Share

Feb 6, 2009

விளையாட்டு பருவம் .

டவுன் பஸ் சில் கல்லூரி நண்பர்களுடன் போய்கொண்டிருந்தேன் . படிக்கிற காலம் கொஞ்சம் வேடிக்கை வினோதம் நிறைந்தது . பஸ்சில் மீனாக்ஷி காலேஜ் பெண் ஒருத்தியை பார்த்து சீனி கமன்ட் அடிக்க ஆரம்பித்தான் . இவனை கட்டுப்படுத்துவது எப்படி ? தற்செயலாக ஒரு நல்ல ஐடியா ! ' டே என் சொந்தக்கார பொண்ணுடா . பெரியம்மா மகள் .எனக்கு தங்கச்சிடா ' என்றேன் . சீனி பதறிபோய் 'சாரி ..சாரிடா ' மிரண்டு விட்டான்.அடங்கி விட்டான் . நாங்கள் அப்போது இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது .இறங்கினோம் . பஸ் புறப்பட்டதும் தான் அவனிடம் சொன்னேன் . 'நான் சும்மா தாண்டா மாப்பிள்ளை சொன்னேன் . ஒனக்கு எப்படி கடிவாளம் போட்டேன் பார்த்தியா '
சீனி ' டே துரோகி ! நயவஞ்சகா !! அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள் . அவள் கூடவே போவதாக இருந்தேன் . கெடுத்து குட்டி சுவராக்கி விட்டாயே . என் வாழ்க்கையில் விளையாடி விட்டாயே , சைத்தானே அப்பாலே போ ' என பலவாறு திட்டி தீர்த்து விட்டான் . முத்து தான் விழுந்து ,விழுந்து சிரித்தான் . ' டே மாப்பிள்ளை ! சூப்பர் ரா !' என்று என்னை பாராட்டினான் .
மற்றொரு நாள் . அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கிளாஸ் கேன்சல் ஆனதால் பிளின்ட் ஹௌஸ் முன் அமர்ந்திருந்தோம் . ரவி , முபாரக் , ஜோ , முத்து , சீனி எல்லோரும் .ஒரு டீச்சர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்வது கல்லூரியின் முன்பக்கம் தெரிகிறது . உடனே சீனிக்கு மூக்கு வியர்த்து விட்டது . ' டே அந்த டீச்செர் செம பிகர்டா ' என்று ஆரம்பித்தான் . நிமிர்ந்து பார்த்தால் பகீர் என்று இருந்தது . முத்து வோட அக்கா . உடன் பிறந்த சகோதரி . அவருக்கு என்னையும் நன்கு தெரியும் .
பதறிபோய் நான் ' டே முத்துவோட அக்காடா . " முத்து வும் " டே என் அக்கா " என்கிறான் . சீனி " கொலைகாரன் ஆயிடுவேண்டா . இனிமே ஏமாற மாட்டேன் ." என்று கூப்பாடு போட்டு விட்டு ஓடிபோய் ' டீச்செர் ! சூப்பர் டீச்சர் ! ஆகா ! எனக்கெல்லாம் சின்னபிள்ளையிலே இப்படி சூப்பர் பிகர் டீச்சர் கிடைக்கலையே .டாட்டா டீச்செர் .. அய்யய்யோ டீச்சர் போறாங்களே ' என்று கண்டவாறு கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டான் .
இந்த அபத்தக்காட்சி முடியும் வரை வேறு வழியில்லாமல் ஆளுக்கொரு மரத்தின் பின்னால் நானும் முத்துவும் ஒளிந்து கொள்ளவேண்டியாதாகி விட்டது .

3 comments:

  1. Hi Rajanayahem

    I hope you all are fine. Did you go to Tirupur Book Fair? I could not get to see you there.

    ReplyDelete
  2. I went to Bookfair yesterday evening.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.