Share

Sep 27, 2008

Child is the Father of the Man


எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன . பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை . அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன . அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள் .


கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன் . அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !
வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான் . வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள் .
...........................................


நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன் . அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .
நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள் .
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .


கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .
'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! '
திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!
இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.
கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா '
என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .
பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி . கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம் .
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '


பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது . அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான் . தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது .
'நீ போப்பா '

16 comments:

  1. Suresh Kannan Sir!

    Somehow your comment is missing because of technical reasons it seems,

    The answer for your question is -

    To earn our daily bread.
    Poverty!

    ReplyDelete
  2. Suresh Kannan Sir!

    I apologize

    I have lost your comment.Please bear with me.

    ReplyDelete
  3. //I have lost your comment.//

    பரவாயில்லை. மீண்டும் என் பின்னூட்டம்.

    பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பதினேழு வயதில் மகனை பணிக்க அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

    //To earn our daily bread.//

    பொட்டில் அறைந்தாற் போல் ஒரே வரியில் பதில் சொல்லியிருக்கிறீர்கள். Heyram படத்தின் காட்சி போல் சொல்கிறேன். "எனக்கும் அது தெரியும். நானும் அதை முழுக்க அனுபவித்திருக்கிறேன்."

    பள்ளியின் தேர்வு விடுமுறையில் அடுத்த ஆண்டிற்கான புத்தகங்களை வாங்கும் செலவை ஈடுகட்ட தற்காலிக பணிக்கு செல்வது வழக்கம். முதன் முதலாக சென்றது புத்தகம் பைண்டிங் செய்யும் இடத்திற்கு. ஏதோ ஒரு சிறுகவனக்குறைவு காரணமாக நிகழ்ந்த தவறுக்காக மடாரென்று தலையில் கட்டையால் அடிவாங்கினேன். சுயபச்சாபத்துடனும் அழுகையுடனும் குடும்ப வறுமையை முழு வீர்யத்துடன் உணர்ந்த கணம் அது.

    எல்லாம் கடந்து போகும்.

    ReplyDelete
  4. Mr Rajanayahem

    Very tough story to digest since you have brought in Abraham and Issac, and I could see your pain of poverty. (Ishmael(P) story is also there, as told by my Muslim friends).

    God would never have asked for a real sacrifice, it is symbolical only.

    I am from Tirupur too and living elsewhere and I know the pain that you are going through.

    My brother worked after my dad passed away starting at a tender age of 17 like your son, while we stayed like beggars in a relatives one room house rent free, with mother. I used to work in evenings, weekends and holidays and believe me after nine years of struggle, I had completed my engineering and got placed in a job now. I am 22 and brother is 26.

    We did not give faith in God and never resorted to untoward steps. We never went to bad ways or acquired some.

    Now I am giving back and sponsoring my brother for his full time higher education, after he did his AMIE part-time.

    A seventeen year old missed college and finds satisfaction in full time, with the same spirits.

    I hope you situation has improved now.

    Best wishes.
    Jaiganesh

    ReplyDelete
  5. என்னுடைய பதினெட்டாவது வயதில் (டிப்ளோமா முடித்த பிறகு) ரிசல்ட் வருவதற்கு முன்னே வேலைக்கு சென்று விட்டேன்.அப்போதே இரவு பணி.
    காலையில் தூக்க கலக்கத்தில் பேரூந்துக்கு நிற்கும்போது cricket bat,tennis rocket enru y.m.c.a வில் பயிற்சிக்காக சென்ற என் வயது பையன்களையும் ,பெண்களையும் பார்த்து, நாம் மட்டும் ஏன் இந்த வயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததுண்டு.

    மிக உணர்வு பூர்வமாக சொல்லியுருக்கிறீர்கள்.

    கீர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?

    ReplyDelete
  6. aazhndha vaasippum, ezhuthum..... varumaye tharugirathu.... RP

    UR writings & pinnotangal maximum comes in midnite & early mornings... 12.00 am , 3.03 am like that....

    Iravukalil neengal thoonguvalai endru ninaikeeren.. vizitha nilai... am I rite?
    My email Id : ashokspeed@gmail.com

    Plz give me ur Mobile number. I want to talk u.

    ReplyDelete
  7. மனம் கனத்தது எனபதைத் தவிர நான் எதுவும் எழுத விரும்பவில்லை.


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  8. Thanks every body for your concern.

    D.R.Ashok,

    All my write-ups are being posted in the day only. But this system always shows error in Time. I think all systems shows foriegn time it seems.

    I wrote this article after noon.

    ReplyDelete
  9. Sir,
    Moving experience on reading your post.
    Hope and sincerely wish that you and Keerthi will have a very good time ahead soon.

    Arunkumar

    ReplyDelete
  10. Really touching piece Sir. How is Keerthi now ?

    ReplyDelete
  11. I could find some problem in my reply here.it is registered as "tjms" here. I don't understand why.

    Again, thanks everybody for your concern.

    Ashok should read 'tjms' comments as mine.

    R.P.RAJANAYAHEM



    R.P.Rajanayahem.

    ReplyDelete
  12. //'போப்பா நீ '//

    உங்கள் வலைத்தளம் எனக்குப் புதிது ...இதென்ன வார்த்தை நடை?அத்தனையும் பொட்டில் அறைவது போல? மனதைக் கசக்கிப் பிழிவதைப் போல...!!! மனம் கனத்துப் போகிறது இந்தப் பதிவை வாசிக்கும் போது ...கூடவே பொறுப்பான பையனைப் பெற்ற அப்பா என்ற உணர்வும் வரத்தான் செய்கிறது.இனி தொடர்ந்து உங்களது பதிவுகளைப் படிக்க உத்தேசித்திருக்கிறோம் நானும் எனது கணவரும் .

    ReplyDelete
  13. This is the best poetry you have written. yes poetry.those who suffer in their early years are fortunate.they will meet the mid life challenges rather easily. your son seems to be a hard core party.don't worry he will fight it out

    ReplyDelete
  14. it is 5 am .I am in your block from from 11 pm.since today is Sunday i have to attend my patients from 7. am.But still no idea of getting some sleep . what to do Sir.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.