அசோகமித்திரன் தன் படைப்புகளில் வாழ்வில் வெற்றி பெறாத மனிதர்கள் பற்றி தான் எப்போதும் எழுதியவர் . அவுட் லுக் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டி பிரசுரமான போது பலத்த சர்ச்சை ஏற்பட்டது . பொதுவாக அசோகமித்திரன் அவர் பற்றிய எந்த சர்ச்சைக்கும் பதில் அளிப்பவர் அல்ல . குமுதம் , குமுதம் தீராநதி , உள்பட அவருடைய அவுட் லுக் பேட்டி க்காக கடுமையாக அவர் விமர்சிக்கப்பட்டார் . இது விஷயமாக அவர் பதில் அவுட் லுக் ,குமுதம் துவங்கி இன்னும் இலக்கிய பத்திரிக்கையிலிருந்து எத்தனையோ பிரமுகர்களுக்கு விளக்கத்தை அனுப்பியிருக்கலாம் . அவர்கள் அதை பெருமையாக பிரசுரித்திருப்பார்கள் .
ஒருவர் தனக்கு தான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார் என்றே பகீரங்கமாக கூட எழுதினார் . அவர் யாருக்கு விளக்கம் எழுதினார் . எனக்கு தான் கடிதமாக எழுதினார் .அந்த கடிதம் உலகெங்கும் உள்ளவர்களால் விவாதிக்கப்பட்ட போது ,(இணையத்தில் விவாதிக்கும்போது கூட R P ராஜநாயஹம் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் என்பதை குறிப்பிட விரும்பாமல் அசூயையுடன் மறைத்து விவாதித்த பிரமுகர் உண்டு ) இங்கே உள்ள எழுத்தாள பிரமுகர்களும் மூச்சே விடவில்லை , அவுட் லுக் ,குமுதம் ,காலச்சுவடு ,உயிர்மை என எல்லோரும் அந்த கடிதத்தை புறக்கணித்தனர் . ' இந்த கடிதம் R P ராஜநாயஹம் பெயருக்கு ஏன் எழுதப்பட்டது ? 'என்ற கோபம் தான் காரணம் . கனடாவில் பதிவுகள் .com இல் பிரசுரமான கடிதத்தை இங்கே தமிழக பத்திரிகைகள் ,எழுத்தாளார்கள் மூச் விடவில்லை . ' எனக்குதான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார்.' என்று மார் தட்டி சொன்ன ஒரு பிரமுகரிடம் ' அசோகமித்திரன் விளக்கம் பற்றி ரொம்ப எதிர்பார்த்த நீங்கள் கூட இந்த கடிதம் பற்றி ஏன் பேசவில்லை ' என நான் நேரிலேயே கேட்டேன் .அசோகமித்திரன் தனக்கு பதில் எழுதியிருந்தால் தான் அது பற்றி எழுதிஇருக்க முடியும் என அலட்சியமாக பதில் சொன்னார் . எனக்கு பதில் எழுதி விட்டார் என்பது தான் எல்லோருக்கும் கோபம் . இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரனிடம் ' என்ன இவர் நீங்க தனிப்பட்ட முறையில் எழுதின கடிதத்தை இப்படி பகீரங்கமாக்குகிறார் " என்று மூட்டி விட முயற்சித்திருக்கிறார் . அசோகமித்திரன் தான் இதை கைப்பட எனக்கு எழுதி என்னை டைப் செய்து பதிவுகள் .com இல் பிரசுரிக்க சொன்னவர் என்பதை அந்த பொறாமைக்காரர் அறியவில்லை .
அந்த கடிதம் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
அந்த கடிதம் பற்றி இங்கே குறிப்பிட காரணம் உண்டு .
நண்பர் ராஜூ " ஏன் ரஹ்மான் ஆஸ்கார் சாதனை பற்றி ஒன்றும் நீங்கள் இங்கு பதியவில்லை " என்று ஆதங்கத்துடன் சென்ற பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறார் . அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு . அசோகமித்திரன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் ஒரு வார்த்தை "My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. "இந்த வார்த்தைகளில் தான் அசோகமித்திரனின் ஒட்டுமொத்த இலக்கிய வெற்றி அடங்கியுள்ளது .
' R P ராஜநாயஹம் - அசோகமித்திரனின் சீடன் 'என்று ஒரு முத்திரை எனக்கு உண்டு .
'ரஹ்மான் பாராட்டு' கோரஸ் க்ரூப்பில் நானும் இணைய வேண்டிய அவசியம் இல்லை . நான் Slum dog Millionaire படம் பார்த்தேன் .Slum dog Millionaire எனக்கு மிகவும் பிடித்திருந்தது . இவ்வளவு போதும் .
"காலத்தால் மறக்கமுடியாத புகைப்படம் "என்ற பதிவை மீண்டும் படிக்கவும் .
"படைப்பு ,படைப்பாளி ,காவியம் ,திரைக்காவியம் ,ஓவியம் ,இசை அனைத்தையுமே கேலி செய்யும் கர்னல் ரூபன் ,லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன் .விம்மி அழுதேன்."
என பதிவு செய்த போது ரஹ்மானின் வெற்றிசெய்தி சுடசுட என் காதில் விழுந்து கொண்டிருந்தது .ரஹுமானையும் மனதில் வைத்து தான் இந்த வார்த்தைகளை நான் எழுதியுள்ளேன் என்பதை தயவு செய்து அறியவும் .
புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டுமல்ல , அங்கிருந்து மீண்டு விட்டாலும் வாழ்வை இழந்து சொல்லொணா துயரம் முகாம்களில் அனுபவிக்கும் இலங்கை தமிழ் மக்களை நினைக்கும்போது, தீர்வுகள் எதுவும் சிறிதும் கண்ணுக்கு தெரியாத நிலை என்ற உண்மையும் ,இந்திய அரசாங்கத்தின் வக்கிர மௌனமும் சேர்ந்து எந்த கொண்டாட்டத்திற்கும் மனம் இடம் தரவில்லை .
ஏ ஆர் ரஹ்மானுக்கு "Achievement Depression" என்ற மன அழுத்த வியாதி வந்து விடக்கூடாது என்று மட்டும் நான் சொல்லவிரும்புகிறேன் ! அளவுக்கு மீறி வெற்றிகளை ரஹ்மான் பார்த்து விட்டார் !! இனியும் பார்க்கபோகிறார் .
கமல் , அமீர் நடிப்புக்காக ஆஸ்கார் எதிர்பார்த்தவர்கள் . எதிர்பார்க்கிறவர்கள் .ரஹ்மானுக்கு இசைக்கு கிடைத்திருக்கிறது ,இசை வேறு நடிப்பு வேறு என்று தயவு செய்து யாரும் எனக்கு பால படம் சொல்லவேண்டாம் .ஏக்கம் , ஏக்கம் தான் .
ஏங்கிகொண்டிருக்கும் கமல் ஹாசன் , அமீர்கான் போன்றவர்களுக்கு ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி நிச்சயம் காதில் புகை வரசெய்திருக்கும்.மனித இயல்பு தானே! எனக்கு அசோகமித்திரன் கடிதம் எழுதிய போது கூட இங்கே எத்தனையோ பிரமுகர்களுக்கு காதில் புகை வரத்தானே செய்தது . 'அவுட் லுக் சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல அசோகமித்திரனுக்கு R P ராஜநாயஹம் தானா ஆள் ? நாங்கள் எல்லாம் இல்லையா ?' என்று பொருமல் வரவில்லையா ?
...
அசோகமித்திரன் எனக்கு எழுதிய அந்த கடிதம் கீழே:
NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !
- ASHOKAMITRAN -
ASHOKAMITRAN (J. THIYAGARAJAN)
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042. Date: 31.05.2005
DEAR R.P.RAJANAYAHEM,
Your kind letter.
I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine. I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms i do not use at all. Also the tone is not mine. Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins.
In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time.
All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee. It is very difficult to convey the tone of the answers. As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And i had no control over what finally appeared in print.
This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.
Yours Sincerely,
ASHOKAMITRAN
To read more about A R RAhman read the following blog. No one knows such a detail about Rahman and his father etc http://musicshaji.blogspot.com/2009/02/blog-post.html "சென்னைக்கு அருகே கிழான்னூர் என்ற ஊரில் புகழ்பெற்ற ஹரிகதைக் கலைஞராக விளங்கிய ராஜகோபால பாகவதருக்கு மகனாகப்பிறந்த ஆர்.கெ சேகரின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகர். அவர் தமிழக அரசில் ஒரு மின்சாரவேலைக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே மலையாளத் திரையிசையில் உதவியாளராக நுழைந்தார். பெரும்பாலும் இசைமரபுகளை சுயமாகவே கற்றுத்தேர்ந்த ஆர்.கெ.சேகர் கர்நாடக இசையின் நுட்பங்களை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அறிந்துகொண்டார். அவருக்கு ஹார்மோனியத்தில் அபூர்வமான தேர்ச்சி இருந்தது. அவரது இசைக்கோர்ப்புத்திறனை உணர்ந்த எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் இந்திப்படங்களில் பணியாற்ற அவரை அழைத்தார்."
ReplyDelete“தன் 31 வயதில் பதினேழுவயதான கஸ்தூரியை ஆர்.கெ.சேகர் மணம்புரிந்துகொண்டார். திருப்பதியில் அவர்களின் திருமணம் நடந்தது, சென்னையில் வாழ்ந்தனர். முதல் குழந்தை காஞ்சனா. அதன் பின் அவரது ஒரே மகன் திலீப். பாலா, ரேகா ஆகியோர் மற்ற இரு குழந்தைகள்.”
http://shajiwriter.blogspot.com/2009/02/oh-dear-life-what-is-missing-why-my.html
A R Rahman: From R K Sekhar to Oscar
“R K Sekhar was the son of Harikatha exponent Rajagopal Bhagavathar of Kizhanoor near Chennai and his full name reads Rajagopal KulaSekhar. He started his career in Tamilnadu Electricity Board as an Electrician. But he did not waste much time there before joining Malayalam film music industry as an assistant to composer Dakshinamurthy. R K Sekhar who learnt the grammar of music by and large on his own, garnered the framework of Carnatic music from Dakshinamurthy. It is said that even composers like S.D. Burman, recognizing his talent in arranging music, invited him to assist him in Hindi film music.
“At his age of 31, R.K. Sekhar, married 17 years old Kasthuri. Their wedding was conducted in Tiruppathi and they lived in Chennai. Kanchana, the daughter was their first child. Then came Dileep their only son, followed by the girls Bala and Rekha.”
//ஏங்கிகொண்டிருக்கும் கமல் ஹாசன் , அமீர்கான் போன்றவர்களுக்கு ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி நிச்சயம் காதில் புகை வரசெய்திருக்கும்//
ReplyDeleteஉங்களது பதிவுகளை வழக்கமாக பார்வையிட்டு சென்றாலும் சில சமயம் உடன்படாத எழுத்துக்கள் காரணம் கொண்டும், பதிவின் சாரம் அறியாமை கொண்டும் மவுனம் சாதித்து போய் விடுவதுண்டு.ஆனால் இந்த முறை எனக்கு புகை வருவதால் தடுக்க இயலவில்லை:).ரகுமான் வெற்றி இசைக்கானது.கமல்,அமீர் கண்களும்,பரிசுக்கான பார்வையும் நடிப்புக்கானது.இரண்டையும் ஏன் குழப்புகிறீர்கள்?
Enlightening sir. Detractors of Ashokamitran should at least realize that they cannot just tar the esteemed author with ugly casteist brush.
ReplyDeleteMr R P Rajanayahem, Befitting reply to my concern.
ReplyDeleteNice to know the depth in the sentence...
ஏ ஆர் ரஹ்மானுக்கு "Achievement Depression" என்ற மன அழுத்த வியாதி வந்து விடக்கூடாது என்று மட்டும் நான் சொல்லவிரும்புகிறேன் ! அளவுக்கு மீறி வெற்றிகளை ரஹ்மான் பார்த்து விட்டார் !! இனியும் பார்க்கபோகிறார் .
Thanks.