Journalism – the ability to meet the challenge of filling the space !
'உலகம் இதிலே அடங்குது ,உண்மையும் பொய்யும் புழங்குது' என்று சிவாஜி 'குலமகள் ராதை ' படத்தில் செய்திப்பத்திரிக்கை பற்றி பாடுகிற காட்சி உண்டு .மனோஜ் தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர் . அவருடைய 'புனைவின் நிழல்' சிறுகதை படிக்க மிகவும் சுவாரசியமானது . செய்தியை,பேட்டி யை தினபத்திரிக்கையில் நிறைக்க அந்த காலங்களில் நடந்த தகிடு தத்தங்களை அப்படியே ஒரு குறுக்கு வெட்டாக எடுத்துக்காட்டும் சிறுகதை . இந்த இன்டர்நெட் யுகத்தில் அப்படிப்பட்ட தவறுகளுக்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றாலும் கடந்த கால செய்திப்பத்திரிக்கை பற்றிய வரலாற்று ஆவணமாகவே மனோஜின் 'புனைவின் நிழல் ' சிறுகதையை வைக்கமுடியும் . செய்தித்தாள் ,பத்திரிகை வேலைகளை 'விபச்சாரம் ' என்றே டால்ஸ்டாய் கோபத்துடன் குறிப்பிட்டார் .
டிவி தினசரி செய்திகளை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது . மகாமோசமான மூளை சலவை டிவி செய்திகள் மூலம் நடக்கின்றன .
அந்த காலத்திலே சன் டிவி சேட்டை சொல்லி மாளாது .இருக்கிற டிவி செய்திகளில் அகமட்டமானது, ஆகமட்டமானது , ஆகாககாக மட்டமானது ஜெயா டிவி செய்திகள் . 'திமுக என்ற கட்சியின் இருப்பு , அது ஆட்சியில் இருப்பது குறித்த எரிச்சல் 'தான் ஜெயா டிவி செய்திகள் .சகிக்க முடியாத செயகைத்தனமான Doctored News, Motivated News தான் எல்லா சேனல்களும் தரும் செய்திகள் என்றாலும் ஜெயா டிவி தான் ரொம்ப ஓவர் . 'மைனாரிடி திமுக அரசு' இந்த வார்த்தை தான் ஜெயா டிவி செய்தியில் எப்போதும் ஒலிக்கிறது . ஆட்சியில் ஜெயலலிதா இருந்தகாலத்திலேயும் கருணாநிதி, அந்த கட்சி திமுக பற்றி வெட்டி புரணி தான் ஜெயா செய்திகள் .
தெற்கே வயித்தெரிச்சலை 'பூலாப்பு' என்று சொல்வார்கள் .


செய்திக்குள் சேதி.
jaya tv news பாக்கறதே கொடுமை.. இதுல என் மென்மையான நண்பர் அதிலிருந்து pointsellam எடுத்து என்னிடம் பேசுவார் .... நமக்கு கடுப்பு ___யா இருக்கும்...
(u written about Indira parthasarathy before[its quite interesting]... u introduced so many to us...
சக எழுத்தாளர்களை மற்றும் பழைய இலக்கியவாதிகளை யாரும் தன் எழுத்தில் வாசகனுடன் பகிர்ந்து கொண்டதில்லை, இதில் நீங்களும் சாருவும் மாறுபடுகிறீர்கள். Thank u both.
The same we need ..again & again...