பல நூற்றாண்டு முன் ராஜாவாய் இருந்த கட்டபொம்மன் வம்சாவழியின் நிலை தான் இப்படி என்றால் இன்றைக்கு
ராஜாவாக இருக்கிற பாரக் ஒபாமா தம்பி கதை அதை விட பரிதாபம் .
உலகத்துக்கே முதல் மனிதன் அந்தஸ்தில் பாரக் உசைன் ஒபாமா . இவர் தகப்பனார் இவர் தாயை விவாகரத்து செய்த பிறகு இன்னொரு திருமணம் செய்து அந்த மாற்றாம் தாய் பெற்றமகன் ஜார்ஜ் உசைன் ஒபாமா . இவர் கென்யாவில் இப்போது நைரோபியில் ஒரு குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார் . தொழில் மெக்கானிக் .அமெரிக்க ஜனாதிபதி யின் சகோதரனான இந்த ஜார்ஜ் ஒபாமா மரிஜுவானா என்ற போதைபொருள் வைத்திருந்தார் என்று கென்யாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் .
'பாரக் ஒபாமாவுக்கு ராஜயோக ஜாதகம் . அவருடைய தம்பி ஜார்ஜ் ஒபாமாவுக்கு அவயோக பாவ ஜாதகம் . '
- இங்கே உள்ளூரு ஜோஷியர் சொல்றாரு !
"விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீது உளரோ ?"
-- பாரதி 'பாஞ்சாலி சபதத்தில்' சொல்றாரு!


மிகவும் வருத்தமாய் இருக்கிறது. இக்கால தலைவர்கள் அதனால்தான் என்னவோ 10 தலைமுறைக்கு சொத்து சேர்கிறார்கள் :-)