Share

Sep 11, 2009

ஹைக்கு

ஹைக்கு கவிதைகளை அந்த காலத்தில் ஆடு புழுக்கை மொத்தமாக போடுவது போல நிறைய பேர் மொத்த மொத்தமாக போட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஏனோ சுய தரிசனமாக, சுய விமரிசனமாக 'ஆட்டு புழுக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு கூட இன்று வரை வெளியானதில்லை.
ஹைக்கு சில பல நல்ல படி தேறியிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் கணையாழியில்( ஆகஸ்ட் 1969) சந்திரலேகாவின் ஹைக்கு கவிதைகள் இரண்டு :
1. தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
2 . செங்கிரீடம், ராஜ கம்பீரம்
சேவல் ஏறுது குப்பை மேட்டில் .
......
ஆத்மாநாமின் இந்த கவிதை ஹைக்கு தானா ? அல்லது ஹைக்கு நான்கு வரியில் வரக்கூடாதோ?
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
..
ராஜ சுந்தரராஜன் ஹைக்கு கவிதை . தலைப்பு 'விட்ட குறை '.
மண் மீது ஒரு பறவைப் பிணம்
மல்லாந்து நோக்குது
வானை .
இவருடைய ' பரஸ்பர ஆதாயம் ' கவிதை
காக்கைகள் கொத்த
எருமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்

6 comments:

  1. //எந்தக் குறிப்பிட்ட திசையையும்
    பின் பற்றாது
    வண்ணத்துப் பூச்சிகள்
    வாழ்க்கை நடத்துகின்றன //

    ஆத்மநாமின் வரிகளிலிருந்து விடுபடமுடியாமல் மயககம் கொள்கிறது மனது.


    //தென்னை ஆடுகையில்
    தேங்காய்க்குள்ளே
    சிற்றலை நெளியுமோ ?
    //
    சந்திரலேகாவின் அழமான நுட்பமான பார்வை. ஆச்சரியம் + ஒரு வித அதிர்ச்சி.

    ReplyDelete
  2. \\பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை.\\


    :-))))

    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. //மண் மீது ஒரு பறவைப் பிணம்
    மல்லாந்து நோக்குது
    வானை .//

    //காக்கைகள் கொத்த
    எருமை நிற்கிறது இணங்கி
    உண்ணிகள் காரணம்//

    அழகான பதிவு.

    அருமையான பகிர்வு.

    இதுபோன்ற இனிய பகிர்வுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  4. நல்ல குறும்பாக்கள் அறிமுகம்

    தென்னை ஆடுகிறது - தேங்காய்க்குள் சிற்றலை நெளிகிறது - நல்ல கற்பனை வளம்

    செங்கிரீடம் - ராஜ கம்பீரம் - குப்பை மேட்டில் ஏறும் சேவல் - ஆகா ஆகா என்னே சிந்தனை வளம்

    உண்ணிகளால் எருமை காக்கை கொத்துவதற்கு அமைதியாக் இருக்கிறது

    அனைத்தும் அருமையான குறும் பாக்கள்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல கவிதைகளின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அந்த தேங்காய் சிற்றலையும் திசையை பின்பற்றாத வண்ணத்துப்பூச்சியும் என்னென்னவோ உணர்வுகளை கிளர்த்துகிறது.

    ReplyDelete
  6. ராஜ்,
    சாகுந்தலம் எழுதிய காளிதாசன்,ரிதுசம்ஹாரம் எனும் நூலை எழுதி உள்ளார்.இந்தியாவின் ஆறு பருவங்களான கார்,கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில்,முதுவேனில் இவற்றை மையப்படுத்தி,ஒவ்வொரு பருவத்துக்கும் குறிப்பிட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.இக்கவிதைகளின் சில ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

    1. Coming home in a rage,he sees
    the sampige tree outside in bloom.

    2. White Shadows of white birds on
    Water,and a head with a yellow beak.

    மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு கவிதைகளும் Perfect Haiku.

    மேலும், நீங்கள் சொல்வது போல் கவிதைகளின் எண்ணிக்கையில் உண்மையான ஹைக்கூவைக் கண்டுபிடிப்பதே கடினம்.

    -- கார்த்திக்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.