Share

Dec 9, 2009

சென்ற ஞாயிற்றுக்கிழமை

பண்டிட் ஜஸ்ராஜின் பைராகி பைரவ் ராகம் கேட்டுவிட்டு தர்பாரி கன்ரா ரசித்தேன் . தொடர்ந்து இன்னொரு கேசட்டில் இருந்த ஜோக் ராக ஆலாபனை போட்டு கேட்ட போது அப்படியே ஆளை அசத்தி எடுத்து விட்டது . ஜஸ்ராஜின் பாணி பீம்ஷன் ஜோஷியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது .

ஹிந்துஸ்தானியில் ஜோக் ராகம் நம்ம நாட்டைராகம் தான். இப்படி நம் கர்நாடக சங்கீதத்தின் பல ராகங்களை அங்கே கண்டு பிடித்து ரசிக்கலாம் . ஹிந்துஸ்தானியின் பிம்ப்ளாஸ் தான் தேவ காந்தாரி ராகம். ராக் பைரவ் என்பது சிந்து பைரவி . மால்கேவ்ன்ஸ் ராகம் நம்ம சாஸ்த்ரிய ராகமான ஹிந்தோளம் !

நான் எப்போதும் சில பாடல்களை செலக்ட் செய்து கேட்பதுண்டு . அப்படி சென்ற ஞாயிறு அன்று மாலை கேட்டவை :

1.மாலியின் புல்லாங்குழலில் பட்ணம் சுப்ரமணிய அய்யரின் பிலஹரி ராக
" பரிதான மிச்சித்த "

2. எம்.எஸ் . பாடிய தியாகய்யரின் சங்கராபரண கீர்த்தனை " ஸ்வர ராக சுத"

3. ஜி .என் .பி யின் தோடி ராக "தாமதமேன்" . பாபநாசம் சிவன் கீர்த்தனை தொடர்ந்து ஜி .என் .பி யின் கல்யாணி ராக முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை "சிவ காமேஸ்வரிம் "

4. அரியக்குடி பாடிய வீணை குப்பையரின் பேகடா " இந்த சாளமு". அதோடு 'சரசி ஜினாப சோதரி' அரியக்குடியின் கம்மல் குரலில் நாக காந்தாரி ராக முத்து சாமி தீட்சிதர் கீர்த்தனை !
தொடர்ந்து அரியக்குடியின் " பளிஞ்சு காமாட்சி " ஷ்யாமா சாஸ்திரி இயற்றிய மத்யமாவதி .

5. மதுரை மணி அய்யர் பாடிய மோகனம் " கபாலி "


.....




டி.வி சானெல்கள் அடிக்கடி என் இரண்டாவது மகன் அஷ்வத் மாற்றிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு சேனலில் " நிழல் நிஜமாகிறது " ஒரு காட்சி . 1978ல் வந்த படம் . கமல் ஹாசன் ஒரு காட்சியில் சரத் பாபுவிடம் சொல்கிறார் .

"பெங்கால்ல பார்த்தியா .. சி .பி .எம் வந்திடுச்சி "

தொடர்ந்து எவ்வளவு காலமாக அங்கே மார்க்சிஸ்ட்களின் ஆட்சி !




5 comments:

  1. S கல்யாண ராமன் பாடிய நீலமணி ராகத்தில் அமைந்த 'கண்ணனின் கள்ளம் அறியேன்' கேட்டிருக்கிறீர்களா? குரலில் எவ்வளவு பாவத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு ஒரு நல்ல அளவுகோல் என்று எனக்கு தோன்றுகிறது. இது
    அவரே compose பண்ணிய பாடல்.

    ReplyDelete
  2. Instrumentடில் என்னுள் ஊடுருவது வீணையும் புல்லாங்குழலும். மாலியும் எனக்கு பிடித்தமானவரே. வீணை காயத்திரி ரொம்ப பிடிக்கும்.. மீராபஜனை தவிர்த்து.

    ReplyDelete
  3. மதுரை மணி அய்யர் பாடிய மோஹன ராக ”கபாலி” ஐ நேற்று அவரது மருமான் டி.வி.எஸ் பாட அவரது மகன் இணைந்துகொள்ள சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபை அரங்கில் கேட்டேன்.
    கேட்டேன் என்றா சொன்னேன்? அரங்கு நிறம்பி இருந்த அனைவரும் கேட்டோம்.
    அற்புதமாக இருந்தது. மெய் மறந்து கேட்டோம். கொசுறு ராமானுஜாசார்லுவின் இனிய வயலின் நாதம்; உமையாள்புரம் சிவராமனின் மிருதங்கம்.
    கேட்டவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள்.
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  4. கடம் கார்த்திக் இயற்றி எம்பார் கண்ணன் குழுவினர் வாசித்த "ஜோக்" ராகம் நான் வெகுவாக் ரசித்தது. போன வருடம் பார்த்தசாரதி சபாவில் கேட்டேன்.

    கிட்டத்தட்ட அதன் யூட்யூப் சுட்டி:-

    http://www.youtube.com/watch?v=roanfhHAwAk

    - சிமுலேஷன்

    ReplyDelete
  5. அபூர்வ ராகங்கள்-04-ஜோக் (Jog)
    http://simulationpadaippugal.blogspot.com/2010/02/04-jog.html

    - சிமுலேஷன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.