Share

Dec 19, 2009

எஸ்.வி.ரங்காராவ் B.Sc.,

தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில்,1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்.
தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!
நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து.
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு.விஜயகுமாரியின் மாமனாராக.
'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.
'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்!
அவர் செய்த புராண பாத்திரங்கள்.
வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்
'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம் !"
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.
மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.
இன்று அவர் இறந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆனபின்னும் அவர் நடிப்பு சாசுவத்தன்மையுடன் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் மிக உயர்ந்து நிற்கிறது.
இன்று டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brandசெய்துவிட முடியாது.

12 comments:

  1. மிக உண்மையான கருத்து எனக்கு பிடித்த அசாதாரமான நடிகர்களில் இவறும் ஒருவர்.. மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்பது இவரிடம் கிடையவே கிடையாது.. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. "உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்கா ராவ்". நூற்றுக்கு நூறு உண்மை
    நானும் என் மனைவியும் அவருடைய பரம ரசிகர்கள்

    ReplyDelete
  3. பகிர்ந்தமைக்கு நன்றி 
    நல்ல பதிவு

    ReplyDelete
  4. ரங்காராவ் பற்றிய நல்ல பதிவு... definetly scene stealer and mind stealer too. அவரோட வாய்ல் மாடுடேஷனும் சிறப்பு. எங்கள் சென்னையில்தான் அவரோட சமாதியிருக்கு... அவர் சமாதியில் கூட சொல்லியிருக்கேன்.. I like you sir என்று :)

    ReplyDelete
  5. I can not even think one scene where he over-acted. He was one of the best actors ever lived.

    ReplyDelete
  6. உங்க‌ள் சினிமா ப‌திவுக‌ளின் பெரும் ர‌சிக‌ன் நான். நீங்க‌ சொன்ன‌து ரொம்ப‌ ச‌ரி. ச‌ர்வ‌ர் சுந்த்ர‌ம்‍, ச‌பாஷ் மீனா, எங்க‌ வீட்டு பிள்ளை ப‌ட‌ங்க‌ளில் இவ‌ரின் இய‌ல்பான‌ ந‌கை‌ச்சுவையும் ர‌சித்திருக்கிறேன். மிமிக்ரி.. இவ‌ரை ம‌ட்டும‌ல்ல‌, இய‌ல்பாக‌ பேசும் யார‌யும் மிமிக்ரி செய்வ‌தில்லை.. எஸ்.வி.சேக‌ர், நாகேஷ் (வ‌ச‌ன‌த்தில்),எம்.ஜி.ஆர் [நாடோடி ம‌ன்ன‌ன் கால‌ம்].

    -Toto
    www.pixmonk.com

    ReplyDelete
  7. அவருடைய dialogue delivery-ஐ ஒப்பிடுங்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எந்த ஒரு நடிகருடையதும் அதற்கு ஈடு இணை இல்லை. எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா இவர்களே இன்றைக்கும் தமிழ்த் திரையுலகம் கண்ட சிறந்த நடிகர்களாக எஞ்சுகிறார்கள். ஓரிரண்டு கதாநாயக நடிகர்களை முன்னிறுத்துபவர்கள் மன்னிக்க.

    -ராஜசுந்தரராஜன்

    ReplyDelete
  8. படிக்காத மேதை என்ற படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார்.
    எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்பான் என்ற இனிய பாடல் அதில்தான்.

    ReplyDelete
  9. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அற்புதமான நடிகர். இயல்பான நடிகர். பல படங்களில் சிரிப்பை வரவழத்தவர்.

    ReplyDelete
  11. i agree all the comments and ofcourse your brilliant articles .. vaazhka s.v.rangarao vin pugazh...

    ReplyDelete
  12. சர்வர் சுந்தரம் படத்தில் இயக்குநராக கொஞ்ச நேரம் வந்தாலும் சும்மா மனுஷன் அசத்திடுவாறு.விஜி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.