Share

Jan 16, 2009

Down to Earth

ஒ ஏ கே தேவர் என்று ஒரு வில்லன் நடிகர் . குரல் கணீர் என்று இருக்கும் ." வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை " என்ற அவர் வசனம் 'மஹாதேவி ' படத்தில் பிரபலம் . இவர் அந்த காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இவரோடு ராயப்பேட்டையில் ஒரு கவிஞர் ஒரே அறையில் தங்கியிருந்தார் . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ! நிர்பந்தமான ஒரு சூழலில் ( பணத்தட்டுப்பாடு தான் )ஒரு தடவை ஒ ஏ கே தேவர் அறையிலிருந்த புத்தகம் பேப்பரை எல்லாம் எடைக்கு போட்டு காசு வாங்கி விட்டார் . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வந்து பார்க்கிறார் . இவர் எழுதிய பல கவிதைகளையும் தேவர் வீசைக்கு பேப்பர்க்காரனிடம் போட்டு விட்டதை கண்டறிந்து பதறி வேதனைபடுகிறார் . ஒ ஏ கே தேவர் அவரை தேற்றி ஆறுதல் சொன்னாராம் .

" இதை விட நீ நல்லா நிறைய கவிதை எழுதிடுவே . கவலைப்படாத கல்யாணி . ஒன் மூளைக்கு பிரமாதமா நீ எழுதுவே பாரு ! பேப்பர்காரனாவது காசு கொடுத்தானேன்னு நாம சந்தோசப்படனும் "

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.