முதல் இரண்டு செய்திகள் சந்தோஷமானவை . மூன்றாவது செய்தி துக்கமான கெட்ட செய்தி . திடுக்கிட வைக்கக்கூடியது .அதிர்ச்சி தருவது . தயவு செய்து திட மனதில்லாதவர்களும் பலகீனமானவர்களும் படிக்கவே கூடாது .
1.திருப்பதி வெங்கடேசபெருமாள் கருவறை முழுவதும் தங்கத்தால் இழைக்க தேவஸ்தானம் முடிவு செய்து தங்கம் காணிக்கை செலுத்தி புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டி பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி விட்டார் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலு .
புண்ணியம் குறைவாய் உள்ளவர்களுக்கு இனி குறையொன்றுமில்லை .தங்கத்தை அள்ளிக்கொண்டு திருப்பதிக்கு கிளம்பலாம் .
2. ஸ்டாலினுக்கு இலக்கிய தங்கபதக்கம்! திமுக வழங்குகிறது . சும்மா ஒன்றும் கொடுக்கவில்லை . பேச்சு போட்டி ,கட்டுரைபோட்டிக்காக ஸ்டாலின் பல லட்சங்களை வழங்கியிருப்பதற்காக . ஸ்டாலின் காட்டில் விருது மழை தான் . அதிர்ஷ்டசாலி . இதுவும் அண்ணாதுரை நூற்றாண்டு விருது தானாம் . "கலைஞர் விருது ஸ்டாலினுக்கு அறிவிக்கப்பட்ட போது அண்ணாதுரை நூற்றாண்டு பிற பரிசுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சி அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் . அதில் முதல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுவிட்டது .
3." முதல் அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை . அதற்கான அறிவும் ஆற்றலும் இருந்தாலும் கூட " என்று நடிகர் கார்த்திக் அறிவித்திருக்கிறார் .
அடடடடடா ... ச்சே ......A very promising future is cut short!
விருதுகளின் தொடர்ச்சி இப்படி இருக்குமோ என்னவோ யார் கண்டது?
ReplyDeleteஸ்டாலின் விருது அழகிரியின் மகனுக்கும், ராணி அண்ணாத்துரை விருது கனி மொழிக்கும், கனி மொழி விருது கயல் விழிக்கும்,கயல் விழி
விருது ஸ்டாலினின் பேரனுக்கும்...........இப்படியே.
விவஸ்தை அற்ற விருதுகள்.
அன்புடன்
சூர்யா
//." முதல் அமைச்சராகும் ஆசை எனக்கு இல்லை . அதற்கான அறிவும் ஆற்றலும் இருந்தாலும் கூட " என்று நடிகர் கார்த்திக் அறிவித்திருக்கிறார் .// - கார்த்திக் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் என்பதை நிரூபித்து விட்டார்.
ReplyDeletehahahahahah execellent in fact i laughed at all the 3 news.
ReplyDeleteRegards
Kishore