Share

Feb 8, 2009

பாலா படங்கள்

பாலா படங்களில் சில விஷயங்கள் Repeatஆகின்றன . Similarities தெரிகின்றன .எல்லா படங்களுமே Morbid வகையாய் இருக்கின்றன. கதாநாயகர்கள் ரொம்ப மூர்க்கமானவர்கள் .

நந்தா சூரியா, பிதாமகன் விக்ரம் , நான் கடவுள் ஆர்யா மிகவும் பலசாலிகள் . போலீஸ் இவர்களை கண்டு மிரள்கிறது .

நந்தா சூரியா , நான் கடவுள் ஆர்யா தாய்உறவு சீராக இல்லை . நந்தா சூரியா தாயின் உதாசீனம் கண்டு மன உளைச்சல் அடைகிறார் . நான் கடவுள் ஆர்யாவின் உதாசீனம் தாயை கலங்கி தவிக்க விடுகிறது . நந்தா சூரியா மைனர் ஜெயில் என்றால் நான் கடவுள் ஆர்யா பால்யத்தை காசி மடம்.

கதாநாயகி சேது விக்ரமிடம் ,நந்தா சூரியாவிடம் , நான் கடவுள் ஆரியா விடம் அப்ரோச் செய்யும் காட்சிகள் ஓரளவு ஒத்த தன்மை கொண்டவை . பயந்து பயந்து பேசுவது .

பழைய பாடல்களுக்கு சூரியா சிவாஜி , சந்திரபாபு மாதிரி சிம்ரனுடன் ஆடுவார் .

நான் கடவுளிலும் எம்ஜியார் , சிவாஜி , ரஜினி வேசமிட்டு பல பாடல்களுக்கு ஆடுகிறார்கள் . கதாநாயகி நிறைய பழைய பாடல்கள் பாடுகிறார் .

பிதாமகன் , நான் கடவுள் கதாநாயகர்கள் இருவருமே எதிரியை துவம்சம் செய்ய , சூழலை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். உசுப்பி விட்ட பிறகு தான் கொந்தளித்து எழுகிறார்கள் .இருவருமே உலக அளவுகோலின் படி மன நிலை பிறழ்ந்தவர்கள் .அப்படி தான் வேறுபட்ட கதாபாத்திரங்களையும் மீறி தெரிகிறார்கள் .

'சேது' படத்தில் நெஞ்சை உருக்கும் மனநிலை பிறழ்ந்த பைத்தியங்கள் . 'நான் கடவுள் ' படத்தில் நெஞ்சை நிம்மதியில்லாமல் அடித்து காயப்படுத்தி ரணப்படுத்தி விடும் மறக்கவே முடியாத உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் . எல்லா பிச்சைக்காரர்களின் முகங்களும் அவர்களின் ஊன வுருவங்களும் படம் பார்த்து விட்டு வந்த பின்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன .

கவிஞர் விக்கிரமாதித்தன் நடிகராக ஒரு நல்ல ரௌண்டு வந்து நிறைய சம்பாதிக்கவேண்டும் . என் ஆசை இது .

வடிவேலை சில பல படங்களில் நிம்மதி இழக்கச்செய்யும் 'அந்த நான் கடவுள் முருகன் ' இந்த படத்தில் செமை நடிப்பு .

'நான் கடவுள் 'கதை யாருடையது ? பாலாவுடையது என்று தான் டைட்டில் வருகிறது . ஆனால் படத்திற்கு வசனம் எழுதிய ஆள் தன்னுடைய'ஏழாவது உலகம் 'நாவல் தான் 'நான் கடவுள் ' படத்தின் கதை என்று ஆங்கிலப்பத்திரிக்கையில் கூட குறிப்பிடுகிறார் . அப்படியானால் ' கதை ' தன்னுடையது என்று ஏன் பாலா போட்டுக்கொள்ள வேண்டும் .திரைக்கதை இவருடைய பெயரில் வருவது யதார்த்தமானது தான் . இயக்குனர் பெயரில் வருவது நியாயம் கூட .

பாலா ! Your whole future is before you! வயதும் காலமும் , திரையுலகின் மரியாதை,மதிப்பும் இன்னும் நிறைய உங்களிடம் இருப்பதால் இன்னமும் கூட தமிழ் திரையுலகத்தின் முதல் தர நம்பிக்கை நீங்கள் தான் !

Miles to go before you sleep!

இந்த 'நான் கடவுள் 'படத்தை எடுக்க மூன்று வருடம் தேவை தானா ? ரொம்ப ஓவரா தெரியலே!

படத்தில் லாஜிக் ரொம்ப இடிக்கிறது.

மலையாள ப்ரோக்கரை துவம்சம் செய்யும்போது ஆர்யா ஒரு பார்வை பார்த்ததும் மலைகோயில் பக்தர்கள் ஓடி ஒளிவது , அந்த மலையாள ப்ரோக்கரை ஆர்யா என்ன செய்தார் என்பதை ஒருத்தர் கூடவா ஒளிந்திருந்து பார்க்க முடியாது . போலீஸ் ரொம்ப திணறி.......

தீவிரவாதிக்குரிய சகல கல்யாண குணங்களும் பாலாவின் நாயகர்களுக்கு இருக்கின்றன .நந்தா சூரியா வுக்கு ஒரு ராஜ்கிரண் . நான் கடவுள் ஆர்யாவுக்கு ஒரு காசி சாமியார் .கதாநாயகி கடைசியில் கதாநாயகனால் கொலை செய்யப்பட காசி சாமியாரின் மூளை சலவை தான் காரணமா? காசி சாமியார் சொன்ன ஒரு வாக்கியம் கதாநாயகனின் நினைவிற்கு வந்தவுடன் கொலை செய்யும் கதாநாயகன் . இது தான் தீர்வா ?

இப்படி காட்சி பார்க்கும்போது ஸ்ரீராம் சேனா, பஜ்ரங் தள தொண்டர்கள்,சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய கொலைகாரன் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் எல்லோரும் ஏன் கொள்கை ஓநாய்கள் ஆகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது .

"கொலை " என்பது ஏனைய சினிமாக்காரர்களுக்கு "சாதாரண கத்திரிக்காய் " !பாலாவுக்கும் அப்படித்தான் என்பது அவருடைய படங்களிலிருந்து தெரியவருகிறது . 'பருத்தி வீரன்' அமீர் , 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களும் தங்கள் அடுத்த முயற்சிகளில் இந்த' கொலை 'என்ற தீர்வை உதறி தள்ளி நல்ல படைப்பை தரவேண்டும் . படம் பார்ப்பவனின் கபாலத்தில் தாக்கி காயப்படுத்த இந்த 'கொலை'யை விட்டால் வேறு தீர்வே கிடையாதா ?

'அன்பே சிவம்' படத்தில் நிறைய உரையாடல் கமல் , மாதவன் இடையே அந்த படத்தின் கதையை செழுமைப்படுத்தியது . ' நான் கடவுள் ' தீம் 'அகம் பிரமாஸ்மி' பற்றி விளக்கம் ஏதும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது . இதுவும் ஏதோ காசி சாமியாரின் ஒற்றை வாக்கிய மூளைசலவை போல பதிவாகிவிட்டது .

6 comments:

 1. Sir, As you've rightly said Bala keeps returning to the marginalised people. Like you I am happy these people have someone like Bala to record their tragedy and small pleasures. I am sure Bala's best is yet to be. good post.regards.

  ReplyDelete
 2. அதுமட்டுமா...

  க்ளைமாக்ஸை கம்பேர் பண்ணி பாருங்க.

  சேது விக்ரம்: பைத்தியாமாட்டம் நடந்து போறார்.

  பிதாமகன்: பைத்தியமாட்டம் நடந்து போறார்.

  =============

  நந்தா: சூர்யா சாகறார்.

  பிதாமகன்: சூர்யா சாகறார்.

  =============

  நந்தா, பிதாமகன்: 2 படத்துலயும் சூர்யாவ லவ் பண்ணின லைலாவுக்கு, கல்யாணம் நடக்க விடாம பண்ணிட்டார். ஒரே வித்தியாசம், நந்தால, அவர் சிரிச்சிட்டே இருக்கும் போது (சூர்யா செத்தது தெரியாதனால) படம் முடிஞ்சிடும். பிதாமகன்ல அழுதுகிட்டு இருக்கும்போது முடியும்.

  ======================

  ’நான் கடவுள்’ இங்க இன்னும் ரிலீஸ் ஆகல. ஆனா, முதல் படத்துல தற்கொலை பண்ணிகிட்ட ஹீரோயினை, நாலாவது படத்துல ஹீரோவே கொலை பண்ணிட்டு, பைத்தியமாட்டம் நடந்து போறார். சரியா??????

  =====================

  அஞ்சாவது படத்துல...??????

  ReplyDelete
 3. அஞ்சாவது படத்துல...?????? \\

  ஹீரோ படம் பாக்கறங்களையெல்லாம் கொன்னுட்டு பைத்தியமாட்டம் நடந்து போவான் இல்லாட்டி

  படம் பார்க்கறவங்க பாலாவ கொன்னுட்டு பைத்தியம் மாதிரி நடந்து போவாங்க

  ReplyDelete
 4. நல்ல ஆராய்ச்சி RPR
  நன்றி....

  ReplyDelete
 5. பாலா / சேரன் / அமீர் இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சமூகத்தால் பாதிக்க பட்டவர்கள்...

  அதை மட்டுமே அவர்களால் பதிவு செய்ய முடிகிறது...

  சேரன் - ஜாதி - பாரதி கண்ணம்மா... தென் மாவட்டங்களில் வெளிநாட்டு மோகம்.... கிராமப்புற மாணவனுக்கு உள்ள பள்ளிபருவ ஏக்கங்கள் இவை அனைத்தும் அவர் பார்த்தது அதை செய்தார்..

  தற்போது சரக்கு இல்லை.. ஏதோ அடுத்தவர்களுக்கு புத்தி சொல்ல இவரை விட்டா ஆள் இல்லை என்ற என்னத்தில் வாய் கொழுப்பெடுத்து பேசி வருகிறார்.

  படைப்பாளி என்பவனுக்கு ஒரு விசாலமான பார்வை தேவை.. இவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

  பாலா - தன்னை மசாலா டைரக்டர் இல்லை என்று சொல்வது பொய்... சிம்ரனின் தொப்புளையும் இடுப்பையும்..பிதுங்கிய மார்பையும் காட்டாமல் விட்டிருக்கலாம்... ஆனால் ஒரு மசாலா படத்திற்கான அத்தனை அம்சங்களும் .... காமெடி டிராக்... பாட்டு ... எதார்த்தத்திற்கு முரணான சண்டை என்று...

  கமர்சியலாக பிழைக்க தெரியாத பிடிவாதம் உள்ள மடையனாகத்தான் உள்ளார்.

  இந்த படத்திற்கு - 3 வருடம் 15 கோடிகள் என்பது அந்த பிடிவாதத்தின் ஒரு அடையாளமே..

  பாலு மகேந்திரா / கே.எஸ் ஆகியோர் சிற்பிகள்... அதாவது அனைத்து விதமான சிற்பங்களையும் வடிக்க தெரிந்தவர்கள்...

  பாலா போன்றவர்கள் - அந்த சிற்பிகளிடம் ஒரு உருவத்தை மட்டும் செதுக்க கற்று கொண்டவர்கள்... காலத்திற்கும் ஒரே சிலையை திரும்ப திரும்ப செதுக்க தெரிந்தவர்கள்... காரணம் வேற தெரியாது....

  RPr - உஙகளை போன்ற அனுபவசாலிகளுமா பாலாவிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறீர்கள். சான்சே இல்லை பாஸ்.. முதலில் அவர்களின் சைக்கோத்தனத்தில் இருந்து வெளியே வரச்சொல்லுங்கள்.. அல்லது வருகிறார்களா என்று பார்ப்போம்.

  இவர்களை போல – இன்னொருவர்... சங்கர்... ஒரே டிராக்... ஜெண்டில்மேன்... இந்தியன்... முதல்வன் ... அந்நியன்... சிவாஜி.. ஊருக்கு நல்லது செய்றான் என்ற அரைத்த புளித்த மாவை திரும்ப திரும்ப அரைக்கும் பிழைக்க தெரிந்த புத்திசாலி. இவரிடமும் பிரமாண்டத்தை தவிர வேற என்ன எதிர் பார்க்க முடியும்..

  ReplyDelete
 6. Dear Sir,

  Am taking the liberty to give a link to your review..

  Regards,

  Ronin

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.