Share

Jan 13, 2009

திருமங்கலம் தேர்தல் முடிவு

சமத்துவமக்கள் கட்சி வாங்கியுள்ள850 வோட்டு சுயேட்சை வேட்பாளர் பரமசிவம் வாங்கிய வோட்டை விட சுமார் இருநூறு வோட்டு குறைவு . 850நாடாக்கமார் தானா திருமங்கலத்தில் . தொகுதியே தேவர் தொகுதி என்று சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டும் . பேசாமல் இந்த கட்சியை கலைத்து விடலாம் . இல்லாவிட்டால் திமுக , அண்ணா திமுக வில் ஐக்கியமாகி விடலாம் . பாவம் சும்மா உரலை இடிக்க வேண்டுமா . அந்த ரெண்டு கட்சியிலும் சரத் குமார் அவமானப்பட்டதால் தானே சமத்துவ மக்கள் கட்சி தோன்றியது . கட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்காக , படுதோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி ராதிகாவை (!)தலைவராக்கி மகிழலாம் !!!! சமத்துவ மக்கள் கட்சி மாநாடு , சரத் குமார் தமிழக சுற்றுப்பயண செலவுகள் , தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் உள்ளூர் ச.ம.க பிரமுகர்கள் கட் அவுட்,பேனர் , போஸ்டர் ,தோரண ஜபர்தஸ்து ... அடடா பணம் எப்படியெல்லாம் விரயமாகிறது ! இவருடைய சகலைபாடி நடிகர் ராம்கி (ராதிகா தங்கச்சி நிரோஷா புருஷன் ) பாண்டி பஜாரில் பிளாட்பாரத்தில் Fast food stallஅல்லது கையேந்திபவனோ என்னவோ போட்டு நடத்தி வருகிறார் என்று கொஞ்ச நாள் முன் வாரப்பத்திரிக்கை ஏதோ ஒன்றில் படித்தேன் .சரத் குமார் Capacity க்கு அப்படி ஸ்டால்கள் தமிழகமெங்கும் நிறுவி நல்ல பிசினஸ் செய்யமுடியும் !

விஜயகாந்த் கட்சி - கருப்பு எம்ஜியார் ! எம்ஜியார் எந்த காலத்தில் ,எந்த தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கிறார்!ராமதாஸ் , வைகோ மாதிரி மிரட்டல் அரசியல் , கூட்டணி மூலம் பொதுத்தேர்தலில் இரண்டு சீட் ,மூணு சீட் வாங்கலாம் .எம் எல் ஏ சீட் எட்டு , எம் பி சீட் ஒன்னு பேரம் பேசி வாங்கி அதிலே பாதியாவது ஜெயிக்க விஜய காந்த் கட்சிக்கு நல்ல தகுதி . 'கொடுக்கிற பணத்தை வாங்கிக்கங்க . வோட்டு எனக்கு போட்டுடுங்க ' என்று மன்றாடிகேட்டு , ஆண்டவனோடு ,மக்களோடு விஜயகாந்த் போட்ட கூட்டணி படுதோல்வியடைந்து விட்டதால் இனிமேல் திமுக , அல்லது அண்ணா திமுக வோடு கூட்டணி போட்டு தேறி விடலாம் .

' பணபலம் , அதிகார துஷ்பிரயோகம் 'போன்ற வார்த்தைகளை உபோயோகிக்க ஜெயலலிதாவுக்கு எந்த யோக்கியதையும் தகுதியும் கிடையாது . வழக்கம் போல வாக்குபதிவு எந்திரம் துவங்கி ,பல காரணங்களை தோல்விக்கான காரணமாக கருதிக்கொண்டு சமாதானம் அடையவேண்டியது தான் .

மக்களை ரொம்ப அவமானபடுத்தக்கூடாது . மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !!!

இடைத்தேர்தல் வெற்றி தோல்வி காரணங்களை ரொம்ப அலச தேவையே இல்லை .நுணுக்கமாக ஆராய திருமங்கலம் இடைத்தேர்தலில் விஷயம் ஒன்றுமில்லை.

10 comments:

 1. நச்சுன்னு எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 2. After long time I accept with your views about By-poll (purchased) victory.

  ReplyDelete
 3. //இடைத்தேர்தல் வெற்றி தோல்வி காரணங்களை ரொம்ப அலச தேவையே இல்லை .நுணுக்கமாக ஆராய திருமங்கலம் இடைத்தேர்தலில் விஷயம் ஒன்றுமில்லை//. 100 % correct.

  //' பணபலம் , அதிகார துஷ்பிரயோகம் 'போன்ற வார்த்தைகளை உபோயோகிக்க ஜெயலலிதாவுக்கு எந்த யோக்கியதையும் தகுதியும் கிடையாது // really 100% true. She only started all in TN. before it wasn't like this. Before 1991 Maduari East, Marungapuri, Permannanallur by election like so many examples ADMK won when DMK was on power. after that she only changed TN policts landscape.

  //சமத்துவமக்கள் கட்சி வாங்கியுள்ள850 வோட்டு சுயேட்சை வேட்பாளர் பரமசிவம் வாங்கிய வோட்டை விட சுமார் இருநூறு வோட்டு குறைவு . 850நாடாக்கமார் தானா திருமங்கலத்தில் . தொகுதியே தேவர் தொகுதி என்று சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டும் // Nadars are already confortable positoins in mainstream parites. so no need to go with this guy. moreover he hasn't good 'image' with that community. so it won't work in future too.

  Captain ??: what a big??? What happend to Vaiko?? just image what a mass he had on 1993 period. so media 'hype' won't help 'captain'

  ReplyDelete
 4. You said it RPR. We cannot read any significance into Tirumangalam by-election results.

  ReplyDelete
 5. //மக்களை ரொம்ப அவமானபடுத்தக்கூடாது . மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !!!//

  விமர்சிக்கவும் ,குறைகளுக்கும் எத்தனை காரணங்கள் இருந்தாலும் ஜனநாயகத்தின் ஆணி வேர் மக்கள் தீர்ப்பே!

  ReplyDelete
 6. அண்ணா நாமம் வாழ்க
  மக்களுக்கு நீங்கள் போட்ட நாமம் வாழ்க
  திருப்பி மக்கள் உங்களுக்கு போட்ட நாமம் வாழ்க


  சரி நீங்க ஏன் பொங்கலுக்கு லீவ் போட்டிங்க

  ReplyDelete
 7. Namaku en oozhal thalaivargal kidaikirargal enbadharku nalla padhil ipdi patta therdhalgal. Makkale lanjam petrukondu ottu podugirargal. Namadhu samudhayathil nermai enbadhu verum vaai varthai. Chance kidaithal ellorum oozhal seivargal. Adhanal dhan kudumbathuku (adhavadu oru 5,6 pondati, pala vappatigaludan irukum kudumbam) sothu serpathai perusaga makkal eduthu kolvadhillai. Idhu maarum endru thindravillai. Indiavirkum vidivu avalavu sulabathil illai.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.