' கடல் தன் காதலை பூமிக்கு சொல்வதற்காக திரும்ப திரும்ப தழுவி செல்கிறது . பூமி அதை உதாசீனம் செய்து மறுக்கும்போது பெரும் சத்த இரைச்சலோடு கல் பாறைகள் மீது அறைந்து சொல்கிறது . சமாதானமாகாமல் சூறைக்காற்றாக வீசி தன் மனதை வெளிப்படுத்துகிறது . கடலின் அலைகள் காதலின் கைகள் !'
பாப்லோ நெருடா முக்கிய கதாப்பாத்திரமாக வரும் Il Postino ( The Postman) படத்தில் பாப்லோ நெருடா கடல் பற்றி சொல்வதாக இந்த வசனம் வரும். ஆஹா !அருமையான படம் . யமுனா ராஜேந்திரன் இந்த ' போஸ்ட்மேன்' படம் பற்றி நல்ல கட்டுரை எழுதியுள்ளார் .
நேர் எதிர்மறையாக ஜோசப் கான்ராட் சொல்கிறார் . சுனாமியை பார்த்து விட்டோம் .அனுபவித்தவர்கள் கான்ராட் சொல்வது சரி என்று தான் சொல்ல முடியும் .மனிதனின் 'நிம்மதியின்மை ' யின் கூட்டுக்களவானி தான் கடல் என்று கான்ராட் அபிப்பராயபடுகிறார் . கடல் மனிதனுடன் சிநேகமாக இருந்ததில்லை .
The sea has never been friendly to man.
At most it has been the accomplice of human restlessness.
தி.ஜானகிராமன் கடலையும் மௌனத்தையும் இணைத்து அலையோசையை விவரிக்கிறார் .
' நிசப்தமாய் இருந்தது . கடலலை மட்டும் அந்த மௌனத்தின் மீது மோதி ஏறி , கலைந்து விழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது '
'குழந்தை ஷேக்ஸ்பியர்' ஆர்தர் ரைம்போ வின் மிக பிரபலமான பிரஞ்சு கவிதை கடலை சூரியனுடன் இணைத்து ' சாசுவதம் ' என்பதை விளக்குகிறது .
It Has been found again! What?
Eternity.
It is the Sea mingled with the Sun.
Sir,
ReplyDeleteI am an avid reader of your blog. Have heard of rimbaud, but I have not read him since I thought it would be very difficult. However the two lines you have mentioned in your post have cast a spell on me. A great metaphor. The previous time I had such an experience was when I read Pramil's poem about A bird's feather drifting in the open space. Both conjure great images.
Thanks
அருமை அருமை !
ReplyDeleteL'éternité - Arthur Rimbaud
ReplyDeleteElle est retrouvée.
Quoi ? - L'Éternité.
C'est la mer allée
Avec le soleil.
Âme sentinelle,
Murmurons l'aveu
De la nuit si nulle
Et du jour en feu.
Des humains suffrages,
Des communs élans
Là tu te dégages
Et voles selon.
Puisque de vous seules,
Braises de satin,
Le Devoir s'exhale
Sans qu'on dise : enfin.
Là pas d'espérance,
Nul orietur.
Science avec patience,
Le supplice est sûr.
Elle est retrouvée.
Quoi ? - L'Éternité.
C'est la mer allée
Avec le soleil.
ரைம்போவின் நரகத்தில் ஒரு பருவம் (Une Saison en Enfer) நூலிலும் நீங்கள் கூறும் இந்தக்கவிதையின் வரிகள் வருகின்றன. இவை பற்றி விரிவாக எழுதுகிறேன்!
நாகார்ஜுனன்
L'Homme et la mer - Charles Baudelaire
ReplyDeleteகடலும் மனிதனும்
எப்போதும் கடலைப் போற்றுவாய் நீ!
மனிதா,
கடலே
உன் கண்ணாடி.
அனந்தமாய்ப் புரளும் அலையில்
தேடுவாய்
உன் ஆன்மா.
அதற்கும் குறைவற்ற
வேதனைப் பாதாளம்
உன் மனம்.
உன் போன்றதன் இதயத்தில் மூழ்குவதில்
உன் மகிழ்ச்சி.
கண்ணாலும் கரத்தாலும்
தழுவுகிறாய் அதை.
அடங்காத அதன்
ராட்சத ஒப்பாரியால்
விலகும்
உன் இதயம்
தன் ஓசையினின்றும்.
மங்குவதும் நீ
மனமறிவதும் நீ.
மனிதா,
உன் பிலம்
பல
ஆழம் அறிவதில்லை
யாரும்.
கடலே,
உன் உற்ற செல்வம்
பல
அறிவதில்லை
யாரும்.
அத்தனை கவனமாய்
நீ வைத்திருக்கும்
ரகசியம் பல.
இருந்தும்
எண்ணற்ற ஆண்டுநூறாய்ப்
பரிவற்றுப் பொருதுகிறீர்!
நித்திய எதிரிகாள்,
போரை விட இயலா
சோதரர் நீவிர்!
அத்தனைக்கு
மரணம் படுகொலை மேல்
உங்கள் நேசம்.
13.4.2008
Nagarjunan sir!
ReplyDeleteGreat! Great!!
Thanks a lot.
கடற்பரப்பு
ReplyDeleteபொன்னில் செம்பில் தேர்
வெள்ளி எஃகில் முகவோடம்
நுரை சொடுக்க,
முளரி அடித்தூறு பல பெயர்க்க,
இட்ட நங்கூரத்தால் நீரோட்டம்
வற்றும் அலையின் பெருந்தடம பல
கிழக்கில்
காட்டின் தூண்கள், துறைக்கால்கள்
நோக்கிச் சுரிவளைய
மூலைதமைச் சூறைக்காற்று
தகர்க்கவென.
Arthur Rimbaud, Marine, Illuminations, 1886.
Nagarjunan Sir!
ReplyDeleteBeautiful.
Anonymous! Krishnan!Please read these Baudelaire and Rimbaud poems translated by Nagarjunan.
I think we got JackPOT
ReplyDeleteThanku Nagarjunan sir.
Thank u Rp Sir
மேற்கண்ட ரைம்போ கவிதை தமிழில்
ReplyDeleteநித்தியம்