ஒரு திருமணம் . பெண் , மாப்பிள்ளை இருவருக்குமே இரண்டாவது திருமணம் . இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள் . பெண் தான் எனக்கு உறவு . அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.இந்த இரண்டாவது திருமணம் அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல உறவினர் எல்லோருக்கும் ஆசுவாசத்தை தந்திருந்தது .
திடீரென்று பெண்ணின் தகப்பனாரும் மற்றவர்களும் என்னை வாழ்த்தி பேச சொன்னார்கள் . ஏற்கனவே பெண்ணின் தாத்தா , தாய் மாமன் பேசியிருந்தார்கள் .
நான் பேசினேன் " இது வழக்கமான கல்யாணம் அல்ல . ஒரு மீட்சி . Second Marriage is a grand success after a miserable experience.... a resurrection from the worst sorrow "
தொடர்ந்து பையனின் பெற்றோர் , பெண்ணின் பெற்றோர் இவர்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து , பெண்,பையன் இருவரின் கடந்த கால கசப்பு , மன உளைச்சலுக்கும் இந்த மணவாழ்க்கை ஒரு விடுதலை என்பதையும் கூறி மணமக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தேன் .
பெண்ணின் அம்மா ,சித்திமார்களுக்கு முகம் விளங்கவில்லை . 'இதையேன் பேசணும் '
மாப்பிள்ளை வீட்டில் அவருடைய அக்கா இந்த பேச்சுக்கு பின்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம் . "இது என்ன இப்படி பேசிவிட்டார் . நாங்க பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம் என்பதை எங்க தாய் மாமா குடும்பத்திற்கே தெரியப்படுத்தவில்லை . நாங்க பத்திரிகை கொடுக்கும் போது எங்கள் சொந்தக்காரர்கள் யாருக்குமே பெண் ஏற்கனவே திருமணமாகி விவாக ரத்து பெற்றவர் என்பதை மறைத்து தான் அழைத்திருந்தோம் . எங்க தம்பிக்கு புதுசா ஒரு பெண் தான் என்று எங்க உறவெல்லாம் நம்பியிருந்தவங்க இனிமே 'பெண்ணும் உன் தம்பி மாதிரி ஏற்கனவே கல்யாணம் ஆனவள் தானாமே' என்று எங்களை குத்தி குத்தி கேட்பாங்களே . எங்க கௌரவமே போச்சே .எங்களுக்கு கேவலமாயிடுச்சு .ஏன் இவர் இப்படி பேசினார் ? யார் இவரு ?எப்படி இப்படியெல்லாம் பேசலாம்.... " பையனின் அக்கா சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆடிய கதையாய் பெண் வீட்டாரிடம் ஆடி தீர்த்து விட்டடாராம் . மாப்பிள்ளையின் பிராமண நண்பரின் மனைவி என்னிடம் வந்து
" என்ன இப்படி .. உங்க பேச்சு அவாளை ரொம்ப கோப படுத்திடுச்சு "
மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபம்... அதனால் பெண் வீட்டாருக்கும் ரொம்ப கோபமும் வருத்தமும் ..
ஊர் வந்து சேர்ந்த பின் பெண்ணின் அப்பா போனில் தன் மனஸ்தாபத்தை வெளியிட்டார் .
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கடந்த வார இறுதியில் உங்கள் பிளாக் முழுவதையும் படித்து முடித்தேன்..ஆனால் உங்கள் பாணியில் சொல்வதானால் ரிவியூவ் செய்யவில்லை. மிகவும் எளிமையாக ஆழமாக எழுதிகிறீர்கள்.
ReplyDeleteஇந்த ஜம்பம் எனக்கு பிடித்து இருக்கிறது...தமிழ்(இந்திய) சமூகத்தில் மறுமணம், என்பதை பற்றி, தாங்கள் அதிகம் படித்தவர் என்னும் முறையில் ஏதேனும் நல்ல படைப்புகளோ ஆய்வுகளோ இருக்கிறதா?
நான் பார்த்த வரை பெங்காலிகள் அதிகம் மறுமணம் செய்கிறார்கள். தமிழர்கள் முடிந்தவரை இல்லை எனலாம். விதி யாரை விட்டது (விதவை), அவள் படட்டும் (கொழுப்பு - விட்டு வந்துட்டாள்) என்று விட்டு விடுகிறார்கள். அவனுக்கு மட்டும் விதிவிலக்கு?
ReplyDeletethank you Muthu,
ReplyDeletethank you Ram
MaruManam. Marrying again.
Muthu,
Dont concentrate on such generalized topics.
You want to read in Tamil?
In Tamil You can read Thi.Janakiraman,
Ashokamithiran, Sundara Ramaswamy,
Ki.Raa., G.Nagarajan,Aadhavan, Indira parthasarathy,Sampath,Pa.Singaram ,Gopi Krishnan and
Charu Nivedita.
You can find 'Marrying again' in Charu Nivedita's O degree.
'jambam'than middle classukku 'kavurammaka' madhikappadukiradhu... just kick in ur left leg RP... But never talk in front of these middle class mentalites
ReplyDeleteRP,
ReplyDeleteAvaiyarinthu paesuthalnu solluvangae...naamumae appadithaan manathil patathai appadiyae solli viduvaen.
Enmarriage annaikku maedaiyil naan "nandri solli paesiyathaal" penveetaar ennidam andraiya thinamae athiripthiyai therivithargal.
Kalyana maedaiyilrunthu keezhiranki naan "dance" vaeru aadinaen :)....
Afterall its "MY MARRIAGE" ..lol.
you have spelt things spendidly...keep writing.
d.r. ashok ! thanks for your advice.You are absolutely right.
ReplyDeletecogito!
be always playful!
I feel happy to know that you danced cheerfully in your marriage when you were a bridegroom!
My congratulations!Be always playful like this.
ஆங்கிலத்தில் தட்டச்சினாலும், உங்கள் தமிழ் எழுத்தைப் படித்துவிட்டுத்தான் தட்டச்சியுள்ளார்கள், தமிழ் தட்டச்சு தெரியாது என்பதால். அவர்களுக்கு மறுமொழியும்போது, நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் தட்டச்ச வேண்டும்...
ReplyDeleteசாரு அறிமுகப்படுத்தியதால் படித்தேன். உயிரோட்டமாய், உரமாய் உள்ளது உங்கள் எழுத்து.
Krishjapan!
ReplyDeleteThanks for your compliment.
I apologize
I don't have the software facility in my system to make comments in Tamil. That's why my comments are in English.I am unable to make Tamil comments. Please understand me.
Please bear with me.
மன்னிக்கவும். நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன்.
ReplyDeleteஆனால் தமிழில் தட்டச்ச google (http://www.google.com/transliterate/indic/Tamil) போதுமே....எதையும் install செய்ய வேண்டாமே...
உங்களின் பதிலையும் தமிழிலேயே படிக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாறால் தொந்தரவு செய்கிறேன்....
Thank you.
ReplyDeleteI don't know these techniques. Let me try. but I can't assure you now.
ஐயா... (உங்களை நேரில் பார்த்தவன் என்பதால் எப்படி அழைக்க என்று பயமாக இருக்கிறது!)
ReplyDeleteஎனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிகிறீர்களா? தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், ப்ளாக் பற்றியும் விரிவாகப் பேசலாம்!
பி.கு: நானும் திருப்பூர்தான்! மே மாதம் ப்ளாக் ஆரம்பித்து.. கொஞ்சம் பரவாயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது!
மன்னிக்கவும்: என் மின்னஞ்சல் என் புரொஃபைலில் உள்ளது. எதற்கும் இதோ: kbkk007@gmail.com
ReplyDelete