Mangalore Pub Assault
சிவ சேனா ,நவ நிர்மான் சேனா கேள்விப்பட்டிருக்கிறீர்கள் . இப்போது கர்நாடகத்தில் ஸ்ரீ ராம் சேனா என்று ஒன்று பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . Self-styled moral police force!
Amnesia ( பெயரின் அபத்தம் ! இதை மறக்க முடியுமா?) என்ற ரெஸ்டாரன்ட் . ( barஎன்று சொல்லவேண்டுமா) மங்களூரில் . அதில் கூடியிருந்த இளம் பெண்களை , வாலிபர்களை ஸ்ரீ ராம் சேனா கலாச்சார காவலர்கள் மிக கடுமையாக தாக்கி பண்பாடு காத்திருக்கிறார்கள். பெண்களை அடிக்கும் வீரமிலா நாய்கள். ஈனப்பிறவிகள்.
People believe themselves to be the incarnation of good
have a distorted view of the world.
- Todorov
நாற்பது சேனாக்காரர்களில் ஒரு பத்து பேரை கடமையே என கர்நாடக அரசு சலிப்போடு கைது செய்து 'பிரச்சனை யை விடுங்க' என்கிறது .
இந்த தாலிபன் போக்கு பஜ்ரங்தல் , விஹெச்பி , சிவ சேனா , நவ நிர்மான் சேனா மட்டும் தான் என எண்ணிவிடக்கூடாது .தமிழகத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி , விடுதலை சிறுத்தைகள் , திராவிடகழகம் , ஏன் எல்லா அரசியல் கட்சிகளிடமும் அவற்றில் இருப்பவர்களிடமும் பரவி இருப்பது தான் .
சினிமாவில் சிகரெட் புகைக்கும் சீன் இருப்பது தவறில்லை என்று இப்போது தீர்ப்பு நீதிபதிகள் வழங்கி விட்டார்கள் .அன்புமணியின் முட்டாள்தனத்திற்கு சவுக்கடி .( என்னிடம் புகை பிடிக்கும் வழக்கம் , மது அருந்தும் பழக்கம் கிடையாது ,சீட்டு விளையாட்டு எதுவும் கிடையாது )
திருமாவளவன் ' காங்கிரசை தமிழகத்தில் வேரோடு வெட்டி சாய்ப்பேன் ' என்பது கூட தாலிபான் குண கூறு தான் .( நான் காங்கிரஸ் காரன் கிடையாது )
தங்க பாலு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என மிரட்டுவது கூட கலாச்சார காவல் பண்பே .
பிராந்தி ,விஸ்கி குடிக்கலாம் , பனைமரப்பால் கள்ளுக்கடை கூடாது என்பது கூட முட்டாள் தனமான பாசிசம் அன்றி வேறன்ன ?


அருமை ரொம்ப ரொம்ப :-)