ஜெயகாந்தன் பாவம் ஒரு விஷயத்திற்காக ரொம்ப பயந்திருக்கிறார் . தசாவதாரம் பார்த்து விட்டு கமல் ஹாசனிடம் தன்னுடைய கலக்கத்தை வெளியிட்டிருக்கிறார் .
" படம் ஓடுமா ? ஏன்னா எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு . அதனால் தான் பயமா இருக்கு . ஏன்னா எனக்கு பிடிச்ச படம் ஓடாது ."
ஜெயகாந்தன் கவலை, பயம் எல்லாம் இப்ப இப்படி தானே ? காஞ்சி சங்கர மட கௌரவத்தை காப்பாத்த " ஹர ஹர சங்கர '' எழுதி தவிச்சவர் ....
சமீபத்தில் கருணாநிதி முன் கூழை கும்பிடு , ஏழை சிரிப்பு , கோழை பவ்யம் எல்லாம் காட்டி இவர் நிற்கும் காட்சியை செய்தித்தாளில் பார்க்க முடிந்தது .
நீர்த்து போனது கூட பரவாயில்லை . மத்திய வயதிலேயே இவருடைய எழுத்து குருவி முட்டையை தான் போட்டது .
ஆனால் இப்படி தசாவதாரம் வசூல் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும்படி ஆகிவிட்டதே !
கமல் அதற்கு பதிலாக 'சித்தாள் எல்லாம் பாக்க வர்றாங்க . எம்ஜியார் படத்துக்கு கூட்டம் வர்ற மாதிரி வர்றாங்க' என்று சொல்லி ஜெயகாந்தனை தேற்றி ஆறுதல் சொல்லியிருக்கிறார் .
ஜெயகாந்தனும் எம்ஜியார் பட ரசனை உள்ளவர் தான் , எம்ஜியார் ரசிகனின் தரத்தை சேர்ந்தவர் என்பதை தெளிவாக சொல்லி ஜெய காந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு ' குறுநாவலை எந்த காரணத்திற்கு எழுதினார் என்பதையே பகடி செய்து விட்டார் கமல்.
எம்ஜியார் படங்கள் எப்படி கலாச்சார சீரழிவுக்கு வழி வகுத்தன என்பதை பேசிய நாவல் '. சினிமாவுக்கு போன சித்தாளு '. தமிழ் வர்த்தக சினிமாவையும் எம்ஜியாரையும் கடுமையாக விமர்சித்த நாவல் .
வரலாற்றின் குரங்குத்தனம் !
There is no salvation in becoming adapted to a world which is crazy.
--Henry Miller.

செயகாந்தன் முதல் செயமோகன் வரை தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம்
ReplyDeleteஒரு வகையில் சினிமாவுக்குப் போன
சித்தாள்கள்தான்.முதலில் இவர்கள் கர்சிப்பார்கள், பின் அடங்கிப் போவார்கள்.சினிமாவுக்கு போகும்
சித்தாள்களுக்கு இருக்கும் தெளிவோ
புரிதலோ கூட இவர்களுக்கு கிடையாது.இதற்கும் வரலாற்றிற்கும்
ஒரு எளவு தொடர்பும் இல்லை.
//செயகாந்தன் முதல் செயமோகன் வரை தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம்
ReplyDeleteஒரு வகையில் சினிமாவுக்குப் போன
சித்தாள்கள்தான்.முதலில் இவர்கள் கர்சிப்பார்கள், பின் அடங்கிப் போவார்கள்.சினிமாவுக்கு போகும்
சித்தாள்களுக்கு இருக்கும் தெளிவோ
புரிதலோ கூட இவர்களுக்கு கிடையாது.இதற்கும் வரலாற்றிற்கும்
ஒரு எள்ளளவு தொடர்பும் இல்லை.//
வழிமொழிகிறேன்
வணக்கம் ராஜநாயஹம் அவர்களே...உங்களின் வலைப்பதிவை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்....நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து நடை....ஜெயகாந்தனின் இந்த கருத்து ஒரு வஞ்சப்புகழ்ச்சியாகவே எனக்கு தோன்றுகிறது..கமலும் அதை சமாளித்துவிட்டார்...ஆனாலும் ஏன் ஜெயகாந்தன் கூனி, குறுகிவிட்டார் என்று எழுதியிருக்கிறீர்கள்....கர்வத்துடன் நிமிர்ந்தே நிற்பதுதான் அழகா? நட்புடன் சிவா...
ReplyDelete