Share

Dec 21, 2009

P.S.ஞானம்


எம்.ஆர்.ராதா 1954ல் 'ரத்தக் கண்ணீர்' படத்தின் மூலம் மறுபடியும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்து செகண்ட் இன்னிங்க்சில் பட்டையை கிளப்பினார்.
முதல் இன்னிங்க்சில் பரிதாபமாக சினிமாவில் தோற்றவர். அவருடைய ஆரம்ப திரை அனுபவங்கள் மிகவும் மோசமாயிருந்தது.
1937
ல் 'ராஜசேகரன்' என்ற படத்தில் கதாநாயகன் ஈ.ஆர்.சகாதேவனுக்கு ( திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக நடித்தவர். இசை அறிஞர் ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவை அரண்மனைக்கு அழைத்து பாடவைத்து கௌரவிக்கும் வரகுண பாண்டியன்.தில்லானா மோகனாம்பாளில் மனோரமாவின் மைனர் கணவர்.) வில்லனாக இவர் நடிக்கும்போது இயக்குனர் சதி செய்து இவர் காலை உடைத்து விட்டார். பல மாதங்கள் படுக்க வேண்டிய நிலை யாகி விட்டது.
ஒரு வழியாய் எழுந்து 'பம்பாய் மெயில்' என்ற படம் டி.எஸ். பாலையாவும் ,ராதாவும் பார்ட்னராகி சொந்தமாக எடுத்தார்கள். படம் எடுத்து முடிந்த போது இருவருக்கும் ' போதும் , போதும் .. போதுமப்பா ..' என்று சொரிந்து விட்டு எழும்படியாக ஆகிவிட்டது . ஏண்டா படம் எடுத்தோம் என்ற ஞானம் வந்து விட்டது.
மாடர்ன் தியேட்டரில் ரொம்ப அசதியாக எம்.ஆர்.ராதா அப்போது கம்பெனி நடிகராக சேர்ந்தார். திண்ணையில் உட்கார்ந்த நிலை தான்.அங்கே தான் பொள்ளாச்சிஎஸ்.ஞானம் என்ற (அந்த கால தமன்னா!)நடிகை பந்தாவாக மகாராணி போல இருந்திருக்கிறார். 'சந்தனத்தேவன் ' படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.'ஞானத்தோடு யாரும் பேசக்கூடாது,சிரிக்ககூடாது'என்று மாடர்ன் தியேட்டர்சில் ஏகப்பட்ட கெடுபிடி.ராதாவுக்கு எப்போதும் 'மீறல்'தான் வாழ்க்கை. கண்ணாலே சைட் நொறுக்கி பி.எஸ். ஞானத்தை அந்த கட்டுப்பாடு நிறைந்த நிறுவனத்திலிருந்து சிறையெடுத்து கடத்தி பொள்ளாச்சி கொண்டு போய் ...அப்புறம் என்ன..
'திண்ணையில் இருந்த மனிதருக்கு திடீர்னு சாந்தி முகூர்த்தம்!'..ராதா 'நெம்புகோலின் தத்துவத்தை' அழகாக ஞானத்திற்கு விளக்கிகாட்டிவிட்டார்!!
இந்த பி.எஸ்.ஞானம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் தான்.
'பாசமலர் ' படத்தில் வில்லி. கதாநாயகி சாவித்திரியை ரொம்ப கொடுமைப் படுத்துவாரே. அவர் தான் பி. எஸ்.ஞானம். பாசமலர் படம் பார்க்கும் பெண்கள் இவருக்கு விடும் சாபங்கள் சொல்லி முடியாது.வில்லி என்றால் அப்படி ஒரு வில்லி!
'நாசமா போயிருவ '
' தேவிடியா முண்ட '
'என் தூமையை குடிக்கி '
'என் சாண்டைய குடிக்கி '
'ராட்சசி '
' உன் மூஞ்சியில முள்ல கட்டி அடிக்கனும்டி '
" என் கையிலே மட்டும் இவ கிடைச்சான்னாஇவ மூஞ்சை அப்படியே கல்லுலே மீனை உரசிர மாதிரி உரசிப்பிடுவேன் '
' பேதியிலே போவ .. கழிச்சல்ல போவ '
இவ்வளவு சாபங்கள் .
'பாசமலர்' படம் பார்க்கும் பெண்கள் இடைவேளைக்குப் பின் அழுதுகொண்டே பி.எஸ். ஞானத்தை திட்டி இவ்வளவு சாபம் இடுவார்கள்.
பாசமலர் பழைய படமாகி ஒவ்வொரு ஐந்து வருடமும் பார்க்க கிடைக்கும்போதும் பி.எஸ். ஞானம் இவ்வளவு சாபம் வாங்குகின்ற நிலை தான்.
கடைசியில் பி.எஸ்.ஞானம் காரில் போகும்போது திருத்தங்கல் அருகில் விபத்துக்குள்ளாகி கழுத்து துண்டாகி துடி துடித்து இறந்து போனார்.
அபத்தம் என்னவென்றால் பி.எஸ்.ஞானம் கொடூர விபத்தில் இறந்த பிறகு பல வருடங்கள் கழித்து சென்னையில் 'கிருஷ்ணவேணி 'தியேட்டரில், 'ராம்' தியேட்டரில் இந்தப் படம் ரிலிஸ் செய்யப்பட்டது.அப்போது சாவித்திரி 'கோமா 'வில் படுத்து விட்டார். அப்போது படம் பார்த்த பெண்கள் கூடஅழுதுகொண்டே பி.எஸ்.ஞானத்தை திட்டி சாபமிட்டு ''நீ விளங்கவே மாட்டேடி'' என்று சாபமிட்டுக்கொண்டு தான் படம் பார்த்தார்கள்.

1 comment:

  1. திருவிளையாடலில் பாண்டிய மன்னனாக வருவது முத்துராமன் தானே..?

    இடையில், இதற்கு என்ன பொருள் ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.