Share

Feb 10, 2009

நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும்


நாகேஷ் நடிப்பு - கமல் ஹாசன் டி வி யில் குறிப்பிடும் போது 'கலைவாணரை அடுத்து நாகேஷ் தான் .சிவாஜி கணேசன் மீது உள்ள அதே மரியாதை நாகேஷ் மீதும் எனக்கு உண்டு ' என்றார் . இது ஏற்கனவே கமல் அடிக்கடி சொன்ன விஷயம் தான் .
கலைவாணர் ஒரு ஜீனியஸ் . ஆனால் நாகேஷ் அப்படியல்ல . கலைவாணருக்கு திரையுலக அந்தஸ்து பிரமாதமானது . அதை விட பிரமாதமானது சமூக அந்தஸ்து !ஒரு முறை தமிழக முதல்வர் எம் ஜி ஆர் குறிப்பிட்டார் " இன்று கலைவாணர் உயிரோடு இருந்தால் இன்று அவர் அல்லவா தமிழக முதலமைச்சர் !"
கலைவாணர் களத்தை வெற்றிகொண்டவர் . முப்பதுகளில் ,நாற்பதுகளில் நகைச்சுவையில் சிந்திக்க வைத்த கலைஞர் தான் .எம்ஜியாரின் 'மதுரை வீரன்,' 'சக்கரவர்த்தி திருமகள்' ,சிவாஜியின் 'ராஜா ராணி' படங்கள் வரை ஐம்பதுகள் வரை வெளுத்துகட்டியவர் பன்முகத்தன்மை கொண்டவர் .அவரே பாடுவார் . தலை சிறந்த வள்ளல் . இது போல சிறப்புகள் நாகேஷுக்கு சுத்தமாக கிடையாது .

1958ல் நடிக்கவந்த நாகேஷ் நான்கு வருடம் போராடி1962 ல் தான் 'நெஞ்சில் ஒரு ஆலயம் 'தான் சரியான திருப்புமுனை .அதன் பிறகு ஒரு எட்டு ஒன்பது வருடம் காமடியனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது .கலைவாணரை இந்த ஒன்பது வருடம் தாண்டிபோய் விட்டது .
சந்திர பாபு போல நாகேஷ் பாட முடியாது சந்திரபாபு ஒரு ஆல்ரௌண்டர் . ஆனால் நாகேஷின் ,பவர் , டைமிங் , வசன உச்சரிப்பு ! சந்திரபாபு நெருங்கவே முடியாது . சான்சே இல்லை .
தங்க வேல் ஐம்பதுகள் துவங்கி கடைசி வரை நீர்த்துபோகாமல் ஒரே சீராக நடித்தவர் . நாகேஷ் எழுபதுகளில் சொதப்பியவர் . நாகேஷ்பின்னாளில் Form இழந்துவிட்டவர் .ஆனால் தருமி , வைத்தி , செல்லப்பா ரோல்களை கலைவாணர் ,தங்கவேலு போன்றவர்கள் தலை கீழாய் நின்றாலும் நாகேஷ் தரத்திற்கு செய்திருக்க முடியாதே !
சோ ஒரு முக்கியமான ஆளுமை . சிரிப்பு நடிகர் என்ற தகுதிக்கும் அப்பால் வசனகர்த்தா . அதை விட எழுபதுகளில் ஆரம்பித்து தனி மனிதனாக ,தைரியமாக பத்திரிக்கையாளராக இந்திராகாந்தி ,கருணாநிதி ,எம்ஜியார் ஆகியோரை கடுமையாக விமர்சித்த ஆண்மையாளர் . இந்த யோக்யதையும் நாகேஷுக்கு கிடையாது . ஆனால் நாகேஷின் நடிப்புக்கு முன் சோ வின் நடிப்பு தூசு தான் .
தேங்காய் சீனிவாசன் போல வசனங்களில் கொனஷ்டை அற்புதமாக நாகேஷ் செய்ததே இல்லை . என்றாலும் நாகேஷின் அறுபதுகளின் சாதனையை தேங்காய் நெருங்கவே முடிந்ததில்லை .
கவுண்டமணி ,வடிவேலு , விவேக் எல்லாம் தாங்களே நாகேஷ் முன் வாய் பொத்தி நிற்க வேண்டியது தான் .
அறுபதுகளில் சிவாஜி , பாலையா , எம் ஆர் ராதா ஆகியோரை நாகேஷ் எதிர்கொண்டு தூள் கிளப்பினார் . அவர்களுக்கு சரியான கம்பானியன் நாகேஷ் !Full form ! எல்லாமே சிக்ஸர் , பௌண்டரி தான் . மிக குறைந்த ஓவர்களில் திரிபில் செஞ்சுரி !
அந்த குறுகிய கால சாதனை நாகேஷுக்கு அமரத்துவத்தை வழங்கி விட்டது.
குணசித்திர நடிப்பு - குணசித்ரபாத்திரங்களில் நடிக்கும்போது நாகேஷ் மமதையுடன் நடிப்பார். உதாரணம் : 'பூவா தலையா' . அது ஒரு பெரிய குறை . கொஞ்சம் ஓவரா சோகத்தை பிழிவார் .அறுபதுகளிலேயே இந்த வேலையை ஆரம்பித்தவர் தான் நாகேஷ் . உதாரணம் : முத்து சிப்பி , மேஜர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் .
பின்னால் எழுபதுகளில் துவங்கி நகைச்சுவை நடிகனாக அல்லாமல் அவர் செய்த குணச்சித்திர நடிப்பில் எஸ் வி ரங்காராவ் , பாலையா , ஏன் எஸ் வி சுப்பையாவை கூட கடைசிவரை நாகேஷால் தாண்ட முடிந்ததே இல்லை .
 ( அவர் சிறப்பாக செய்தவை :' உனக்காக நான்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ) அறுபதுகளின் தலை சிறந்த குணச்சித்திர நடிப்பில் அவர்கள் சாதித்ததை இன்று வரை எந்த நடிகரும் மீறி தாண்டி நாகேஷ் உட்பட யாருமே போக முடிந்ததில்லை .குணச்சித்திர நடிப்புக்காக தயவுசெய்து மேஜர் சுந்தர ராஜனை சிபாரிசு செய்துவிடாதீர்கள் .மேஜர் Poor man’s Rangarao! கதாநாயகனாக சாதிக்காமல் 'அக்னிநட்சத்திரம்' துவங்கி குணசித்திர நடிப்பில் பேர் வாங்கிய விஜயகுமார் , ஜெய் கணேஷ் , இப்ப சேரன் படத்தில் அப்பா ரோல் சிறப்பாக செய்த ராஜ் கிரண் வரை யாருமே ரங்காராவ் நடிப்பை நெருங்க முடிந்ததில்லை .இவர்களை குறை சொல்லக்கூடாது . ரங்காராவ் ,பாலையா நடிப்பு ஜெயிக்கமுடியாத சாதனை .
எம் ஆர் ராதா காலத்தை வென்ற கலைஞன் என்று சொன்னால் அது Cliché! ராதாவை யாரோடும் கம்பேர் செய்வது அபத்தம் . தனிக்காட்டு ராஜா !


பின் குறிப்பு : இந்த ' நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும் ' என்ற இந்த பதிவு இந்த ப்ளாகில் என் முன்னூறாவது பதிவு .

8 comments:

  1. நீ என்னாதான் சொல்ல வார நயனா. ஒண்ணுமே பிரிய மாட்டேங்குது. படிச்சி முடிச்ச பின் குவார்டர் அடிச்சா மாறி கீது.

    ReplyDelete
  2. Quite incisive analysis. I agree with you Ranga Rao is peerless character artist. He essayed his roles wonderfully and carried them with such elan.

    ReplyDelete
  3. Contragulations & Celebrations

    Cheers

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்............. நான் தினமும் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்... பத்தி எழுத்து பற்றி சாருவின் விளக்கத்திற்கு சரியாக பொருந்துவது உங்கள் எழுத்துக்கள்.. short and smart...
    அன்புடன்,
    பாஸ்கர்
    gnanabaskarr@yahoo.com

    ReplyDelete
  5. Hi this is arun from thamizhstudio.com, your article about nagesh really nice.. i already mail to you.. but u did not reply.. just see my website www.thamizhstudio.com, and share your comments.. and if you are in india then please give your mobile no to: thamizhstudio.com, we will discuss...

    thanks,
    thamizhstudio.com

    ReplyDelete
  6. about 25 years ago, my dad who is an ardent MGR fan and illiterate like most of them, would always say, nobody can beat SV Rangarao. I was too young to understand that or even feel that in the movies i have seen of him. But when i really grew up and reached my twenties a decade ago, i could clearly see why Dad was saying what he was saying. No body can match up SVR. he is a class of his own. too bad his son couldn't live up to that.
    And also, my Dad told me in his peak days, Nagesh once asked MGR as to how many moves he (MGR) had acted with him? and that's when he dumped Nagesh and started preferring Thengaai and later Suruli etc. Is there any truth behind this?

    ReplyDelete
  7. Wonderful post sir..
    Your thoughts on cinema have been streaming down as we could make out reading it..

    Congrats for a Majestic and Entertaining Triple Century!!!

    It is good coincidence that you mentioned 'triple century in less balls' in your 300th post..It is a fitting comment on yourself..

    ReplyDelete
  8. கறுப்பு-வெள்ளைக் காலங்களில் கொஞ்சம் நடந்து வந்த திருப்தி இருக்கு - இதை படிக்கும்போது!
    நாகேஷ் ஒரு நடிகர்.. சிறப்பாக தன் வேலையை செய்தார்.. செய்து முடித்தார்.

    வள்ளல் என்ற அடையாளம், அரசியல் ஆளுமை, சிந்திக்கத் தூண்டும் தத்துவங்கள் இது போன்ற இணை வாத்தியங்கள் இல்லாமல் சோலோவாக காமெடியை நடித்தார் (சில சமயம் குணசித்திரத்தை)

    கலைவாணர் வள்ளலாக நிறைய சொம்புகளைத் தூக்கிக் கொடுத்திருப்பார் என்பது உண்மையே - ஆனால் இந்த தன்மையை ஒரு அளவுகோலாக நகைச்சுவை நடிப்புக்கு பயன்படுத்தலாமா?

    முத்துராமன் நல்ல நடிகர். சிவாஜியின் நிழலிலேயே பிரமாதமாக வளர்ந்தவர். அவரின் இனிய குரலுக்கு பாந்தமில்லாத முரட்டு / ஆவேச வேடங்களை ஏற்று நடிக்கும் போது மட்டும் சற்றே அபஸ்வரமாக இருக்கும்.

    இந்த வகையில் குரலை கனமான பாத்திரமாக ஏவுவது என்பது பாலையா, ரங்காராவுக்கு ஜுஜுபி! பலே பாண்டியாவில் மாப்ளேளேளே என்ற கதறல் பாட்டுக்கு, எம் ஆர் ராதா கொடுத்த குரல் இன்னும் நினைவின் அலமாரியில் நிறைந்திருக்கிறது.

    இப்படி குரல், ஆளுமை, உடல்மொழி எல்லாம் சேர்ந்துதான் பாத்திரத்தை மீறி ஒரு நடிகனை ரசிக்க வைக்குது.

    அப்புறம்.. இந்த அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என்ற கால அளவைக்குள் நடிப்போ அதன் பரிமாணமோ கட்டுப்படாதது என்பது என் எண்ணம். எல்லா காலத்திலும் கலைஞன் தன் பணியை (மட்டும்) செய்து கொண்டுதான் இருக்கிறான். அல்லவா?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.