Share

Jan 7, 2009

சினிமாவுக்கு கதை , சினிமாவுக்கு வசனம்

சினிமாவுலகிலே எழுத்தாளனுக்கு எந்த மரியாதையும் கிடையாது . எந்த காலத்திலேயும் தமிழ் சினிமாவில் எழுத்தாளனை மதிக்கவே மாட்டார்கள் . கதை வசனம் எழுதி சம்பாரித்து யாரும் பெரிதாய் உயர்ந்ததில்லை .

ஏ எல் நாராயணன் கார் வாங்கிய ஒரேசினிமா கதை வசனகர்த்தா என்று சினிமாவுலகில் அறியப்பட்டிருந்தார் .


இலக்கியவாதிகள் சினிமாவிற்கு போகும்போது ரொம்ப அவமானப்படுவார்கள் .


சினிமாவுக்கு போகாததால் க நா சு மட்டும் தப்பித்தார் . ஏனைய மணிக்கொடி எழுத்தாளர்கள் துவங்கி இன்று இ பா , கி ரா ,சு.ரா, எஸ்.ரா வரை சினிமா ஈர்த்திருக்கிறது .

ஜெயகாந்தன் ' சினிமா காரபயளுக மேனாமினுக்கிகளை வச்சி தொழில் பண்ற மாமாக்காரங்க 'ன்னு நல்லா திட்டி தீர்த்திட்டார் .' ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் ' புத்தகம் படிச்சா ஜெயகாந்தன் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கிறார் என அறியலாம் .


.அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பார்த்தார் . ஆனால் தன் படைப்பை படமாக்கவோ ,கதை வசனம் எழுதவோ அலைந்ததில்லை .

டிவி இலே காட்டினாங்கே .
சமீபத்தில் 'நான் கடவுள் ' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினவன் எல்லாம் பாலா வுக்கு ஜால்ரா அடிச்சானுங்க , படத்தின் பற்பல வல்லுனர்கள் பற்றி குறிப்பிட்டாலும் அந்த படத்து கதை எழுதுனவன் யாரு , வசனம் எழுதுனவன் யாரு ன்னு ஒரு பயலும் பேசவே இல்ல .

Unhonoured, Unsung

இது தான் அந்த எழுத்தாளனுக்கு கிடச்ச மரியாதை ! ஐயோ பாவம் ! அவன் தலையிலே ஒத்த விதி ! ஒரு நாய் கூட சீந்தலே !!

சரி ! அவனும் ஜெகம் பிராடு தானே !

3 comments:

  1. Well saud, I have read that the great writer R K Narayan was dismayed at the way his novel The Guide was filmed.

    ReplyDelete
  2. அவ்விதமான அவமானப்படுத்துதலுக்கு தாங்கள் முற்றிலும் தகுதியானவர்கள் என்று நினைப்பதால்தானே போகிறார்கள்...நாம் ஏன் அவர்களுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்?

    ReplyDelete
  3. fraud = jayamohan?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.