A strongman and a WATERFALL always channel their own path.
அருவியை ஒரு கவிதை " an angel's lyrical call " என்று குறிப்பிடுகிறது.
Deep in the woods I hear an angel's lyrical call !
Tranquil and serene, a majestic waterfall!
இந்த lasting natural beauty யை
A vibrant entertainer, sparkling,
Waving at the crowds,
Singing of joy and showering harmony.
என உற்சாகமாக,குதூகலமாக, சந்தோசத்தைப் பாடுகின்ற அருவியாக விவரிக்கிறது இன்னொரு கவிதை.
I baptize myself within this cleansing spray! என அருவியில் குளித்து மகிழ்ந்து பெருமைகொள்ளும் கவிஞன் உண்டு .
No blemish on past nor future
ஆங்கிலத்தில் Waterfall என்பதை தமிழில் மொழிபெயர்க்கும்போது 'நீர் வீழ்ச்சி' யாகி விடுகிறது.
"மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே " - பாரதி
"நெஞ்சு படபடக்கிறது
அருவியை யாராவது
நீர்வீழ்ச்சி
என்று சொல்லிவிட்டால்."-விக்கிரமாதித்தன் எழுதியது!
'அருவியின் ஆற்றல் ' என்ற தலைப்பில் யவனிகா ஸ்ரீராம் கவிதை .
அதில் சிலவரிகள் பனி போல உறைந்து விடும் தண்மை கொண்டவை.
யவனிகா ஸ்ரீராம் எழுதிய அந்த கவிதையின் சில வரிகள் -
"உன் கேவல் ஒலிக்கும் அந்தகாரத்தில்
சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது.
உன் பிலாக்கணத்தில் மோகமுற்ற சல்லாபக் குளிர்காற்று ..."
"உன் விழிப் படலம் வெப்பமுற்றுச்
சிவக்கும் தருணத்தில்
நீல மேகம் நிலவை விந்தென சொட்டும் ."
யவனிகா ஸ்ரீராம் அருவியில் குளிக்கும் அனுபவம் அந்த விம்மியழும் நீர்வீழ்ச்சியின் சோகத்தைச் சார்ந்தது.
"நீ அழுவதானால் எப்போதும்
உன் தாயின் கண்ணீரில் இருந்து
துவங்கி விடுகிறாய்
நான் செய்வதெல்லாம் உன் உச்சரிப்பின் போதே
உன் இதழ் கவ்வி உன்னை
மௌனித்தது தான் "
..
"கவிதை ஒரு மலர் போன்றதும் வாள் போன்றதுமாகி புதிர் நிறைந்தது."
- தேவ தேவன்
இந்த நீர்'வீழ்ச்சி' எனும் உபயோகத்தை வைரமுத்துவும் சாடியிருப்பார். "அருவி என்பது நீரின் வீழ்ச்சி அல்ல! நீரின் எழுச்சி!" (நம்ம ரேஞ்சுக்கு வைரமுத்து மட்டும்தான் ஞாபகம் வருது RPR!)
ReplyDeleteஅன்புடன்
வெங்கட்ரமணன்