Share

Sep 13, 2008

எம் ஆர் ராதா

எம்.ஆர் .ராதா தன் சந்தேகம் ஒன்றை பெரியாரிடம் கேட்டாராம் .
"அய்யா ஒரு சந்தேகம் "
பெரியார் குறுநகையுடன் தலையை ஆட்டினாராம்.இவன் ஏதோ விவகாரமாக தான் பேச ஆரம்பிக்கிறான் என்பதை புரிந்து கொண்டு தான் அப்படி குறு நகையுடன் தலையை ஆட்டி காதை கொடுத்திருக்கிறார்.

" இந்த இங்கிலீஷ்லே ஏதோ சொல்லி அதுக்கு தமிழ்லே அர்த்தம் சொல்றான். அது புரியுது. தெரியாத பாஷையிலே உள்ளதை தமிழ்லே சொல்றது நியாயம் ...சம்ஷ்க்ரிதத்திலே ஸ்லோகன் சொல்லி தமிழ்லே அர்த்தம் சொல்றான்.சரி ... நியாயம் ...
தமிழ்லேயே ஸ்லோகன் சொல்லி அதுக்கு ... தமிழ்லேயே அர்த்தம் சொல்றானே .. இது என்ன .. எனக்கு புரியலெயே ..."
பெரியாருக்கு சிரிப்பை அடக்க முடியலையாம்.
பண்டிதத்தை ,புலமையை இதை விட அழகாக நையாண்டி செய்ய முடியுமா ? Snobbery க்கு சரியான சூடு! செத்து உறைந்து போன தமிழ்!

கோர்ட்டில் இரண்டு பேருடைய வக்கீல்களும் சீரியஸ் ஆ வாதாடிகொண்டிருந்த போது ' பாவம் இவங்க என்னனதையோ போட்டு குழப்பிக்கிட்டு தவிக்கிறாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கும் எம்ஜியாருக்கும் தான் தெரியும். என்ன ராமச்சந்திரா !'- இப்படி கோர்ட்டிலேயே எம்ஜியாரை பார்த்து படு ஜாலியாக கேட்டவர் ராதா.
நீதிபதி,வக்கீல்கள் எல்லோரும் இவருடைய இயல்பை கண்டு அசந்து போனார்கள்.

ராதா ஷூட்டிங்கிற்காக அதிகாலை காரில் வந்து ஸ்டுடியோவில் இறங்குகிறார். செட்டிற்கு வெளியே அஞ்சலி தேவி அசத்தலாக உட்கார்ந்திருந்தாராம். இவர் இறங்கியவுடன் உடைகளை கழட்ட ஆரம்பித்திருக்கிறார். அஞ்சலி தேவிக்கு கொஞ்சம் தர்ம சங்கடம்.
அண்டர் வேருடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அஞ்சலி தேவி ' அண்ணே என்னன்னே இது '
ராதா ' என்ன '
'பொம்பிளை நான் இங்கே இருக்கிறேன். நீங்க பாட்டுக்கு உடுப்பை பூரா கழட்டிட்டு இப்படி அண்டர் வேரோட இப்படி.. '
ராதா ' நீ இருக்கிறியேன்னு தான் அவசர அவசரமா டிரஸ்ஸ கழட்டிட்டு நிக்கிறேன்.'

எம் ஆர் ராதாவும் கண்ணதாசனும் அந்த காலத்தில் நடிகைகளை பற்றி செய்துள்ள கிண்டலும் நையாண்டியும் கடுமையானது.

இந்த காலத்தில் இந்த வைரமுத்து கொஞ்சம் வருடம் முன் நடிகைகளை தரக்குறைவாக என்னவோ ஏதோ சொல்லி விட்டார்.அல்லது எழுதி விட்டார்.
நடிகர் சங்கத்தில் வைத்து அவ்வளவு முன்னணி நடிகைகளும் (இதில் எம் ஆர் ராதிகாவும் அடக்கம் ) கூந்தலை விரித்து போட்டு சிலம்பை உடைச்சி ஒத்த முலையை பிச்சி போட்டு ... பத்திகிட்டு எரிஞ்சிச்சு ..
வைர முத்து உடனே தோப்புகரணம் போட்டு உடனே கால்லே விழுந்து ...உடனே மாப்பு கேட்டு ..
அப்புறம் இந்த தங்கர் பச்சானும் தான் மாட்டிக்கொண்டு பாவம் ..

3 comments:

 1. ராதா செய்தது சரியல்ல.பெண்களை கேலி செய்வதும், வம்புக்கு இழுப்பதும் யார் செய்தால் தவறுதான்.
  ராதா எத்தனை பெண்களை மணந்தார்,
  எத்தனை பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.இதற்கெல்லாம்
  என்ன நியாயம், ஆணாதிக்க திமிர்
  என்பதுதான் உண்மை.

  ReplyDelete
 2. OMG !! you are really superb..the way you write really good...

  Thanks for writing..keep writing.

  ReplyDelete
 3. ராதா காலத்தால் அழிக்க முடியாத அற்புத கலை மகன்..

  மக்கள் தொலைகாட்சியில் மறக்க முடியுமா நிகழ்ச்சியை பார்த்தால் புரியும்..

  அருமை..

  வாழ்த்துக்கள்

  சூர்யா
  சென்னை
  butterflysurya@gmail.com

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.