Share

Feb 28, 2009

வன்னி ரத்தகண்ணீர்


RP Sir

I saw this letter from Vanni on one of the websites..heart wrenching...

வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.-

"நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும்அகதி முகாமில் வாடும்புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில்இருந்த உடைந்தபென்சிலின்ஒட்டுத்துண்டில்இந்தக்கடிதம்எழுதப்படுகிறது)நலமுடன்இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே?குண்டு விழாதவீடுகளில்,அமெரிக்காவுடனானஅணுகுண்டுஒப்பந்தத்தில்கையெழுத்திடுவதுபற்றி அளவளாவிக்கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில்விழுந்தசிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போலபல்லாயிரக்கணக்கானதமிழ்க்குழந்தைகளைஅநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவதுநெடுந்தொடரின்நாயகிக்காகக் கண்ணீர்விட்டுக்கரைந்திருப்பீர்கள்......என் அம்மாவும்அப்பாவும்அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள்வீட்டுவரவேற்ப்பறைகளில்அரைகுறை ஆடைகளுடன்அக்காமாரெல்லாம்ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்"அரையிறுதிச் சுற்றுமுடிவுக்குவந்திருக்கும்.அண்ணனும், தம்பியும்நன்றாகப்படிக்கிறார்களா? அம்மா,அப்பாவின்மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலைவாரிவிட்டு, பட்டம்மாவீட்டில்அவித்த இட்டலிகொடுத்துப் பள்ளிக்குஅனுப்பிய அண்ணனும்இப்போது இல்லை,நீண்ட தேடலுக்குப்பின்னர் கிடைத்த அவன்கால்களை மட்டும்மாமாவும்,சித்தப்பாவும்வன்னிக் காடுகளில்நல்லடக்கம்செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும்என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கைகிரிக்கெட்அணியின் இந்தியச்சுற்றுப் பயணத்தை, இரவுபகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்கள்....அதனால்தான் எழுதவில்லை.........ஒலிம்பிக் தீபத்தின்சுடர்களை உலகம்முழுவதும், என்னைப்போலஒரு மலைநாட்டு திபெத்சிறுவனும், அவன்இனத்துப்பெரியவரும்சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள் நினைவுவந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின்உதவியோடு, இலங்கைராணுவத்திற்கு நன்றிசொல்லும்திரைப்படச் சுருளின்பிரதிகளும் நெஞ்சில்நிழலாடியது.ஒரு பக்கம், இரங்கற்பாஎழுதிக் கொண்டு,மறுபக்கம், நவீனஆயுதங்களைஅனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித்தலைவர்கள் எல்லாம்நலமா தமிழர்களே?இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும்போது மறக்காமல் ஒருஇரங்கற்பாஅனுப்புங்கள், சாவின்மடியில் எங்களுக்குஒருதமிழ்க்கவிதையாவதுகிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின்மறைவான இடத்தில்நீங்கள் இலங்கைராணுவத்திற்குபயிற்சி அளிக்கும்போது, குழந்தைகளையும்,கர்ப்பிணிப்பெண்களையும்வலியின்றிக் கொல்வதுபற்றி ஒருவகுப்பெடுத்துவிடுங்கள். கொஞ்சம்பாவமாவதுகுறையட்டும்.......மாஞ்சோலையில் ஒரு மாலைநேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின்பிஞ்சு உடல்நான்கைந்தாய்சிதறடிக்கப்பட்ட அந்தகோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய்அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள் இருக்கும்பள்ளிக்கூடங்களைதேடிக் கண்டு பிடித்துகொலைவெறியோடு உங்கள் "நேசநாட்டு" விமானங்கள்குண்டு மாரி பொழிந்தபோதுநீங்கள் இந்தியவிடுதலையின் பொன்விழாக்கொண்டாட்டங்களுக்கானகுறுஞ்செய்திவாழ்த்துக்களில்களித்திருந்தீர்கள்,உலகத்தொலைக்காட்சிகளின்நீங்கள் பார்த்துமகிழும் முதன் முறைத்திரைப்படங்கள்தடை படுமே என்று தான்அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளைகொன்று குவித்து,நிர்வாணமாக்கி, இறந்தஉடலுக்குக்கொடுக்கின்ற இறுதிமரியாதை இல்லாமல், எம்இறப்பை எள்ளி நகையாடியஉங்கள் "சார்க்"கூட்டாளியின் கொடியமுகம் கண்ட போதே எழுதிஇருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சிமாநாடுகளில் கவனமாய்இருந்தீர்கள்,பெண்களின்இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சிதுவக்கியகேப்டன்களின்பின்னால்அணிவகுத்துநின்றீர்கள், நீங்கள்போட்ட வாழ்ககோஷங்களின்இரைச்சலில்எங்கள் நிஜக்கேப்டன்களின்வீரமரணம் கேள்விக்குறியாய்க் கலைந்துபோனது,தமிழர்களே?அப்பாவின்வயிற்றை அணைத்துக்கொண்டு, செப்பயான்குளத்தில்முங்கி எழுந்தநினைவுகளை மனதில்சுமந்து கொண்டு, வாரம்இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய்ஒழுகும் தண்ணீர்நின்றுபோவதற்குள் ஓடி வந்துகுளித்து விடுகிறேன்அகதி முகாமில்.முகாமின், தகரத்தடுப்புகளின்இடைவெளியில் தெரியும்பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும்மதிய உணவின் வாசமும்,அம்மாவின் மடியில்இருந்து,எப்போதும் கிடைக்கும்அன்பையும் எண் பழையவாழ்வையும் நினைவுபடுத்தும்.ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்துபாய்ந்து ஓடிவரிசையில்நிறுத்தி விடும்,அளந்துகொடுக்கப்படும்அவமானச்சோற்றுக்காய்.......அப்போதெல்லாம் எழுதத்தோன்றும் எனக்கு, ஆனால்நீங்கள் பீஸாக்கடைகளின்,வட்ட மேசைகளில்அமர்ந்து ஆங்கிலம்பேசிக்கொண்டிருந்தீர்கள்,எழுதத்தோன்றவில்லை.....எனக்கு....அமைதியாய் விடியும்பொழுதும்,அழகாய்க் கூவும்குயிலும்,தோகை விரிக்கும்மயிலும்,காதல் பேசும்கண்களும்,தாத்தா பிடித்தமீன்களில் அம்மா வைத்தகுழம்பும்,தாமரை மலரின் தாள்கள்பறிக்க நாங்கள்குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப்பாண்டி அண்ணன் வேடுகட்டக் குவித்து வைத்தமணலும்,அதில் சங்கு பொறுக்கிவிளையாடிய என்தம்பியின் கால்தடங்களும்,கருவேலன் காடுகளில்பொன் வண்டு பிடித்த என்பழைய நினைவுகளும்,இனிமேல் எனக்குக்கிடைக்கவே கிடைக்காதாஉலகத் தமிழர்களே?எல்லோரும் சேர்ந்துமூட ஞானிக்கு எழுதியநீண்ட கடிதமெல்லாம்வேண்டாம்அண்ணா, என்கேள்விகளில் எதாவதுஒன்றுக்கு, உங்கள்வீட்டில் கிழித்துஎறியப்படும்நாட்காட்டித்தாள்களின்பின்புறமாவது பதில்எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........ஏனெனில் நீங்கள்எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டு போனஇனத்தின்விடுதலையும், துவண்டுபோன அகதிகளின்வாழ்க்கையின்மறுபிறப்பும்இருக்கிறது.வலி கலந்தநம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடிஉறவு,தமிழீழத்திலிருந்து! முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!

regards

Kannan


Saturday, 28 February, 2009


Feb 27, 2009

பியானோ டீச்செரும் மிஸ் பாக்கியமும்

நோபெல் பரிசு வாங்குவதற்கு கூட நேரில் போக மறுத்து விடியோ கொடுத்து விட்ட விசித்திர எழுத்தாளர் ஜெளினிக் (Elfriede Jelinek). ஆஸ்திரிய பெண் .

இவருடைய "பியானோ டீச்சர்" பெண் பாலியல் நாவல் .
Piano Teacher Stabs at social convention and sexual oppression, reveals the absurdity of society’s clichés.
இது மைக்கில் ஹேனக் இயக்கி La Pianiste (2001 film)பிரஞ்சு படமாக வந்திருக்கிறது . நாவல் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் . நாவல் Beautiful Dark Poetryஎன்றால் சினிமா Dark Poetry!

இந்த பியானோ டீச்சர் என்று கிடையாது . எந்த ஒரு இலக்கியப்படைப்புக்கும் திரைப்படமாக்கப்படும்போது எப்போதும் ஒரு இழப்பு உண்டு . அது வாசகனாய் இருக்கும் சினிமா ரசிகனுக்கு மட்டுமே புரியும் . இலக்கியமும் திரைப்படமும் !

பியானோ டீச்சர் எரிக்காவின் வாழ்வு ஒரு பாலியல் யுத்தம் !Battle of the Sexes!
தன் மாணவி தன் மாணவ காதலனுடன் பழகுவதை கூட பொறுக்க முடியாமல் அவள் இசை எதிர்காலத்திற்கே குந்தகம் விளைவிக்க முயலும் சேடிஸ்ட் . வால்டேர் தன்னை துன்புறுத்த வேண்டும் என விரும்பும்Masochist. வால்டர் -எரிக்கா பால் உறவு Sadomasochism. எரிக்கா தன் தாயை கற்பழிக்கிற லெஸ்பியன் . லெஸ்பியன் ரேப் காட்சியில் தாயாக ஆன்னி என்ற நடிகை ,மகள் பியானோ டீச்சர் எரிக்காவாக நடிகை இசபெல் இருவரும் நடிக்க வேண்டியிருந்திருக்கிறது .
படம் முழுவதும் பியானோ இசை விருந்து தான் .

இந்த படத்தில் வரும் Lesbian Rape காட்சி ஒரு தமிழ் சிறுகதையை நினைவிற்கு கொண்டு வருகிறது . நாற்பது வருடங்களுக்கு முன் ஜி நாகராஜன் எழுதிய "மிஸ் பாக்கியம் " அதில் வரும் பேராசிரியை பாக்கியம் தன் மாணவியை ரேப் செய்து விடுவார் .

Feb 26, 2009

ரெட் கார்ப்பட் வெல்கம்

நேற்றைய 01.03.2009 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ' ஒரு பெண் கவிஞரின் டெல்லி புலம்பல் ' என்ற ரிப்போர்ட் படித்தேன் .

எனக்கு ஏனோ 'சிவந்த மண் ' படத்தில் திவான் நம்பியார் போராளிகளை கண்டு பிடிக்க முயலும் போது நாகேஷ் தன் நடவடிக்கைகளால் சிவாஜி தொடங்கி , விஜயன்,மாலி என்று தன் சகாக்களான போராளிகளை காட்டி கொடுத்த காட்சி தான் நினைவுக்கு வந்தது .

அம்மணி 'விடுதலை புலிகள் மலையக தமிழர்களை விரட்டியடித்தவர்கள் , முஸ்லிம்களை கொன்றவர்கள் ,விரட்டியடித்தவர்கள் . தலித்களுக்கு எதிரானவர்கள் ,ஜாதி வெறியர்கள்' என்ற பழைய உண்மைகளை எல்லாம் அவர் சொன்னார் , இவர் சொன்னார் என புட்டு புட்டு வைக்கிறார் .

இன்னொன்று டெல்லி பேரணிக்கு விளம்பரம் சரியாக கிடைக்கவில்லை என்ற கோபம் , எரிச்சல் .. மீடியாக்கள் கண்டு கொள்ளவே இல்லை . எத்தனையோ டிவி கம்பனிகளுக்கு தகவல் கொடுத்து பார்த்தும் யாரும் சீந்தவே இல்லை . 'என் டி டி வி காரனிடம் 'மங்களூர் பொம்பளைங்க அடி பட்டப்ப காட்டினீங்களே .அதை விட இலங்கையிலே கொடுமை நடக்குது அதனாலே எங்களை படம் பிடிச்சி உலகம் பூரா காட்டுங்க .தயவு செஞ்சு எங்களை படம் பிடிங்க ..ஏங்க வாங்கங்க ..வாங்க. .வாங்கங்க..ன்னு நூறு தடவை கெஞ்சினோம் . என் டி டி வி காரன் அயோக்கியன் ..எங்களை படம் பிடிக்க வரவே இல்லை . .' கவனிக்க ..Exhibitionism!

I am your mother , Fuck me I am your sister rape me என்ற பேனர்களை கூட யாருமே கண்டு அதிர்ச்சி கொள்ளவில்லை போலிருக்கிறது .

இன்னொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது . டெல்லி போனதும் பேரணிக்கு அருந்ததி ராய் , மேதா பட்கர் இருவரும் ரெட் கார்ப்பட் வெல்கம் கொடுப்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு! அதுவும் நடக்கவில்லை .இவர் அழைத்தும் வரவில்லை!

பகுஜன் சமாஜ் கட்சி , முஸ்லீம் அமைப்புகள் நிராகரித்து விட்டன .

முழுக்க சுய விளம்பர நோக்கம் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது . விளம்பர நோக்கம் டெல்லி பிரமுகர்கள் ,கட்சிகள் , அமைப்புகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது !

இதன் மூலம் புகழ் வெளிச்சம் கிடைத்திருந்தால் ஒரு கட்சியிடம் சேர்ந்து எம் எல் ஏ சீட்டு எம் பி சீட்டு வரை கேட்டு அமர்க்களப்படுத்தி இருக்கலாம் . எல்லாமே வீணா போச்சு .

அம்மணி 'ஏன் நோபெல் பரிசு வாங்கிய நோம் சோம்ஸ்கி எங்கள் பேரணி யில் வந்து கலந்து கொள்ளவில்லை.ஒரு அறிக்கை கூடவா பேரணியை ஆதரித்து விடக்கூடாது ?' என்ற ஆவேசத்தை வெளிப்படுத்தாது தன்னடக்கத்தோடு விட்டு விட்டார் .

இலங்கை மக்களின் பரிதாப அவல நிலை அல்ல பிரதானம் , நாங்க டெல்லி போனோம் , நாங்க ஊர்வலம் போனோம் , எங்களுக்கு பிரமாதமான மரியாதை , அங்கீகாரம் விளம்பரம் ஏன் இல்லை ,இது அநியாயம் . அயோக்கிய தனம் ..........

அடுத்து இந்த ஜூனியர் விகடன் ரிப்போர்ட் முடிவில் இன்னொரு செய்தி ! இந்த டெல்லி பேரணி குழுவிலும் பெரும் அரசியலாகி இந்த குழுவும் உடைந்து விட்டதாம் . இது ஒன்றும் ஆச்சரியமில்லை ."தமிழ் நண்டுகள் கதை" எல்லோருக்கும் தெரிந்தது தானே!

....

நேற்று நான் ஷேக்ஸ்பியர் 'மாக்பெத் ' வாசிக்க ஆரம்பித்து விட்டேன் !

இந்த இலட்சிய புனிதர்கள் ,பேனர் சிலுவை சுமப்பவர்களை எண்ணிப்பார்க்கையில் ஆயாசம் அதிகமாகி விடும்போது தான் உடனே உடனே ஷேக்ஸ்பியர் நாடகங்களை மீண்டும் மீண்டும் தேடும்படியாகி விடுகிறது .

If we tire of the saints, Shakespeare is our city of refuge.
-Emerson

இலங்கை தமிழ் மக்களின் தீராத சோகம் இப்படி சுய தம்பட்ட்ட ஆர்ப்பாட்ட ஆவேசங்களுக்கு, அரசியலுக்கு தீனியாகி விட்டது என்பது பழைய கதை தான்.

கமல் காதில் புகை

ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு சொல்லிவிட்டு அதே வாயில் " ஒலிம்பிக் போட்டி போல எல்லா நாடுகளும் பங்கேற்று போட்டியிட்டு திறமைக்கு கிடைக்கும் பரிசு அல்ல ஆஸ்கார் பரிசு . அமெரிக்கர்கள் தங்கள் ரசனைக்கு படங்களை தேர்வு செய்து , படங்களுக்கு பரிசு தருகிறார்கள் . ஆஸ்கார் பரிசு உலகத்தரமானது அல்ல " என்று தன் வயிற்றெரிச்சலை கமல்ஹாசன் வெளிப்படுத்தி விட்டார் . சீ ..சீ .. இந்த பழம் ..
சினிமாக்காரர்கள் எல்லாம் 'ரஹ்மான் பரிசு வாங்கியிருக்கும்போது இப்படி இவர் பேச வேண்டுமா' என்று கமல் ஹாசன் மீது ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று நேற்று வந்துள்ள ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது .
ஆஸ்கார் பரிசு பற்றிய அளவுக்கு மீறிய மிகையான பிரமை தான் ரஹ்மானுக்கு அது கிடைத்த போது எல்லோரையும் ஆனந்த கண்ணீர் விடவைத்து புல்லரித்து செடியரித்து மரம் அரித்து புளகாங்கிதமடைய வைத்துள்ளது .அதனால் தான் இந்த 'ரஹ்மான் பாராட்டு கோரஸில் ' நான் சேர விரும்பவில்லை என நான் எழுதியிருந்தேன் .கமல் ஹாசன் சொல்வது நூற்றுக்கு நூறு மிகவும் உண்மை .( இதை கமல் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை )ஆனால் ரஹ்மான் ஆஸ்கார் கிறக்கத்தில் இந்தியாவே இருக்கும் இந்த நேரத்தில் அவர் இதை சொன்னதில் ஆற்றாமை , ஏக்கம் , தன்னிரக்கம் வெளிப்படுவதும் நூற்றுக்கு நூறு உண்மை .
எப்பவும் நான் ஆஸ்கார் பற்றி சொல்ற விஷயம் தாங்க என்று கமல் விளக்கம் தர முடியாது . சொன்ன விஷயம் தானே .ரஹ்மானுக்கு ஆஸ்கார் பரிசுக்காக வாழ்த்து சொல்லும்போதே விவஸ்தையில்லாமல் இந்த ஆஸ்கார் உலகத்தரம் அல்ல என்று சொல்வது பூலாப்பு தானே ?'உலகநாயகனே ' என்று ரஹ்மானை பார்த்து இந்தியாவேபரவசமாக பாடுகிறதே !
நேற்றைய முந்தைய தினமே'கமல் ,அமீர்கான் காதில் புகை நிச்சயம் ' என்று நான் மனித உளவியல் பற்றிய குறிப்பாக நான் “My concern is always with the not so brilliant and the not so successful people.” பதிவில் குறிப்பிட்டதற்கு கணிசமான எதிர்ப்பு கிளம்பியிருந்தது . நேற்று மட்டும் ஏழு' வெத்து கடுமை 'பின்னூட்டங்களை நான் இது குறித்து நிராகரிக்க வேண்டியிருந்தது . என் நுட்பமான பார்வை உண்மை தான் என கமல் ஹாசன் நிரூபித்து என்னை கனப்படுத்தி விட்டார். நான் சொன்னது சரி தான் என கமல் ஹாசன் நிருபர்கள் முன் பேசியுள்ளதன் மூலம் நிரூபித்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன் 'குமுதம் ஸ்பெஷல் ' இதழ் ஒன்றில் பத்திரிக்கை குழு முன் வைக்கும் கேள்விகளுக்கு வாசகர்கள் பதில் அளித்து வந்தார்கள் . அதில் ஒரு கேள்வி :
கமல் , ரஜினி ஒப்பிடுக .
ஒரு வாசகர் பதில் பிரசுரமானது . அந்த பதில் :
கமல் கடுமையாக உழைக்கிறார் .
ரஜினிக்காக கடவுளே உழைக்கிறார் .

கமல் திறமை , அதிர்ஷ்டம் பற்றி இந்த புத்திசாலித்தனமான பதில் முன் வைக்கும் சோகம் பாருங்கள் . உண்மையில் இந்த பதில் கமலை மிகவும் கௌரவப்படுத்துகிறது . அதே நேரம் கமல் ஹாசனின் தகுதி,உழைப்பு உதாசீனப்படுத்தப்படும் சோகத்தையும் முன் வைக்கிறது.வசூல் , விருது போன்றவை அவ்வளவு சுலபமாக சிலருக்கு கிடைப்பதே இல்லை . இந்த உலகத்தில் தகுதி ,திறமைக்கு தகுந்த வெகுமதி பெறாமல் போனவர்கள் எல்லா துறையிலும் கணக்கிலடங்காதவர்கள் .
கமலுக்கு ஆஸ்கார் பரிசு கிடைக்காதது பற்றி நான் நேற்றைக்கு முந்தைய தின பதிவில் கிண்டல் ஏதும் செய்யவில்லை . ஏ ஆர் ரஹ்மானுக்கு இசைக்கு கிடைக்கும்போது கமலுக்கோ , அமீர் கானுக்கோ நடிப்புக்கு ஆஸ்கார் விருது என்ன தகுதியில்லாததா ?
கமல் ஹாசன் நடிப்பு துவங்கி அவரது படங்கள் ,நோக்கங்கள் ,பற்றி பல விமர்சனங்கள் எனக்கும் உண்டு . கமல் நடிப்பின் மிகப்பெரிய பலவீனம் -அவரால் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடியவில்லை . 'இந்த படத்தில் நிறைய எனக்கு வேலை இருக்கு என்ற கர்வம் ' அவர் நடிக்கும் போது வெளிப்படையாக தெரிகிறது . இதை தவிர்த்து விட அவரால் முடியும் . அவருடைய சுபாவத்திற்கு 'இயல்பாய் இருக்க' கடும் முயற்சி,பயிற்சி தேவை . ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன் . அகில இந்தியாவிலே மோகன் லால் தான் கேமரா சென்ஸ் இல்லாமல் ,கதாநாயகன் என்ற கர்வம் ,பிரமை இல்லாமல் நடிக்கிற அற்புத நடிகர் .

Feb 25, 2009

தீர்க்கதரிசனம்! நிதரிசனம் !

உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தில் நடப்பதைக் காணும்போது, ஹெகல் கூறியதுபோல வரலாறு நம்மை ஏமாற்றிவிடும் சாத்தியங்களே அதிகம். இப்படி விளிம்பில் நிற்கும்போது வரலாற்றை ஓசையுடன் நிர்ணயித்த சிலர் சட்டென்று மறைவது முன்பும் நடந்திருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். வீழும் கடவுளர் போல அவர்.. ஆனால் அவர் வீழ்வதும் சப்தமின்றி. Not a whimper.

- நாகார்ஜுனன் " வரலாறும் ஓசையும் மௌனமும் " பதிவில்.

....................................................

ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லமுடியாத துக்கத்தில் வாழ முடியாமல் அல்லல்படும்போது தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக ஒரே குரலில் உரிமைகேட்கும் தலைமை இல்லையென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ...

..இன்று இந்தியாவின் நிலை இதுதான் - இலங்கைக்கு அந்நாட்டுத்தமிழர்களுக்கெதிரான போரில் உதவாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை அரசின் நண்பர்களாகி விடுவார்கள். ....

..இந்திய வெளிவிவகாரத்துறையினர், தனது இலங்கைக்கொள்கையைப் பற்றிக் கூறும்போது இரட்டைச்சாலைக் கொள்கை ((double-track policy) என்று கூறுகிறார்கள். எதிரும் புதிருமான போக்கைக்கூட இந்தக்கொள்கை கொண்டிருக்கும் என்பது இதன் பொருள். தமிழகம் ஒரேயடியாய் எதிர்த்தால் தமிழகத்தைத் திருப்திப்படுத்தும் கொள்கையைக்கூட இந்தியா எடுக்க முடியும்...

..2007 நவம்பர் மாதம் இலங்கைக்கப்பற்படையின் வைஸ்-அட்மிரல் வஸந்த கரன்னகோட என்பவர், பத்தாயிரம் டன் ஆயுதங்களுடன் வந்த புலிகளின் ஆதரவுக்கப்பல் இந்தியக் கப்பற்படையின் உதவியுடன் அழிக்கப்பட்டது என்றார். அதன்பிறகு இந்தியக் கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா இவ்விஷயத்தை ஒத்துக்கொண்டார். இது இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைச் செய்கிறதென்பதற்கான சான்றுதானே.

இது மட்டுமல்ல. 2007 ஆம் ஆண்டு, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இலங்கையிடம் உங்களுக்கான யுத்தத்தளவாடங்களை நாங்கள் தருகிறோம், சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் போகாதீர்கள் என்று வாக்குக்கொடுத்தார். அது எப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தெரியுமா? கருணாநிதி அவர்களை நாராயணன் சந்தித்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதாவது 2007-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி.அன்றிலிருந்து இந்தியா தொடர்ந்து இலங்கை நடத்தும் தமிழ்மக்களுக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவிபுரிந்துகொண்டேயிருக்கிறது....

...ஊடகங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியாதபடி இந்தியா, ராஜபக்ஷ அரசுக்கும், ராஜபக்ஷவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஜே.வி.பி. என்ற இலங்கை தேசியவாத இடதுசாரிக்கட்சியின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவி செய்கிறது. ஜே.வி.பி. இந்தியாவை எதிர்க்கிற கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் இருபோக்குகள் உண்டு. ஒன்று நட்புநாடாக இந்தியாவைப் பார்க்கும் போக்கு. இன்னொன்று பகைநாடாகப் பார்க்கும் போக்கு. பிரேமதாசா பகைநாடாக இந்தியாவைப் பார்த்த நேரடி அரசியல்வாதி. ஜெயவர்த்தனே பகை நாடாகப் பார்த்தாலும் அகில உலக ராஜதந்திரம் தெரிந்தவர். எனவே நட்பு நாடுபோல் கூறிக்கொண்டே பகைநாட்டை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தியவர். பிரபாகரனும் பிரேமதாசாவைப் போன்றவர். ராஜதந்திரம் பயன்படுத்தத் தேவையில்லை என்று கருதுகிறவர். பிரேமதாசாவும் பிரபாகரனும் ஒத்த நிலை அரசியல் நடத்தியவர்கள். ஆனால், அனைத்துலக ராஜாங்க விஷயங்கள் அன்றைய இலங்கையின் இந்தியத்தூதர் தீட்சித் கூறியதுபோல் ஒழுக்கப்பார்வைக்கு அப்பாற்பட்டு நடப்பவையாகும். தீட்சித் பயன்படுத்திய ஆங்கிலச் சொல் amoral. உண்மையைப் புரிந்து கொள்ள இச்சொல் மிகவும் பயன்படும்.

தமிழ்மக்களிடையில் இந்த அறிவைக் கொண்டு வந்து சேர்த்த அறிவுத்துறையின் பெயர் அமைப்பியல். அமைப்பியலும் ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டு அகில உலகமும் தனிமனித அகமும் இயங்குகின்றன என்று கூறுகிறது. மனித விழுமியங்கள் அமைப்பின் விழுமியங்களாகப் பரிமாற்றம் பெற்று சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டன. மனிதப்பரிதவிப்பும் பிரலாபமும் உயிரழிவும் உண்மைகளல்ல. இவை அமைப்பின் ஒழுக்கமாகப் பரிமாற்றம் செய்யப்படும்போதுதான் கவனிக்கத்தக்க விழுமியமாக மாறுகின்றன. எனவே தன்னை அழித்துக்கொள்கிற முத்துக்குமார்களை யாரும் கவனிக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக உயிருடன் இருந்து செயல்படுகிறவர்களை சமூகம் கவனிக்கும். தற்காலச்சமூகம் கவனிக்கிற முறையில் ஈழ அவலத்தை அமைப்பாக்கம் சார்ந்த கவனிப்பாக மாற்றுகிறவர்களே இன்று தேவை. தமிழ்ச்சமூகம் பிழைக்க வேண்டுமென்றால் இத்தகைய அறிவுமுறையாக, நிகழ்ச்சிகளையும் பேரவலங்களையும் மாற்ற வேண்டியிருக்கிறது. உலகம் வேறுமுறையில் செயல்படுகிறதென்று தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலகின் எல்லா அறிவையும் கொண்டுவந்து தமிழ்மொழியை அகில உலக அறிவுள்ள மொழியாக ஆக்குவதே இதற்கான தேவை. பாரதி, வரலாறு திரும்பிப்படுக்கிற ஒருகணத்தில் வாழ்ந்து மறைந்ததால் இதைப்பற்றி யோசித்திருக்கிறான்.

- தமிழவன் " தமிழர்கள் உலகை புரிந்து கொள்ளவேண்டும் ."பதிவு

தமிழவன் குறிப்பிடும் இரட்டை சாலை கொள்கை பற்றி நாகார்ஜுனன் காட்டும் சரித்திர விளக்கம் கீழே :

1989-91 காலகட்டத்தில் இலங்கை ஜே.வி.பி. அமைப்பு இனவாத அரசியலைக் கையிலெடுத்து இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தும் இந்திய விஸ்தரிப்பு வாதம் எனக்கூறியும் ஆயுதமேந்திக் கலகம் செய்தது. இந்த அமைப்பின் தலைவர்கள், ரோஹண விஜயவீர உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அரசுசார்புக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதே சமயம் அந்த அமைப்பின் துணைத்தலைவர் சோமவம்ஸ அமரசிங்க இலங்கையிலிருந்து தப்பினார் - இந்திய உதவியோடு, திருவனந்தபுரம் வழியாகத்தான். இதைத்தான் இரட்டைச்சாலை அயலுறவுக்கொள்கை என்பது. இன்னும் இதுபோலப் பலதைக் காட்ட முடியும்.

திணை இசை சமிக்ஞை

.................................................................................

நாகார்ஜுனனின் தீர்க்க தரிசனம் ,தமிழவனின் நிதர்சனம் இரண்டும் சேர்ந்து

R P ராஜநாயஹம் நினைவில் கொண்டுவந்த கவிதை கீழே :

நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது

இடையே உள்ள இருள்

- பிரமிள்

R.P.Rajanayahem A gentleman

This is buzz in a pit for biz - இது ராஜூவின் ப்ளாக் .

ராஜூ ப்ளாகில் R P ராஜநாயஹம் பற்றி :

Tuesday, February 24, 2009

R P Rajanayahem a gentleman
I have been regularly reading and occasionally commenting on R P Rajanayahem's blog.It is here.Recently I had commented on his post on not writing about A R Rahman and his OSCAR achievement.... காப்பீடு மூலம் நிகழும் கட்டுடைப்பு

He has replied with this post... “My concern is always with the not so brilliant , not so successful people.

”Mr R P Rajanayahem,

Befitting reply to my concern.Nice to know the depth in the sentence...

ஏ ஆர் ரஹ்மானுக்கு "Achievement Depression" என்ற மன அழுத்த வியாதி வந்து விடக்கூடாது என்று மட்டும் நான் சொல்லவிரும்புகிறேன் ! அளவுக்கு மீறி வெற்றிகளை ரஹ்மான் பார்த்து விட்டார் !! இனியும் பார்க்கபோகிறார் .

Thanks.


Posted by Raju at 6:41 PM 2 comments Links to this post
Labels: , ,

Feb 24, 2009

“My concern is always with the not so brilliant , not so successful people.”



அசோகமித்திரன் தன் படைப்புகளில் வாழ்வில் வெற்றி பெறாத மனிதர்கள் பற்றி தான் எப்போதும் எழுதியவர் . அவுட் லுக் பத்திரிகையில் அவர் கொடுத்த பேட்டி பிரசுரமான போது பலத்த சர்ச்சை ஏற்பட்டது . பொதுவாக அசோகமித்திரன் அவர் பற்றிய எந்த சர்ச்சைக்கும் பதில் அளிப்பவர் அல்ல . குமுதம் , குமுதம் தீராநதி , உள்பட அவருடைய அவுட் லுக் பேட்டி க்காக கடுமையாக அவர் விமர்சிக்கப்பட்டார் . இது விஷயமாக அவர் பதில் அவுட் லுக் ,குமுதம் துவங்கி இன்னும் இலக்கிய பத்திரிக்கையிலிருந்து எத்தனையோ பிரமுகர்களுக்கு விளக்கத்தை அனுப்பியிருக்கலாம் . அவர்கள் அதை பெருமையாக பிரசுரித்திருப்பார்கள் .
ஒருவர் தனக்கு தான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார் என்றே பகீரங்கமாக கூட எழுதினார் . அவர் யாருக்கு விளக்கம் எழுதினார் . எனக்கு தான் கடிதமாக எழுதினார் .அந்த கடிதம் உலகெங்கும் உள்ளவர்களால் விவாதிக்கப்பட்ட போது ,(இணையத்தில் விவாதிக்கும்போது கூட R P ராஜநாயஹம் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் என்பதை குறிப்பிட விரும்பாமல் அசூயையுடன் மறைத்து விவாதித்த பிரமுகர் உண்டு ) இங்கே உள்ள எழுத்தாள பிரமுகர்களும் மூச்சே விடவில்லை , அவுட் லுக் ,குமுதம் ,காலச்சுவடு ,உயிர்மை என எல்லோரும் அந்த கடிதத்தை புறக்கணித்தனர் . ' இந்த கடிதம் R P ராஜநாயஹம் பெயருக்கு ஏன் எழுதப்பட்டது ? 'என்ற கோபம் தான் காரணம் . கனடாவில் பதிவுகள் .com இல் பிரசுரமான கடிதத்தை இங்கே தமிழக பத்திரிகைகள் ,எழுத்தாளார்கள் மூச் விடவில்லை . ' எனக்குதான் அசோகமித்திரன் பதில் எழுத இருக்கிறார்.' என்று மார் தட்டி சொன்ன ஒரு பிரமுகரிடம் ' அசோகமித்திரன் விளக்கம் பற்றி ரொம்ப எதிர்பார்த்த நீங்கள் கூட இந்த கடிதம் பற்றி ஏன் பேசவில்லை ' என நான் நேரிலேயே கேட்டேன் .அசோகமித்திரன் தனக்கு பதில் எழுதியிருந்தால் தான் அது பற்றி எழுதிஇருக்க முடியும் என அலட்சியமாக பதில் சொன்னார் . எனக்கு பதில் எழுதி விட்டார் என்பது தான் எல்லோருக்கும் கோபம் . இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரனிடம் ' என்ன இவர் நீங்க தனிப்பட்ட முறையில் எழுதின கடிதத்தை இப்படி பகீரங்கமாக்குகிறார் " என்று மூட்டி விட முயற்சித்திருக்கிறார் . அசோகமித்திரன் தான் இதை கைப்பட எனக்கு எழுதி என்னை டைப் செய்து பதிவுகள் .com இல் பிரசுரிக்க சொன்னவர் என்பதை அந்த பொறாமைக்காரர் அறியவில்லை .
அந்த கடிதம் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
அந்த கடிதம் பற்றி இங்கே குறிப்பிட காரணம் உண்டு .
நண்பர் ராஜூ " ஏன் ரஹ்மான் ஆஸ்கார் சாதனை பற்றி ஒன்றும் நீங்கள் இங்கு பதியவில்லை " என்று ஆதங்கத்துடன் சென்ற பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறார் . அவருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு . அசோகமித்திரன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் ஒரு வார்த்தை "My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. "இந்த வார்த்தைகளில் தான் அசோகமித்திரனின் ஒட்டுமொத்த இலக்கிய வெற்றி அடங்கியுள்ளது .
' R P ராஜநாயஹம் - அசோகமித்திரனின் சீடன் 'என்று ஒரு முத்திரை எனக்கு உண்டு .
'ரஹ்மான் பாராட்டு' கோரஸ் க்ரூப்பில் நானும் இணைய வேண்டிய அவசியம் இல்லை . நான் Slum dog Millionaire படம் பார்த்தேன் .Slum dog Millionaire எனக்கு மிகவும் பிடித்திருந்தது . இவ்வளவு போதும் .
"காலத்தால் மறக்கமுடியாத புகைப்படம் "என்ற பதிவை மீண்டும் படிக்கவும் .
"படைப்பு ,படைப்பாளி ,காவியம் ,திரைக்காவியம் ,ஓவியம் ,இசை அனைத்தையுமே கேலி செய்யும் கர்னல் ரூபன் ,லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன் .விம்மி அழுதேன்."
என பதிவு செய்த போது ரஹ்மானின் வெற்றிசெய்தி சுடசுட என் காதில் விழுந்து கொண்டிருந்தது .ரஹுமானையும் மனதில் வைத்து தான் இந்த வார்த்தைகளை நான் எழுதியுள்ளேன் என்பதை தயவு செய்து அறியவும் .
புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டுமல்ல , அங்கிருந்து மீண்டு விட்டாலும் வாழ்வை இழந்து சொல்லொணா துயரம் முகாம்களில் அனுபவிக்கும் இலங்கை தமிழ் மக்களை நினைக்கும்போது, தீர்வுகள் எதுவும் சிறிதும் கண்ணுக்கு தெரியாத நிலை என்ற உண்மையும் ,இந்திய அரசாங்கத்தின் வக்கிர மௌனமும் சேர்ந்து எந்த கொண்டாட்டத்திற்கும் மனம் இடம் தரவில்லை .
ஏ ஆர் ரஹ்மானுக்கு "Achievement Depression" என்ற மன அழுத்த வியாதி வந்து விடக்கூடாது என்று மட்டும் நான் சொல்லவிரும்புகிறேன் ! அளவுக்கு மீறி வெற்றிகளை ரஹ்மான் பார்த்து விட்டார் !! இனியும் பார்க்கபோகிறார் .
கமல் , அமீர் நடிப்புக்காக ஆஸ்கார் எதிர்பார்த்தவர்கள் . எதிர்பார்க்கிறவர்கள் .ரஹ்மானுக்கு இசைக்கு கிடைத்திருக்கிறது ,இசை வேறு நடிப்பு வேறு என்று தயவு செய்து யாரும் எனக்கு பால படம் சொல்லவேண்டாம் .ஏக்கம் , ஏக்கம் தான் .
ஏங்கிகொண்டிருக்கும் கமல் ஹாசன் , அமீர்கான் போன்றவர்களுக்கு ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி நிச்சயம் காதில் புகை வரசெய்திருக்கும்.மனித இயல்பு தானே! எனக்கு அசோகமித்திரன் கடிதம் எழுதிய போது கூட இங்கே எத்தனையோ பிரமுகர்களுக்கு காதில் புகை வரத்தானே செய்தது . 'அவுட் லுக் சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல அசோகமித்திரனுக்கு R P ராஜநாயஹம் தானா ஆள் ? நாங்கள் எல்லாம் இல்லையா ?' என்று பொருமல் வரவில்லையா ?
...
அசோகமித்திரன் எனக்கு எழுதிய அந்த கடிதம் கீழே:
NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE !
- ASHOKAMITRAN -
ASHOKAMITRAN (J. THIYAGARAJAN)
FLAT -7, 1A, 9TH CROSS AVENUE,
DANDEESWARAM, VELACHERY,
CHENNAI-600 042. Date: 31.05.2005
DEAR R.P.RAJANAYAHEM,

Your kind letter.
I am extremely pained at the reactions of some friends to my ‘article’ in the Delhi Magazine. I am a computer illiterate and I have no way of knowing what appeared in the internet magazine. But both pieces are the result of a ten-minute telephone conversation with the correspondent. Nothing was put on paper, neither the questions nor the answers. In the printed article, there are quite a few terms i do not use at all. Also the tone is not mine. Since the questions were focussed on Tamil Brahmins, naturally the answers related to them. My concerns have always been about the not-so-brilliant, not-so-successful people of all sections of people. Not just Brahmins.
In India, with a lot of construction work going on, it is a good period for tradesmen, plumbers, carpenters, electricians, masons, etc. But how much of what they earn goes to the well-being of their families, the education of their children? This applies to brahmins also, especially cooks. Much of their hard-earned money goes for gambling and having a merry time.
All that appears in a periodical, Tamil or English, need not be cent percent authentic and true, especially when not a word is written by the interviewee. It is very difficult to convey the tone of the answers. As a general rule, no magazine publishes an originally written article unless the editor determines the theme. The correspondents execute the theme by interviews. In my case, it was a telephone interview and so prone to distortion and errors. And i had no control over what finally appeared in print.
This makes it all the more important for a reader to exercise her or his own judgement, not merely go by what is published.
Yours Sincerely,
ASHOKAMITRAN

Feb 23, 2009

காப்பீடு மூலம் நிகழும் கட்டுடைப்பு

நண்பர் எம் சங்கர நாராயணன் . தொழில் அதிபர்.கணக்கு வழக்கு , திட்டமிடுதல் , பட்ஜெட் போடுதல் இவற்றில் மிகுந்த திறன் கொண்டவர் . இவரை போனில் அணுகுகிறார்கள் " சார் I CICIபேங்கில் இருந்து பேசுகிறோம் . I CICI prudential இதில் Mediclaim இன்சூரன்ஸ் ஒன்று போட்டுக்கங்க சார் ." இவருக்கு ICICI Credit card இருக்கிறது .அதன் மூலம் வசூல் செய்துகொள்வார்களாம் . தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து பாலிசி பற்றி சங்கர் விசாரிக்கிறார் . அந்த பக்கம் சென்னையிலிருந்து பேசிய ஆள் அப்படி குடும்ப பாலிசியாக இருவருக்கும் செய்து தர ஒப்புகொள்கிறார் . முக்கியமாக இந்த பாலிசி மூலம் இன்னொரு பிரதி பலன் இவருக்கு ICICI bank Credit card ரூபாய் 27000 limitல் இப்போது உள்ளது மேலும் வசதியாக ஒரு லட்சம் ஆக்கப்படும் . இது போல பெனிபிட் இருப்பதாக சொல்லும்போது யாருக்கும் அந்த Mediclaim Insurance இருபது லட்சத்துக்கு போடுவதில் பெரிய யோசனை செய்ய வேண்டியிராது .அழகான ஒரு வாய்ப்பு தானே .சந்தர்ப்பம் வலிய வந்திருக்கிறது . திட்டமிடுதல் வாழ்வுக்கு அவசியம் . மருத்துவ முன்னேற்பாடு மனதை திடபடுத்தி விச்ராந்தியாக ஆக்கிவிடும் .

பாலிசி இவர் ஒருவர் பெயருக்கு மட்டும் வருகிறது .இவர் தன் மனைவி பெயருக்கும் சேர்த்து கொடுப்பதாக சொன்னதை பற்றி பேச சென்னைக்கு கால் போட்டால் போனை எடுக்க ஆள் இல்லை . அதே நேரம் மும்பையிலிருந்து கால் .ICICI Lombard ! சரி மனைவிக்கான பாலிசி போலும் என்று இவர் குழம்பி இரண்டு லட்சம் பாலிசிக்கு தலையாட்டியவுடன் இவர் Credit card அக்கௌண்டில் பிரிமியம் தொகை இரண்டு மடங்காக பிடிக்கப்பட்டிருக்கிறது .இவருக்கு பாலிசி இவர் பெயரிலேயே மீண்டும் வருகிறது . சென்னைக்கு போன் போட்டாலும் எடுக்க ஆள் இல்லை .மும்பைக்கு இது விஷயமாக விசாரிக்க போன் செய்தாலும் எடுக்க ஆள் இல்லை . சலித்து போய் சங்கர் இங்கே I CICI prudential லோகல் இல் திருப்பூர் I CICI prudentialஆபீஸில் போய் கேட்டால் பதினைந்து நாட்கள் ஆகி விட்டதால் இந்த பாலிசியை இனி கான்செல் செய்யவே முடியாது . உங்களை தொடர்பு கொண்டவர்கள் கால் சென்டர் காரர்கள் .உடனே நீங்கள் போய் ICICI Lombard பாலிசியை அந்த ஆபீஸில் கேன்சல் செய்து கொள்ளுங்கள் . "
இவர் உடனே ICICI bank Credit card லிமிட் ஒரு லட்சம் ஆக்கப்பட்டிருக்கிறதா என்பதை பற்றி விசாரிக்கிறார் .
அப்படி ஏதும் கிடையாது .
"அய்யய்யோ ! கால் சென்டர்காரர்கள் உங்களை ஏமாற்றி பாலிசி போட செய்து விட்டார்கள் .ஏமாந்து விட்டீர்களே ! அவர்களுக்கும் ICICI க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .ICICI இதில் எதுவும் செய்ய முடியாது . இனிமேலாவது கால்செண்டர்காரர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் ! ஏமாறக்கூடாது சார் !"


Out of the crooked timber of Humanity, no straight thing was ever made.
- Kant

சங்கரால் ICICI Lombard ஆபீசிற்கு போய் அந்த பாலிசியை மட்டும் கேன்சல் செய்ய முடிகிறது .
திட்டமிடுதல் எவ்வளவு அபத்தம் .
மீண்டும் ஒரு கால் . "சார் சங்கர நாராயணனா சார் ! I CICI prudentialலில் இருந்து பேசுறோம் சார் . ஒரு இன்சுரன்ஸ் பாலிசி போட்டுக்கிறீங்களா சார் ! நிறைய இதில் பெனிபிட் உங்களுக்கு .அது மட்டும் இல்ல சார் ! Credit card லிமிட் அதிகமாக்கி நாலு மடங்கு .."

சங்கர நாராயணன்- " போனை வைங்கடா நாய்களா "

காலத்தால் மறக்கமுடியாத புகைப்படம்

உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த திலீபன் துவங்கி எத்தனை விடுதலைப்புலிகளின் மரணங்களை பார்த்து விட்டோம்.
 நேற்று அந்த கர்னல் ரூபன், லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரும் சிரித்தவாறு பிரபாகரனோடு நிற்கும் அந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்ட மன வியாகுலம் சொல்லும் தரமன்று.
சென்ற வெள்ளியன்று இருவரும் ஜெட் விமானத்தில் கொழும்பு கிளம்பு முன் தங்கள் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகம் மறக்க முடியாத புகைப்படங்களுள் ஒன்று.
ரூபனின் அகன்ற புன்னகை, சிரித்திரனின் கண்கள்,மூக்கு, மீசை, வாய் அனைத்திலும் வியாபித்து விட்ட அந்த சிரிப்பு ..
எங்ஙனம் இது சாத்தியம் .. மரணத்தை தழுவ கிளம்பு முன் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலுமா?
அந்த இரு இளைஞர்கள் நீர்க்குமிழி வாழ்வு பற்றி அந்த புகைப்படம் சொல்லும் கவிதையை யாராலும்,எப்பேர்ப்பட்ட கொம்பாதி கொம்பனான மகா கவியாலும் வடித்துவிடமுடியுமா?

படைப்பு, படைப்பாளி, காவியம், திரைக்காவியம்,ஓவியம், இசை, அனைத்தையுமே கேலி செய்யும் அந்த இளைஞர்களின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன். விம்மி,விம்மி அழுதேன்.

ரூபன், சிரித்திரன் இருவரும் மரணமடையும்போது துயரம் அவர்களை கவ்வியிருக்கும். ஏனெனில் இருவரின் நோக்கமும் நிறைவடையாமலே வானத்திலேயே அவர்களின் ஊர்தி வீழ்த்தப்பட்டிருக்கிறது.

Feb 22, 2009

சாமிக்கண்ணு


சாமிக்கண்ணு அந்த கால சிரிப்பு நடிகர்.
வசனம் பேசுபோது ஒரு நக்கல் நையாண்டியுடன் பேசுவார்.
பாமா விஜயம் படத்தில்
'வாங்க '
சாமிக்கண்ணு ' வரமாட்டேன் ' -வேகமாக கோபமாக வருவார்.
'உட்காருங்க '
"உட்கார மாட்டேன் " -கோபமாக உட்கார்வார்.

ராமண்ணாவின் ‘ நான்’ - சாமிக்கண்ணு ரொம்ப funnyயாக “Of course" சொல்வார். இவர் கூட வரும் கன்னையா ‘ என்னத்த’ சொல்லி ரொம்ப பிரபலம்.

ராஜபார்ட் ரங்கதுரையில் சாமிக்கண்ணு “ என்ன நான் சொல்றது”

இவருக்கு பிற்காலத்தில் வாய்ப்பு மகேந்திரன் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள் ' 'ஜானி 'படங்களில் கொடுத்தார் . பாலு மகேந்திரா ' அழியாத கோலங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

இவரை பற்றி பலரும் அறியாத செய்தி :
பராசக்தி படம் ஆவதற்கு முன் நாடகமாக 1940களின் கடைசியில் நடிக்கப்பட்டதுண்டு. அப்போது அதற்குவசனம் கருணாநிதி அல்ல . அந்த பராசக்தி நாடகத்தில் "குணசேகரன் " பாத்திரத்தை நடிகர் சாமிக்கண்ணு தான் ஏற்று கதாநாயகனாக நடித்தவர் என்றால் இன்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஏன் ஏன்றால் சிவாஜி கணேசன் திரையில் " பராசக்தி " படத்தில் செய்த பாத்திரம் தான் குணசேகரன்.
இன்னொரு செய்தி :
கே பாலச்சந்தர் ஒரு முறை குறிப்பிட்டு பத்திரிகையில் அந்த காலத்தில் ஒரு செய்தி நான் படித்திருக்கிறேன். சாமிக்கண்ணு நாடக நடிப்பை பார்த்து தான் தனக்கு நாடகத்தின் மீது ஆர்வம் வந்ததாக பாலச்சந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.

......................................

என்னத்தை கன்னையா

என்னத்தை கன்னையா "முதலாளி " படத்தில் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்தார் . அதனால் ஆரம்ப காலங்களில் 'முதலாளி ' கன்னையா என அறியப்பட்டிருந்தார்.

"பாசம் " படத்தில் இவர் வசன உச்சரிப்பு 'ப'கரம்வார்த்தைகளை F ல் உச்சரிப்பார் . என்ன அன்பு !என்ன பாசம் !என்ன பரிவு !என்ன பக்தி! ' இதை " என்ன அன் Fu! என்ன Faசம்! என்ன Faரிவு! என்ன Fuckதி !" எம் ஆர் ராதாவை பார்த்து பிரமித்து இப்படி சொல்வார்!

கண்ணதாசனின் 'கருப்பு பணம் ' படத்தில் படதயாரிப்பாளர் .நொடித்து போனவுடன் தன் பட இயக்குனரை ஒரு பஸ் ஸ்டாப்பி்ல் பார்ப்பார. அவர் அங்கே சைட் அடித்துக்கொண்டிருப்பார் . இவர் அவரை அப்ரோச் செய்யும் போது அவர் Don’t disturb me . I am enjoying the beauty! என இவரை உதாசீனம் செய்வார் . கன்னையா You are enjoying the beauty. But I’m in Poverty! என சோகமாக சொல்வார். ஆங்கிலம் அறிந்தவர் அல்ல . ஆனால் ஆங்கில டயலாக் நன்றாக உச்சரிப்பார்.

"நான் "படத்தில் நடித்த பின் தான் " என்னத்தை கன்னையா" ஆனார் . விரக்தியான மனநிலையில் படம் முழுவதும் வந்தார்.
ராமண்ணா அடுத்த ' மூன்றெழுத்து ' படத்தில் இவரை வில்லன் ஆக்கினார்!
' ஐஸ் வச்சு கொன்னுடு ' என்று அலட்சியமா வசனம் பேசுவார்!

'சொர்க்கம்' படத்தில் நாகேஷ் இவருக்கு சொன்ன ஜோதிடம் பலித்து இவர் கோடீஸ்வரன் ஆகி நாகேஷை தேடி வருவார். ஏற்கனவே நாகேஷ் ஒரு முரடனுக்கு ஜோசியம் சொல்லி அது பலிக்காமல் அந்த முரடன் இவரை தேடி வந்து அடி வெளுத்து விட்டு போயிருப்பார. அந்த சூழலில் கன்னையா ' எங்கையா ஜோதி! மனுஷனா அவன்!" என்று நாகேஷின் ஜோதிட நிலையத்திற்குள் வரவும் நாகேஷ் ஒளிந்து கொள்வார.
கன்னையா தொடர்ந்து ' மனுஷனா அவன்! தெய்வம்! கண் கண்ட தெய்வம்!கை கொடுத்த தெய்வம்! " என்று புகழ ஆரம்பிக்கவும் நாகேஷ் மேசைக்கடியில் இருந்து சந்தோசமாக எழுந்திருப்பார்.
கன்னையா ஆச்சரியத்துடன் " ஆஹா ! நான் பார்த்த படத்திலேயும் படிச்ச புராணத்திலேயும் தெய்வம் மேலே இருந்து வரும்! ஆனா இங்கே கீழே இருந்து வருதே! ஜோதி நீ சொன்னது பலிச்சிடுச்சு. வாங்க வீட்டுக்கு. இம்பாலா கார் காத்திருக்கு ." என அவரை அழைப்பார். " வாங்க வீட்டுக்கு். இம்பாலா காத்திருக்கு " என்ற இந்த வசனத்தை பலமுறை சொல்வார் .
நாகேஷ் சலித்து " யோவ் நீ எப்ப இம்பாலா கார் வாங்கின."
கன்னையா " இன்னைக்கு தான்."
நாகேஷ் " அதான் வார்த்தைக்கு வார்த்தை இம்பாலா இம்பாலான்னு
சொல்றே "

'நம் நாடு' படத்தில் வில்லன் ரங்காராவுக்கு அசிஸ்டன்ட் . நாகையா கன்னைய்யாவிடம் ' என் வீட்டிலே பசி ஒன்னை தவிர வேறு எதுவுமே இல்லை ' எனும்போது கண்ணையா சொல்வார் " இருக்குன்னு சொல்ல அது ஒன்னாவுது இருக்குல்லே !போய்யா "

பாரதி ராஜா , மகேந்திரன் , பாக்கியராஜ் எஸ் பி முத்துராமன் போன்றவர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் இவர் இருபத்தைந்து வருடம் முன் மீண்டும் ஒரு நல்ல ரவுண்டு வந்திருப்பார் . கல்லாப்பட்டி சிங்காரம், கே கே சௌந்தர் போன்றவர்கள் போல. ஆனால் இவர் ஏனோ இவர்கள் கண்ணில் படவில்லை. கொஞ்சம் தெரியற மாதிரி போலிஸ் ரோல்' சட்டம் ஒரு இருட்டறை 'யில் செய்தார்.

தி நகர் ரோகினி இன்டர்நேஷனல் லாட்ஜில் பெருமாள் நாயுடு என்ற மீடியேட்டர் இவரிடம் என்னை அறிமுகம் செய்த போது கன்னையா வின் பழைய பட வசனங்களை நான் படபடவென்று அவரிடமே பேசிக்காட்டிய போது அசந்து போனார்.
உசிலை மணியிடம் " அழைத்தால் வருவேன் " படப்பிடிப்பின் போது ஒப்பனை அறையில் என்னைப்பற்றி ரொம்ப உயர்வாக சொன்னார் . " இந்த ராஜநாயஹம்! இவரை பார்க்கும்போது தான் எனக்கு உயிர் வாழ்வது பற்றி ஒரு நம்பிக்கைபிடிப்பு வருகிறது ."

நாகேஷ் போல இவர் ஸ்பாட் டயலாக் ஷூட்டிங் போது அடிக்கும் திறமை உள்ளவர். சுருளி ராஜன் இவர் அப்படி பேசும் வசனங்களை 'வேண்டாம் ' என ஒதுக்கும் போது என்னிடம் வேதனையுடன் " பாருங்க தம்பி . நல்ல வசனம் அவனை வெட்டி நான் பேசுனா ஒத்துக்க மாட்டேங்கிறான் " என்று அப்போது அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

அந்த காலங்களில் ஒரு சின்ன சிவப்பு வெள்ளை வலை குல்லாயுடன் அடிக்கடி டவுன் பஸ்சில் இவரை பார்க்க முடியும்.
தி நகர் பனகல் பார்க் அருகில் ஒரு முறை நடந்து வரும்போது நானும் கன்னையாவும் சந்தித்து கொண்டபோது அவர் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது ." உங்க பெயர் 'ராஜநாயஹம் 'நல்லா இருக்கு தம்பி ! இந்த பெயரை சினிமாவுக்காக மாத்திராதீங்க "

எம்ஜியார் படங்களில் எல்லாம் என்னத்தை கன்னையாவை பார்க்க முடியும் .
எம்ஜியார் முதல்வர் ஆகிய பின் இவருக்கு கலைமாமணி விருது கொடுக்கப்பட்டபோது எம்ஜியார் இவரை பார்த்து " இப்பவும் என்னத்தை கன்னையா தானா! எப்போ ஓஹோ கன்னையா ஆவது !?" என்று மேடையில் இவரிடம் கேட்டார்.
ஓஹோ வென்று கன்னையாவால் ஆகவே முடியவில்லை.

எம்ஜியார் இறந்து இத்தனை வருடம் கழிந்த பின் வடிவேலுவுடன் கன்னையா கலக்கி இருக்கிறார். " வரும்! ஆனா வராது. "

http://rprajanayahem.blogspot.in/2009/12/ps.html

http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_02.html

Feb 21, 2009

Live dangerously

Live dangerously and you live right.
-Goethe

A man can stand anything except a succession of ordinary days.

- Goethe.

கடந்த சில நாட்களாக சென்னையிலும் , தமிழக நகரங்களிலும் நடக்கும் பயங்கர மயிர் கூச்செறியும் சம்பவங்களை பார்க்கும் போது 'கதே' சொன்ன மேற்கண்ட வார்த்தைகள் எனக்கு என்று இல்லை என் போன்ற மற்ற சாமானியர்களுக்கும் ,குடிமக்களுக்கும் நினைவில் வராமல் போயிருக்காது. நம் வாழ்வில் இனி சாதாரண நாட்களே கிடையாது போல் தெரிகிறது .சர்க்கஸ் கம்பி யில் நடப்பது போல தான் அனுதினமும் கழியும் போல .

சுப்ரமணிய சுவாமி தாக்கப்படும்போதே அவர் சாதியும் இழிவுபடுத்தப்படுகிறது . ஹைகோர்ட் ஹாலில் இது வரை இப்படி நடந்திருக்கிறதா .

மறு நாள் ஹை கோர்ட் வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசுக்கும் நடந்த யுத்தம் . நீதிபதி உள்பட படு காயம் .

நேற்று ஹைகோர்ட் வக்கீல்களும் , தமிழக ஏனைய நகர வக்கீல்களும் நடத்திய போராட்டங்கள்.

முதல்வரும் ,உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, ஏனைய நீதிபதிகள் வக்கீல்களை தாடையை பிடித்து சமரசப்படுத்துவது ...சட்டம் எல்லோருக்கும் பொதுவல்லவா ?

வக்கீல்களுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டுமா ?

ஜெயலலிதா இப்போது சுப்ரமணிய சுவாமி தாக்கப்பட்ட போது பதறி ஹை கோர்ட்டில் இப்படி நடக்கலாமா என தன் கட்சி மகளிர் அணியினர் அன்று இதேஹை கோர்ட்டில் சுப்ரமணிய சுவாமிக்கு பாவாடையை தூக்கி காட்டியதை மறந்து அறிக்கை விடுவது ..

இனி எதிர்காலம் .... சட்டம் .. நீதி .. ஒழுங்கு ..

We have an awful time to be alive !

தெய்வாம்சமும் மிருகாம்சமும்

Sublimation and Transformation

போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதை .'யூதாசின் முகம் ' என்ற தலைப்பு .


சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய ஆரம்பிக்கிறார் . குழந்தை ஏசு வின் ஓவியம் வரைய அவருக்கு மாசு மரு இல்லாத ஒரு முகத்தை தேடியிருக்கிறார் . ஒரு நாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்க்கிறார் . அழுக்காக இருந்தாலும் அந்த பால் முகம் தான் அவர் தேடிய முகம் என்பதால் அந்த சிறுவனை அழைத்து கொண்டு போய் அவனுடைய அழகிய முகத்தை குழந்தை ஏசுவாக வரைகிறார் .

யூதாஸ் ஓவியம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகி விட்டது . ஏசுவை காட்டிகொடுத்த கயவன் முகம் ! பல வருடம் தேடியும் அவர் எதிர் பார்த்த தீய , காம , கொடூர முகம் கொண்ட பல மனிதர்களை அவர் காண நேர்ந்தும் ஓவியருக்கு யூதாஸ் முகம் என யாரையும் தேர்வு செய்ய இயலவில்லை .

வருடங்கள் ஓடி விட்டது .ஒரு நாள் வைன் குடிக்க பார் போயிருந்த போது ஒரு ஆள் 'வைன் , எனக்கு வைன் வேண்டும் ' என புலம்பியவாறே பார் வாசலில் விழுகிறான் . வைன் அருந்திகொண்டிருந்த ஓவியர் எழுந்து வந்து அவனை தூக்கி பார்க்கிறார் . ஆச்சரியம் ! அவர் எதிர்பார்த்த கொடூர ,பயங்கர முகம் கொண்டமனிதன் அவன் ! அதி பயங்கர மிருக முகம் .

'வா ! உனக்கு வைன் , உணவு ,உடை தருகிறேன் ' என அழைத்துக்கொண்டு போய் அவனையே யுதாசாக வரைய ஆரம்பித்தார் . இரவும் பகலுமாக வரைந்து கொண்டிருந்த நிலையில் அவன் அழ ஆரம்பித்தான் ." உங்களுக்கு என்னை தெரியவில்லையா ? என்னை தான் நீங்கள் பல வருடங்கள் முன் 'குழந்தை ஏசு'வாக வரைந்தீர்கள் . என்னை உங்களுக்கு இன்னுமா அடையாளம் தெரியவில்லை ?" தேம்பி தேம்பி அழுதான் .


Feb 20, 2009

Doctor Zhivago

உள்நாட்டு போர் , புரட்சி , கொள்கை வெறி , தீவிரவாத இயக்கங்கள் இவை சராசரி மனிதர்கள் , வாழ்வை என்னமாய் சிதைத்து விடுகின்றன .பெண்கள் , குழந்தைகள் சொல்லொணா துயரம் எவ்வளவு அனுபவித்து விடுகிறார்கள் . தனிமனித வாழ்வில் இவற்றின் தாக்கங்கள் பற்றி அதிகபட்சமாக விரிவாக பேசும் படம் 'டாக்டர் ஷிவாகோ .' 1965ல் வந்த படம். போரிஸ் பாஸ்டர்நாக் எழுதிய நாவல் படமாக்கப்பட்டது.

ஷிவாகோ டாக்டர் மட்டுமல்ல. ஒரு கவிஞன் .கதை நடப்பது ரஷிய புரட்சி, ரஷிய உள்நாட்டு போர் நடந்த காலம் . படம் ஒரு பதின்மூன்று வருடங்களை காட்டுகிறது.1912-1925
ஜார் அரசனால் நிகழ்ந்த துயரங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் போல்ஷெவிக் தீவிரவாத அமைப்புகளிடம் மக்கள் அனுபவிக்கும் சீரழிவும் , துயரமும். வெள்ளை -சிவப்பு தீவிரவாதிகள் விடுதலைப்போர் என்ற பேரில் செய்யும் மானுட ஆன்மக்கொலை.
டேவிட் லீன் இயக்கத்தில் டாக்டர் ஷிவாகோ பற்றி சொல்லவேண்டுமானால் வேதனையுடன் வேறு வழியில்லாமல் -Evergreen subject.



ஷிவாகோ, லாரா வின் துயரங்கள் பற்றி வரலாறு மௌனத்தை தானே பதிலாக தரும். 

மக்கள் விடுதலை என்ற பெயரில் Bolshevik –Menshevik அமைப்புகளின் போராளிகள் நிகழ்த்தி காட்டும் சீரழிவை படம் காட்டுகிறது .
ஜூலி கிறிஸ்டி லாராவாக சிலுவை சுமந்திருக்கிறார் . ஒமார் ஷரிப் தான் டாக்டர் ஷிவாகோ .
நல்ல திரைப்படம் பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய காவியம்.

சார்லி சாப்ளின் மகள் ஜெரால்டின் இந்த படத்தில் டோன்யாவாக நடித்திருக்கிறார்.

 Rod Steiger 1954ல் மார்லன் பிராண்டோவின் On the WaterFront படத்தில் அவருக்கு சகோதரனாக மறக்கமுடியாத பாத்திரம் செய்தவர் . இந்த படத்தில் Rod Steiger கொமொரோவ்ஸ்கி யாக நடித்ததும் அவருக்கு கிடைத்த சரியான வாய்ப்பு .


ஷிவாகோ வின் மாமனார் க்ரோமிகோ செய்தித்தாள் படித்து சொல்கிறார் :
They've shot the Czar. And all his family. What's it for?
ஷிவாகோ வேதனையுடன் சொல்லும் பதில் . It's to show there's no going back.

டேவிட் லீன் இயக்கிய மூன்று படங்களுக்கு இந்த படத்தின் இசையமைப்பாளர் Maurice Jarreமறக்க முடியாதபடி பங்காற்றியவர் . படம் பார்த்து எத்தனை நாள் ,மாதம் ,வருடங்கள் ஆனாலும் நெஞ்சை விட்டகலாத Haunting Tune ஒன்று உண்டு டாக்டர் ஷிவாகோவில் !

ஏதோ வரலாறு சார்ந்த படம் மட்டும் அல்ல . நிவாரணமற்ற மானுட துக்கத்தை லாரா - ஷிவாகோ உறவின் நேர்மை மூலம் அப்பட்டமாக சொல்கிறது . லாராவின் வாழ்வு பாஷா என்ற போல்ஷெவிக் தீவிரவாத தலைவனோடு பினைக்கப்படுவதற்கு முன் கமொரோவ்ஸ்கி (லாராவின் தாயாரின் காதலன் )லாரா மீது நிகழ்த்தும் பாலியல் வன்முறை , ஷிவாகோவுடன் அவள் மருத்துவ தாதியாக இணையும் சூழல் , போராளிகளின் அரசியலின் உக்கிரம் தாங்காமல் வேறு வழியில்லாமல் லாராவை கமொரோவ்ஸ்கி யுடனே அனுப்பி வைக்கும் ஷிவாகோ அவளை மீண்டும் கண்டு பிடித்து அவளை கதறலுடன் அழைத்து நெருங்கும்போது உயிர் துறந்து விட நேர்கிறது .

There are shades which will not vanish,
There are thoughts you cannot banish
- Byron in Manfred.


........................

......
ஜூலி கிறிஸ்டி இந்தியாவில் அசாமில் பிறந்தவர் ! பிரிட்டிஷ் பெண்மணி தான் .
ஜூலி கிறிஸ்டி ஹாலிவூட் கண்ட மகத்தான நடிகை . காட் பாதர் அல் பாசினோ இவரை வானளாவ புகழ்ந்திருக்கிறார் . தன் இருபத்தேழாவது வயது முதல் முப்பத்து மூன்று வயது வரை வாரன் பீட்டி யுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார் . அதன் பின் பிரிந்தவர் முப்பத்து ஏழாவது வயதில் கேம்பெல் என்ற பத்திரிக்கையாளருடன் சும்மா சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை . ஒரு வைராக்கியம் !இரண்டு வருடம் முன் திடீரென்று அந்த கேம்பெல்லையே தன் அறுபத்தாறு வயதில் திருமணமே செய்து கொண்டு விட்டார் !


ஒமார் ஷரிப் எகிப்தில் பிறந்து கிறித்துவ மதத்திலிருந்து முஸ்லீம் மதத்திற்கு இந்த படத்தில் நடிப்பதற்கு பத்து வருடத்திற்கு முன் மாறியவர் .
ஒமார் ஷரிப் தன் இருபத்திரெண்டாவது வயதில் முஸ்லீம் ஆவதற்கு ஒரு வருடம் முன்பே திருமணம் செய்து கொண்ட ஹமாமாவுடனே ஒரு இருபத்து வருடங்கள் வாழ்ந்தார் . பின் பிரிந்தார் . இவர் கூட இந்த நூற்றாண்டிலும் பிசி தான் . ஐந்து வருடம் முன்தன் எழுபத்தொன்றாவது வயதில் ஒரு போலீஸ்காரனை அடித்து விட்டு கோர்ட் ,கேஸ் தண்டனை என்று அலைந்த ஷரிப் ரொம்ப பரபரப்பான மனிதர் .









Feb 18, 2009

டூரிங் டாக்கீசும் அமெரிக்கன் சென்டரும்

அந்த காலத்தில் டூரிங் டாக்கீஸ் படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் . கழுத்தில் தங்க செயின் ,மோதிரம், உடை - ஜீன்ஸ் பேன்ட் ,டி ஷர்ட் தரை டிக்கெட்டில் மணலில் உட்கார்ந்து தான் பார்ப்பேன் . டூரிங் டாக்கீஸ் என்றாலே மணலில் திரை முன்னால் பக்கத்தில் அமர்ந்து பார்ப்பது தான் சுகம் . அப்படி ஒரு முன்னூறு தடவை கல்லூரி நாட்களில் , அதன் பின் கூட பல பழைய படங்கள் தத்தனேரி மாருதி , விளாங்குடி ரத்னா டூரிங் டாக்கீஸ் ரெகுலர் தரை டிக்கெட் கஸ்டமர் நான் .

அப்படி விளாங்குடி ரத்னா தியேட்டர் ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படம் பார்க்க போயிருந்தேன் . இந்த படம் ஏற்கனவே பலமுறை பார்த்த படம் தான்.பழைய படங்களில் வருகிற துணை நடிகர்கள் சாதாரணமாக மக்களுக்கு தெரியாத நடிகர்களை கூடயார் எவர் என நன்கு நான் தெரிந்து வைத்திருப்பேன் . உதாரணமாக பூபதி நந்தாராம் அந்த அலிபாபா படத்தில் ஒரு துணை வில்லன் . இவர் பின்னால் 'லாரி டிரைவர்' என்ற ஆனந்தன் நடித்த படத்தில் கூட துணை வில்லன் . அப்போது நான் விளாங்குடி தியேட்டர் போயிருந்த போது 'இவர் உயிருடன் இல்லை . இவர் மகன் சுரேந்தர் என்பவர் 'சுதாகர் ' போன்ற நடிகர்களுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்' என்பது வரை எனக்கு தெரியும் .

தரையில் அமர்ந்து படம் பார்த்துகொண்டிருந்த போது அப்போது அறுபது வயது மதிக்க தக்க பெரியவர் ஒருவர் என்னிடம் அந்த படத்தின் காட்சிகள் பற்றி விளக்க ஆரம்பித்தார் . சாதாரணமா ' சும்மா பேசாம படத்தை பாரு பெருசு . நாங்க பார்த்த படம் தான் . எங்களுக்கே கதை சொல்றியா போய்யா ' என்று தான் மற்றவர்கள் சொல்லியிருப்பார்கள் . ஆனால் நான் அந்த பெரியவரை கனப்படுத்த விரும்பி விட்டேன் . தங்கவேலு வரும்போது பாமரன் போல ' இவன் நம்பியாரா ' என்பேன் . அவர் குஷியாகி விட்டார் . 'இல்லே . இவன் சிரிப்பு நடிகர் தங்கவேலு ' என்று எனக்கு அறிவுறுத்தினார் . வீரப்பாவை வரும்போது ' இந்த ஆள் யார் ' என்பேன் . அவர் புளகாங்கிதமாக ' இவனை தெரியாதா . வில்லன் வீரப்பா . நீ வஞ்சிகோட்டை வாலிபன் பார்த்ததில்லையா ? நாடோடி மன்னன் பார்த்ததில்லையா ?' மடையனை பார்ப்பது போல என்னை கேட்டார் .வீரப்பாவுக்கும் எம்ஜியாருக்கும் ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் செயற்கையாய் பதட்டத்துடன் ' எம்ஜியார் செத்துடுவாரா ?அயோக்கியன் எம்ஜியாரை கத்தியால குத்திடுவானா ' என அவரிடம் என் சந்தேகத்தை கேட்டுக்கொண்டே தான் இருந்தேன் . அவர் ' எம்ஜியார் எப்பவுமே சாக மாட்டார் . கடைசியா வில்லனை கொன்று விடுவார் . கவலைபடாதே . பேசாம படத்தை பார் ' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் கதையை முன்னதாக சொல்லிகொண்டிருந்தார் . பானுமதியை 'யார் ஜெயலலிதாவா இது ?' -நான் அவரை வினவினேன் . அவர் ரொம்ப குஷியாகி எனக்கு பல பாலபாடங்கள் சொல்ல ஆரம்பித்தார் . சக்ரபாணி எம்ஜியாரின் கூட பிறந்த அண்ணன் என அவர் சொன்ன போது நான் 'அப்படியா கூட பிறந்த அண்ணனே படத்திலும் அண்ணனா வர்றானே !' என அதிசயப்பட்டு ஆச்சரியப்பட்டு கதை சொன்ன பெரியவருக்கு ஜென்ம சாபல்யம் கொடுத்து விட்டேன் . என் கூட வந்த நண்பர்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை . நான் ' காரியத்தை கெடுத்து விடாதீர்கள் . அவருக்கு இந்த சந்தோசம் தருவது என் கடமை ' என்று எச்சரிக்க வேண்டியிருந்தது .

கடைசி சண்டை போது ' எம்ஜியார் செத்துடுவாரா ' என்று மீண்டும் பதற ஆரம்பித்தேன் . ' சாக மாட்டார் . இப்ப வேடிக்கையை பாரு . வீரப்பா ஆள் காலி ' பெரியவர் தேறுதல் சொன்னார் .

படம் முடிந்தவுடன் விளக்கை போட்டவுடன் பெருமையாக என்னை பார்த்தார் . அவர் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தயாரித்து இயக்கியவர் போல பெருமிதமாக சொன்னார் " நான் இல்லையின்னா உனக்கு இன்னைக்கு இந்த படம் தலையும் புரிந்திருக்காது . வால் கூட தெரிஞ்சிருக்காது ."

வெளியே வரும்போது சொன்னார் " பழைய படம் நிறைய பார்த்தேன்னா புது படங்களே பார்க்க மாட்ட "

அதற்கு மறு நாள் சென்னை சென்றேன் . அமெரிக்கன் சென்டெரில் Steven Spielburg இயக்கிய The Sugarland Express என்ற நகைச்சுவை படம் இரண்டாம் நாள் பார்க்க கிடைத்தது . அந்த படத்தையும் என்னால் இன்று வரை மறக்க முடியாது . ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த சினிமா பின்னணி பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் தற்செயலாக எனக்கு அடுத்த சீட்டில் அமர்ந்து The Sugarland Expressபடத்தை பார்த்தார் என்பதால்.

அவர் பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song! கல்லூரி காலங்களில் ,அதன் பின் கூட பல திருமண மேடைகளில் ஆர்கெஸ்ட்ராவில் ஒரு இருநூறு தடவையாவது பாடியிருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரிமரத்தடி ,வைகையாற்று மணல் , பூங்காக்கள்இவற்றில் 'நண்பர்களுக்காக இந்த பாடலை ஒரு ஆயிரம் தடவை பாடியுள்ளேன் . இந்த "காதல் நிலவே " பாடல் எங்காவது கேட்கும்போது என் ஞாபகம் வருகிறது என நண்பர்களும் உறவினர்களும் இன்று கூட சொல்கிறார்கள் .

பி பி ஸ்ரீநிவாஸ்பாடிய "காதல் நிலவே !கண்மணி ராதா! நிம்மதியாக தூங்கு" பாடல் என் Favorite song என்பதை நான் அவரிடமே அன்று அமெரிக்கன் சென்டரில் படம் ஆரம்பிக்கும் முன் சொன்ன போதுபுன்னகையுடன் ரொம்ப சந்தோசமாக " Thank You!Thank You!"என்றார். படம் பார்க்கும்போது அவர் என்னிடம் அதிகம் பேசவில்லை.The Sugarland Express படத்தை பார்ப்பதில் இருவருமே ஒன்றி போய்விட்டோம் என்பது தான் உண்மை .

.......

இந்த பதிவின் பின்னூட்டங்களுக்கு என் பதில் .

1 .டோண்டு சார் ! ஹலோ மிஸ்டர் ஜமிந்தார் ' படத்தில் எம் ஆர் ராதா முடி திருத்தும் கலைஞராக வந்து சலூனில் வாடிக்கையாளருக்கு முடி வெட்டியபடி " சொந்தமும் இல்லே ! ஒரு பந்தமும் இல்லே ! சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் ! நாங்க மன்னரும் இல்லே , மந்திரி இல்லே , வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார் ." என்று முடி திருத்தும் தொழிலை கௌரவித்து அதன் மகத்துவத்தை பற்றி வெங்கடேஷ் குழுவினர் பாடிய பாடலுக்கு நடித்திருக்கிறார் . இந்த படத்தில் அவருக்கு இந்த ஒரு பாடல் மட்டுமே .இது டூயட் பாடல் அல்ல கோரஸ் உண்டு .

."காதல் நிலவே , கண்மணி ராதா " ஜெமினி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடும் பாடல் .

இன்னொரு பாடல் " இளமை கொலுவிருக்கும் " ஜெமினிக்கு ஸ்விம்மிங் பூலில் .

சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் டூயட் ' Hello Mr! jaminthaar how do you do?Ok teacher! Ok ! How do you do?"

ஒரு உபரி தகவல் ! எம் ஆர் ராதா செய்த ரோல்களில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஹலோ மிஸ்டர் ஜமிந்தாரில் ராதா அவர்களின் கதா பாத்திரம் தான் ! அவர் இதை என்னிடம் பரவசத்தோடு சொன்னார் ! எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாலையா இந்த படத்தில் ட்விஸ்ட் டான்ஸ் ஆடுகிறாரா ? எனக்கு சரியாக நினைவில்லை .

2 .இங்கே இந்த பதிவில் கிண்டலாக வஞ்சபுகழ்ச்சி பின்னூட்டம் இட்டுள்ள அனானி அவர்களுக்கு ஒரு செய்தி !

சில வருடம் முன் இயக்குனர் மகேந்திரன் -விடுதலை புலி தலைவர் பிரபாகர் சந்திப்பு பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது . அதில் விடுதலை புலி பிரபாகர் அவர்கள் பாரதி ராஜா , மகேந்திரன் படங்களின் ரசிகர் மட்டுமல்ல . அப்போது சமீபத்திய தமிழ் படங்களை கூட டி வி டி deckமூலமாக உடனுக்குடன் பார்த்து விடும் ரசிகர் .அது மட்டுமல்ல ஹாலிவூட் ஆங்கில திரைப்படங்கள் பலவற்றை பற்றி புட்டு புட்டு வைத்தார் என்பதை முள்ளும் மலரும் மகேந்திரன் புளகாங்கிதமாக குறிப்பிட்டிருந்தார் .பிரபாகரன் சினிமா அதி தீவிர ரசிகர் என்பது பற்றி மகேந்திரன் ரொம்ப பதிவு செய்திருந்தார் . அப்போது கூட இலங்கை போரில் உயிர் நீத்த பல விடுதலைப்புலி தியாகிகள் , பிரபாகரனால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம் உள்ளிட்ட பல தலைவர்கள் ,இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்மக்கள் , வாழ முடியாமல் வீடு ,தொழில் இழந்து அகதிகளாக இந்தியாவிலும் ,உலகநாடுகள் பலவற்றிலும் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களும் தான் என் நினைவுக்கும் வந்தார்கள் .

போராளி பிரபாகரனை என்னால் உளவியல் ரீதியாக அனுதாபத்துடன் புரிந்து கொள்ளமுடியும் .சுந்தர ராமசாமி சொல்வார் : " மனிதன் விசித்திரமான ஜீவராசி . வாழ்க்கை போராட்டத்தில் தன் ஓட்டை படகில் பயணம் செய்யும்போது உள்ளே வந்து வழிந்து விட்ட நீரை கோரி வெளியே ஊற்றி கொண்டே அபாயமான பயணம் செய்யும் போது கூட சூழலுக்கு பொருத்தமே இல்லாத கனவுகளில்,பொழுது போக்குகளில் அவனால் ஆழ்ந்து போய் விட முடியும். மனிதன் விசித்திரமான ஜீவராசி ."

Feb 17, 2009

காதலிக்க நேரமில்லை பிரபாகர்

காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.

'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட் வாங்கணும்.' ஏக்கமாய் நாகேஷிடம் சொல்வார். நாகேஷ் “விட்டா எங்கப்பனையே வாங்கிடுவே போலருக்கு.”

நாகேஷ் அவர் படத்தில் இவர் மகள் கதாநாயகியாய் நடித்தால்' எங்கப்பா (பாலையா ) முன்னாலே நீ கால் மேலே கால் போட்டு ..'என்று சொல்லும்போது பிரபாகர் குறுக்கிட்டு பதறி ' அது மரியாதை இல்ல .. அது மரியாதை இல்ல.." என்பது சுவையான காட்சி.
எஸ் வி சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடக நடிகர் . தி ஜா வின் 'நாலுவேலி நிலம் ' நாடகம் சேவா ஸ்டேஜ் போட்ட போது அதில் 'கேப்ரியல்'என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கிடைத்தது போல நல்ல காமெடி ரோல் அவருக்கு அதற்கு பின் கிடைக்கவில்லை. அவர் பிரபலம் ஆகவும் இல்லை.
நான் அவர் பெயரை கேட்டு அவர் 'பிரபாகர் 'என்று சங்கடப்படாமல் சொன்னார். அதோடு அப்போது நான் வாய்த்துடுக்காக " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தீங்களா. " என காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இவரை பார்த்து சொன்ன வசனத்தையே சொன்னபோது பிரபாகர் தன்னிரக்கத்துக்கு ஆளாகாமல் உற்சாகமாகி நாகேஷிடம் என்னை அறிமுகப்படுத்தியது கூட சினிமாவுலகில் அரிதான விஷயம்.

பாலச்சந்தரின் 'மன்மத லீலை 'படத்தில் இவர் Y.விஜயாவின் கணவராக வருவார்.வக்கீலாக நல்ல காமெடி செய்வார்.
இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி காம்பிநேசனில் ஒரு காட்சி.
ரஜினி வேகமாக சொல்லும் ஆங்கில வாக்கியத்தை சிரமப்பட்டு சொல்லும் குடிகாரராக!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் நாவல் படமாக்க ஸ்ரீதர் விரும்பி சிவாஜியை ஜோசெப் ரோலுக்கு புக் செய்தார். ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் சண்டையாகி ஜோசெப் ரோலில் சிவாஜி நடிக்க முடியாமல் போயிற்று. அப்புறம் சந்திர பாபு அந்த ரோலை செய்ய ரொம்ப ஆசைப்பட்டார். ஜெயகாந்தனோடு ரொம்ப டிஸ்கசன் செய்து பார்த்தார். நடக்கவில்லை.
அதன் பின் ஒரு வழியாக கே விஜயன் இயக்கி நாகேஷ் தான்
 "யாருக்காக அழுதான் "படத்தில் நடித்தார்.
(ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்பாளி ஜெயகாந்தன் எந்த நடிகர் யாருக்காக அழுதான் ஜோசெப் ரோல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தெரியுமா? வீரப்பன்! ஜெயகாந்தனின் நண்பர் இவர்.பணத்தோட்டம்,பொண்ணுமாப்பிள்ளே படத்தில் நாகேஷுடன் நடித்தவர் வீரப்பன்.கவுண்டமணிக்கு காமெடி சீன்ஸ் எழுதியவர்.)

ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன் 'படத்தில் வரும் சிறுவனின் தாயாருக்கு ஒருவனோடு affair இருக்கும் . அது தானே அந்த கதையின் முக்கிய முடிச்சு. அந்த குருவி ஜோஷியக்காரனாக நடித்தவர் பிரபாகர் தான். கதாநாயகி காந்திமதிக்கு ஜோடி. ஆம் உன்னைப்போல் ஒருவன் கதாநாயகி பின்னால் சிரிப்பு நடிகையாக கலக்கிய காந்திமதி தான்.

தமிழ் திரை கண்ட மிக சிறந்த நடிகர்களில் பிரபாகர் ஒருவர். ஆனால் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
இப்போது இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை.

Cecil B. Demille இயக்கிய Samson and Delilah படத்தில் கதாநாயகனாக நடித்த Victor Matureவேடிக்கையாக சொல்வார் :“I am not an actor. I have got 67 movies to prove it.” 67படங்களில் நடித்தவர் இவர்.

பிரபாகருக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் ஒன்றே அவர் சிறந்த நடிகர் என்பதற்கு போதுமான சாட்சி.

ஒரு படம் கூட ஒழுங்காக நடிக்காத பல நடிகர்களை தமிழ் திரை கண்டு சீராட்டி போஷித்திருக்கிறது என்பது தான் மகத்தான சோகம்.

இரண்டு கிழவிகள் எழுதிய நூல்கள்

வானதி பதிப்பகம் 1996 ல் வெளியிட்ட நூல் எம் எஸ் சௌந்தரம் எழுதிய "சங்கீத நினைவு அலைகள் " . இவர் அப்போது எண்பது வயது அம்மாள் . பத்மா சுப்பிரமணியம் அவர்களின் மன்னி யின் தாயார் . இந்த நூல் ரொம்ப சின்னது . மேலோட்டமாக கர்நாடக சங்கீத நூல் என்ற எண்ணத்தை படிப்பவருக்கு ஏற்படுத்தும் .ஆனால் சென்ற நூற்றாண்டின் பிராமண பெண் வாழ்க்கை போராட்டங்களை பற்றிய நூல் . சௌந்தரம் அவர்களின் கணவன் மட்டுமல்ல, அவரது குரு கூட அவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை சுருக்கமாக விளக்கிய அற்புதமான நூல் . அவரது குருநாதர் அரியக்குடி !அதோடு அந்தக்கால கர்நாடக சங்கீத உலகம், அன்றைய ஜாம்பவான்கள் , சிஷ்யர்கள் பற்றியும் அருமையான Reference book. ஆனால் ரொம்ப சின்ன புத்தகம் .பக்கங்கள் ரொம்ப குறைவு .

அழகிய நாயகி அம்மாள் அப்போது எண்பது வயது . எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் . இவர் எழுதிய " கவலை " பெரிய புத்தகம் . பக்கங்கள் ரொம்ப அதிகம் . 1998 ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இந்த நூலை வெளியிட்டது . சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி நாடார் பெண்கள் வாழ்க்கை பற்றி அருமையான சித்திரம் . நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்டது .

இரண்டு முதிய பெண்மணிகள் இருவரும் இன்று இறந்து விட்டார்கள் .
'சங்கீத நினைவு அலைகள் ' 'கவலை ' இரண்டு நூல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் என்று உரக்க பேசக்கூட , பக்கம் பக்கமாக விளக்க கூட இங்கே ஆட்கள் உண்டு .

இது பாப்பாத்தி எழுதிய சாதாரண சின்ன புத்தகம் . அது எங்க சூத்திர பெண் எழுதிய கனமான பெரிய புத்தகம் என்று வர்க்க அடையாளம் கொடுக்கும் இலக்கிய அரசியல்வாதிகள் இங்கு அதிகம் .

2000 ல் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் நான் அழகிய நாயகி அம்மாளின் 'கவலை ' நூல் பற்றி பேசினேன் . அப்போது எம் எஸ் சௌந்தரம் ' சங்கீத நினைவு அலைகள் ' நூலை ஒப்பிட்டு பேசினேன்.

Feb 16, 2009

அன்று நாகேஷை நான் பார்த்த போது


அன்றைக்கு நான் அந்த வாகினி ஸ்டூடியோ செட் ஒன்றில் நுழைந்தேன் . நான் உதவி இயக்குனர் ஆக அப்போது 'அழைத்தால் வருவேன்' பட பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தேன். பாடல் ரிகார்டிங் முடிந்து நான் அங்கே பக்கத்தில் ஒரு செட் உள்ளே நுழைந்தேன் .
அது ஒரு ராமண்ணா படம் . அவர் கொடி கட்டிய காலம் அல்ல . அஸ்தமன காலம் . ராமண்ணா விடம் ஒரு விஷேச குணம் . டென்சன் இல்லாத இயக்குனர் . இயக்குகிறார் என்பதே அறிய முடியாமல் இருக்கும் . ஜெய் சங்கர் கதாநாயகன் !மக்கள் கலைஞரை ரசிகர் பெருமக்கள் கைவிட்டுவிட்டகாலம் . எவ்வளவு காலம் தான் ஏமாறுவார்கள் மக்கள் . சுதாகர் ,விஜயன் என்று சின்ன பட்ஜெட் படங்கள் போக ஆரம்பித்து விட்டது .ராமண்ணா பிடிவாதமாக அந்த 'குல கொழுந்து ' படத்தை சூட் செய்து கொண்டிருந்தார் . கதாநாயகி ஸ்ரீப்ரியா , அப்புறம் சௌகார் ஜானகி , செந்தாமரை படுக்கையில் . நாகேஷ் அந்த படத்தில் நடிக்கவில்லை . அவர் ஆனால் செட் ட்டுக்கு வந்து கலக்கி கொண்டிருந்தார் . காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் மாமனாராய் நடித்தவர் அந்த படத்தில் ஒரு ரோல் செய்து கொண்டிருந்தார் . பெயர் பிரபாகர் என்று அவரிடம் சிறிது நேரத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன் .அவரும் நாகேஷும் சாட் பிரேக் நேரங்களில் செய்த ஒரு சிறு காமெடி .
ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார் .
பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”
நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”
பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”
நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”
பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”
நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”
இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம் மின்னல் வேகத்தில் !

'டே ஜெய் இங்க பார்டா ' நாகேஷ் சொன்னவுடன் பிரபாகர் இயங்க ஆரம்பித்து விடுவார் . 'ஸ்ரீ பிரியா இங்க பார் ' 'ஜானகி ஒன் மினிட் ' மீண்டும் மீண்டும் ..
ராமண்ணா " டே நாகேஷ் ஷூட்டிங் நடத்த விடுடா . நீ ஏன் இப்ப இங்க வந்தே "
உடனே நாகேஷ் " அண்ணா இங்க பாருங்க " உடனே பிரபாகர் “ Who is the Station Master” ராமண்ணாவும் சிரித்து விட்டார் .
நான் பிரபாகரிடம் அப்போது தான் 'உங்க பேர் என்ன சார் " என்றேன் . " பிரபாகர் " என்றார் . நான் அப்போது சர்காஸ்டிக் ஆக சொன்னேன் " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பார்த்தீங்களா ? இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு !" என்றவுடன் பிரபாகர் குஷியாகி அப்போது ஸ்ரீப்ரியா , சௌ கார் உட்கார்ந்திருந்த சோபாவில் உட்கார்ந்து விட்ட நாகேஷிடம் சொன்னார் " டே நாகேஷ் இங்க பார்டா . ஒன் காதலிக்க நேரமில்லை வசனம் ஒப்பிக்கிரார்டா " என்றார் . அப்போது நாகேஷிடம் நான் சொன்ன வார்த்தை " நான் ராஜநாயஹம் ! ஒங்க ரசிகன் சார் !" தமிழ் சினிமா ரசிகனாக அடையாளப்படுத்திகொள்வது அபத்தம் தான் . ஆனால் நாகேஷின் ரசிகன் என்பது மதிப்பு குறைவு கிடையாது .
நாகேஷ் என்னை பார்த்தார் “Be seated . Be seated Please!” என்று எதிரே இருந்த ஒற்றை சோபாவை எனக்கு காட்டினார் .
சமீபத்தில் மறைந்தநடிகர் சிலோன் விஜயேந்திரன்(கவிஞர் கம்பதாசன் பற்றி நூல் எழுதியவர் ) அங்கே அப்போது நடிக்க வாய்ப்பு தேடி வந்திருந்தார் . அவர் என்னிடம் " சார் நீங்க பிரஸ் ஆ ?" நாகேஷ் உட்கார சொல்லவும் நான் Reporterஎன்று அவர் நினைத்து விட்டார் ." இல்லை " என்று அவசரமாக அவரிடம் சொன்னேன்.
....
நான் நாகேஷை சந்தித்த அதே நாளில் தான் அன்று பூஜை போடப்பட்ட ஹிந்து ரங்கராஜன் தயாரிப்பான ' அழைத்தால் வருவேன் ' படத்தில் நாகேஷ் கேட்ட தொகை அதிகம் என சொல்லி அவரை கேன்சல் செய்து விட்டு சுருளி ராஜனைஅதை விட பெரிய தொகை கொடுத்து புக் செய்தார்கள் . நாகேஷின் மார்க்கெட் முடிந்து ,தேங்காய் காமெடி மார்கெட்டும் முடிந்து சுருளிராஜன் காலம் முடியபோகிற வருடம் .'அழைத்தால் வருவேன்' முதல் வாரம் தியேட்டரில் ஓடும்போது அவர் திடீர் மரணம் நிகழ்ந்தது .இந்த படத்தில் இன்னொரு சுவாரசியம் . மற்றொரு ரோலுக்கு சுருளிக்கு அடுத்து அவர் இறந்து சிலகாலம் கழித்து மார்கெட்டுக்கு வர இருந்த கவுண்டமணி கேட்ட தொகை அதிகம் என்று சொல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி ,என்னத்தை கண்ணையா இருவரை அந்த தொகைக்கு புக் பண்ணி தயாரிப்பு நிர்வாகி சந்தோசமாக சொன்னார் ."எப்படி என் திறமை"
இந்த என்னத்தை கண்ணையா ஐம்பது வருடமாக நடித்து கொண்டிருக்கிறார் .இவ்வளவு காலம் கழித்து வடிவேலுடன் " வரும் ..ஆனா வராது ..." என்று கலக்கி விட்டார் !ஊரே அந்த டையலாக்கை இன்று சொல்லிகொண்டிருக்கிறது . அவரோடு நடித்த நடிகர்கள் எல்லோரும் அமரர் ஆகிவிட்டார்கள் .

Srilankan Tamil refugees

நாகார்ஜுனன் எனக்கு அனுப்பியுள்ள மெயில்:

பதின்மூன்றாம் தேதி அனுப்பப்பட்டது .

அதன் ஒரு பகுதி கீழே :

Some 250,000 civilians have been trapped by the fighting in the north east of the island. Hundreds have already been killed, either by Tiger fighters firing on them as they tried to escape or by government troops shelling the rebel enclave, now only some 70 square miles. Many of those fleeing the crossfire have been killed by mines. The International Committee of the Red Cross has done its best, but was forced yesterday to evacuate 160 patients from a makeshift hospital where artillery shelling killed 16 people earlier in the week.

The United Nations is planning for an exodus of 150,000 people. But the troops appear intent on holding them, ostensibly for their safety but in fact to root out any supporters or relatives of the Tiger fighters.

The army has good grounds for suspicion. Velupillai Prabakharan, the fanatical leader of the Liberation Tigers of Tamil Eelaam (LTTE), has apparently escaped, probably by sea, but he has left behind more than 700 zealots, ready to fight to the death, and suicide bombers. Some have already blown themselves up, killing dozens of troops and civilians. For years the Tigers have forced each Tamil family to enlist one of its members in the rebel army. Until the last minute, Tamils have been assembling mortars, grenades and roadside bombs in workshops in Tiger-controlled towns. Prabakharan's reign of terror has used civilians as human shields or forced them to build defences. Few have been able to stay out of the conflict.

Jeremy Page - South Asian correspondant

Times UK longer version on yesterday's detention story - the reporter Jeremy Page is based in Delhi. What's the Indian media in Colombo. Shame!

Feb 15, 2009

Roman Holiday


ரோமன் ஹாலிடே 1953 ல் வந்த படம். இப்போது பார்த்தாலும் கிரகரி பெக், ஆட்ரி ஹெப்பெர்ன் இருவர் நடிப்பும் படமும் பிரமிக்க அடிக்கும்.
என்ன ஒரு படம் என்று வாய் விட்டு சொல்லவைக்கும் படம். இந்த படம் ஏன் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதேயில்லை.

வில்லியம் வைலர் இதனை இயக்கிய ஆறு ஆண்டுகளில் Ben-Hur படத்தை தந்து புகழ் பெற்றார் .
பாரமௌன்ட் நிறுவனம் இந்த படத்தை ஹாலிவூட் ல் தான் எடுக்க வேண்டும் என பிடிவாதமாய் இருந்தது . ஆனால் வைலர் இதை இத்தாலியில் தான் படமாக்கவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார் . அதற்கு பாரமௌன்ட் இரண்டு கண்டிசன் போட்டது .' அப்படியானால் படம் கலரில் எடுக்க முடியாது. கதாநாயகியாக யாராவது மிக சாதாரண அறிமுகமே இல்லாத பெண் தான் .' கருப்பு வெள்ளை, ஆட்ரி ஹெப்பெர்ன் இரண்டையும் வைத்து அழியா காவியம் தந்தார் வைலர் .
கிரெகரி பெக் அப்போது ஒன்பது வருடம் முன்பிருந்தே பிரபல நடிகர் . இந்த படத்தில் அவர் நடிக்க வந்தபோது மனநிலை மிகவும் விரக்தி.அவர் தன் முதல் மனைவியை பிரிந்திருந்த சூழல், விவாகரத்தும் தவிர்க்க முடியாத நிலை. ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் அதன் பின் அவர் உயிர் வாழ்ந்த ஐம்பது வருடமும் அவருக்கு மனைவியாய் நிலைத்து நின்ற பிரஞ்சு பெண் வெரொனிக் பஸ்சாணி ஐ சந்தித்து காதல் கொண்டார் . முதல் மனைவியின் விவாகரத்து கிடைத்த பின் கல்யாணமும் செய்து கொண்டார்.

கிரெகரி பெக் இந்த படம் முடிந்தவுடன் தயாரிப்பாளர்களிடம் ' ஆட்ரி ஹெப்பர்ன் இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது பெறுவது உறுதி. அதனால் அவர் பெயரை முதலில் போட்டு படத்தின் பெயரை போடுங்கள். தப்பே இல்லை ' என்றார். பரந்த மனசு ' அறிமுகம் - ஆட்ரி ஹெப்பர்ன் ' என்றே முதலில் போட்டு படத்தின் டைட்டில் போட்டார்கள் .
ஒரு மகாராணி தன் செக்குமாட்டு ராணி வாழ்க்கையை விட்டு தப்பி ( SHE’S TIRED OF THE STRUCTURED LIFE OF ROYALTY )சாமானியன் ஒருவனுடன் ஒரு முழு நாளை கழிக்கும் கதை . பின்னர் தான் இந்த கதை கரு எத்தனை முறை எத்தனை மொழிகளில் நகல் எடுக்கப்பட்டது . The private and secret longings of a Princess!
ஆட்ரி ஹெப்பர்ன் மிக பிரமாதமாக தன் திரையுலக வாழ்வை இந்த படத்தில் துவங்கி Break-fast at Tiffany’s (1961),My Fair Lady (1965) போன்ற மறக்கமுடியாத படங்களின் கதாநாயகியானவர் .
ரோமன் ஹாலிடே படத்தில் கடைசி காட்சி ஒரு கவிதை . ஆம் க்ளைமாக்ஸ் ஒரு கவிதை.

அந்த கடைசி Shot ! கிரெகரி பெக் சின்ன புன்னகையுடன் மகாராணியின் வில்லாவிலிருந்து மெல்ல நடந்து வெளியேறுவது!

..............................................................

“You don’t know how delighted I am to meet you.”
How much would a real interview with this dame worth? Her innermost thoughts revealed to a reporter in a private,personal,exclusive interview!

Feb 14, 2009

காதலர் தினத்தில் போதலேர் கவிதை வரிகள்

காதலர் தினத்தை கௌரவிக்க என் நினைவில் இருந்து போதலேர் கவிதை வரிகள் சில . இந்த பிரஞ்சு கவிஞன் பற்றி ஆர்தர் ரைம்போ சொல்வான் ."கவிஞர்களின் அரசன் " " ஒரு உண்மையான கடவுள் "


The Desire to paint

I am burning to paint her
….
She is lovely, and more than lovely:

I would compare her to a black sun, …
But it is the moon,rather to which
She is more readily likened.

There are women who fill men with a desire
To conquer them and have their way with them;
But this woman inspires a longing to
Die slowly under her gaze

- Baudelaire in ‘Prose poems’

........

Your kisses are a drug, Your mouth the urn
Dispensing fear to heroes, fervor to boys.
..
Who cares if you come from paradise or hell
….
Come from Satan, come from God- who cares,
……

-Baudelaire in ‘Hymn to Beauty’

சீமான்

Rejoice! Happy Valentine’s day!!
மேற்கண்ட வார்த்தைகள் காதலர்களுக்காக மட்டும் அல்ல கலாச்சார காதலர்கள்... கவனத்திற்காகவும் தான் !
.....

இன்று தினமலரில் சீமான் பேச்சு படித்தேன் . உள்ளே தூக்கி போட்டால் ஜாமீன் கேட்டு கெஞ்சுகிறார் . 'இனி சர்ச்சைக்குரிய விதமாக பேச மாட்டேன்' என்று எழுதிகொடுக்கிறார் . வெளியே வந்து விட்டால் பேட்டியும் ,மேடை பேச்சும் 'கெட்ட அப்பன் மகனே ,சீமான் சிங்கம்டா ' தாட் பூட் தஞ்சாவூர் என்று குதிக்கிறார் .
'விடுதலை புலிகள் தப்பிக்க நினைக்கும் பொதுமக்களை சுடுகிறார்கள்' என்று இன்று கூட இலங்கை ராணுவத்தால் காயமடைந்து செஞ்சிலுவை சங்கத்தால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் கூறியுள்ளதை தினமலரில் படிக்க முடிந்தது . புலிகள் வேறு , இலங்கை மக்கள் வேறு என்று யாரும் சொல்லக்கூடாதாம் . சீமான் மிரட்டல் கர்ஜனை வேடிக்கையாக இருக்கிறது . ஒரு கேள்வி . ஜெயலலிதா ஆட்சியில் இவரால் இப்படி பேச முடியுமா ? ஜெயலலிதா ஆட்சி இதற்காகவேனும் வந்தால் நல்லது என்று தோன்றுகிறது . ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உறுதியாக இருக்கிறது சீமான் அவர்களே ! அப்புறம் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது .' இனிமே மூச்சு விடமாட்டேன் . இப்படி பேசமாட்டேன் ' என்று எழுதிகொடுக்கவும் கிஞ்சித்தும் வழியே கிடையாது .உஷார் !உஷார் !
தமிழ் பற்று உள்ள சீமான் இந்தியாவில் உள்ள தமிழர்களை 'ஈன ஜாதி , நல்ல அப்பனுக்கு பிறக்காதவனுங்க' -சகட்டுமேனிக்கு வர்ணிக்கிறார் .சீமான்கள் சாமானியர்களை இப்படி தான் அந்த காலத்திலும் அவமானப்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .'சீமான் 'என்று பெயர் இருந்தால் கூட வாய் அப்படித்தான் கொழுப்பெடுத்து விடும் போலிருக்கிறது.

Feb 13, 2009

காதிலே விழுந்த சேதிகள்

1.யாரையும் பார்த்து இப்ப மலைக்கவே முடியலே .என்னடா ஒலிம்பிக்லே தங்கமா ,தங்கமா அள்ளுறான் .இவன் தாண்டா ஆம்பிளேன்னு மைக்கேல் பெல்ப்ஸ் பற்றி ரொம்ப ஆச்சரியப்பட்டாஇப்ப பெல்ப்ஸ் போதை கேஸ் நு சொல்றாங்கே.

2. முல்லைத்தீவு பகுதியிலே தப்ப முயற்சிக்கும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகள் தாக்கி கொலை செய்கிறார்கள் என்று ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட கன்னிகா ஸ்திரி காயத்துடன் வெளியேறி சொல்கிறார் .

3.கருணாநிதி குணமடைந்ததும் ராஜபக்ஷே அழைப்பை ஏற்று இலங்கை சென்று தமிழ் மக்கள் புனர்வாழ்வுக்கு ஆக்கப்பூர்வமாக பணி செய்ய முயற்சிக்கவேண்டும் என்று ஞாநி சொல்வதில் நியாயம் இருக்கிறது . எங்கோ இருந்து நார்வே காரன் வந்து சமரசம் பேசி அல்லாடி தவித்திருக்கிறானே.கருணாநிதி பஞ்சாயத்து பண்ணி பார்த்தால் என்ன என ஞாநி கேட்பதில் தவறே இல்லை.

4. ஆந்திர சட்டசபை , ஒரிஸ்ஸா சட்ட சபை , மேற்கு வங்காள சட்டசபை எம் எல் ஏ கலவரங்கள் பார்த்து பார்த்து .... என்னத்தை சொல்ல .சரி எல்லோருக்கும் கஷ்டம் . இவங்க கஷ்டம் வெளியே தெரியுது .

5. 'கப்பலை கட்டி விட்டு கரையிலே நிறுத்த வேண்டாம்னு தான் தேர்தலில் குதித்துதிருமங்கலம் தொகுதியிலே எண்ணூற்றி ஐம்பது வோட்டு அள்ளினோம்' .நு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீசை முறுக்கி ' உங்க அப்பன் மகனே சிங்கம்டா' ன்னு அறிக்கை விட்டுட்டார்.

Feb 12, 2009

நாகேஷும் பாலச்சந்தரும்


நாகேஷிற்கு நெஞ்சில் ஓர் ஆலயத்தில் வாழ்க்கை கொடுத்தவர் ஸ்ரீதர்.அதன் பிறகு தான் நாகேஷை சினிமாவுக்கு தெரியும் .'நெஞ்சம் மறப்பதில்லை ' படத்தில் நாகேஷின் நுட்பமான நேர்த்தியான நகைச்சுவை வார்த்தையால் விவரிக்கமுடியாது.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷின் முக்கிய கதாபாத்திரம் ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பா ரோல் ஸ்ரீதர் கொடுத்தது தான் .'ஊட்டி வரை உறவு ' நாகேஷின் ஆர்ப்பாட்டமான நகைச்சுவை காட்சிகள் பார்க்க பார்க்க பார்க்க திகட்டவே திகட்டாதது .

பட்டணத்தில் பூதம் இயக்கியவர் ராமன் . நாகேஷ் சாதனை படங்களில் முக்கியமானது . ' நாய்க்கு சீசர்ன்னு பேர் வச்சேன் .செத்துப்போச்சி ' ரமாபிரபா சோகமாக சொல்லும்போது
நாகேஷ்" பேர் வச்சே . சோறு வச்சியா " ( இந்த ஜோக்கை இப்போது விவேக் ஒரு படத்தில் அப்படியே சுட்டு விட்டது தெரியுமா )
நாகேஷிற்கு பிரமாதமான பேர் வாங்கி தந்த திருவிளையாடல் தருமி , தில்லானா மோகனாம்பாள் வைத்தி இரண்டு படங்களின் இயக்குனர் ஏ பி நாகராஜன்.
மோட்டார் சுந்தரம்பிள்ளை , எங்க வீட்டு பிள்ளை , அன்பே வா இப்படி நாகேஷ் விலா நோக சிரிக்க வைத்த படங்கள் ஏராளம் .கே எஸ் ஜி யின்'சின்னஞ்சிறு உலகம் 'சோக நாகேஷ் , 'பணமா பாசமா' அலேக் நாகேஷ் !
சாதாரண டப்பா படம் 'அண்ணாவின் ஆசை 'யில் நாகேஷ் அளப்பரையை பார்க்கவேண்டும் .
நாகேஷ் சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்த காலத்தில் பாலச்சந்தரின் ராகினி கிரியேசன்ஸ் நாடகங்களில் நடித்தார் .'தெய்வத்தாய் 'என்ற எம்ஜியார் பார்முலா படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தருக்கு இதனால் நீர்க்குமிழி மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கலாம் .
ஏதோ பாலச்சந்தர் தான் நாகேஷை உருவாக்கியவர் . அவர் தான் நாகேஷை சரியாக வேலை வாங்கியவர் என்பது போல ஒரு பிரமை கமல் உட்பட பலருக்கு இருக்கிறது . நாகேஷை ஓவர் ஆக்சனில் சிக்க வைத்ததே பாலச்சந்தர் நாடகபாணி இயக்கம் தான் .

சர்வர் சுந்தரம் கதை வசனம் பாலச்சந்தர் . இயக்குனர் அவர் அல்ல . நீர்க்குமிழி , எதிர் நீச்சல் படங்கள் நாகேஷுக்கு சொல்லும்படியான படங்கள் என்றால் நவக்கிரகம் , பத்தாம் பசலி போன்ற வீணாப்போன நாகேஷ் படங்களுக்கும் பாலச்சந்தர் தான் இயக்குனர் .வேதாந்தம் ராகவய்யா இயக்கிய நாகேஷின் இருநூறாவது படம் 'உலகம் இவ்வளவு தான் 'கூட வெற்றிபெற்றது.
'நாணல் ' பாமா விஜயம் ', 'அனுபவி ராஜா அனுபவி ' படங்களில் அட்டகாசமான நகைச்சுவை தர்பார் செய்யவைத்து அதே நேரத்தில் குணசித்ரம் , தத்துவம், புளுத்தி என்று நாகேஷை ட்ராக் மாற்றி அருமையான அபூர்வமான நகைச்சுவையை நசிக்கவைத்து குட்டி சுவர் ஆக்கியதில் பாலச்சந்தருக்கு பிரதான இடம் உண்டு . அப்புறம் அம்போ என்று கைவிட்டவரும் இவர் தான் . அவள் ஒரு தொடர்கதையில் கமல் செய்த ' விகடகவி ' ரோல் கூட நாகேஷுக்கு பொருத்தமான ரோல் தானே !
'புன்னகை ' படத்திற்கு பின் நாகேஷை பாலச்சந்தர் கைவிடுகிறார் . அபூர்வ ராகங்களில் தான் மீண்டும் நாகேஷிற்கு வாய்ப்பு . பின் மீண்டும் நாகேஷை பலபடங்களில் பாலச்சந்தர் கண்டு கொள்ளவே இல்லை .'தில்லுமுல்லு 'படத்தில் நாகேஷுக்கு பிட் ரோல் . டைட்டில்-தேங்காய் சீனிவாசன் பெயருக்கு கீழே நாகேஷ் பெயர் வரும்.

............................................
 

Feb 11, 2009

போடுங்கம்மா ஓட்டு


திமுக கவுன்சலர் தேர்தலில் அதற்கான வயது வரும் முன் சின்னப்பையனாய் இருக்கும்போதே வேட்பாளாராக என் மாமனார் எஸ்எம்டி சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்தலில் அப்போது நின்றார்.நாற்பத்தைந்து வருடம் முன்.



பெண்கள் பொது கக்கூஸ் சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று இவருடைய நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். அப்போது என் மாமனார் சந்திரனின் நண்பர் ஒருவர் ' இருங்கடா ' என்று கக்கூஸ் உள்ளே நுழைந்து விட்டார்.
' டே எவளாவது உள்ளே இருக்கப்போராடா ' என்று ஒரு ஆள் பதறியிருக்கிறார்.' டே நாத்தம் , அசிங்கம் சகிக்க முடியாதேடா ' என்று இன்னொரு ஆள் கூப்பாடு.' அய்யோயோ வெளியே வாடா டே '

உள்ளே அந்த நண்பர் மூக்கை பிடித்துக்கொண்டு உள்சுவரில் ' உங்கள் வோட்டு எஸ் எம் டி சந்திரனுக்கே ' என்று பொறுமையாக எழுதிஉதய சூரியன் படத்தையும் வரைந்து விட்டு பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வந்து சொன்னாராம்." டே வெளி சுவத்திலே எழுதிபோட்டு புரயோஜனம் ஏதும் இல்லேடா. அவசரமா அடக்க முடியாம வெளிக்கி இருக்க வர்றவ இதை பார்க்கவே மாட்டா . உள்ள போய் வெளிக்கு முக்கி பீ பேண்ட பிறகு உள் சுவரில் நான் எழுதிபோட்டதை அப்புறம் மெதுவா முழுசா வாசிப்பா .சுகமா வாசிப்பா .அவ மனசிலே அப்போ தான் நல்லா பதியும். சந்திரனுக்கு வோட்டு போடுவாடா"




என் மாமனார் ஜெயித்தார்.


பெண்கள் கக்கூசிற்குள் எழுதிபோட்டு விட்டு இப்படி படு ப்ராக்டிகலா பேசியவர் யார் தெரியுமா? 
 அதன் பிறகு ஏழு வருடம் கழிந்து இவர் தான் கர்ம வீரர் காமராஜரை விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தோற்கடித்தவர்.

ஆம். சமீபத்தில் மறைந்த பெ. சீனிவாசன்.