Share

Jan 8, 2009

உலக நடப்பு

அதிர்ச்சி -
சத்யம் கம்ப்யுட்டர் விவகாரம் - கணக்கு வழக்கு மூலம் நிறைய பொய் .
பங்கு சந்தை வீழ்ச்சி .

நகைச்சுவை - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் துர்ரானி டிஸ்மிஸ் . அவர் செய்த பெரிய தவறு 'கசாப் பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் ' என்ற உண்மையை சொல்லி விட்டார் . ஜனாதிபதி சர்தாரியிடம் மட்டும் கன்சல்ட் செய்து பிரதமர் கிலானியைதர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டார் .

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள ராணுவ ரகசியம் - கசாப் பாகிஸ்தானி தான் .

செழிப்பு - திருமங்கலம் வாக்காள பெருமக்கள் . உபயம் : திமுக , அண்ணா திமுக
( இன்றைய செய்திகளில் ஒரே சந்தோசமான செய்தி இது மட்டுமே தான் )


பாட்டாளி ராமதாஸ் சிந்திக்க வேண்டிய விஷயம் : தாஸ்மாக் கொஞ்சம் முன்னதாக அடைக்கப்படுவதால் 'ப்ளாக் 'க்கில் பாட்டில்கள் அதிக விலைக்கு தாஸ்மாக் கடைகளிலேயே விற்கப்படுகின்றன .(இரவில் கடை மூடிய பின்னும் ,காலை கடை திறப்பதற்கு முன்னும் )

கன்னித்தீவு சிந்துபாத் கதை : விடுதலை புலிகள் - 'கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவோம் '

தீர்வு இல்லாத நிரந்தர சோகம் : இலங்கை தமிழர்கள் .


மத்திய அரசு வெளியிடாத முக்கிய செய்தி : தள்ளாத முதுமை காரணமாக பிரணாப் முகர்ஜி யின் ' போர் நிறுத்தம் வேண்டி இலங்கைக்கு செல்லவிருந்த நெடும் தூர பயணம்' ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .

போராட்டம் : ந்தியன் ஆயில் , பாரத் பெட்ரோல் கம்பெனி அதிகாரிகளுக்கு லச்ச ரூபா சம்பளம் போதவில்லை .

O wonder !
How many goodly creatures are there here!
How beauteous Mankind is!
O brave new world!
That has such people in it!
-Shakespeare in ‘ Tempest’


3 comments:

  1. Latest NEws

    கூடிய விரைவில் பிரணாப் இலங்கை செல்வார் - மன்மோகன் சிங்
    தட்ஸ்தமிழ் - 21 நிமிடங்களுக்கு முன்பு
    சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். ...

    ReplyDelete
  2. RRP, any plans of coming to Chennai to visit the book fair ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.