Share

Sep 11, 2009

மாவீரன் லல்லுபிரசாத் யாதவ்

லல்லுபிரசாத் யாதவ் இந்திய பிரதமரிடம் சொன்னார் -'' பல வகைகளில் என் திறமையை என்னால் நிரூபிக்க முடியும்.''

ஜெகஜீவன் ராம் இருபத்தைந்தாண்டுகள் அரசாங்க உத்தியோகம் பார்ப்பது போல காங்கிரஸில் இருந்து மந்திரி உத்தியோகம் பார்த்தவர். எமெர்ஜென்சி காலத்திலும் மத்திய மந்திரியாய் இருந்து விட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி
'Congress for Democracy ' கட்சி ஆரம்பித்து ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து இந்திரா காந்தியை எதிர்த்தவர் . அப்போது " இந்தியாவின் பிரதமர் ஆவீர்களா?" என நிருபர்கள் கேட்ட போது பவ்யமாய், அடக்கமாய் சொன்னார் : “I never shirk any responsibility this country wants me to shoulder.” இன்றைய பாராளுமன்ற சபாநாயகரின் தந்தை.

அந்த காலத்தில் ஜெகஜீவன் ராம் சொன்ன அந்த வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே லல்லு மனப்பாடம் செய்து பிரதமரிடம் ஒப்பித்தார். :
“I never shirk any responsibility this country wants me to shoulder.”

கேபினெட் மந்திரி பதவி தனக்கு வேண்டும் என்ற தீரா அவா காரணமாக லல்லு மன்மோகன் சிங்கிடம் அடிக்கடி அழுத்தமாக இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தார். 'தேசத்திற்காக பதவி என்னும் பாரமான சிலுவையை சுமக்க ஆயத்தமாய் இருக்கின்றேன்.தங்கள் சித்தம் என் பாக்கியம் '

ராகுல் காந்தியிடம் லல்லுவின் இந்த அனத்தலை எப்படி சமாளிப்பது என பிரதமர் கலந்து ஆலோசித்தார் . ராகுல் காந்தி பதில் :'மூன்று போட்டிகளில் லல்லு ஜெயித்தால் நாம் அவரை காபினெட் மினிஸ்டர் ஆக்கி விடலாம். அவர் சாதனை செய்த ரயில்வே துறையையே அவருக்கு தந்து விடலாம். '

போட்டி பிஹாரில் பிஹாரிகள்முன்னிலையில். பிஹாரிகள் லக்ஷக்கணக்கில் கூடிவிட்டனர் . எப்படியாவது லல்லு ஜெயித்து மத்திய மந்திரி ஆகிவிடவேண்டுமே!

மூன்று கூடாரங்கள். மூன்று போட்டி. மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.

1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில் . காக்டைல் சரக்கு .கடுமையானது . ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே பயங்கரமாக ஏறிவிடும் . ஆனால் இந்த பாட்டிலில் முப்பது அவுன்ஸ் . விஸ்கி ,ரம் ,பிராந்தி , எல்லாம் கலந்த மது பாட்டில். அந்த மது கலவையை raw ஆக மிச்சம் வைக்காமல் முழுதாக குடித்து விடவேண்டும்.

2. இரண்டாவது கூடாரத்தில் ஒரு சிங்கம் . பல்வலியால் துடிக்கிறது. அதன் சொத்தை பல்லை பிடுங்க வேண்டும்.

3.மூன்றாவது கூடாரத்தில் ஒரு வீராங்கனை . கராத்தேயில் பல மெடல்கள் வாங்கியவள் . அவளுடன் உடலுறவு கொள்ளவேண்டும் . ஆனால் அவள் சம்மதிக்கவே மாட்டாள். எங்கணமாயினும் அந்த பெண்ணை புணர்ந்து விடவேண்டும்.

கவனமாக மூன்று போட்டிகளையும் லல்லு மூளையில் ஏற்றிக்கொண்டார் .

லல்லு முதல் கூடாரத்தில் நுழைந்து முழு பாட்டிலையும் காலி செய்ய இருபது நிமிடங்கள் ஆயிற்று .

கூடாரத்தை விட்டு வெளியே வந்தார் . பிஹாரிகள் ஆரவாரம் விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது. பயங்கர போதையில் சிறுமூளை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் கையை அசைத்து பாராட்டுக்களை லல்லு பெற்றுக்கொண்டு இரண்டாவது கூடாரத்திற்குள் தைரியமாக நுழைந்தார் .

சிங்கம் கர்ச்சனை . " டே அயோக்கியா !" கோபமாக சிங்கம் போராடும் சத்தம் .

" என்னை விடுறா " சிங்கத்தின் பயங்கர கூப்பாடு ."கொலை வெறி ஆயிடுவேண்டா " " ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் சிங்கம்டா "

பிஹாரிகள் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள்.

'' அவசரத்துலே அன்டாக்குள்ளேயே கை போகாது . சிங்கம் வாய்க்குள்ளே சொத்தைப் பல்லு . நல்ல போதையிலே கவனமா எப்படி புடுங்கப் போறாரோ தெரியலெயே .லல்லுவுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாது கடவுளே! பொல்லாத சிங்கம் அவரை கொன்று விடக்கூடாது.''

கடைசியில் பல நிமிடங்கள் நிசப்தம் . ஒரே சஸ்பென்ஸ்.கூடாரத்தினுள் என்ன ஆயிற்று..?

முப்பது நிமிடம் கடந்தது . லல்லு இரண்டாவது கூடாரத்தில் இருந்து ரொம்ப களைப்பாக தள்ளாடியவாறு வெளியே வந்தார் . பிஹாரிகள் கரகோஷம் மீண்டும் விண்ணைப் பிளந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ!

லல்லு வணங்கிய பாவனையில் தலைகுனிந்து ,கையை கூட்டத்தை நோக்கி ஆட்டி விட்டு குழறியவாறு கேட்டார் " அந்த பல்லு பிடுங்கவேண்டிய பொம்பளை எங்கே ? "

அடடே ! போதையிலே குழம்பிப் போய் ப்ரோக்ராமை மாத்திட்டார் . சிங்கத்தை சோலி பாத்துட்டார்!

மத்திய மந்திரி பதவி கை நழுவி விட்டது .
A slip between the cup and lip!

அறியப் படும் நீதி : குடி போதையில் குழப்பமில்லாமல் முக்கிய காரியங்களை, சவால்களை திட்டமிடுதல் மிகவும் சிரமம் . வெற்றிகரமாக சவால்களை ஜெயிப்பதும் துர்லபம் .

ராகுல் காந்தி ராஜதந்திரி. அதனால் தான் முதல் போட்டியாக மது பாட்டிலை வைத்தார். என்ன ஒரு மாபெரும் திருப்பம் எனில், முதல் கூடாரத்திலேயே லல்லு flat ஆயிடுவார் என்று ராகுல் தப்பு கணக்கு போட்டிருந்தார். ம்ம் .. யானைக்கும் அடி சறுக்கும்.

.....

இந்த' பல்லு புடுங்க வேண்டிய பொம்பளை ' ஜோக் ரொம்ப ரொம்ப பழசு. ஆனால் மறைந்த சுஜாதா சில வருடங்கள் முன் இந்த ஹைதர் காலத்து அரத பழசை பெரிய பத்திரிகையில் எழுதி மகிழ்ந்திருந்தார்.

இப்போது இங்கே என்னால் 'இந்திய அரசியல் சாயம்' பூசப்பட்டு வேற்றுரு கொண்டு விட்டது . Art Buchwald இந்த பாணியில்தான் அமெரிக்க அரசியல் பற்றி எழுதுவார்.

இந்த பழைய ஜோக் இன்னும்,இப்போது கூட பலருக்கும் புரியவில்லை என்பது தெரிய வருகிறது . படு அபத்தமாக புரிந்து கொண்டு சில பாராட்டு பின்னூட்டங்கள் !அதனால் " அந்த பல்லு பிடுங்க வேண்டிய பொம்பிளை எங்கே ? " என்ற வார்த்தைக்கு பின் தேவையே இல்லை எனினும் நிர்பந்தமாக "அடடே ! போதையிலே குழம்பிப் போய் ப்ரோக்ராமை மாத்திட்டார். சிங்கத்தை சோலி பாத்துட்டார்!" என்று இரண்டு வரி கூடுதலாக எழுதி ஜோக்கை அனாவசியமாக விளக்க வேண்டி வந்து விட்டது.

அவமானம் தாங்க முடியாமல் குன்றிப்போய்,தன் கற்பை காப்பாற்ற போராடிய சூழ்நிலையில், லல்லுவை நோக்கி கர்ஜித்த சிங்கத்தின் கோப ஆவேச வசனங்கள் ரீப்ளே :-

" டே அயோக்கியா !"

" என்னை விடுறா "

"கொலை வெறி ஆயிடுவேண்டா "

" ச்சீ .. ச்சீய் .. அசிங்கம் பிடிச்சவனே ..விடுறா என்னை ..உங்கொப்பன் மகனே நான் சிங்கம்டா "

5 comments:

 1. i think this generation of those who are 20 to 35 and have easy access to intenet and infinite amount of free time at hand, have grown up in boxed apartments or big palaces with few people to talk to. The outcome, they can't get even the simplest of jokes.

  mmhhh.. compare that with growing up among old folks who always throw a riddle or two (almost all the time the AAA variety) and you scratch your head for few days to figure it out.. you do this as you grow up.. you don't need sex education separately..

  i still remember my good friend asking me "காங்க‌ய‌ம் காளை எத்த‌னை லிட்ட‌ர் பால் கொடுக்கும்?". the real tragedy is he went on to study medicine at MMC. God save his patients!

  ReplyDelete
 2. சிங்கத்துக்கு பதில் கழுதையும், லல்லுவுக்கு பதில் ராஜநாயஹம் கேரக்டரும் இருந்தால் கதை படு சூப்பராக இருக்கும்

  ReplyDelete
 3. முட்டாள்தாசு கழுதைப் புணர்ச்சி ஜெயமோகனை ரொம்பவே பாதித்திருக்கிறது - 'வடக்குமுகம்' நாடகத்திலும் 'காடன் விளி' சிறுகதையிலும் மிருகப் புணர்ச்சியைக் கொண்டு வருகிறார். 'வடக்கு முகம்' நாடகத்தில் ஒரு குதிரை 'என் தசைகளைக் கண்டு காமம் கொள்ளாத பெண்கள் எவருமே இன்னும் பிறக்கவில்லை' என்று சொல்கிறது. பீஷ்மரிடம் அம்பைக் காதலுடன் 'குதிரைகளில் குறுஞ்சுழியும் நீள்முகமும் கொண்டது தனது முதுமையிலும் சளைப்பதில்லை' என்று கூறி பீஷ்மருக்கு குதிரை முகமூடி அணிவித்து அணைத்துக் கொள்கிற காட்சி, 'காடன் விளி கதையில் வரும் எருமைப் புணர்ச்சி' - ஜெயமோகனை முட்டாள் தாஸின் கழுதைப் புணர்ச்சி ரொம்பவே தொந்தரவு செய்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகள்.

  --அப்போது ராஜநாயஹம் மீதான அரசியலுக்கு பதிலாக 'விலங்கும் நாணிக் கண் புதைக்கும் ' என்ற ராஜநாயஹம் பதிலிலிருந்து

  ReplyDelete
 4. "இவர்கள் தரத்திற்கே நான் ஒரு கேள்வி கேட்டால் இவர்களிடம் பதில் என்ன? முட்டாள்தாசாக நான் நடித்தபோது கழுதையாக நடித்தவர் யார்?.... "

  அதே விலங்கும் நாணிக் கண் புதைக்கும் பதிவில்'கழுத்தைப் புணர்ச்சி பற்றிய விரிவான செய்முறை விளக்கம்' என்ற அவதூறுக்கு ராஜநாயஹம் கேட்ட இந்த கேள்விக்கு ஊட்டி பரிசேயர்கள் ,சதுசேயர்கள் ஏன் இன்னும் பதில் தராமல் இருக்கிறார்களோ?

  மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சி துப்புகிற கோமாளிகள் .

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.