மந்திரி : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று தாங்கள் உணர்ச்சி வசப்பட்டு Declare பண்ணியிருக்கவே கூடாது மன்னா! விபரீத விளைவாகி விட்டது.
அரசர் : ஏன் அமைச்சரே..??
மந்திரி : ஆளாளுக்கு, அவனவன் அந்தப்புரத்துக்குள் ஏறிக் குதிக்கிறாங்கே.
A Joke is a very serious thing!
....
Cause Celebre is an issue arousing widespread controversy.
....
'தமிழக இடைத்தேர்தல்கள் பணமழை' பிரச்சினை காட்டும் ஜனநாயக செய்தி!
வந்தவாசி இடைத்தேர்தலில் அண்ணாதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தா .பாண்டியன் விடுத்த எச்சரிக்கை :" மக்கள் ( அண்ணாதிமுக காசுக்கு விலைபோகாமல்)திமுக காசுக்கு விலை போனால், கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் அல்லாத மாற்றுப் பாதைக்கு செல்ல வேண்டி வரும். ஏந்தவேண்டிய ஆயுதத்தை ஏந்த வேண்டி வரும்."
Tragedy is not with Actor's cry.
Tragedy is with Audience cry!
...
திருநெல்வேலியில் எதிர்கட்சி அண்ணாதிமுக பணம் நாற்பத்தியொரு லக்ஷம் போலீசால் இரண்டு ஓட்டல்களின் அறைகளிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது.திருச்செந்தூர் வாக்காளர்களுக்கு அபிஷேகம் செய்வதற்கான பணம் . அதில் அண்ணாதிமுக முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரனின் பினாமி ஓட்டல் விஜய் கிளாசிக் அடக்கம்.
கைப் பற்றப்பட்ட எதிர்க்கட்சி பணமே 41 லட்சம் என்றால் கைப் பற்றப்பட முடியாத எதிர்க்கட்சி பணம் எவ்வளவாயிருக்கும்!
இடைத்தேர்தலில் புரளும் ஆளுங்கட்சி பணம் பற்றி பெருக்கல் கணக்கில் தான் பார்க்கவேண்டும்.
நல்லா சொன்னீங்க சார், ரொம்ப சரி!
ReplyDeleteஇதன் உட் பொருளை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்பது சந்தேகம்.
ReplyDeleteஅன்புடன்
சூர்யா
எங்கே செல்லும் இந்த பாதை..யாரோ யார்தான் அறிவாரோ..????
ReplyDelete?
இது தான் நிற்கிறது.. கேள்விக்குறியாக
மக்கள் உணர வேண்டும்! அப்பொழுது தான் மாற்றம் வரும்!
ReplyDeleteamas32