Share

Jan 25, 2009

Foucault’s pendulum

சுருக்கமாக எழுதுவதன் ஆபத்து அதிகம் . சரியாக புரிந்துகொள்ளாமல் போகும் நிலை ஏற்படத்தான் செய்கிறது . ஆனால் சுருக்கமாக எழுதுகிற என் பிடிவாதத்தை நான் தளர்த்தப்போவதில்லை .

டா வின்சி கோட் நாவல் பற்றி தான் எல்லோரும் அறிவர் . டான் பிரவுன் நாவல் மிகவும் பிரபலம் . டாம் ஹேங்க்ஸ் நடித்து படமாய் வந்து பலரும் எதிர்த்து , எல்லோரும் பார்த்து ரசிக்கப்பட்ட படமானது .
ஆனால் அதை படித்தவர்கள் , படம் பார்த்தவர்கள் அறியாத நாவல் “Foucault’s pendulum “.
உம்பெர்டோ ஈகோ எழுதிய நாவல் “Foucault’s pendulum “.
ஈகோ டாவின்சி கோட் எழுதிய டான் பிரவுன் பற்றி சொல்வார் :“Don Brown is one of my creature.”
பூக்கோவின் பெண்டுலம் பற்றி சொல்ல ஈகோ வின் மேற்கண்ட ஒரு வரியே போதும் .
பூக்கோவின் பெண்டுலம் வாசிக்க சுலபமானது அல்லாமல் கடினமானது என்பதில் இரு கருத்து இல்லை . டா வின்சி கோட் மாதிரி விறு விறு என்று வாசித்து தள்ளமுடியாது தான் . ஈகோவின் 'பூக்கோவின் பெண்டுலம் ' நாவலை வாசிக்க ஒரு திறன் தேவை . ஆனால் அந்த விஷேச வாசிப்புக்கான சன்மானம் மிகவும் மகத்தானது .
Foucault’s Pendulam – the thinking person’s Da Vinci Code !

ஈகோ வின் பிரபலமான மற்றொரு நாவல் பிரதியின்பம் என்பதற்கு உதாரணமான The Name of the Rose. மர்ம நாவல்கள் அத்தனையையும் மிஞ்சிய திகில் நாவலான இதை வாசிப்பதே 'சுகம்'. ஆனா 'பூக்கோவின் பெண்டுலம் 'வாசிப்பது ஒரு 'தவம்.'

The Name of the Rose திரைப்படமாக 'ஷான் கானரி' நடித்து இருபத்து இரண்டு வருடம் முன் வந்தது . ஷான் கானெரி நடித்த ஜேம்ஸ் பாண்டு படங்களை விட மிக தரமான த்ரில்லர் .

உம்பர்டோ ஈகோவால் The Name of the Rose நாவலும் எழுதி Foucault’s Pendulam நாவலையும் எழுத முடிந்திருக்கிறது ! சாதனை தான் !!

1 comment:

  1. பல வருடங்கள்முன் Foucault's Pendulam முதலில் கஷ்டப்பட்டு வாசித்துவிட்டேன். அதிலிருந்து ஈகோ என்றாலே கடினமான எழுத்தாளர் என்ற பிம்பம் இருந்தது.

    பிறகு சமீபத்தில்தான் நண்பர்கள் சொல்லி Name of the Rose வாசித்தேன். ஆஹா.. மர்ம நாவல் என்பது எப்படி எழுதப்படவேண்டுமென்பதற்கு அது ஒரு பாடம்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.