ஜோஷ் வண்டேலூ எழுதிய 'அபாயம் ' நாவல் தமிழில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது . மறக்க முடியாத நாவல்.
A Flemish Novel translated from English to Tamil
By N.Sivaraman.
‘Man is left alone in this world.’ இந்த மேற்கோள் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அது இந்த நாவலில் தான் வருகிறது .
நகுலன் பாருங்க ! ஜோஷ் சொன்னதையும் தாண்டி " எனக்கு யாருமே இல்லை . நான் கூட " என வேதனைப்பட்டவர் !!
' கடைசியில் பார்க்கப்போனால் , என்ன செய்வதென்பதை நாமே தான் முடிவு செய்ய வேண்டும் . மனிதன் கடைசியில் தனித்தே தான் நிற்கிறான் . யாரும் அவனுக்கு உதவி செய்ய முடியாது .' என்று ஜோஷ் வண்டேலூ சொல்வார் .
'தப்பி ஓடுவது என்பது ஒரு முடிவற்ற பிரமைக்கு ஒருவர் ஆட்படுவது தான் . அமைதியாக வசிப்பதற்கு இடமே இல்லை .'
' எங்க போனாலும் ஒன் நிழல் ஒன் கூட தான் வரும் ' என்று நம்ம ஊர் கிழவிகள் சொல்வது இதை தான் !
'நம்பிக்கை' - ' நம்பிக்கை என்பது மெதுவாக ச்செல்லும் இரவு நேர வண்டி . அது நகருக்குள் தேடியவாறு குலுங்கிகுலுங்கி ச்சென்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் அசைவற்று நிற்கிறது . எல்லா நிறுத்தங்களிலும் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் . கண்டக்டர் கத்துகிறான் . ' இடமில்லை , அடுத்த வண்டி வருகிறது .......' நாம் அடுத்த வண்டிக்காக எப்போதுமே காத்திருக்கிறோம் ! நமக்கு இடம் கிடைக்கும் வகையில் ஒருவரும் ஒரு போதும் வண்டிகளிலிருந்து இறங்குவதே இல்லை !!
கதிரியக்கப் பாதிப்புகளுக்கு உள்ளாகி,சுவாரஸ்யத்துக்குரிய மருத்துவ ஆராய்ச்சிப்பொருள்களாக மாறிவிட்ட பெண்ட்டிங்,துபோன்,மார்ட்டின் மோலினார்.
சிலர் பலிகடா ஆவது நிச்சயம் என்ற தெளிவுடன் தான் முடிவு எடுக்கப்படுகிறது.
அன்பு,இரக்கம், சமூகத்தில் எல்லோரது பாதுகாப்பு பற்றிய அக்கறை ,நேர்மை ஆகியவற்றை விட விஞ்ஞான முன்னேற்றமும்,பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் சமூகத்தில் 'அபாயம் ' என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல.
நாவலின் கசப்பான யதார்த்தம் ' முன்னேற்றம் என்று அழைக்கப்படுவது
' அபாயம்' தானே?'
அபாயம் படித்த போது நிஜமாகவே ரொம்ப நாள் ரொம்ப ரொம்ப பயமாக இருந்தது . பாதிப்பு சொல்லி முடியாது .
\\
ReplyDeleteஎங்க போனாலும் ஒன் நிழல் ஒன் கூட தான் வரும் ' என்று நம்ம ஊர் கிழவிகள் சொல்வது இதை தான் !
\\
அனுபவங்கள் சொல்கிற வார்ததைகள் அர்த்தமில்லாமல் போய்விடுவதில்லை...
Dear RP,
ReplyDeleteGreat work!! Keep it up. Your posts are amazing. Learning new things from you.
Arun,
http://arun-nadesh.blogspot.com/
RPR அவர்களே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்திரா பார்த்தசாரதி அவர்களின் ஹெளிகாப்டேர்கள் தரையில் இறங்கி விட்டன, தந்திரபூமி, இயேசுவின் சகோதரர்கள் வாங்கினேன். படித்திவிட்டு தங்களுடன் என் கருத்தக்களை பகிர்கிறேன.