Share

Feb 4, 2009

காலம் கெட்டுப்போச்சு

' ம்ம் ..காலம் கெட்டுபோச்சு '- சாரங்கபாணி 'நாம் இருவர் ' படத்தில் சலிப்புடன் நாற்பதுகளில் சொல்வார் . அறுபதுகளில் 'குடும்பத்தலைவன் ' படத்தில் வி கே ராமசாமி 'வெரி பேட் . காலம் ரொம்ப கெட்டுபோச்சு ' என சொல்லிகொண்டே வீட்டுக்குள் வரும்போது எம் ஆர் ராதா ' என்னடா காலத்தை தராசுலே வச்சு நிருத்துக்கிட்டே வர்றே ! என்ன விஷயம் ' என்று சர்காஸ்டிக் ஆக கேட்பார் .

காலம் கெட்டுபோச்சு என்ற சலிப்பு காலகாலமாக இருக்கிறது .

" த்யூதம் சலயதாம் அஸ்மி " சூதாட்டக்காரர்களில் நான் 'சூதாட்ட கலை '. கிருஷ்ணன் கீதையில் சொல்லிவிட்டதால் நல்லது கெட்டது பற்றி தீர்மானமாக சொல்லவே முடியாது .

' பணம் இருப்பது செலவழித்திட . சூதாட்டத்தை விட வேறெந்த செலவு தூய்மையானது ' தாஸ்தயேவ்ஸ்கி கேட்கிறார் Master of Petersburg என்ற ஜெ எம் கூட்சி யின் நாவலில் !

Masochஎழுதிய Venus in Furs நாவலில் பெண் என்பவள் குண இயல்பு அற்றவள் . பெண் அவளை எடைபோடுபவர்கள் நம்புவது போல அத்தனை தீயவள் அல்ல . எடை போடுபவர்கள் நினைப்பது போல நல்லவள் அல்ல . மிக நல்லவள் மட்டரகமாக ஆகி விடுவாள் . மிக கெட்ட பெண் நினைத்தே பார்க்க முடியாத உன்னத நிலைக்கு உயர்ந்து தன்னை அருவருத்து ஏசியவர்களை வெட்கி வேதனைப்பட செய்து விடுவாள் .

ஆண் ரொம்ப சுயநல வாதியாய் உள்ளவனாய் இருக்கின்ற நிலையிலும் கெட்டவனாக இருக்கும்போது கூட உத்தம கொள்கைகளை கடைப்பிடிப்பவன் .இப்படி தான் சரித்திரம் முழுக்க கலாச்சாரம் ஒழுக்கவாதிகளை, ஒழுக்கவிதிகளை உண்டாக்கியிருக்கிறது .

அனைத்து நாகரீக மறுமலர்ச்சி யையும் தாண்டி இயற்கையால் படைக்கப்பட்ட முந்தைய நிலை மாறாமல் கலப்படமின்றி அப்படியே தான் இருக்கிறாள் பெண் .

Masoch சொல்வதை புரிந்து கொண்டால் பெண்ணை காப்பாற்றவேண்டும் ,ஒழுக்கம் பேணப்படவேண்டும் என்ற கலாச்சார காவலர்களின் அதீத பதட்டம் நீங்கி விடும் .

பெண்ணை முன்னிறுத்தி பெரும்பாலும் அவள் மீதான தீர்ப்பாக 'காலம் கெட்டுப்போச்சு' அடிக்கடி சொல்லப்படுகிறது . ஏன் ?

2 comments:

  1. சார்!
    அது நாகரிகம்தானே? (மன்னிக்கவும் குற்றம் கண்டுபிடிப்பது தமிழனின் குணம்!)

    எத்தனை நாள் எழுதுவீங்களோ தெரியலை, ஆனா ஒவ்வொன்னும் முத்தா இருக்கு!

    தொடர்ந்து எழுதுங்கள் (சுஜாதாவுக்கு எஸ்.ஏ.பி எழுதின அளவிற்கு முக்கியத்துவம் இல்லேன்னாலும், ஏதோ நம்மாலான வரி!)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  2. சொல்லற ஆணுக்கு வயசாயிடிசின்னு அர்த்தம்...

    yenna thalaiva correcta??

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.