Share

Feb 5, 2009

டையனசிஸ் - டையோமிடிஸ்

'இரும்பு காளை ' என்றொரு தண்டனை கருவி . மரணதண்டனை கருவி . இதை ஒருவன் மூளையை கசக்கி சிரமப்பட்டு உருவாக்கினான் . மரண தண்டனை பெற்ற குற்றவாளியை அந்த 'இரும்பு காளை ' எந்திரத்தின் உள்ளே வைத்து அந்த காளைக்கு நெருப்பு வைத்து விட்டால் அந்த காளையின் உள்ளிருந்து வரும் அலறல் ஒரு காளை கத்துவது போல இருக்கும் . இந்த கருவியை டையனசிஸ் என்ற மகாராஜாவிடம் அதை உருவாக்கியவன் கொண்டு வந்து காட்டி விலாவரியாக விளக்கி விவரம் சொன்னான் . டையனசிஸ் என்ன செய்தான் தெரியுமா ? அதை ஊர்ஜிதப்படுத்த அந்த கருவியை கண்டு பிடித்தவனையே 'இரும்பு காளை ' எந்திரத்தினுள் உள்ளே வைத்து நெருப்பு மூட்டி காளை கூப்பாடு வருவதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து ' சரியாத்தான் சொல்லியிருக்கான்யா ' என்று சொன்னானாம் .

Masochஎழுதிய Venus in Furs நாவலில் இப்படி ஒரு சம்பவம் வருகிறது .

...

டையோமிடிஸ் என்று ஒரு கிரேக்க சக்கரவர்த்தி

தான் வளர்த்த தன் செல்லமான குதிரைகளுக்கு உணவாக தந்தது என்ன தெரியுமா ?

மனித மாமிசம் .

ஜோஸ் வண்டேலூ எழுதிய ' அபாயம் ' நாவலில் ஒரு வரி தகவலாக இந்த குறிப்பு வருகிறது .

2 comments:

  1. கொடுமையான மன்னனாக இருக்கிறானே?

    குதிரை மாமிசம் எல்லாம் சாப்பிடுமா?

    ReplyDelete
  2. Wasn't Dionysys fed to his own horses by Hercules? I do seem to remember reading this. Please correct me if I am wrong.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.