have ruined my life, and your own.”


பிரஞ்சு கவிஞன் வெர்லைன் தன் கருவுற்ற மனைவி பாரிசில் தன் தகப்பன் வீட்டுக்கு சென்ற போது ரைம்போ வை தன்னுடன் வாழ அழைத்தான். அப்போது ரைம்போவுக்கு 17வயது .வெர்லைன் 27 வயது இளைஞன். அதன் பின் இருவரும் காதலர்கள் ஆகி விட்டார்கள். வெர்லைன் தன் மனைவியை திட்ட ஆரம்பித்தான்.
The devastating love affair of Verlaine and Rimbaud...
there were reestablishing of cordial relations and partings with wife Mathilde and Partings and reconciliations with Rimbaud.
சுருக்கமாக சொன்னால் வெர்லைன் தாம்பத்தியம் ஒரு சர்க்கஸ் போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் வெர்லைன் துப்பாக்கியால் ரைம்போவை சுட்டு விட்டு ஜெயிலுக்கு போனான்.

ரைம்போவின் Bad Blood


“Does this farce has no end?
My innocence is enough to make me cry. Life is the farce we all must play.”

"Where we are going? To battle? I am weak!
The others go on ahead..tools...weapons..
give me time."
"Fire! Fire at me! Here! Or I 'll give myself up!
..Cowards! I will kill myself. I'll throw myself beneath the horses hooves! Ah!
I ll get used to it.
That would be the French way, the path of honor! "



Night in Hell
I will tear the veils from every mystery...
mysteries of religion or of nature, death, birth,the future,the past,
cosmogony and nothingness,
I am a master of Phantasmagoria.

இறந்து கிட்டத்தட்ட 80வருடங்களுக்குப் பின் ஆர்தர் ரைம்போ 1968ல் பிரஞ்சு கலகக்கார மாணவர்களால் வழி பாட்டுக்குரிய புரட்சிக்காரனாக ஏற்றி உயர்த்தப் பட்டான்.

ஆர்தர் ரைம்போவாக லியோனார்டோ டி கேப்ரியோ நடித்து
Total Eclipse என்ற படம் 1995 ல் வெளிவந்திருக்கிறது. ரைம்போ-வெர்லைன் இருவருக்கிடையேயான வன்மையான உணர்வுப்பூர்வமான ஓரின உறவைப் பற்றிய படம்.

Dec 25, 2009

kanapraba to scanman

November 7, 2009

சேலத்திலிருக்கும் scanman :மக்களே, பத்தி எழுவது என்றால் என்ன? அந்த வார்த்தை அவ்விதமான எழுத்தை கேலி செய்வதுபோல் உணர்கிறேன், உண்மையா? முடிந்தால் சுருக்கமாக விளக்கவும்

ஆஸ்ட்ரேலியா ,சிட்னியிலிருக்கும் kanapraba : பத்தி எழுதுவதற்கு சிறந்த உதாரணம் ராஜநாயஹம் எழுதிய பெரும்பான்மை பதிவுகள் http://rprajanayahem.blogspot.com/

Dec 24, 2009

மாய யதார்த்தம்


A realistic setting is invaded by something too strange to believe.

"காட்டில் திரியும் வேங்கை நிலவில் மரத்தில் நகத்தை ஆழப் பதித்து விட்டுப் போய் விடுகிறது . அதைப் பின்னரோ மறுநாளோ பார்த்த பிராணி கிலி பிடித்து உயிரை விட்டு விடுகிறது!வேட்டையாட வேண்டிய கஷ்டமில்லாமல் உணவு "

-ந. பிச்சமூர்த்தி ' பஞ்சகல்யாணி ' கதையில் புலியின் புத்திசாலித்தனமான உணவுத் தேடல் பற்றி. The peculiar attitude on the part of tiger towards it's prey!

இங்கே புலி மரத்தில் வரைகிறது .

கோவையிலுள்ள தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். கவிஞன் வரையும் மரம். வரைந்த பின் பறந்து விட்ட பறவைகள் மீண்டு வந்து அமர்ந்த மரம். Illogical Scenerio!


COLERIDGE FORMULAவுக்கு உதாரணம்.

Willing Suspension of Disbelief in constituting the poetic faith.

Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.
பறவைகளை வழி நடத்து

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்

வரைந்து முடிந்ததும்

அது பறந்து விட்டது

மீண்டும் ஒரு பறவையை

வரைந்தேன்

அதுவும் பறந்து விட்டது

நான் வரைந்துகொண்டே இருந்தேன்

அவைகள் பறந்து கொண்டே இருந்தன

இறுதியாக மரம் ஒன்றை

வரைந்து முடித்தேன்

பறந்து போன அத்தனை

பறவைகளும் வந்து

அமர்ந்து கொண்டன.

Dec 23, 2009

பொறி சிந்தும் வெங்கனல்


எப்போதுமே கையில் ' கல்கண்டு ' வாரப்பத்திரிக்கை கர்ணனுக்கு கவசகுண்டலம் போல லூயிசுக்கு. " பொது அறிவு வளரும்டா டே ''
லூயிஸ் ரொம்ப உற்சாகமாய் இருந்த காலம் உண்டு. 'அடிமைப் பெண் ' எம்ஜியார் கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் தன் உடம்பின் தசைகளை முறுக்கி தன் வலு காட்டி கயிறை அறுக்கும் முயற்சியில் இருக்கும் போது,தரை டிக்கெட்டில் இருந்து தியேட்டரே கேட்கும்படி ஒரு கூப்பாடு போடுவான்-
" எங்க அண்ணன் தொடை 'மஸ்கை ' பாருய்யா !" muscles என்பதைத்தான் மஸ்க் என்பான் லூயிஸ்.
ரயில் பயணம் செய்யும்போது கதவருகில் நின்றுகொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் வருவான். அப்படி நிற்கும்போது ஒரு சலவைத் தொழிலாளி கழுதையை மேய்த்துக் கொண்டு போனவனை பார்த்து " ஏ உன்னைத்தாண்டா!" என கூப்பிட்டு, சாட்டையுடன் திரும்பிய தொழிலாளியிடம் தன் வேட்டியை தூக்கிக் காட்டினான்.
அந்த கழுதைகாரன் கோபத்துடன் வஞ்சான். ரயிலில் போகிறவனை என்ன செய்யமுடியும். கழுதையை சாட்டையால் ரெண்டு அடி கொடுத்து மீண்டும் நடந்தவனை மீண்டும் லூயிஸ் " ஏ உன்னைத்தாண்டா டே" என கூப்பிட்டு தன் வேட்டியைத்தூக்கி தன் குறியை இப்போது ஆட்டிக் காட்டினான்.
கழுதைகாரன் -"உன் ஆத்தாட்ட போயி காட்டுடா ... உன் அக்காக்கிட்ட ஆட்டிக்காட்டுடா வெண்ணை "
மீண்டும் லூயிஸ் வேட்டியை தூக்கிக்காட்டி " வேணுமா " என்றான். இப்போது புளுத்திக்காட்டினான்.
அந்த நேரம் பார்த்து ரயில் 'கிரிச் ...கிரிச்...க்ரீச்... ' ...ரயில் நின்றே விட்டது!!!
எதிர்பாரா இந்த திருப்பம் .....சூழலின் தீவிரம் லூயிஸின் மூளைக்கு எட்டியதில்.. அதிர்ச்சியில் லூயிஸ் புளுத்திக்காட்டிய கைக்கு மறு கையில் சுருண்ட நிலையில் இருந்த கல்கண்டு பத்திரிகை நழுவி கீழே விழுந்தே விட்டது!
விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?
கழுதைகாரன் சாட்டையோடு வெறியோடு ரயிலை நோக்கி ஓடி வந்தான். எப்படி? 'ஷோலே ' படத்தில் அமிதாப் பச்சன் செத்தவுடனே தர்மேந்திரா ' கப்பர்சிங் ' ன்னு வெறியோட அம்ஜத்கானை நோக்கி ஓடி வர்ற மாதிரியே தான் ஆவேசத்தோடு ஓடி வந்து ரயிலில் ஏறி கதவருகில் நின்ற லூயிஸை சாட்டையாலே வெளுக்க ஆரம்பித்து விட்டான். அடின்னா அடி உங்க வீட்டு எங்க வீட்டு அடியில்லை. சும்மா துவச்சு காயப்போட ஆரம்பிச்சிட்டான். "அண்ணே! மன்னிச்சிக்கங்க அண்ணே ...உங்க தம்பி மாதிரி நினைச்சுக்கங்க அண்ணே! வலிக்குதுன்னே! அடிக்காதிங்க அண்ணே! " லூயிஸ் கெஞ்சிக் கதறினான். " எந்த தம்பிடா அண்ணன் கிட்ட சுன்னிய புளுத்திக்காட்டுவான்?ஏண்டா " - கழுதைக் காரன் இப்படிக்கேட்டான். " தம்பி தான் அண்ணனுக்கு சுன்னிய புளுத்திக் காட்டுவானாடா ?" அடி வெளுத்துக்கொண்டே கேட்டான். இப்படி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே,mummy mother sister ன்னு நிறையா Abusive language லே திட்டிக்கொண்டே சாட்டையாலே வெளுத்து விரியக்கட்டி விட்டான்.
இதனினும் வியாகுலம் யாதெனில் அவன் சாட்டையால் தாக்குகின்ற பாணியை அவ்வப்போது முற்றிலும் மாற்றி லூயிஸின் அடிவயிற்றிற்கு கீழ் , தொடைகளுக்கு நடுவே சாட்டைக் கம்பின் நுனியால் தேடி தேடி குத்தி " இப்ப காட்டுறா .. இப்ப காட்டுறா ஒன் சுன்னியை " என்று கூப்பாடு போட்டது தான்.

.............................................................................................

An excerpt from Khushwanth Singh's Novel ' DELHI '

The sub - inspector tells me of Budh Singh's eve - teasing.
Buth Singh was apparently walking along the corridors of Connaught Circus mumbling to himself ("Prayer', I interject,'he prays all the time')suddenly grabbed a young woman' bosom,pressed it and said 'bhaw,bhaw'.Before she could recover from the shock, he grabbed the other bosom and likewise pressed it with a 'bhaw,bhaw'.

'Ah yes, poor man! You know once he was a truck driver in the army; he must have thought they were bulb horns,' I explain. The sub-Inspector is more understanding than the woman in Connaught Circus. 


Apparently Budh Singh pressed many other female bulb horns. There was a hue and cry and some students beat him up. 
That was not the end.
There was a woman banana - seller with her basket full of bananas sitting on the pavement. Budh Singh examined them and asked the price.
He thought they were over priced and offered to sell his own at a much cheaper rate. And showed it to the banana - seller. The lady did not appreciate the gesture and told Budh Singh to offer it to his mother. 
What could Budh Singh do? He grabbed the banana - seller's bosoms with both his hands and said ' bhaw,bhaw ' Then the police got him.

 'He must have been thinking of his trucking days,' I explain again.
The sub - Inspector is most kind. They have already beaten Budh Singh.

 ' That's enough punishment for pressing four bosoms and showing his penis.He did not fuck anyone's mother, did he?' he says. ' But don't let him do it again.'
....................................................................................................


Dec 22, 2009

இந்தி திரையுலகம் ஒரு பாற்கடல்

"குடும்பம் ஒரு பாற்கடல். லக்ஷ்மி,உச்சரவரஸ், ஐராவதம் அதிலே தான் . அமிர்தமும் அதிலே தான். ஆலகால விஷமும் அதிலே தான்." என்றார் லா.ச.ரா.

இந்தி திரையுலகம் பற்பல குடும்பங்களின் கதம்பம்.

அதில் ஒரு குடும்பம் பற்றி இங்கே :

இவர்கள் பெங்காலிகள்.அசோக் குமார் - கிஷோர் குமார் இருவரும் சகோதரர்கள் . எல்லோருக்கும் தெரியும் தான். இந்த இருவருக்கும் ஒரு உடன் பிறந்த சகோதரி . பெயர் சதிதேவி.

இந்த சதிதேவிக்கு மகன்களில் ஒருவர். ஜாய் முகர்ஜி.நாற்பது வருடங்களுக்கு முன் Love in Tokyoபடத்தில் கதாநாயகன் . " ஜாப்பான் லாவ் இன் டோக்கியோ " முஹம்மத் ரபி பாடல்!

மேற்படி அந்தக்கால ஹிந்திப் பட கதாநாயகன் ஜாய் முகர்ஜி தம்பி ராம் முகர்ஜி. இவருடைய மகள் தான் இன்றைய இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.

தங்கத்தகட்டழகி, தாமரை முகத்தழகி,சிரிக்கும் சிங்காரி ராணி முகர்ஜி!

ஜாய் முகர்ஜியின் இன்னொரு சகோதரர் சோமு முகர்ஜி.இவருடைய மகள் தான் கஜோல்.அஜய் தேவ்கனின் மனைவி.கஜோல் அம்மா நடிகை தனுஜா இன்னொரு நடிகை நூட்டனுடைய தங்கச்சி.

கட்டான உடை உடுத்தி, சிட்டாகப் பறந்து வரும் தென்ன மரத்து சிட்டு,தேன் போன்ற லட்டு,தட்டு லொட்டு எவர்சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் கொண்ட கஜோல்!

அதாவது ராணிமுகர்ஜியோட அப்பாவுக்கும், கஜோல் அப்பாவுக்கும் கிஷோர் குமார் தாய் மாமன்!

இன்னும் பல.. இன்னும் பல..இன்னும் பல பாற்கடல்கள்!

மதன் புரி - அம்ரீஷ் புரி சகோதரர்கள் வில்லன் நடிகர்கள்.

ராஜ் கபூர் -ஷம்மி கபூர் - சசி கபூர்

பிரேம் நாத் - ராஜேந்தர் நாத் - நரேந்தர் நாத் .

பிரேம்நாத் குணச்சித்திர நடிகர். ராஜேந்தர் நாத் காமெடியன். நரேந்தர் நாத் வில்லன் நடிகர்.

இந்த பிரேம் நாத் சகோதரர்களின் உடன் பிறந்த சகோதரி கிருஷ்ணா தான் ராஜ்கபூர் பொண்டாட்டி.

ராஜ் கபூர் மூத்த மகன் ரந்திர் கபூர் மகள்கள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர்.

ரிஷி கபூர் மகன் ரன்பீர் கபூர்.

ஷம்மி கபூரும் கிஷோர் குமாரும்( கொஞ்ச மாதம் மட்டும் )சகலை பாடிகள்.

ஷம்மி கபூர் பொண்டாட்டி கீதா பாலி.இந்த கீதா பாலி தங்கச்சி யோகிதா பாலி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது பொண்டாட்டி!ஒரு பத்து மாதம்கழித்து பிரிந்து விட்டார்கள். இப்ப இந்த யோகிதா பாலி மிதுன் சக்ரவர்த்தி பொஞ்சாதிங்கோ! இந்த மிதுன் சக்ரவர்த்தி யோகீதா பாலியை கட்டறதுக்கு முன்னாலே ஒளப்புனது நம்ம ஊர் ஸ்ரீதேவியை.வக்கீல் ஐயப்பன் நாயுடு மகள் ஸ்ரீதேவி புருஷன் போனிகபூர் தான் அனில் கபூரோட அண்ணன்.

சரி விடுங்க ..ஆதாம் ஏவாள் முறைப்படி எல்லோருமே சொந்தக்காரங்க தானே!

Dec 21, 2009

ஆதிரன் adhiran.blogspot.com

ஆதிரன்

25.11.09
An instinct
R.P.RAJANAYAHEM GETTING DILUTED

http://adhiran.blogspot.com/2009/11/instinct.html


adhiran said...
நண்பர் ராஜநாயஹம்,
என்னுடைய பதிவை நீங்கள் நேர்மறையாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி. என் பதிவின் நோக்கமும் நேர்மறையானதே. உங்கள் வாழ்வுச்சூழலின் பொருட்டு ஏற்பட்ட ஒரு தொய்வே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தொடர்ந்து நீங்கள் எழுதாமல் போய்விட்டால் என்னைப்போன்ற உங்கள் பதிவு வாசகர்களுக்கு ஒரு இழப்புதான். உங்களைப்பற்றியதான என் பதிவு அவ்வகையான ஆதங்கத்தில் எழுதப்பட்டதுதான். நன்றி.
Tuesday, 22 December, 2009

no idea of getting some sleep !

jayakanthan said...
it is 5 am .I am in your BLOG from from 11 pm.since today is Sunday i have to attend my patients from 7. am.But still no idea of getting some sleep . what to do Sir.
Sunday, 20 December, 2009

P.S.ஞானம்


எம்.ஆர்.ராதா 1954ல் 'ரத்தக் கண்ணீர்' படத்தின் மூலம் மறுபடியும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து செகண்ட் இன்னிங்க்சில் பட்டையை கிளப்பினார்.
முதல் இன்னிங்க்சில் பரிதாபமாக சினிமாவில் தோற்றவர். அவருடைய ஆரம்ப திரை அனுபவங்கள் மிகவும் மோசமாயிருந்தது.
1937
ல் 'ராஜசேகரன்' என்ற படத்தில் கதாநாயகன் ஈ.ஆர்.சகாதேவனுக்கு ( திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக நடித்தவர். இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவை அரண்மனைக்கு அழைத்து பாடவைத்து கௌரவிக்கும் வரகுண பாண்டியன்.தில்லானா மோகனாம்பாளில் மனோரமாவின் மைனர் கணவர்.) வில்லனாக இவர் நடிக்கும்போது இயக்குனர் சதி செய்து இவர் காலை உடைத்து விட்டார். பல மாதங்கள் படுக்க வேண்டிய நிலை யாகி விட்டது.
ஒரு வழியாய் எழுந்து 'பம்பாய் மெயில்' என்ற படம் டி.எஸ். பாலையாவும் ,ராதாவும் பார்ட்னராகி சொந்தமாக எடுத்தார்கள். படம் எடுத்து முடிந்த போது இருவருக்கும் ' போதும் , போதும் .. போதுமப்பா ..' என்று சொரிந்து விட்டு எழும்படியாக ஆகிவிட்டது . ஏண்டா படம் எடுத்தோம் என்ற ஞானம் வந்து விட்டது.
மாடர்ன் தியேட்டரில் ரொம்ப அசதியாக எம்.ஆர்.ராதா அப்போது கம்பெனி நடிகராக சேர்ந்தார். திண்ணையில் உட்கார்ந்த நிலை தான்.அங்கே தான் பொள்ளாச்சிஎஸ்.ஞானம் என்ற (அந்த கால தமன்னா!)நடிகை பந்தாவாக மகாராணி போல இருந்திருக்கிறார். 'சந்தனத்தேவன் ' படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.'ஞானத்தோடு யாரும் பேசக்கூடாது,சிரிக்ககூடாது'என்று மாடர்ன் தியேட்டர்சில் ஏகப்பட்ட கெடுபிடி.ராதாவுக்கு எப்போதும் 'மீறல்'தான் வாழ்க்கை. கண்ணாலே சைட் நொறுக்கி பி.எஸ். ஞானத்தை அந்த கட்டுப்பாடு நிறைந்த நிறுவனத்திலிருந்து சிறையெடுத்து கடத்தி பொள்ளாச்சி கொண்டு போய் ...அப்புறம் என்ன..
'திண்ணையில் இருந்த மனிதருக்கு திடீர்னு சாந்தி முகூர்த்தம்!'..ராதா 'நெம்புகோலின் தத்துவத்தை' அழகாக ஞானத்திற்கு விளக்கிகாட்டிவிட்டார்!!
இந்த பி.எஸ்.ஞானம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் தான்.
'பாசமலர் ' படத்தில் வில்லி. கதாநாயகி சாவித்திரியை ரொம்ப கொடுமைப் படுத்துவாரே. அவர் தான் பி. எஸ்.ஞானம். பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் இவருக்கு விடும் சாபங்கள் சொல்லி முடியாது.வில்லி என்றால் அப்படி ஒரு வில்லி!
'நாசமா போயிருவ '
' தேவிடியா முண்ட '
'என் தூமையை குடிக்கி '
'என் சாண்டைய குடிக்கி '
'ராட்சசி '
' உன் மூஞ்சியில முள்ல கட்டி அடிக்கனும்டி '
" என் கையிலே மட்டும் இவ கிடைச்சான்னாஇவ மூஞ்சை அப்படியே கல்லுலே மீனை உரசிர மாதிரி உரசிப்பிடுவேன் '
' பேதியிலே போவ .. கழிச்சல்ல போவ '
இவ்வளவு சாபங்கள் .
'பாசமலர்' படம் பார்க்கும் பெண்கள் இடைவேளைக்குப் பின் அழுதுகொண்டே பி.எஸ். ஞானத்தை திட்டி இவ்வளவு சாபம் இடுவார்கள்.
பாசமலர் பழைய படமாகி ஒவ்வொரு ஐந்து வருடமும் பார்க்க கிடைக்கும்போதும் பி.எஸ். ஞானம் இவ்வளவு சாபம் வாங்குகின்ற நிலை தான்.
கடைசியில் பி.எஸ்.ஞானம் காரில் போகும்போது திருத்தங்கல் அருகில் விபத்துக்குள்ளாகி கழுத்து துண்டாகி துடி துடித்து இறந்து போனார்.
அபத்தம் என்னவென்றால் பி.எஸ்.ஞானம் கொடூர விபத்தில் இறந்த பிறகு பல வருடங்கள் கழித்து சென்னையில் 'கிருஷ்ணவேணி 'தியேட்டரில், 'ராம்' தியேட்டரில் இந்தப் படம் ரிலிஸ் செய்யப்பட்டது.அப்போது சாவித்திரி 'கோமா 'வில் படுத்து விட்டார். அப்போது படம் பார்த்த பெண்கள் கூடஅழுதுகொண்டே பி.எஸ்.ஞானத்தை திட்டி சாபமிட்டு ''நீ விளங்கவே மாட்டேடி'' என்று சாபமிட்டுக்கொண்டு தான் படம் பார்த்தார்கள்.

Dec 19, 2009

எஸ்.வி.ரங்காராவ் B.Sc.,

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில்,1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்.
தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!
நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து.
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு.விஜயகுமாரியின் மாமனாராக.
'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.
'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்!
அவர் செய்த புராண பாத்திரங்கள்.
வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்
'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம் !"
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.
மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.
இன்று அவர் இறந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆனபின்னும் அவர் நடிப்பு சாசுவத்தன்மையுடன் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் மிக உயர்ந்து நிற்கிறது.
இன்று டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brandசெய்துவிட முடியாது.

Dec 18, 2009

அருவி-An angel's lyrical call !

A strongman and a WATERFALL always channel their own path.

அருவியை ஒரு கவிதை " an angel's lyrical call " என்று குறிப்பிடுகிறது.


Deep in the woods I hear an angel's lyrical call !
Tranquil and serene, a majestic waterfall!

இந்த lasting natural beauty யை
A vibrant entertainer, sparkling,
Waving at the crowds,
Singing of joy and showering harmony.
என உற்சாகமாக,குதூகலமாக, சந்தோசத்தைப் பாடுகின்ற அருவியாக விவரிக்கிறது இன்னொரு கவிதை.

I baptize myself within this cleansing spray! என அருவியில் குளித்து மகிழ்ந்து பெருமைகொள்ளும் கவிஞன் உண்டு .
No blemish on past nor future

ஆங்கிலத்தில் Waterfall என்பதை தமிழில் மொழிபெயர்க்கும்போது 'நீர் வீழ்ச்சி' யாகி விடுகிறது.

"மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே " - பாரதி

"நெஞ்சு படபடக்கிறது

அருவியை யாராவது

நீர்வீழ்ச்சி

என்று சொல்லிவிட்டால்."-விக்கிரமாதித்தன் எழுதியது!

'அருவியின் ஆற்றல் ' என்ற தலைப்பில் யவனிகா ஸ்ரீராம் கவிதை .

அதில் சிலவரிகள் பனி போல உறைந்து விடும் தண்மை கொண்டவை.

யவனிகா ஸ்ரீராம் எழுதிய அந்த கவிதையின் சில வரிகள் -

"உன் கேவல் ஒலிக்கும் அந்தகாரத்தில்

சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது.

உன் பிலாக்கணத்தில் மோகமுற்ற சல்லாபக் குளிர்காற்று ..."

"உன் விழிப் படலம் வெப்பமுற்றுச்

சிவக்கும் தருணத்தில்

நீல மேகம் நிலவை விந்தென சொட்டும் ."

யவனிகா ஸ்ரீராம் அருவியில் குளிக்கும் அனுபவம் அந்த விம்மியழும் நீர்வீழ்ச்சியின் சோகத்தைச் சார்ந்தது.

"நீ அழுவதானால் எப்போதும்

உன் தாயின் கண்ணீரில் இருந்து

துவங்கி விடுகிறாய்

நான் செய்வதெல்லாம் உன் உச்சரிப்பின் போதே

உன் இதழ் கவ்வி உன்னை

மௌனித்தது தான் "

..

"கவிதை ஒரு மலர் போன்றதும் வாள் போன்றதுமாகி புதிர் நிறைந்தது."

- தேவ தேவன்

Dec 17, 2009

When Harry met Sally...(1989)

ஜேம்ஸ் ஜாய்ஸ் தான் சொன்னார் . 'ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்த வெறும் சிநேகிதம் சாத்தியமே இல்லை.' ' A painful case' சிறுகதையில்.

ஜாய்ஸுக்கு முன்னாலேயே ஆஸ்கார் வைல்ட் கூட
இப்படி சொன்னதுண்டு.
"Between a man and a woman there is no friendship possible. There is passion, worship, love, enmity,hostility, but no friendship."
 
...........


Men and women can't be friends because the sex part always gets in the way.
This film “When Harry met Sally...” chronicles this dilemma through the eleven year relationship between Harry and Sally.





Sally: I have a number of men friends and there is no sex involved.
Harry: No you dont.
Sally: You say I'm having sex with these men without my knowledge.
Harry: No.What I am saying is 'they all WANT to have sex with you. Because no man can be friends with a woman that he finds attractive. He always wants to have sex with her.


சேல்லியாக நடித்த ஹாலிவுட் நடிகை மெக் ரையான் இந்தப் படத்தில் நடித்ததற்குப் பின் தான் டாம் ஹாங்க்ஸ் உடன்
'Sleepless in Seattle' (1993), ' You've got mail' (1998)என்று இரண்டு படங்கள் நடித்தார்.

ரொமாண்டிக் காமெடி என்பதற்கு சரியான உதாரணம் When Harry met Sally...
மெக் ரையான் நாயகனாக பில்லி கிறிஸ்டல்.
ஹோட்டலில் லஞ்ச் சாப்பிடும்போது மெக் ரையான் நடித்துக்காட்டுகிற 'Faking an orgasm' இந்தப் படத்தில் Infamous scene!
'Faking an orgasm' என்பதை எப்படி விளக்குவது ? " நிலா காயுதே நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுதே காமன் விடும் பாணம்" பாட்டில் எஸ் .ஜானகி இந்த 'Faking an orgasm' என்பதை அனர்த்திக்காட்டியிருக்கிறார். பெண்ணின் காம இன்பப்பரவச உச்ச நிலையை நடித்துக்காட்டுவது! சரி தான்,ஜானகியின் இழுவை அனத்தல் மாதிரி என நினைத்து விடாதீர்கள்.நிஜமாகவே பெண்ணின் பரவச உச்சத்தை அட்டகாசமாக மெக் ரையான் செய்துகாட்டுவார்.


பப்ளிக்காக பில்லி கிறிஸ்டல் முன் இதை நடித்துக்காட்டிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது பக்கத்து டேபிளில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான அம்மணி (படத்தின் இயக்குனர் ராப் ரீனர் - இவருடைய தாயார் தான்! ) வெயிட்டரிடம்
"I'll have what she's having." என்று சொல்கிற வசனம் ஹாலிவுட் படங்களில் வந்த மிக முக்கிய வசனங்களில் ஒன்று.

AFI's 10 Top 10 வரிசையில் ரொமாண்டிக் காமெடி படங்கள் பத்தில் ஆறாவது ரேங்கில் When Harry met Sally... இருத்தப்பட்டிருக்கிறது. மியூசிகல் மூவி."It Had to Be You"
According to the Random House Historical Dictionary of American Slang, "high-maintenance" was popularized by “When Harry met Sally...”

1."high-maintenance" describes a system which requires a high degree of maintenance to ensure proper functioning and without which it is likely to break down.
2.(figuratively, of a person) Who requires a lot of attention.

Dec 16, 2009

பெர்லுஸ்கோனி

பெர்லுஸ்கோனி இத்தாலியில் மிகப் பெரிய செல்வந்தர். செல்வசெழிப்பு போதாதென்று அவருக்கு பிரமாதமான பெரும் பதவி வேறு. இத்தாலி நாட்டின் பிரதமர் பெர்லுஸ்கோனி. 'என்ன பாக்கியம். இதுவல்லவோ கஜலக்ஷ்மி அருள்! 'என்று வியப்பீர்கள். பணம் இருப்பதோடு அதிகார சக்தியும், மக்களிடம் நல்ல மரியாதையும் இணைவது தான் அஷ்டலக்ஷ்மிகளில் கஜலக்ஷ்மியின் விஷேசத்துவம்.

ஆனால் இவர் கதை " கடுமுடிக்கி பயில்வான் பீ முடுக்கி செத்த மாதிரி " ரொம்ப மோசமாகி விட்டது.

இவர் செய்த காரியங்கள் அப்படி. மோசடி, பணம் கையாடல், பலபெண்களுடன் சரீரசம்பந்தம்.


Fraud,
Embezzlement,
Extra-Marital Sexual Dalliance!

பெர்லுஸ்கோனி மனைவி வெரோனிக்கா லாரியோ விவாகரத்து கேட்டிருக்கிறார்.

இவருடைய கத்தோலிக்க மதத்தின் கடும் ஆக்கினை. கண்டனம் .

இத்தாலியில் இந்த பிரதமருக்கு எதிரான பேரணிகள் நடக்கின்றன.

சமீபத்தில் பிரதமர் பெர்லுஸ்கோனி முகத்தில் ஒருவர் கடுமையாக தாக்கி இரத்தசகதியுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிரதமருக்கு உள்ள பாதுகாப்பு வளையத்தையும் மீறி இந்த தாக்குதல்.மூக்கு உடைந்து, இரண்டு பற்கள் உடைந்து , உதடு கிழிந்து ...ரொம்ப குழம்பிப்போய் விட்டார் .
“There is a climate of hatred, I expected this would happen” என்றும் சொல்கிறார் . அடுத்த அவருடைய வார்த்தைகள் இந்த முதல் வாக்கியத்தை
Cancelசெய்து விடுகிறது .“ I want the good of everyone and I do not understand why they hate me so much”


Dec 14, 2009

Cause Celebre

தெலுங்கானா பிரச்னை சொல்லும் ஜனநாயக செய்தி!

மந்திரி : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று தாங்கள் உணர்ச்சி வசப்பட்டு Declare பண்ணியிருக்கவே கூடாது மன்னா! விபரீத விளைவாகி விட்டது.

அரசர் : ஏன் அமைச்சரே..??

மந்திரி : ஆளாளுக்கு, அவனவன் அந்தப்புரத்துக்குள் ஏறிக் குதிக்கிறாங்கே.


A Joke is a very serious thing!



....


Cause Celebre is an issue arousing widespread controversy.


....

'தமிழக இடைத்தேர்தல்கள் பணமழை' பிரச்சினை காட்டும் ஜனநாயக செய்தி!

வந்தவாசி இடைத்தேர்தலில் அண்ணாதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தா .பாண்டியன் விடுத்த எச்சரிக்கை :" மக்கள் ( அண்ணாதிமுக காசுக்கு விலைபோகாமல்)திமுக காசுக்கு விலை போனால், கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் அல்லாத மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டி வரும். ஏந்தவேண்டிய ஆயுதத்தை ஏந்த வேண்டி வரும்."


Tragedy is not with Actor's cry.
Tragedy is with Audience cry!


...

திருநெல்வேலியில் எதிர்கட்சி அண்ணாதிமுக பணம் நாற்பத்தியொரு லக்ஷம் போலீசால் இரண்டு ஓட்டல்களின் அறைகளிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.திருச்செந்தூர் வாக்காளர்களுக்கு அபிஷேகம் செய்வதற்கான பணம் . அதில் அண்ணாதிமுக முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரனின் பினாமி ஓட்டல் விஜய் கிளாசிக் அடக்கம்.

கைப் பற்றப்பட்ட எதிர்க்கட்சி பணமே 41 லட்சம் என்றால் கைப் பற்றப்பட முடியாத எதிர்க்கட்சி பணம் எவ்வளவாயிருக்கும்!

இடைத்தேர்தலில் புரளும் ஆளுங்கட்சி பணம் பற்றி பெருக்கல் கணக்கில் தான் பார்க்கவேண்டும்.

Dec 12, 2009

குமுதம் 'அந்த நாள் Black & White’

குமுதம் பத்திரிகையில் ' அந்த நாள் --> -->Black & White’என்று ஒரு பகுதி சுவாரசியமானது .ஏனென்றால் மிகப் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதனுடன் சம்பந்தப் பட்டவரிடம் அந்த புகைப்படத்தின் கதையைக் கேட்பதும்,பிரசுரிப்பதும் சுவையான விஷயம் தான். -->
Every Picture tells a story!
இந்த வாரம் வியாழக்கிழமை வந்த குமுதம்
(16.12.2009 தேதியிடப்பட்டது )இதழில் ஒரு பழைய புகைப்படம். காலா காந்தி காமராஜர் உடன் அவர் வீட்டில் எம்ஜியார் , சிவாஜி , சந்திரபாபு ,எம் .எஸ் .விஸ்வநாதன் ஆகியோர் இருக்கிறார்கள் . மிக அபூர்வமான புகைப்படம் என்பதில் சந்தேகம் இல்லை . அந்த காலகட்டம் பற்றிய தகவல், எந்த சூழல் என்பதில் தான் தவறு இருக்கிறது . எம்.எஸ் .விஸ்வநாதன் அந்த புகைப்படம் 1971ல் இந்திய -பாகிஸ்தான் போர் நடந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறார். போர் வீரர்களுக்கான கலை நிகழ்ச்சிக்காக கிளம்பு முன் காமராஜிடம் ஆசி வாங்க சென்றிருந்த போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத எம்ஜியாரும் மேக் அப்புடன் வந்திருந்தார் என்கிறார் .எம்ஜியார் அந்தப் படத்தில் போலிஸ் அதிகாரி உடையில் மேக் அப் பில் இருக்கிறார் . எம்ஜியார் அந்த காலகட்டத்தில் வெளி வந்த குமரிக்கோட்டம் ,ரிக் ஷாக்காரன் படங்களில் போலிஸ் அதிகாரியாக நடிக்கவில்லை . சரி அந்த வருடம் படப்பிடிப்பு நடந்து அடுத்த 1972ல் வந்த ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் , இதயவீணை படங்களிலும் போலிஸ் அதிகாரி வேடம் செய்யவில்லை . அவர் 1963 ல் சாவித்திரியுடன் நடித்த ' பரிசு ' படத்திலும் 1964 ல் வெளி வந்த ' என் கடமை ' படத்திலும் தான் போலிஸ் அதிகாரியாக நடித்தார் . இந்த புகைப் படத்தில் உள்ள சிவாஜி கூட1971 ல் வெளி வந்த 'சுமதி என் சுந்தரி ' 'மூன்று தெய்வங்கள் ' ' சவாலே சமாளி 'அல்லது 1972ல் வெளி வந்த ' ராஜா ' 'வசந்த மாளிகை ' படங்களில் நடித்த காதோரம் கிருதா வைத்த சிவாஜி அல்ல என்பதை தமிழ் திரை பற்றி அறிந்தவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 'பந்தபாசம் '(1962),இருவர் உள்ளம்' (1963), அதற்கு அடுத்த வருட 'நவராத்திரி ' ஆண்டவன் கட்டளை'காலங்களின் சிவாஜி ! ( சிவாஜியின் முக , உருவ அமைப்பு காலத்திற்கு காலம் மிகவும் மாறுபட்டிருக்கிறது! )

இந்த புகைப் படம் இந்திய - சீனா யுத்த காலத்தில் எடுக்கப்பட்டது என்று வேண்டுமானால் ஓரளவு பொது அறிவுள்ள எவருமே சொல்லிக் கொள்ளமுடியும் . அப்போது எம்ஜியார் நீங்கலாக மற்ற கலைஞர்கள் சிவாஜி , சந்திரபாபு ,எம் .எஸ் .வி போன்றவர்களுடன் கண்ணதாசனும் போர் வீரர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்த வடக்கே போனார்கள் . கண்ணதாசன் இது பற்றி தன் " மன வாசம் '' நூலில் விரிவாக எழுதியிருக்கிறார் . தன் வாழ் நாளில் சூரியோதயத்தை ஒரு தடவை கூட பார்க்காத சந்திரபாபு அங்கே சூரியோதயத்தை பார்த்தது , சீனாவுடன் யுத்தம் நடத்திய போர் வீரர்களை கலை நிகழ்ச்சிகளால் மகிழ்வித்த தமிழ் திரைக்கலைஞர்களுக்கு ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் விருந்து கொடுத்தது, சந்திரபாபு ' பிறக்கும்போதும் அழுகின்றான் , இறக்கும்போதும் அழுகின்றான் ' பாட்டு பாடியவுடன் ராதாகிருஷ்ணன் ரசித்து சிலாகித்த போது, சட்டென்று சந்திரபாபு ஜனாதிபதி மடியில் உட்கார்ந்து கன்னத்தை தடவி ' ரசிகன்டா கண்ணு நீ!' என்று சொல்லி எல்லோரையுமே திகைக்க வைத்தது போன்ற விஷயங்கள் .

எம்.எஸ் .விஸ்வநாதனுக்கு முதுமை காரணமாக இப்போது ஞாபகக்குழப்பம் ஏற்பட்டிருக்கிறதில் அவரை குற்றம் சொல்லக்கூடாது . அதோடு இசை தவிர பொது அறிவு விஷயங்களில் அவர் ரொம்ப ,ரொம்ப வீக் .அவர் உலகமே இசை மட்டும் தான். கண்ணதாசனிடம் வெள்ளந்தியாக விஸ்வநாதன் " ஏண்ணே! ஊமைத்துரை வெள்ளைக்காரனா ?" என்று கேட்டவர் . அவருக்கு சீனாக்காரனோடு நடந்த சண்டைக்கும் பாகிஸ்தான்காரனோடு சண்டைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நாம் ஆச்சரியப்படத் தேவையே இல்லை .


ஆனால் குமுதம் பத்திரிகையில் தரவுகள் பற்றி ஆராய்ந்திருக்க வேண்டாமா ? அங்கே ஆசிரியர் குழு , உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் முதலியோருக்கு கூடவா இந்த படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது புரியவில்லை? 

யுத்த காலத்தில் தான் இந்த புகைப்படம் எடுக்கப் பட்டது என்று கூட எப்படி சொல்லமுடியும்? சிவாஜி பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்டது என்றும் சொல்ல முடியும்.

உறுதியாக 1971ல் எடுக்கப்பட்டதல்ல என்பது மட்டுமே உண்மை.




Dec 11, 2009

புண் உமிழ் குருதி

சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்



நானும் என் நண்பர் ஒருவரும் இலக்கியம் ,சங்கீதம் , சினிமா என்று ஒத்த ரசனையுடையவர்கள் . நண்பர் பெயர் ரகோத்தமன் என வைத்துக் கொள்வோம் . இவரிடம் தற்செயலாகவோ , அல்லது இவரே தேடியோ " சாருலதா " கரே -பைரே'' என்ற இரண்டு படங்கள் வீடியோ கேசட் கிடைத்தன . சத்யஜித் ரே படங்கள். ஏற்கனவே பலதடவை பார்த்த படங்கள் தான் . நல்ல படங்களை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன ! இன்னொரு நண்பர் - இவர் பெயர் பரத்வாஜ் என வைத்துக் கொள்வோம் . அவருடைய வீடு கலந்து பேசி படம் பார்க்க வசதியானது என முடிவு செய்தோம் .

பரத்வாஜ் வீட்டிற்கு சென்றோம் . வீட்டில் அவர் எங்களை களி துலங்கும் புன்னகையுடன் வரவேற்றார் . நாங்கள் உற்சாகமாக சத்யஜித் ரே படங்கள் கிடைத்த விஷயத்தை சொன்னோம் . அவருக்கும் ரே படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும் தான் . அவரை மிகவும் சந்தோசப் படுத்தி விட்டதாகவே நானும் ரகோத்தமனும் கூட நினைத்தோம் . அவருக்கு இரண்டு மகன்கள் . இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் . பள்ளி + 2 வில் ஒரு பையனும் + 1ல் ஒரு பையனும் அப்போது வாசித்துக் கொண்டிருந்தார்கள் . ராமர் லக்ஷ்மணர் போல களையான பிள்ளைகள் .
அவர் டெக்கில் கேசட் போட்டபோது ஏதோ சிக்கல் தெரிந்தது. முல்லை பூத்த புன்முறுவலுடன் பையன்கள் இருவரும் சுறு சுறுப்பாக டெக்கை கலட்டி கோளாறை சரி செய்ய முயன்றார்கள் . அவர் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என யூகித்தோம் . ஏனென்றால் அவர் மாமியார் தான் பட்சணம் , காபி கொடுத்தார் . வழக்கமாக அவர் மனைவி தான் வந்து வந்தனம் சொல்லி உபசரிப்பார் .

"உங்களுக்கு அருமையான குழந்தைகள் . உங்கள் அதிர்ஷ்டம் " என நான் பரத்வாஜிடம் சொன்னேன் . அவர் கொஞ்ச நேரத்தில்
All relationships are pathological என்பது பற்றி விரிவாக பேசி விளக்கம் சொல்வதில் முனைப்பாகி விட்டார் .

டெக் என்ன முயன்றும் ஒத்துழைப்பு தரவில்லை . பரவாயில்லை . நண்பரிடம் அளவளாவிய சந்தோசம். விடை பெற்றோம் நானும் ரகோத்தமனும் . மறு நாள் பதட்டத்துடன் ரகோத்தமன் போன் செய்தார் .
" ராஜநாயஹம்.. நண்பர் பரத்வாஜ் நேற்று சொல்லொணா துயரத்தில் இருந்திருக்கிறார். நாம் சூழல் தெரியாமல் படம் பார்க்க அவர் வீட்டுக்கு போயிருக்கிறோம் ."
நான் " என்ன சார் சொல்றீங்க ?"

"
Bharadwaj’s wife has eloped with a fellow. ஓடிப் போய் விட்ட அவர் மனைவியை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரும் அவர் பிள்ளைகளும் அந்த கவலையில்,வேதனையில் இருக்கின்ற நேரத்தில் நாம் இருவரும் அவர்களின் சோகம் அறியாததால் விவஸ்தை கெட்ட தனமாக நடந்து கொண்டு விட்டோம் . "

இடி வானத்தொளி மின்னல் என் நெஞ்சை கீறியது .நேற்றைய நிகழ்வை திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை . அப்படி திரும்ப எண்ணிப் பார்த்த போது அபத்தமாய் உறைத்தது.

அன்று நாங்கள் துவங்கிய பிலிம் சொசைட்டியின் படம் ஒன்று ஒரு பள்ளியில் திரையிடப்பட இருந்தது . அதோடு அந்தப் பள்ளியில் கலை நிகச்சிகள் கூட .

அலையென கொந்தளிக்கும் மனதுடன் அந்த பள்ளிக்கு மதியம் கிளம்பிப் போன போது அங்கே ரகோத்தமனும் வந்திருந்தார் . இருவர் நெஞ்சும் காயப்பட்ட நிலை . ஆறப் போவதில்லை .புண் உமிழ் குருதியாய் காலகாலத்திற்கும் உறுத்தும். கொஞ்ச நேரத்தில் அங்கே பரத்வாஜும் வந்தார் . அவர் உறுதியான மனநிலையில் இருந்தார் என்பது எங்களுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.
கொஞ்ச நேரத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பலரும் கைகோர்த்து ஆடியபோது பரத்வாஜும் கூட ஏற்படுத்திக்கொண்ட உற்சாகத்துடன் ஆடினார் .

சில நாட்களில் அவர் மனைவி மீண்டும் பரத்வாஜுக்கு கிடைத்து விட்டார் .

ஆனாலும் புண் உமிழ் குருதி ?

(புண் உமிழ் குருதி என்பது அசோகமித்திரனின் சிறுகதை ஒன்றின் தலைப்பு.வேறொரு அசந்தர்ப்பமான விகார சூழ்நிலை பற்றிய அபூர்வமான கதை.)

"Fidelity is splendid,but no more than infidelity."
- in Pier Paolo Pasolini 's 'Arabian Nights'



Dec 10, 2009

ஒரே மெட்டு ரெண்டு பாட்டு

'தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே ' என்ற எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய பெஹாக் ராக பாடலின் மெட்டில் அப்படியே மாற்றம் இல்லாமல் மதுரை வீரனில் எம்ஜியாருக்காக
டி .எம் .எஸ் " ஏச்சு பொழைக்கும் தொழிலே சரி தானா " என்று ஒரு பாட்டு பாடியிருக்கிறார் .

இப்படி மெட்டு சுலபமாக கண்டு பிடிக்கும் விதமாக அப்படியே போடாமல்,சில பாடல்கள் கொஞ்சம் புரியாதபடி திரும்ப போடப்படுவதுண்டு.

அப்படி ஒரு பாடலை மெலடியாக, மென்மையாக தன்னால் போடப்பட்ட பாடலை பின்னால் சரியான டப்பாங்குத்தில் போட்டு செம ஹிட் ஆக்கியிருக்கிறார் கே .வி . மகாதேவன். 1965 ல் வந்த படம் ' எங்க வீட்டுப் பெண் '. ஜெய்சங்கர் ,
ஏ .வி.எம் ராஜன் நடித்த படம் .அதில் இந்த பாடல் -

" கால்களே நில்லுங்கள் . கண்களே சொல்லுங்கள் .
காதல் என்பது காவியமா ? இல்லை கண்ணீர் வரைந்த ஓவியமா ?"

இந்த பாடல் அவ்வளவாக பிரபலமாகவில்லை .
அதே படத்தில் பி .பி .எஸ் பாடிய நல்ல பாடல் " சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி ".
பி.பி .எஸ் பாடினாலே எந்த பாட்டும் ஹிட் தானே !

1970ல் வந்து சக்கைப் போடு போட்ட எம்ஜியார் படம் " மாட்டுக்கார வேலன் ".
ஹிந்தியில் ஜிதேந்திரா நடித்த 'ஜிக்ரி தோஸ்த் ' படத்தின் ரீமேக் . அந்த படத்தில் மகாதேவன் ஹிட் ஆகாத தன் ' கால்களே நில்லுங்கள்,கண்களே சொல்லுங்கள் ' மெட்டை நல்ல டப்பாங்குத்தில் போட்டு ஹிட் ஆக்கி காட்டினார்.
"பட்டிக்காடா ?பட்டணமா ?ரெண்டுங்கெட்டான் லட்சணமா !"

இசையமைப்பாளர் வி குமார் ( ஏ .ஆர் .ரஹ்மானின் அப்பா சேகர் இவரிடம் உதவியாளராக இருந்தவர் ) பாலச்சந்தரின் படம் ' நூற்றுக்கு நூறு ' படத்திற்காக போட்ட பாடல்
" நித்தம், நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடுவேன் .
இளமை பொங்கும் எழில் தலைமை தாங்கும் உனை என்றும் நாடுவேன் "

இந்தப் பாடலின் மெட்டில் தான் ' ரயில் பயணங்களில்'
டி .ராஜேந்தர் பாட்டு _
"வசந்தம் பாடி வர, வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா ?"


கமல் ஹாசன் -குட்டி பத்மினி ஆடிப்பாடும் பாடல் தேவரின் ' மாணவன் ' படத்தில் சங்கர் -கணேஷ் இசையில்
டி .எம் .எஸ் - எல் .ஆர் ஈஸ்வரி பாடியது
" விசிலடிச்சான் குஞ்சுகளா ! குஞ்சுகளா ! வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா! பிஞ்சுகளா!"

இந்தப் பாடல் மெட்டு மீண்டும் எவ்வளவு வருடங்கள் கழித்து,உலகநாதன் பாடி ஹிட் ஆகி, ஊரே பாடிக்கொண்டு திரிந்தது !

" வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் "

Dec 9, 2009

சென்ற ஞாயிற்றுக்கிழமை

பண்டிட் ஜஸ்ராஜின் பைராகி பைரவ் ராகம் கேட்டுவிட்டு தர்பாரி கன்ரா ரசித்தேன் . தொடர்ந்து இன்னொரு கேசட்டில் இருந்த ஜோக் ராக ஆலாபனை போட்டு கேட்ட போது அப்படியே ஆளை அசத்தி எடுத்து விட்டது . ஜஸ்ராஜின் பாணி பீம்ஷன் ஜோஷியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது .

ஹிந்துஸ்தானியில் ஜோக் ராகம் நம்ம நாட்டைராகம் தான். இப்படி நம் கர்நாடக சங்கீதத்தின் பல ராகங்களை அங்கே கண்டு பிடித்து ரசிக்கலாம் . ஹிந்துஸ்தானியின் பிம்ப்ளாஸ் தான் தேவ காந்தாரி ராகம். ராக் பைரவ் என்பது சிந்து பைரவி . மால்கேவ்ன்ஸ் ராகம் நம்ம சாஸ்த்ரிய ராகமான ஹிந்தோளம் !

நான் எப்போதும் சில பாடல்களை செலக்ட் செய்து கேட்பதுண்டு . அப்படி சென்ற ஞாயிறு அன்று மாலை கேட்டவை :

1.மாலியின் புல்லாங்குழலில் பட்ணம் சுப்ரமணிய அய்யரின் பிலஹரி ராக
" பரிதான மிச்சித்த "

2. எம்.எஸ் . பாடிய தியாகய்யரின் சங்கராபரண கீர்த்தனை " ஸ்வர ராக சுத"

3. ஜி .என் .பி யின் தோடி ராக "தாமதமேன்" . பாபநாசம் சிவன் கீர்த்தனை தொடர்ந்து ஜி .என் .பி யின் கல்யாணி ராக முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை "சிவ காமேஸ்வரிம் "

4. அரியக்குடி பாடிய வீணை குப்பையரின் பேகடா " இந்த சாளமு". அதோடு 'சரசி ஜினாப சோதரி' அரியக்குடியின் கம்மல் குரலில் நாக காந்தாரி ராக முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை !
தொடர்ந்து அரியக்குடியின் " பளிஞ்சு காமாட்சி " ஷ்யாமா சாஸ்திரி இயற்றிய மத்யமாவதி .

5. மதுரை மணி அய்யர் பாடிய மோகனம் " கபாலி "


.....




டி.வி சானெல்கள் அடிக்கடி என் இரண்டாவது மகன் அஷ்வத் மாற்றிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு சேனலில் " நிழல் நிஜமாகிறது " ஒரு காட்சி . 1978ல் வந்த படம் . கமல் ஹாசன் ஒரு காட்சியில் சரத் பாபுவிடம் சொல்கிறார் .

"பெங்கால்ல பார்த்தியா .. சி .பி .எம் வந்திடுச்சி "

தொடர்ந்து எவ்வளவு காலமாக அங்கே மார்க்சிஸ்ட்களின் ஆட்சி !




Dec 8, 2009

வெற்றி கொண்டான்

“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS



திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,பெருமைப்படுவதாக சொல்லிவிட்டார்.

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் என்று இருந்தவர் தான் .
ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும் கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட் கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி கணேசன் ஆனார்.
எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது. எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி !
" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே " ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் . குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"


(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் . டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் .
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் .
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''
" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் .
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.


மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற .
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே .

மோகன் : முடியாது கடவுளே !

கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ?

மோகன் : ஆமா கடவுளே !

கடவுள் : திட்டுவ நீ ?

மோகன் : ஆமா திட்டுவேன் .

கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்னுலே !!



எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப் போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)


நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே . நல்லா நெடு ,நெடுன்னு , கொழு ,கொழுன்னு .. அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.


திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '!


Dec 5, 2009

ஐயப்ப மாலை போட்ட கல்யாண் குமார்

டிசெம்பர் மாதம்! நிறைய பேர் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார்கள்.

'நெஞ்சில் ஓர் ஆலயம் ' கல்யாண் குமார் தான் அய்யப்பனுக்கு மாலை போட்ட அனுபவம் பற்றி என்னிடம் சொன்னார்.

எங்கும் சுற்றி ரங்கனைச் சேர் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் கல்யாண்குமார் எப்போதுமே ஸ்ரீரங்கம் கோவில் பக்தர். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் அவர் கன்னட ஐயங்கார். இவருக்கு ஐயப்பனுக்கு மாலை போட வேண்டும் என்ற எண்ணம் நம்பியார் சுவாமி மூலம் ஏற்பட்டிருக்கிறது . முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவர் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு போக ஆயத்தமாகிவிட்டார் . 41 நாட்கள் விரதம் முடிகிற நேரம் . மறுநாள் காலை மலைக்கு கிளம்பும் குழுவுடன் கிளம்ப வேண்டும் . கையில் பைசா காசு இல்லை. சொத்துக்களை இழந்து அசதியாகி விட்ட காலம் அது .ஐநூறு ரூபாய் தேவைப் பட்டதாம் . சரி தான். நாளை ஐயப்ப தரிசனம் இல்லை தான் போல என சோர்ந்து விட்டாராம் . இரவு தூக்கம் இல்லாமல் புரண்டிருக்கிறார் . அசந்து தூங்கிய நேரம் இரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டுக் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள் . கதவை திறந்தால் இவருடன் நாடகங்களில் கதாநாயகியாய் நடிக்கும் நடிகை . கலைந்த தலையுடன் அவரும் சோர்வாகத்தான் இருந்திருக்கிறார் . 'என்னம்மா ?'
நடிகை சொன்னாராம் ." அண்ணே இன்னைக்கு விடிஞ்சா நீங்க ஐயப்பன் கோவிலுக்கு கிளம்பனும் . உங்களிடம் காசும் இல்லை . எனக்கு தெரியும்ணே.அதுக்காக நான் ஒரு காரியம் செஞ்சேன் . " ஒரு வி வி ஐ பி பெயரை அந்த நடிகை சொல்லி " அவருட்ட போய் படுத்து எந்திரிச்சி அவர் கொடுத்த காசை வாங்கிக்கிட்டு வந்திருக்கேன் அண்ணே . இந்தாங்கண்ணே . கோவில் காரியத்திற்கு வச்சிக்கங்க . மலைக்கு போயிட்டு வாங்க . "

கல்யாண்குமார் திகைத்துப் போய் நின்றிருக்கிறார்.

"யோசிக்காதீங்க.. நாய் வித்த காசு குரைக்காது. தைரியமா போயிட்டு ஐயப்பனை சேவிச்சிட்டு வாங்க . வாங்கிக்கங்க அண்ணே "

கல்யாண் குமார் என்னிடம் சொன்னார் ." அவ அந்த வி வி ஐ பி யோட பஜனை பண்ணி வாங்கிட்டு வந்த காசிலே அன்னைக்கு மலைக்கு போயிட்டு வந்தேன் . ஆனா தரிசனத்தின் போது ஐயப்பன் ஜோதி யாய் என்னிடம் '' எங்கடா வந்தே ! எப்படி வந்தே ?" என்று என்னைப் பார்த்து கேட்டதாக எனக்கு ஒரு பிரமை .
" சத்தியமா இனி உன்னைப் பார்க்க நான் வரவே மாட்டேன் . என்னை மன்னிச்சிக்க " என்று சொன்னவன் அதன் பிறகு ஐயப்பனுக்கு மாலை போடவேயில்லை. "

கல்யாண் குமார் மேலும் சொன்னார் . "சில சாமி சிலருக்கு Vibrateஆகும். சில தெய்வங்கள் அதே சிலருக்கு Vibrate ஆகாது. எனக்கு ரங்கநாதன் தான். ஐயப்பன் ஒத்து வரலே."

ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கும் திருப்பதி பெருமாளுக்கும் உள்ள விஷேச குண நலன் பற்றி கல்யாண் குமார் சொன்ன சுவாரசியமான விஷயம் - ஸ்ரீரங்கப் பெருமான் பக்தர்கள் சொல்லும் கஷ்ட நஷ்டங்களுக்கு காது கொடுத்து கேட்பார் . ' சரி . அதனாலே என்ன . கஷ்டப்படத்தானே மனுஷப்பிறப்பு.சொல்லிட்டே .போயிட்டு வா ' என்பாராம் . திருப்பதி சாமி கொஞ்சம் வித்தியாசமானவர் . பக்தன் தன் துயரத்தை சொல்லி அழுதவுடன் ' அப்படியா . இந்த கஷ்டம் சிரமாயிருக்கோ . சரி இனி இந்த வழி உனக்கு ' என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விடுவார் . பழைய கஷ்டம் போய்விடும் . புதிய திருப்பு முனையில் புதிய பிரச்னை, சிரமம் காத்திருக்கும்! '

Dec 1, 2009

What a piece of work is a Man!

R.P.ராஜநாயஹம் யார் ?


இலக்கிய உலகில் திணிக்கப்பட்ட அடையாளங்கள்

தி.ஜானகிராமனின் பரம ரசிகன்.

அசோகமித்திரனின் சீடன் .


Shakespearean scholar!

மணிக்கொடி சிட்டி ராஜநாயஹத்திற்கு கொடுத்த பட்டம் - கலியுக கர்ணன்

கோணங்கி கொடுத்த பட்டம் - வசீகர கோமாளி

கல்லூரி கால நண்பர்களுக்கு - GABIE. இன்றைக்கும் பால்ய நண்பர்கள் எல்லோரும் 'கேபி ' என்றே அழைக்கிறார்கள்.

உறவினர்கள் அனைவருக்கும் -துரை ( R.P.ராஜநாயஹம் என்ற என் பெயர் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் அந்நியமானது . எங்கள் குடும்பங்களில் பலருடைய பெயரில் ராஜநாயஹம் உண்டு . தாத்தா பெயர் என்பதால் பல ராஜநாயஹம்! அதனால் துரை என்றால் மட்டும் தான் நான் என்பது அவர்களுக்கு புரியும். )


ஜெயமோகன் எனக்கு கொடுத்த பட்டம் - காலச்சுவடின் ஒற்றன்

காலச்சுவடு கொடுத்த விருது - ஊட்டி வரை உறவு !

சாரு நிவேதிதா கொடுத்த பட்டம் -
லியர் மன்னன்
ராஜநாயஹம்!

பாரதி மணி கொடுத்த பட்டம் -
'அண்டி உறைப்பு 'ராஜநாயஹம்!
சில உண்மைகளையும், தன் மனதில் இருப்பதை வர்ணம் பூசாது, வெளியே சொல்லவும், ஒரு தைரியம் வேண்டும்.அந்த நெஞ்சுரம், ‘தில்’, மலையாளத்தில் ‘அண்டி உறைப்பு'