Share

Sep 10, 2008

மு.க. அழகிரி

என்னுடைய மாமனாரின் பிராந்தி கடையில் நானும் அப்போது பங்கு தாரர் . என் திருமணம் நிச்சயிக்கப்படும் முன்னரே அதற்கான பங்குதொகையை அந்த பிராந்தி கடையில் போட்டு விட்டேன் ( சபாஷ் என்கிறீர்கள் )நானே செய்துங்க நல்லூர் சாராயகடை ராஜநாயஹம் பிள்ளையின் பேரன் தான் . ஆனால் என்னிடம் குடி பழக்கம் கிடையாது .சிகரெட்டே கிடையாது என்பதனால் தான் எனக்கு என் மாமனார் பெண் கொடுத்தார் . ( 'என்னைய மாதிரி பயலுக்கு பொண்ணு கொடுக்ககூடாது மாப்பிள்ளை' -என் மாமனார் எனக்கு பெண் கொடுப்பதற்கு சொன்ன காரணம் இது ! )
ஒரு நாள் பிராந்தி கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்த்து கொண்டிருக்கிறேன் . வருடம் 1985 . ஒரு கார் கடை முன் நின்றது . காரிலிருந்து இறங்கியவருடன் அவருடைய நண்பர்கள் சிலர் . கடைக்கு வந்து இவர் என்னிடம் 'கோல்கொண்டா Full இரண்டு பாட்டில் கொடுங்க சார் .' கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த இருவரையும் கொடுக்க சொன்னேன் . கடையில் உள்ள ஆள் அதை எடுக்கும் போதே , இவருடன் வந்தவர் ' அப்படியே அஞ்சு கல்யாணி பீர் ' என்றார் . குற்றாலம் போகிறார்கள் . அதை இன்னொரு ஆள் எடுத்துக்கொண்டிருந்த போது நான் இவரிடம் ' மதுரையிலேயே செட்டில் ஆகிட்டீங்க போலிருக்கே சார் ' என்றேன் .
லேசாக திடுக்கிட்டு அவர் ' என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க !'
'என்ன சார் முன்னாள் முதல்வர் மகனை கண்டு பிடிப்பது என்ன சிரமமான காரியமா ?'
மு.க .அழகிரி ! அப்போதெல்லாம் அழகிரி - ‘The less-discussed son of Karunanithi’ . மு.க. முத்து வும் , மு .க . ஸ்டாலின் ஆகிய பிள்ளைகள் தான் பாபுலர் . 1985 எனும்போது அதற்கு பத்து பன்னிரண்டு வருடம் முன் முத்து ,ஸ்டாலின் போல கனிமொழி கூட அப்போது சிறுமியாயிருக்கும் போதே பிரபலம் !
( சட்டசபையில் கேள்வி - கனிமொழி யார் ? ' கருணாநிதி பதில் ' என் மனைவி தர்மா சம்வர்த்தினி யின் மகள்' . -'தர்மாசம்வர்த்தினி யார் ? ' 'என் மகள் கனிமொழியின் தாயார் ')
இப்போது தான் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் என அழைக்க படுகிறார் .
கருணாநிதியின் மகன் என நான் சொன்னது தான் தாமதம் .கடையில் வேலை பார்த்த இருவரும் திமுக காரர்கள் . வாயை பிளந்தது மூடவே இல்லை . யார் யார் . இவர் தான் மு .க . அழகிரி .
அழகிரி என்னைப்பார்த்து ' உங்கள் முகம் ரொம்ப Familiar ஆ இருக்கு சார் ' என்றார் சிந்தனையுடன் .
நான் உடனே ' I am a nameless face .. or a faceless name.. ' சிரித்துகொண்டே ' என்னை நீங்க எங்க பார்த்திருக்க போறீங்க ' என்றேன் .
அழகிரி ' இல்ல சார் . உங்க முகம் எனக்கு ரொம்ப தெரிஞ்ச முகம் மாதிரியே இருக்கு '
சந்தோசமாக எனக்கு கை கொடுத்து விட்டு விடை பெற்றவர் கடையிலிருந்து காரில் ஏறுவதற்காக நடக்கும் போதும் அவருடைய நண்பர்களிடம் ' இவரை பார்த்தா.. எனக்கு இவர் முகம் ரொம்ப Familiar ஆ தெரியுது ' என்று மீண்டும் சொன்னார் .
காரில் ஏறியதும் சந்தோசமாக கை காட்டி விடை பெற்றார் .
அடுத்து சில நாளில் மதுரை போன போது தற்செயல் ஆ நான் கண்ட காட்சி . அவருக்கு இதில் ஒன்றும் இழுக்கு இல்லை . மதுரையில் சாதாரணமாக யாருக்கும் நடக்க கூடியது தான் . இன்று இவர் அஞ்சா நெஞ்சனாக எட்டு கண்ணும் விட்டெரிய வாழ்கிறார் எனும்போது இதை யாரும் நம்ப மாட்டார்கள் .
மதுரை பஸ் ஸ்டாண்ட் விட்டு நான் வெளியே வரும் போது அழகிரி அங்கு அவசரமாக ஆட்டோ திருநகருக்கு விசாரித்து கொண்டிருந்தார் . ஆட்டோகாரன் அடாவடியாக வாடகை கேட்பதை கண்டு விலகி நடக்க ஆரம்பித்தார் . ஆனால் மதுரை ஆட்டோ காரன் கோபமாகி 'டே கண்ணாடி என்ன நீ பாட்டுக்கு பதில் சொல்லாம போரே .. பதில் கூட சொல்லாம ' என்று சத்தமாய் கேட்டான் . இவர் சட்டை செய்யவில்லை . நானும் அவரிடம் பேச நினைத்து நெருங்கினேன் .சூழல் சரியில்லை . அவரும் என்னையும் கவனித்து விட்டு தான் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றார் . அந்த ஆட்டோ காரன் திமுக காரனாக கூட இருந்திருப்பான் . இவர் யார் என்று தெரிந்திருந்தால் காலில் விழுந்திருப்பான் . சும்மாவே திருநகர் கொண்டுபோய் விட்டிருப்பான் . அவனுக்கு தெரியவில்லை .
மதுரையில் சவாரி படியவில்லை என்றால் இன்று கூட யாரையும் அவமான படுத்த ஆட்டோ காரர்கள் தயங்குவதில்லை . டிராப் செய்யும்போது கூட தகராறு செய்கிறார்கள் .
கருணாநிதியின் வாரிசுகளில் அழகிரி தான் வெள்ளந்தியானவர் என்று சாரு நிவேதிதா சமீபத்தில் ஒரு கேள்வி பதிலில் குறிப்பிட்டிருந்தார் .

7 comments:

  1. கால முரணை விளக்கும் அழகான பதிவு. இன்று நீங்கள் எங்கே? இன்று அஞ்சா நெஞ்சன் எங்கே?

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. 'Mu.Ka.Alagiriyin' adutha pakkam...
    azhagaaithaan irukirathu....kaalamthaan ennavellaam rasayana maatrankalai kaalapokkil seithuvidukirathu....

    ReplyDelete
  3. As far as i know,Azhagiri is by nature a man with helping tendency.But he is infested with Rodies for their personal gains like pick-pocketing,boot legging,waylaying ans all other social evil acts.He has to bear the adverse consequences of the actions of his bad followers .He should put a check over those Rowdies,if he does so, his image will be boosted.

    ReplyDelete
  4. Oh! This article removed the image of Mu.Ka.Azhagiri.

    Very interesting article!

    Saravana Kumar

    ReplyDelete
  5. ரொம்ப ரொம்ப அழகான நினைவலைகள். எனக்கு அவரைப் பார்த்தா ஜாலியான ஆல் போலத்தான் தெரியறார். ஆனா எப்பவும் யார் கூடவாவது சண்டை போட்டிக்கிட்டு இருக்கார்.

    ReplyDelete
  6. மதுரை என்பது எப்போதும் ரவுடிகளின் கையில தான் இருக்கிறது . அழகிரியின் பிடியில் கீழ் ரவுடிகள் இருக்கிறார்கள். திமுக வை சேர்ந்த மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களும், மண்டல தலைவர்களும் கொள்ளிவாய் பிசாசுகளாக ஊரை சுரண்டிக் கொழுத்துக் கொணடிருப்பது தனிக்கதை.
    அழகிரியின் அல்லக்கையும், பிரபல தினகரன் கொலைவழக்கு ரவுடியும், பாரம்பரியமாக பிக்பாக்கெட், வழிப்பறி கொள்ளைக்காரனான அட்டாக் பாண்டி இப்போது மதுரை மண்டல் வேளாண் விற்பனைக்குழு தலைவர். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? மதுரையின் மேயரான தேன்மொழிக்கு எழுத படிக்கவே தெரியாது. மண்டல் தலைவராக இருக்கும் வி.கே குருசாமி முன்னாள் லோடுமேன், ரவுடியும் கூட. மிசாபாண்டியன் என்ற மதுரை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராக உள்ள ரவுடி, பிரபல கட்டிட காணடிராக்டரிடம் அவர்கள் கட்டும் கட்டிடத்திற்கு போர்வெல் போடும் போது ப்க்கத்து வீடுகளை பாதிக்கிறது என்று சொல்லி, மாநகராட்சி அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மிரட்டி அதே காண்டிராக்டரின் அபார்ட்மெண்டி்ல் ஒரு பிளாட்டை தன் பெயருக்கு வாங்கியவர். பிரபல கொலைகாரனான வரிச்சியூர் செல்வத்தின் உற்ற தோழர் தான் இந்த மிசா. பாண்டியன்.
    அழகிரியின் ஆசியுடன் இவர்கள் எல்லாம் மதுரைமாநகராட்சியில். இதையெல்லாம் தெரியாத பச்சைக்குழந்தை அழகிரி. ஒன்றும் தெரியாத பாப்பா...ஒரு மணிக்கு போடுமாம் தாப்பா......அய்யா...ராசஜநாயகம். நீங்க நல்ல புத்திசாலியா இருந்த ஏன் பிராந்தி கடையில வேல பாக்க போறீங்க....ரொம்ப முக்கியம் நீங்கள்லாம் அழகிரி பத்தி சொல்லணும். நாங்க கேக்கணும். மதுரையில் வந்து பாருங்க அழகிரி ஆட்டத்த....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.