Share

Sep 22, 2009

Time spent with cats is never wasted.

பூனைகள் திகில்,மர்மம் இவற்றின் குறியீடு .தோரனையானவை. பூனைகள் நாயுடன் ஒப்பிடப் பட்டு சொல்லப்படும்போது விஷேசமாக கருதப்படுகின்றன.

Dogs have owners, cats have staff.

Dogs believe they are human. Cats believe they are God.

நாயையும் பூனையையும் இந்த ஆங்கில சொலவடைகள் நேர்த்தியாக குணவிளக்கம் செய்து விடுகின்றன .

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பூனைகள் தெய்வங்களாக வணங்கப் பட்டனவாம் . பூனைகள் இன்னும் கூட இதை மறந்துவிடுவதில்லை என்று சொல்வார்கள் .

லியோனார்டோ டாவின்சி யைப் பொறுத்தவரை அவர் பார்வையில் ஒரு சின்ன குட்டிப்பூனை தானே Masterpiece! வறண்ட வாழ்வில் நமக்கு சிறந்த புகலிடம் இசையும் பூனையும் தான் என ஆல்பெர்ட் சுவைட்சர் நம்பினார் .

நாய்கள் தேவைக்கு மீறிய வளவள "வள் வள்" Outspoken type. பூனைகளிடம் தந்திரமான ஒரு Reticence உண்டு .

மனிதர்கள் பூனையை பற்றி புரிந்துகொண்டதை விட பூனைகள் மிகவும் புத்திசாலிகள் .ஏனென்றால் எந்த குற்றத்தையும் பூனைகளுக்கு கற்றுத்தர முடியும் என்பார் Mark Twain.

'பெண்களும் பூனைகளும் அவர்களுக்கு சந்தோசமான விஷயங்களைத்தான் செய்வார்கள் . ஆண்களும் நாய்களும் விச்ராந்தியாக அதற்கு ஏற்றபடி தங்களை அனுசரிப்பாக பழக்கிகொள்ளவேண்டியது தான் ' - ஒரு பழமொழி .

Hamlet's Cat's Soliloquy! by Shakespeare's Cat!! ஹேம்லெட் வசனங்களை பூனை எப்படி பேசும் ?!

To go out side, and there perchance to stayOr

to remain within: that is the question:

Whether 'tis better for a cat to suffer

The cuffs and buffets of inclement weather

That Nature rains on those who roam abroad,

What cat would bear the household's petty plagues,

The cook's well-practiced kicks,

the butler's broom.............

ந.பிச்சமூர்த்தி ' பூனைக்கண் ' என்ற சிறுகதையில் :" பூனை போகும்போது பார்த்தால் எதையும் கவனிப்பதாகவே தெரிவதில்லை . ஏதோ ஆழ்ந்த லயிப்பில் செல்வது போலவே தோணும் .ஆனால் உண்மையில் -? தெளிந்த வாய்க்கால் நீரின் வழியே பார்த்தால் கெண்டைக் குஞ்சுகள் கும்பல் கும்பலாக நீந்திப் போவது தெரிகிறதல்லவா ?அதைப் போலவே இந்த பூனையின் கண்ணில் தெளிவுக்கடியில் திருட்டு எண்ணங்கள் நீந்திச் செல்வது போலவே எனக்கு தோன்றுகிறது."

பாதலேர் எழுதிய பல பூனை கவிதைகளை நாகார்ஜுனன் நேரடியாக பிரஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்த்து தன் ப்ளாகில் பதிந்திருக்கிறார்.சில வரிகள் கீழே :

மென்தொனி மர்மம்

ஆனால் முனகவும் உறுமவும்

ஆழச் செழிக்கும் குரல்

அடடா,வசீகர மர்மம்!

.....முற்றான வாத்தியமாம்

என் இதயத்தை மிக அதிரும் அதன் தந்தியை

அழகாய் இசைக்க வேறேதுண்டுஅக்குரல் தவிர!...

......அடடா,மர்மப்பூனையேவிசித்திரப்பூனையே!

கந்தர்வநுணுக்கமும் இசைவும்உனதே.

அப்போது நாகார்ஜுனன் ப்ளாகில் எழுதியிருந்த விஷயம் - நாகார்ஜுனனின் துணைவியார் இந்தியாவில் பரோடாவில் தம்முடைய வீட்டில் பார்த்துப் பழகிய கறம்பன் என்ற பெயர் கொண்ட பூனையை லண்டனில் பார்க்க நேர்ந்து அந்த அதே பூனையை நாகார்ஜுனனிடம் காட்டியிருக்கிறார் . அப்படியானால் ஒரே நேரத்தில் ஒரு பூனை இரு வேறு இடத்தில் வாழமுடியும் என்று தானே ஆகிறது !

அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டும் தான் பூனையின்
Friendship கிடைக்குமாம்!

2 comments:

  1. Beautiful piece. let's have more like this.

    ReplyDelete
  2. அப்போ என் தம்பி மகள் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி. எத்தனை பூனைகள் வளர்த்திருப்பாள்! ஆனால் அவை காணாமல் அல்லது இறந்து போகும் போது அவள் படும் மனவேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் அவள் வாசல் படியில் வந்து நிற்கும் தாயைக் காணாத பூனையை அணைத்து எடுத்துச் சென்று பால் கொடுத்து பராமரிக்க ஆரம்பிக்கும் பொழுதே எங்களுக்கு பயம் பிடித்துக் கொள்ளும். ஆனால் அவளுக்குப் பிராணிகள் மேல் உள்ள அன்பு குறைவதே கிடையாது. பிராணிகளைக் கண்டு பயந்த அவள் தாயையும் மாற்றிவிட்டாள்.

    amas32

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.