அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது . எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் . இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம் . பக்கங்கள் ரொம்ப அதிகம் . 1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இந்த நூலை வெளியிட்டது . சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி அருமையான சித்திரம் . நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது .
இரண்டு முதிய பெண்மணிகள் இருவரும் இன்று இறந்து விட்டார்கள் .
'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட , பக்கம் பக்கமாக விளக்க கூட இங்கே ஆட்கள் உண்டு .
இது பாப்பாத்தி எழுதிய சாதாரண சின்ன புத்தகம் . அது எங்க சூத்திர பெண் எழுதிய கனமான பெரிய புத்தகம் என்று வர்க்க அடையாளம் கொடுக்கும் இலக்கிய அரசியல்வாதிகள் இங்கு அதிகம் .
2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் நான் அழகிய நாயகி அம்மாளின் 'கவலை ' நூல் பற்றி பேசினேன் . அப்போது எம் எஸ் சௌந்தரம் ' சங்கீத நினைவு அலைகள் ' நூலை ஒப்பிட்டு பேசினேன்.
இரண்டாவது புத்த்கம் பற்றி அப்போது பல பத்திரிக்கைகளில் செய்தி வந்திருந்தது. முதல் புத்தக அறிமுகத்திற்க்கு நன்றி
ReplyDelete