Share

Feb 26, 2009

கமல் காதில் புகை

ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு சொல்லிவிட்டு அதே வாயில் " ஒலிம்பிக் போட்டி போல எல்லா நாடுகளும் பங்கேற்று போட்டியிட்டு திறமைக்கு கிடைக்கும் பரிசு அல்ல ஆஸ்கார் பரிசு . அமெரிக்கர்கள் தங்கள் ரசனைக்கு படங்களை தேர்வு செய்து , படங்களுக்கு பரிசு தருகிறார்கள் . ஆஸ்கார் பரிசு உலகத்தரமானது அல்ல " என்று தன் வயிற்றெரிச்சலை கமல்ஹாசன் வெளிப்படுத்தி விட்டார் . சீ ..சீ .. இந்த பழம் ..
சினிமாக்காரர்கள் எல்லாம் 'ரஹ்மான் பரிசு வாங்கியிருக்கும்போது இப்படி இவர் பேச வேண்டுமா' என்று கமல் ஹாசன் மீது ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று நேற்று வந்துள்ள ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது .
ஆஸ்கார் பரிசு பற்றிய அளவுக்கு மீறிய மிகையான பிரமை தான் ரஹ்மானுக்கு அது கிடைத்த போது எல்லோரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்து புல்லரித்து செடியரித்து மரம் அரித்து புளகாங்கிதமடைய வைத்துள்ளது .அதனால் தான் இந்த 'ரஹ்மான் பாராட்டு கோரஸில் ' நான் சேர விரும்பவில்லை என நான் எழுதியிருந்தேன் .கமல் ஹாசன் சொல்வது நூற்றுக்கு நூறு மிகவும் உண்மை .( இதை கமல் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை )ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் கிறக்கத்தில் இந்தியாவே இருக்கும் இந்த நேரத்தில் அவர் இதை சொன்னதில் ஆற்றாமை , ஏக்கம் , தன்னிரக்கம் வெளிப்படுவதும் நூற்றுக்கு நூறு உண்மை .
எப்பவும் நான் ஆஸ்கார் பற்றி சொல்ற விஷயம் தாங்க என்று கமல் விளக்கம் தர முடியாது . சொன்ன விஷயம் தானே .ரஹ்மானுக்கு ஆஸ்கார் பரிசுக்காக வாழ்த்து சொல்லும்போதே விவஸ்தையில்லாமல் இந்த ஆஸ்கார் உலகத்தரம் அல்ல என்று சொல்வது பூலாப்பு தானே ?'உலகநாயகனே ' என்று ரஹ்மானை பார்த்து இந்தியாவேபரவசமாக பாடுகிறதே !
நேற்றைய முந்தைய தினமே'கமல் ,அமீர்கான் காதில் புகை நிச்சயம் ' என்று நான் மனித உளவியல் பற்றிய குறிப்பாக நான் “My concern is always with the not so brilliant and the not so successful people.” பதிவில் குறிப்பிட்டதற்கு கணிசமான எதிர்ப்பு கிளம்பியிருந்தது . நேற்று மட்டும் ஏழு' வெத்து கடுமை 'பின்னூட்டங்களை நான் இது குறித்து நிராகரிக்க வேண்டியிருந்தது . என் நுட்பமான பார்வை உண்மை தான் என கமல் ஹாசன் நிரூபித்து என்னை கனப்படுத்தி விட்டார். நான் சொன்னது சரி தான் என கமல் ஹாசன் நிருபர்கள் முன் பேசியுள்ளதன் மூலம் நிரூபித்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன் 'குமுதம் ஸ்பெஷல் ' இதழ் ஒன்றில் பத்திரிக்கை குழு முன் வைக்கும் கேள்விகளுக்கு வாசகர்கள் பதில் அளித்து வந்தார்கள் . அதில் ஒரு கேள்வி :
கமல் , ரஜினி ஒப்பிடுக .
ஒரு வாசகர் பதில் பிரசுரமானது . அந்த பதில் :
கமல் கடுமையாக உழைக்கிறார் .
ரஜினிக்காக கடவுளே உழைக்கிறார் .

கமல் திறமை , அதிர்ஷ்டம் பற்றி இந்த புத்திசாலித்தனமான பதில் முன் வைக்கும் சோகம் பாருங்கள் . உண்மையில் இந்த பதில் கமலை மிகவும் கௌரவப்படுத்துகிறது . அதே நேரம் கமல் ஹாசனின் தகுதி,உழைப்பு உதாசீனப்படுத்தப்படும் சோகத்தையும் முன் வைக்கிறது.வசூல் , விருது போன்றவை அவ்வளவு சுலபமாக சிலருக்கு கிடைப்பதே இல்லை . இந்த உலகத்தில் தகுதி ,திறமைக்கு தகுந்த வெகுமதி பெறாமல் போனவர்கள் எல்லா துறையிலும் கணக்கிலடங்காதவர்கள் .
கமலுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்காதது பற்றி நான் நேற்றைக்கு முந்தைய தின பதிவில் கிண்டல் ஏதும் செய்யவில்லை . ஏ ஆர் ரஹ்மானுக்கு இசைக்கு கிடைக்கும்போது கமலுக்கோ , அமீர் கானுக்கோ நடிப்புக்கு ஆஸ்கார் விருது என்ன தகுதியில்லாததா ?
கமல் ஹாசன் நடிப்பு துவங்கி அவரது படங்கள் ,நோக்கங்கள் ,பற்றி பல விமர்சனங்கள் எனக்கும் உண்டு . கமல் நடிப்பின் மிகப்பெரிய பலவீனம் -அவரால் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடியவில்லை . 'இந்த படத்தில் நிறைய எனக்கு வேலை இருக்கு என்ற கர்வம் ' அவர் நடிக்கும் போது வெளிப்படையாக தெரிகிறது . இதை தவிர்த்து விட அவரால் முடியும் . அவருடைய சுபாவத்திற்கு 'இயல்பாய் இருக்க' கடும் முயற்சி,பயிற்சி தேவை . ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . அகில இந்தியாவிலே மோகன் லால் தான் கேமரா சென்ஸ் இல்லாமல் ,கதாநாயகன் என்ற கர்வம் ,பிரமை இல்லாமல் நடிக்கிற அற்புத நடிகர் .

9 comments:

  1. Kamal is not reachable to new talents. (Like Sasi, Ameer, Bala, Cheran, Selvaragavan etc. See he is doing a remake of A WEDNESDAY, it was directed by a debutant director. Imagine, if he approaches Kamal to do the film before doing in Hindi. He can't even think of seeing kamal let us forget to tell the script.

    Thats what the status of Kamal, so he himself dragging him to new way of exploring with new talents.

    Sudharsan

    ReplyDelete
  2. கை கொடுங்க...
    மோகன்லாலை
    மிக சரியாகத்தான் அடையாளம்
    கண்டு கொண்டிருக்கிறீர்கள்!
    - தாஜ்

    ReplyDelete
  3. ஆஸ்கர் என்பது அமெரிக்கத் தரம் மட்டுமே; உலகத் தரமல்ல என்பதை எனக்கு தெரிந்து கமல் ஆஸ்கர் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் சொல்லித்தான் வந்திருக்கிறார். இப்போது ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை.

    ReplyDelete
  4. my favorite "No.20 Madras Mail" and ...படம் பேர் மறந்து போச்சு.. மோகன்லால் ஓட்ற கார்ல பின்னாடி ஒரு பொம்மை..அது பிரேக் அடிக்கும் போது trouserra........

    ReplyDelete
  5. மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர் சந்தேகமே இல்லை. அவரின் பரதம், வெள்ளானைகளூட நாடு மற்றும் கீரிடம் எல்லாம் அற்புதமான படங்கள். தமிழில் நம்ம மறைந்த ஜெமினியை சொல்லலாமே ! அவர் மாதிரி அளந்து நடிக்க இன்னோரு மனிதர் பிறந்தல்லவா வரவேண்டும். ராமு படத்தில் நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் ஒன்றே போதும் அவர் பெருமை சொல்ல, வேறு ஏதேனும் ஒரு actor நடித்திருந்தால் கண்ணை உட்ருட்டி, உதடைக்கடித்து உருக்கம் காட்டுகிறேன் பேர் வழி என்று அந்தப் பாடலை உயிரோடு கொண்றிருப்பார்கள். அந்தப் பாடலின் கணத்தை சோகத்தை பல மடங்கு கூடச் செய்யும் ஜெமினியின் நடிப்பு.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஹாலிவுட் படத்தைக் காப்பியடித்து அவர்களிடமே போட்டுக் காட்டி "எனக்கு ஆஸ்காரக் குடு" "எனக்கு ஆஸ்காரக் குடு"ன்னு கேட்டா அவங்க குடுப்பாங்களா? கடைசி முயற்சியா இங்கிலீஸ்காரன் மாதிரியே வேஷம் போட்டும் பாத்துட்டாரு.

    நாம வேனா எப்படி வேணும்னாலும் நம்ம முதுக சொறிஞ்சுக்கலாம். கேட்டா அந்த படத்துல அப்படி நடிச்சாரு, இந்த படத்துல இப்படி நடிச்சாருன்னு சொல்லுவாய்ங்க. விக்ரம் 100வது நாள் விழாவில் சத்யராஜுக்கு ஒரு ஷேவிங் ரேஸரை பரிசளித்து (?) அசிங்கப்படுத்தியதாக கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  8. i agree with theetha. people can speak whatever they think, but before should realize what kamal haasan doing......... oscar is an award giving by Americans for their country such good performance from various department, they are considering other countries also,this is same like our national award,even though we should proud tamilan got an award from other country, that's it. about kamal haasan please don't give the bad commends. because he is the actor who taking the tamil film industry to world level,people talking about tamil cinema because of person like kamal haasan we have in tamil nadu,

    ReplyDelete
  9. //அகில இந்தியாவிலே மோகன் லால் தான் கேமரா சென்ஸ் இல்லாமல் ,கதாநாயகன் என்ற கர்வம் ,பிரமை இல்லாமல் நடிக்கிற அற்புத நடிகர்.// Totally agree! Love Mohanlal the way he is:) I feel that Kamal is always aiming for the international arena which makes him alienated from the Indian cinema viewers.

    I also agree on the fact that most awards are given according to the international agenda, just like when suddenly India started winning all the beauty pageants. Things cannot be undone! Rahman will always be known as an 'Oscar winner'.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.