Share

Feb 22, 2009

சாமிக்கண்ணு


சாமிக்கண்ணு அந்த கால சிரிப்பு நடிகர்.
வசனம் பேசுபோது ஒரு நக்கல் நையாண்டியுடன் பேசுவார்.
பாமா விஜயம் படத்தில்
'வாங்க '
சாமிக்கண்ணு ' வரமாட்டேன் ' -வேகமாக கோபமாக வருவார்.
'உட்காருங்க '
"உட்கார மாட்டேன் " -கோபமாக உட்கார்வார்.

ராமண்ணாவின் ‘ நான்’ - சாமிக்கண்ணு ரொம்ப funnyயாக “Of course" சொல்வார். இவர் கூட வரும் கன்னையா ‘ என்னத்த’ சொல்லி ரொம்ப பிரபலம்.

ராஜபார்ட் ரங்கதுரையில் சாமிக்கண்ணு “ என்ன நான் சொல்றது”

இவருக்கு பிற்காலத்தில் வாய்ப்பு மகேந்திரன் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள் ' 'ஜானி 'படங்களில் கொடுத்தார் . பாலு மகேந்திரா ' அழியாத கோலங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

இவரை பற்றி பலரும் அறியாத செய்தி :
பராசக்தி படம் ஆவதற்கு முன் நாடகமாக 1940களின் கடைசியில் நடிக்கப்பட்டதுண்டு. அப்போது அதற்குவசனம் கருணாநிதி அல்ல . அந்த பராசக்தி நாடகத்தில் "குணசேகரன் " பாத்திரத்தை நடிகர் சாமிக்கண்ணு தான் ஏற்று கதாநாயகனாக நடித்தவர் என்றால் இன்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஏன் ஏன்றால் சிவாஜி கணேசன் திரையில் " பராசக்தி " படத்தில் செய்த பாத்திரம் தான் குணசேகரன்.
இன்னொரு செய்தி :
கே பாலச்சந்தர் ஒரு முறை குறிப்பிட்டு பத்திரிகையில் அந்த காலத்தில் ஒரு செய்தி நான் படித்திருக்கிறேன். சாமிக்கண்ணு நாடக நடிப்பை பார்த்து தான் தனக்கு நாடகத்தின் மீது ஆர்வம் வந்ததாக பாலச்சந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

......................................

7 comments:

  1. வேட்டி அவுருதுய்யா, வேட்டி அவுருதுய்யா என்று சாமிக்கண்ணு பேசும் வசனம் ரஜினி நடித்த போக்கிரி ராஜா படத்தில் ரொம்ப பிரபலமான வசனம்.

    ReplyDelete
  2. Rajanayahem Sir,

    Nice to see posts on Samikkannu & Ennatthe Kannaiya. Thank you!

    Any memories of A. Karunanidhi, T.S. Dorairaj to share?

    ReplyDelete
  3. RV sir,

    I have already written a pathivu on "A.Karunaanithi" last year. Please go back and find it to read.

    Kind regards,

    R.P.Rajanayahem

    ReplyDelete
  4. ராஜநாயஹம் சார்,

    அந்தக் காலத்தில் கோமல் சுவாமிநாதனின் நாடகங்களில் விடாமல் நடிப்பார் சாமிக்கண்ணு! 'ஆயிரத்தில் ஒருத்தி' என்ற எளிதில் மறக்கப்பட்ட KR விஜயா படமொன்றில் சாமிக்கண்ணு சுருளிக்கு மாமனாராக அவருக்கும் வேறு ஒரு நடிகைக்கும் (சச்சு ? ) இடையில் நிற்பார். தலையை இரண்டு பக்கமும் மாற்றி மாற்றித் திருப்புவார். சுருளி திடீரென்று இவர் வாய்க்குள் எட்டிப் பார்த்து விட்டு அவருடைய inimitable style ல் 'மாமா வாய்ல முதுகெலும்பு தெரியுது!' என்பார்! மறக்க முடியாத நகைச்சுவை!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  5. Rajanayahem Sir,

    You are absolutely right, I remember your comments about A. Karunanidhi's konashtai & his woman impersonations. My bad, that I forgot about that.

    I would love to link that post in my blog. Unfortunately, I couldn't find it easily in your blog. It is not easy to search for an older post here. Can you help? If you can send me an email - to rv.subbu at gmail dot com - I would deeply appreciate it.

    ReplyDelete
  6. இடிச்சபுளி செல்வராஜ் ஒரு முறை துக்ளக் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்..கடைசியில்..பேட்டி முடியும் சமயம் நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்ல முடியாமல் கதறி கதறி அழுத்தாகவும் படித்த ஞாபகம்..என்ன மன அழுத்தமோ அவருக்கு..அதென்னவோ இடித்த புளியை பார்த்த மாத்திரத்தில் அந்த கட்டுரை தான் ஞாபகம் வருகிறது...!

    ReplyDelete
  7. Samikannu's role in Uthiripookkal was one of the best. He acted as the village barber. Ananda Vikatan had commented that his acting while tonsuring Kaja Sharrif's head after his father's death as one the best scenes in the movie.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.