Share

Sep 3, 2009

கண்டேன் சீதையை.


10.30 A.M

இந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நடந்து விட்டது . ஆந்திரப்பிரதேச முதல்வர் Y.S.R.நேற்று காலை மாயமாகி ஒரு நாளாக தேடி இப்போது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . எந்த நிலையில் ஹெலிகாப்டர் ..? Y.S.R. நிலை ..? இந்த நிமிடம் வரை தெரியவில்லை . No confirmation on CM's safety.

11.30 A.M

The Prime Minister's Office has declared that Andhra Pradesh Chief Minister YS Rajasekhara Reddy died in an air crash.

....

பல மாதங்களாய் நான் மூளையை கசக்கி விடை தெரியாமல்
இரண்டு நாளாய் பரண் மேல் தேடி ஒரு வழியாய்..... கண்டேன் சீதையை .
" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள் ."

தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார் .

..

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று . திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.
" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''

1 comment:

  1. ஆனால் கண்டேன் சீதையை என்றது போல் அல்லாமல் இறுதியில் ராஜசேகர ரெட்டி அவர்களின் துர் மரணம் தான் காண நேரிட்டது ,
    அந்த வானு’ர்தி பறக்க தகுதியற்றது என 2 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் எப்படி அனுமதி அளித்தார்களா என்ன மாயமோ தெரியவில்லை
    முன்பு சபாநாயகர் பாலயோகி
    தற்போது ராஜசேகர ரெட்டி
    தூங்கும் நமது அரசாங்க அதிகாரிகள் என்று விழிப்பார்களோ
    வேதனையுடன்
    துர்வாசர்,தம்மம்பட்டி

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.