"குடும்பம் ஒரு பாற்கடல். லக்ஷ்மி,உச்சரவரஸ், ஐராவதம் அதிலே தான் . அமிர்தமும் அதிலே தான். ஆலகால விஷமும் அதிலே தான்." என்றார் லா.ச.ரா.
இந்தி திரையுலகம் பற்பல குடும்பங்களின் கதம்பம்.
அதில் ஒரு குடும்பம் பற்றி இங்கே :
இவர்கள் பெங்காலிகள்.அசோக் குமார் - கிஷோர் குமார் இருவரும் சகோதரர்கள் . எல்லோருக்கும் தெரியும் தான். இந்த இருவருக்கும் ஒரு உடன் பிறந்த சகோதரி . பெயர் சதிதேவி.
இந்த சதிதேவிக்கு மகன்களில் ஒருவர். ஜாய் முகர்ஜி.நாற்பது வருடங்களுக்கு முன் Love in Tokyoபடத்தில் கதாநாயகன் . " ஜாப்பான் லாவ் இன் டோக்கியோ " முஹம்மத் ரபி பாடல்!
மேற்படி அந்தக்கால ஹிந்திப் பட கதாநாயகன் ஜாய் முகர்ஜி தம்பி ராம் முகர்ஜி. இவருடைய மகள் தான் இன்றைய இந்தி நட்சத்திரம் ராணி முகர்ஜி.
தங்கத்தகட்டழகி, தாமரை முகத்தழகி,சிரிக்கும் சிங்காரி ராணி முகர்ஜி!
ஜாய் முகர்ஜியின் இன்னொரு சகோதரர் சோமு முகர்ஜி.இவருடைய மகள் தான் கஜோல்.அஜய் தேவ்கனின் மனைவி.கஜோல் அம்மா நடிகை தனுஜா இன்னொரு நடிகை நூட்டனுடைய தங்கச்சி.
கட்டான உடை உடுத்தி, சிட்டாகப் பறந்து வரும் தென்ன மரத்து சிட்டு,தேன் போன்ற லட்டு,தட்டு லொட்டு எவர்சில்வர் தட்டு போன்ற கன்னங்கள் கொண்ட கஜோல்!
அதாவது ராணிமுகர்ஜியோட அப்பாவுக்கும், கஜோல் அப்பாவுக்கும் கிஷோர் குமார் தாய் மாமன்!
இன்னும் பல.. இன்னும் பல..இன்னும் பல பாற்கடல்கள்!
மதன் புரி - அம்ரீஷ் புரி சகோதரர்கள் வில்லன் நடிகர்கள்.
ராஜ் கபூர் -ஷம்மி கபூர் - சசி கபூர்
பிரேம் நாத் - ராஜேந்தர் நாத் - நரேந்தர் நாத் .
பிரேம்நாத் குணச்சித்திர நடிகர். ராஜேந்தர் நாத் காமெடியன். நரேந்தர் நாத் வில்லன் நடிகர்.
இந்த பிரேம் நாத் சகோதரர்களின் உடன் பிறந்த சகோதரி கிருஷ்ணா தான் ராஜ்கபூர் பொண்டாட்டி.
ராஜ் கபூர் மூத்த மகன் ரந்திர் கபூர் மகள்கள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர்.
ரிஷி கபூர் மகன் ரன்பீர் கபூர்.
ஷம்மி கபூரும் கிஷோர் குமாரும்( கொஞ்ச மாதம் மட்டும் )சகலை பாடிகள்.
ஷம்மி கபூர் பொண்டாட்டி கீதா பாலி.இந்த கீதா பாலி தங்கச்சி யோகிதா பாலி தான் கிஷோர் குமாரின் மூன்றாவது பொண்டாட்டி!ஒரு பத்து மாதம்கழித்து பிரிந்து விட்டார்கள். இப்ப இந்த யோகிதா பாலி மிதுன் சக்ரவர்த்தி பொஞ்சாதிங்கோ! இந்த மிதுன் சக்ரவர்த்தி யோகீதா பாலியை கட்டறதுக்கு முன்னாலே ஒளப்புனது நம்ம ஊர் ஸ்ரீதேவியை.வக்கீல் ஐயப்பன் நாயுடு மகள் ஸ்ரீதேவி புருஷன் போனிகபூர் தான் அனில் கபூரோட அண்ணன்.
சரி விடுங்க ..ஆதாம் ஏவாள் முறைப்படி எல்லோருமே சொந்தக்காரங்க தானே!

கடைசி வரியில் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.(அதிவேகமாக படித்த பதிவு).
இப்ப confirm ஆகிடிச்சு சார் நீங்க ஒரு வில்லங்கமான மனிதரே.. :)))