"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."
- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'
கரு இல்லாத முட்டையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?
Question: Who the hell are you?
My reply : Didn't I ever mention it?!
அடையாளம் , அறிமுகம் , Resume, Bio-data இவற்றிற்கு எதிரான துவேசம் எப்படியெல்லாம் வெளிப்படும் ?ஆத்மாநாம் இந்த துவேசத்தை கவிதையாக்கியது இப்படித்தான் !
"நான் யாராய் இருந்தால் என்ன ?
நீங்கள் யாராய் இருந்தால் என்ன ?
அனாவசிய கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்."
Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.
பெரிய பிரமைகள் தேவையே இல்லை.
.......................
தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.
அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!
நாய்க்கு மட்டும் தானா:-))
ReplyDeleteநம்ம எல்லாருக்குமே அப்பப்ப இந்த அடையாளச் சிக்கல், ஏதோ மலச்சிக்கல் மாதிரி வந்துட்டுப்போறது தானே!
Good one on identity crisis RPR.
ReplyDeleteமுதலாக பயந்து போய் வியந்து போய் ? . கோணல் மானலாக யோசிக்காமல் சுற்றி வளைத்து எழுதாமல் எப்படி உங்களால் இத்தனை தைரியமாய் உங்களை வௌிப்படுத்த முடிகிறது. ஏற்கனவே ஓ பக்கங்கள் படிக்கும் போது நிறையவே எனக்குள் நானே பயந்து கொள்வேன். அவரை மனோ வியாதிக்காரர் என்ற வரைக்கும் அத்தனை பேர்களும் விமர்சித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது உண்மைகளை அத்தனை அப்பட்டமாக ஏற்றுக்கொள்ளாத மனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் உங்கள் " நான் யாராக இருந்தால் என்ன?"
ReplyDelete