சென்ற ஆகஸ்ட் 21 தேதி எனக்கு பிறந்த நாள் . பிறந்தது பற்றி பெருமை என்ன இருக்கிறது . ஆனால் இந்த தேதியில் பிறந்ததில் எனக்கு ஒரு பெருமை பிறந்த அன்றே ஏற்பட்டுவிட்டது . "தோழர் ஜீவா "பிறந்த தேதி இது .
இந்த வருடம் க.நா.சு வின் மருமகன் பாரதி மணி க்கு போன் போட்டு என்னை அறிமுகபடுத்திகொண்டு அவருடைய ஆசியை பெற்றேன் . மனிதர்"உயிர்மை"பத்திரிகையில் சும்மா சிக்ஸர் ,பௌண்டரி யாக விளாசு,விளாசு என்று விளாசுகிறார் . என்ன ஒரு அனுபவங்கள் , என்ன ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை .க.நா. சு . உயிரோடிருந்த போது மருமகனுடைய ஆளுமை பற்றிஎதுவும் எழுதவில்லை .சொன்னதாகவும் தெரியவில்லை .
இ.பா வின் "மழை "நாடகத்தில் க.நா.சு. மகளோடு நடிக்கும் போது , மணி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியும் .
இந்த திருமணத்திற்கு தி. ஜானகி ராமன் பண உதவி செய்தார் என்பதை க.நா.சு தன் "பித்தப்பூ " நாவலில் குறிப்பிட்டுள்ளார் .
பிறந்த நாள் அன்று அசோக மித்திரனுக்கு போன் போட்டேன் .ரிங் போயிற்று . எடுக்கவில்லை . பின் அவரே என்னை அழைத்து தன் ஆசியை சொன்ன போது நெகிழ்ந்து விட்டேன் . அய்யா கி.ரா . விடமும் ஆசி பெற்றேன் . ஆனால் சாரு நிவேதிதா விடம் அன்று தொலை பேசும்போது எனக்கு பிறந்த நாள் என்பதை சொல்ல மறந்தே போனேன் .
பிரமிள் என்னை 1989 மார்ச் 27 ல் சந்திக்க நான் தங்கியிருந்த மயிலாப்பூர் கற்பகம் லாட்ஜ் வந்திருந்த போது என் பிறந்த தேதி ஆகஸ்ட் 21 என அறிந்தவுடன், தேதி,மாதம் வருடம் கூட்டி பார்த்து அதுவும் மூன்று என கண்டு என் பெயரில் தாத்தா பெயரின் முதல் எழுத்தையும் இனிசியலில் அப்பா பெயருடன் சேர்த்து (இப்போது உள்ளபடி) R.P.Rajanayahem இங்ஙனம் 37 ல் அமைத்தார் . இப்படியே பெயரை வைத்து கொள்ளுமாறு மிகவும் மீண்டும் ,மீண்டும் வற்புறுத்தினார் .கிளம்பும் போதும் மீண்டும் ஞாபகப்படுத்தினார் .
"யாருக்கு தான் அவர் பெயர் மாற்றம் செய்யவில்லை? " - எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி என்னிடம் கேட்டார் . எல்லோருக்கும் தான் மாற்றினார். எத்தனை பேர் அவர் சொன்னபடியே பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள் .ஆனால் அவர் சொன்ன படி கேட்டவன் நான் . இன்று வரை அந்த பெயரை பிடிவாதமாக அப்படியே வைத்துகொண்டிருப்பவன் நான் .
இதில் ஒரு வினோதம் தெரியுமா ? எண்கணித நூல் எதிலும் எந்த எண்கணித மேதையும் என் பிறந்த தேதி , மற்றும் தேதி மாதம் வருடம் கூட்டி வரும் எண்ணுக்கும் , பிரமிள் எனக்கு வைத்த நம்பரில் பெயர் வைக்க சிபாரிசு செய்யவில்லை .ஒத்துகொள்ளவே மாட்டார்கள் என்பது உண்மை .
பிரமிள் எனக்கு பெயர் வைக்கிற விஷயத்தில் ஏதோ பெரிய "விஷ பரீட்சை " செய்து பார்த்திருக்கிறார் போலும் .
ஆனால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகள் ,வீழ்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் "உங்கள் பெயரை நல்லபடி மாற்றிகொள்ளுங்கள் " என பலரும் பலவாறு வற்புறுத்திய போதும் பிரமிள் வைத்தபடியுள்ள பெயரில் ஒரு எழத்து கூட மாற்ற மறுத்து விட்டேன் .
என் பெயரைக் கேட்ட பிரமிள், நீயே அதை மாற்றியிரு்க்கிறாய், இப்போதைக்கு அது போதும், பிறகு பார்க்கலாம் என்றார்.
ReplyDeleteவாசித்தது பற்றி நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது உங்கள் பிறந்த நாளுக்கான என் வாழ்த்து.
நாகார்ஜுனன்
What a pleasant surprise!
ReplyDeleteThank you! Nagarjun Sir!I feel honoured and
I have to revere to your expectations.
//ஆகஸ்ட் 21// அட எனக்கும்தான்! என்ன சார் கொஞ்சம் கொஞ்சமா கிட்ட வந்துடுவோம் போல இருக்கே??
ReplyDelete