Share

Dec 29, 2009

திருமண பந்த சங்கிலி

ஜெமினி கணேசனுக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்த பின் ( மூன்றாவது பெண்ணுக்கு ஹிந்தி நடிகை ரேகா வயது தான் . சர்ச் பார்க் கான்வென்டில் இருவரும் ஒன்றாக படித்தார்கள்.நான்காவது பெண் ஜிஜி கூட ரொம்ப பின்னால் தான் பிறந்தவர் ) புஷ்பவல்லியுடன் affair ஏற்பட்டது .புஷ்பவல்லிக்கு முன் மனைவி பாப்ஜி தவிர வேறு பெண்களை தொட்டதே கிடையாது என ஜெமினி சொன்னார்.
1940களின் பின்பகுதியில் புஷ்பவல்லி பெரிய திரை நட்சத்திரமாய் இருந்த காலத்தில் ஜெமினி அவர் பெயருக்கு காரணமான ஜெமினி ஸ்டுடியோவில் உத்தியோகம் பார்த்தவர்.அதோடு சினிமாவில் (புஷ்பவல்லி கதாநாயகியாய் நடித்த படத்தில் கூட)அப்போது ஜெமினி கணேசன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்.
1951ல் செப்டம்பர் 22தேதியில் பீச்சில் ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமுள்ள நடிகை புஷ்பவல்லியை சந்திக்க நேர்ந்தது அவர் வாழ்வையே புரட்டிப்போட்டது. புஷ்பவல்லி ஜெமினியிடம் தன் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றி பேசினார். (புஷ்பவல்லிக்கு ஏற்கனவே அப்போதே ஒரு மகன் பாபுஜி.இந்த பாபுஜி பின்னால் குட்டி பத்மினியின் அக்காவை மணந்தார் . வியட்நாம் வீடு படத்தில் சிவாஜியின் மகளுக்கு காதலனாக நடித்தார்.)
ஜெமினியின் காரை புஷ்பவல்லி ஓட்டிப் பார்க்க விரும்பினார். காரை ஓட்டிப் பார்த்த புஷ்பவல்லியுடன் அன்றே சரீரத்தொர்பு ஏற்பட்டு விட்டது. இதை ஜெமினியே கூறினார்.
அதிகாலை மனைவி பாப்ஜி வீட்டில் திண்ணையில் குற்ற உணர்வுடன் வந்து படுத்துக்கிடந்தார் . பாப்ஜி வெகுளியாய் ஜெமினியின் தாயாரிடம் " அம்மா! உங்க பிள்ளைய பாருங்க இங்கே!"
தான் மெம்பராய் இருந்த கிளப் ஒன்றிற்குப் போய் மூன்று நாட்கள் அங்கேயே கிடந்தார். புஷ்பவல்லி அவரை தேடி அழுதுகொண்டே வந்தார்."உங்களை எங்கே எல்லாம் தேடுவது?"
அப்படி ஏற்பட்ட உறவில் தன் தாய், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளோடு ஒரு Distance வந்துவிட்டது . புஷ்பவல்லி Very possessive lady! புஷவல்லிக்கு இரண்டு பெண்குழந்தைகள். ரேகா,ராதா. சாவித்திரியை வீட்டுக்கு கூட்டிவந்த போது விளையாட்டாக புஷ்பவல்லி " சாவித்திரியையும் கட்டிக்கங்க " என்று சொன்னபோது வானத்திலிருந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் "ததாஸ்து " என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் விஷயம் சீரியஸ் ஆகி சாவித்திரி ஜெமினியுடன் இணைந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர் புஷ்வல்லி தான். வாகினி ஸ்டுடியோவில் சாவித்திரி மீது காரை ஏற்ற முயற்சிக்கிற அளவில் கடுமையான கோபம். சாவித்திரி பிணைப்பு அதிகமானவுடன் புஷ்பவல்லி குடும்பத்தை விட்டு ஜெமினி ஒதுங்கினார். ஒதுங்குதல் என்பதை விட புஷ்வல்லிக்கும் ஜெமினிக்கும் கடும்பகை அப்போது ஏற்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும். சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜயசாமுண்டீச்வரி , சதீஷ். சாவித்திரியுடன் கருத்து வேறுபாடு வந்த பின் வந்த 'பாமா விஜயம் ' ராஜஸ்ரீ கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நிபந்தனை விதித்தார். ' உங்கள் முதல் மனைவி பாப்ஜியை விவாக ரத்து செய்து விடுங்கள்.'ஜெமினி இந்த நிபந்தனை ஏற்படுத்திய கடுப்பில் " என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்கு யோக்கியதை கிடையாது " என கடுமையாக ராஜஸ்ரீயிடம் சொல்லி விட்ட பின் அந்த உறவு அறுந்தது.

1970 களின் மத்தியில் ஜெமினியின் வீட்டிற்கு கமல் ஹாசன் தான் ஹிந்தி நடிகை ரேகாவை விருந்தாளி (!)யாக அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
சாவித்திரி இறந்த போது புஷ்பவல்லி அந்த சாவுக்கு வந்திருந்தார்.
பாப்ஜியின் நான்கு மகள்கள், புஷ்பவல்லி யின் இரண்டு மகள்கள் , சாவித்திரியின் மகள் எல்லோரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.சதீஷ் ஜெமினியின் வீட்டில் கொஞ்ச நாள் இருந்திருக்கிறார். ஜெமினி கணேசன் 64வயதில் துப்பாக்கியால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு சாவித்திரி மகன் சதீஷ் குறித்த சர்ச்சை தான் காரணம் என்று ஹேஸ்யம் உண்டு .
ராஜஸ்ரீ உறவும் கசந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் சாவித்திரியின் மறைவுக்கும் பின் சிலவருடங்கள் கழிந்து, ஜெமினி ஒரு பேட்டியில் சொன்னார்." இவ்வளவு வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மை புரிகிறது. என் முதல் மனைவி பாப்ஜியைத் தான் நான் மிகவும் காதலிக்கிறேன் என்கிற விஷயம் இவ்வளவு ஆண்டு கால வாழ்வுக்குப் பின் தான் தெரிகிறது ."
ஆனால் அதற்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் ஜூலியானா வை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணிடம் அடியும் வாங்கினார்.
திருமண பந்த சங்கிலி கனமானது என்பதால் தான் அதனை இழுக்க ஆணும் பெண்ணுமாக இருவர் தேவைப் படுகிறது. ஆனால் மிகவும் கனமானது என்பதால் சில சமயம் மூன்றாவது பெண்ணும் வந்து விடுகிறாள் போலும்.சில சமயம் பெண்ணுக்கு கூட ஒரு ஆணோடு இன்னொரு ஆண் வர நேரிடுகிறது.

The chain of Matrimony is so heavy, it takes two to carry it.
Sometimes ...three.. four.. five!
ஜெமினியுடன் திருமண பந்த சங்கிலியை இழுத்த ஐந்து பெண்கள்!
ரோஹித் அம்மா விஷயம் உண்மையென்றால் ஆறு பெண்கள்.

தி.ஜானகிராமன் எழுத்து?படைப்புகள்?
தத்துவம், ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
இப்படி திஜாவின் கதைகளுக்கு சுந்தரராமசாமி விளக்கம் தந்திருக்கிறார்.
'திஜா தத்துவம்,ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று நம்பியவர். மனிதனின் பிறழ்வையும் ,தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். இன்று வரை வந்த எழுத்தாளர்களில் வசீகரமானவர் தி ஜானகிராமன் ' என ஜானகிராமனின் எழுத்தைப் பற்றி மதிப்பிட்டார்.

8 comments:

  1. ராஜேஷ்Tuesday, 29 December, 2009

    சார், உங்க ஃபேவரைட் தி.ஜாவோட ‘செய்தி’ சிறுகதை சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது. இப்போதுதான் எனக்கு இக்கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. Fantastic story.

    கதை இங்கே.

    ReplyDelete
  2. “God gave us a penis and a brain, but not enough blood to use both at the same time.”
    - Robin Williams

    Gemini proved this beyond doubt.

    ReplyDelete
  3. //" நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பதே இல்லை. "//

    :) அருமை. மனிதர்களின் தனித்துவம் அவர்களது தனித்தன்மை தானே.

    ReplyDelete
  4. சான்ஸேயில்ல பிரதி இன்பம்..

    //தத்துவம், ஒழுக்கத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன// :)
    என்னா உண்மை

    ReplyDelete
  5. பல பல புதிய செய்திகளைக் குவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. நன்றி..!

    யார் ஸார் அந்த ரோஹித்..?

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. Dear sir

    You are realy great. No one can compete with you in Blogging. You are the "King of Blogging".
    I read all your blogs. நீங்க விட்டு வைக்காத துறையே இல்ல.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.